Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் சிறீலங்காவில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்: - கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீவன் வுட்வேர்த்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stephen-woodworth-canada-150.jpg

சர்வதேச சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை அடுத்து இலங்கை மீதான கண்டனங்களும் கனடிய மண்ணில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கரிசனையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பரித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான பற்றிக் பிரவுன் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து கிச்சனர் மத்தி ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த்தும் தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளார். தமிழர் தேசத்திற்கான போராட்டத்தில் மரணித்தவர்களை அமைதியாக நினைவு கூர்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாணவர்கள் காயப்படுத்தப்பட்டமை தடுத்து வைக்கப்பட்டமை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக ஸ்ரீவன் வுட்வேர்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  

ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது அது குறித்து குரல் எழுப்புவது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் கடமையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய நிகழ்வு இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை பிரயோகிக்கப்படுவதை வெளிக்காட்டி நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட்வர்களுக்கு தனது கரிசனையையும் பிரார்த்தனைகளையும் திரு. வுட்வேர்த் தெரிவித்தார்.

 

 

 

தனது அறிக்கையைத் தொடர்ந்து பரித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கை விடயம் குறித்து கடந்த வாரம் காட்டமான அறிக்கை சமர்ப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கனடியப் பிரதமர் இலங்கை மனித உரிமைகள் விடயத்திலும் தமிழர் பிரச்சனை விடயத்தில் பொறுப்புக் கூறும் விடயத்திலும் கணிசமான முன்னேற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லையாயின் தாம் கொழும்பில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக உறுதிபடத் தெரிவித்து வரும் நிலையில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இலங்கை விடயத்தில் கடினமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

Stepnen-woodworth--Human-Rights-600706-0

 

 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகத்தில் வந்தது என்ற தகவல் இணைக்கப்படவில்லை.

MP Kyle Seeback expresses concern over human rights violations in
Sri Lanka

 

OTTAWA, CANADA- Kyle Seeback, Member of Parliament for Brampton West, expresses serious concern over the continued detention of the Jaffna University students in Sri Lanka. 

 

"Freedom of speech, association, and independent judiciary are pillars of any democracy. The recent threat to these pillars of democracy in Sri Lanka is a serious concern to me and my constituents from Sri Lanka," said MP Seeback.

 

“Continuing arrest, harassment and intimidation of university students is unjustifiable. I urge the Sri Lankan authorities to exercise restraint, respect peaceful demonstrations and release the students from Jaffna University”.
“The Prime Minister and I take every opportunity to raise Canada’s concerns with respect to the need for progress on reconciliation, accountability and respect for human rights in Sri Lanka”, Foreign Affairs Minister, John Baird said last month. “Canada calls on the Sri Lankan government to finally put the people of that country first”.


In concluding remarks, MP Seeback extended his thoughts and prayers towards all those that have been affected by the latest events in Sri Lanka and encourage the international community to call on the Sri Lankan government to implement measures to ensure the protection of human rights.


– 30 –
Inquiries: Office of Kyle Seeback, M.P. 613-995-5381

 

http://tamilcanadian.com/tc_images/canada/politics/Statement-Jaffna%20University.pdf?u=sitemade

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.