Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகம் என்றால் கடிப்பதற்கும், ராவி விடுவதற்கும், பாலீஷ் போட்டுக் கொள்ளவும்தான் என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் அது அனேக வியப்பிற்குரிய விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்று சொல்லிவிடுவார்கள்.

நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது.

நகங்கள் முளைக்கும்போது மிருதுவான செல் (cell) களால் உருவாகிறது. பிற்பாடு வளரும்போது கடினத்தன்மை அடைகிறது. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு க்யுடிகிள் (cuticle) எனப்படும். இது அழுக்கு, நுண்ணியக் கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்துவைக்கிறது. நகத்தின் அடியில் உள்ள சருமத்தில் ரத்தம் அதிகமாய் 'சப்ளை' ஆவதாலும், தந்துகிகளாலும் இது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். நகத்தின் நீரகத்தன்மை 10% என்பதால் எலும்புகளை, பற்களைப் போலவே இதுவும் ஒரு கடினத் திசு ஆகும்.

இதன் வளர்ச்சி வாரத்திற்கு 0.5_1.2 மி.மீயாக இருக்கும். நகம் கோடையில் விரைவாக வளரும். பகலைவிட இரவில் கூடுதல் வளர்ச்சி கொண்டிருக்கிறது. நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயின் இடது கை நகத்தைவிட வலதுகை நகம் துரிதமாய் வளரும். நகத்தின் இயல்பான வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும். 'ப்யூலைன்' (Beauline) என்று சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், சீவலாய் உதிரவும் வாய்ப்பு உண்டு.

பெண்கள் உபயோகிக்கிற நகப்பூச்சு நகங்களை மேலும் கடினப்படுத்திவிடும். ஆனால் 'பாலிஷ் ரிமூவர்' உபயோகிப்பதால் நகங்கள் முறிந்து போகவும் கூடும். சத்துக் குறைவான நகங்கள் மஞ்சள் நிறம் அடையும். நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்களின் நகங்கள் மஞ்சலாக இருக்கும். முற்றிய 'கேஸ்'களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நகப் படுகை (Nail Bed) நீலமாக மாறும்.

சிலருடைய நகங்கள் இயல்புக்கு மாறான தோற்றம் கொண்டிருக்கும். அவை நோய்களின் அறிகுறியை மருத்துவருக்கு புலப்படுத்தும்.

1. க்ளப்பிங் (Clubbing): நகங்கள் மேற்புறத்தில் அதீத வளைவுடன், விரல் நுனியில் சுருண்டும் காணப்பட்டால் அவை அல்ஸர், டி.பி.எம் பிஸிமா போன்ற நோய்களின் வரவைக் குறிப்பதாகும்.

2. 'ப்ளு_மூன்ஸ்' (Blue Moones): நகத்தின் அடிப்புறம் நீலமாக காணப்பட்டால் அது கால், விரல், பாத இசிவு மற்றும் இருதய நோய் குறித்தும் எச்சரிப்பதாகும். சில நேரங்களில் கீல் வாதங்களுக்கும் இந்த அறிகுறி பொருந்தும்.

3. 'ஸ்பூன் நெய்ல்ஸ்' (Spoon Nails): தட்டையாக அல்லது கரண்டி போல் தோற்றமளிக்கும் நகங்கள். இரும்புச் சத்து குறைவில் வரும். அனீமியா, தைராய்டு கோளாறு மற்றும் சிபிலிஸ் நோய் தொடர்புகளைச் சுட்டும்.

4. 'ப்யூ'ஸ் லைன்கள் (Beau's Lines): கடுமையான நோய் அல்லது சத்துப் பற்றாக்குறை காரணமாக நகத்தின் படுக்கை வாட்டில் பள்ளக்கோடுகள் விழும். தட்டம்மை (Measles), புட்டாலம்மை (Mumps) போன்றவற்றால் நகத்தின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்படும்.

5. 'டெர்ரி'ஸ் (Terry's): நகத்தின் அடிப்புற சருமம் ஒரேயடியாக வெளுத்துப் போகலாம். அது ஈரலில் வரும் 'Cirrhosis'ஐ குறிக்கும்.

6. 'லிண்ட்ஸே' (Lindsay): நகத்தின் முனைப் பக்க பாதி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பாக இருக்கும். க்யூடிகிள் சார்ந்த பாதியும் வெண்மையாய் காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகும்.

7. 'எல்லோ_நெய்ல் ஸிண்ட்ரம்' (Yellow Nail Syndrome): நக வளர்ச்சி குன்றி கடினமாகும். மஞ்சள் அல்லது பசுமஞ்சள் நிறம் காணும். இது சுவாசக் கோளாறு பற்றிய அறிகுறி.

8. 'ஸ்ப்ளிண்டர் ஹெமரேஜஸ்' (Splinter Haemorrhages): ரேகை மாதிரி ஓடும் செந்நிறக் கீற்றுகள் தந்துகிகளில் ஏற்படும் இரத்தக் கசிவையும் ப்ளட்_ப்ரஷ்ஷரையும் 'Psoriasis' என்கிற சரும நோயையும் பற்றி நமக்கு எச்சரிப்பதாகும்.

9. 'பிட்டிங்_இன்_ரோஸ்' (PitinginRows): நகம் முழுக்க விழும் குழிகள் சீக்கிரமே முடி உதிருவதற்கான 'சிக்னல்'. ஸோ... உங்கள் நகங்களை ஊன்றி கவனியுங்கள். அவை அதையே சொல்ல முயல்கின்றன.

நகப் பராமரிப்பு: நலம் தரும் சுத்திகரிப்பு! 'வீக்'கான நகங்கள் என்றாலே சுலபத்தில் முறிந்து போகிற (Brittle) நகங்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரிதல், கிழிதல், பிளவுபடுதல் என்பன நகத்தின் தன்மைகள். சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வறட்சி, குளுமை காரணமாக நகம் தன்னுடைய ஈரத்தன்மை இழக்கும். இதனாலும் முறிவுத்தன்மை மோசமாகும். இந்த இழப்பை ஈடுகட்ட, படுக்கப்போகும் போது சற்று வெதுவெதுப்பான நீரில் நகத்தை, ஒரு 15 நிமிடங்கள் முழுவதுமாய் நனைத்துக் கொள்ளலாம். பிறகு 'மாய்சரைஸர்' பயன்படுத்தலாம்.

நமது கேசத்தைப் போலவே நகங்களும் பரம்பரையை ஒட்டியே அமைகின்றன. ஸ்ட்ராங்கான சோப், டிடர்ஜன்ட் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகழுவிக் கொண்டிருக்கக் கூடாது. அதனால், 'நெய்ல்_ப்ளேட்'டுகள் சுருங்கிப் போகும் அல்லது விரிந்துவிடும். நாம் முதுமை அடையும்போது நகங்கள் மெலிந்து, உடையக் கூடியதாகிவிடும். நடுத்தர வயதினரின் நகங்கள் வளர்ச்சி குன்றும், ஆனைவிட பெண்Êணுக்கு .... வருஷங்கள் முன்னதாகவே நகமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. நகத்தினால் எதையும் சுரண்டவோ, கீறவோ கூடாது.

சில பெண்கள் போலி நகங்கள் (காஸ்மெடிக் ஸ்டோரில் விற்கப்படும் Acrylic Nails) பொருத்திக் கொள்வார்கள். நீண்ட உபயோகத்தில் அவை ஒரிஜினல் நகங்கள் பாழடிந்துவிடும்.

நக வளர்ச்சிக்கு என்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் தினமும் 'மைனாக்ஸிடில்' (Minoxidill)_கேச வளர்ச்சிக்கு உபயோகிப்பது_பூசினால் ஆரோக்கியமான நகத்தைப் பெறமுடியும் என்கிறது அமெரிக்க கொலம்பியா மருத்துவமனையின் ஆராய்ச்சி மையம்.

http://www.kumudam.com/magazine/Health/200...6-06-01/pg5.php

  • 2 weeks later...

தகவலுக்கு மிக்க நன்றி....நிம்மதியாக இருக்கு...என்னுடைய நகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை..

  • 3 months later...

நன்றி. நகத்தில இத்தனை விசயம் இருக்கா?

  • 3 weeks later...

நன்றி ஜெயதேவன் அண்ணா தகவலுக்கு..ஆனால் நகத்தில் வெள்ளை வெள்ளை புள்ளிகள் போல காணப்பட்டால்..என்ன அர்த்தம்? பலர் பலவிதமாக சொல்கிறார்கள்..சத்து குறைவு என்கிறார்கள்..சில நண்பர்களை குறிக்கும் என்கிறார்கள்?? உங்களுக்கு ஏதும் தெரிந்தால்..எனக்கும் தெரியப்படுத்துங்கள்...

இணைப்புக்கு நன்றி ஜெயதேவன். சகி வெள்ளை வெள்ளையா ஏதோ ஒரு விற்றமின் காணாட்டில்த்தான் அப்படி வாற எண்டு எங்கயோ வாசிச்ச ஞாபகம். ஆனால் என்ன விற்றமின் எண்டு மறந்து போனன். கிடைத்தால் இணைக்கிறன்.

நன்றி ஜெயதேவன் அண்ணா தகவலுக்கு..ஆனால் நகத்தில் வெள்ளை வெள்ளை புள்ளிகள் போல காணப்பட்டால்..என்ன அர்த்தம்? பலர் பலவிதமாக சொல்கிறார்கள்..சத்து குறைவு என்கிறார்கள்..சில நண்பர்களை குறிக்கும் என்கிறார்கள்?? உங்களுக்கு ஏதும் தெரிந்தால்..எனக்கும் தெரியப்படுத்துங்கள்...

சரி அப்புறம் :roll: :roll:

இணைப்புக்கு நன்றி ஜெயதேவன். சகி வெள்ளை வெள்ளையா ஏதோ ஒரு விற்றமின் காணாட்டில்த்தான் அப்படி வாற எண்டு எங்கயோ வாசிச்ச ஞாபகம். ஆனால் என்ன விற்றமின் எண்டு மறந்து போனன். கிடைத்தால் இணைக்கிறன்.

எனக்கு தெரியுமே அதன் பெயர் றிம்மி மார்ட்டின் விற்றமின் சத்து அது போத்திலாக தான் விப்பார்களாம் :oops: :oops:

சரி அப்புறம் :roll: :roll:

அப்புறம் என்ன..கொஞ்ச நாள் வரவில்லை அதற்குள்..பலதை மாற்றி விட்டீர்களே..நான் சொல்வது உடையை. :wink: .தலையில..மகுடம் வேறு வடிவேல் சார்..கலக்குறீங்க..தொடருங்க :arrow: :P

ரோகராாாாாாாாாாாாாாாாாா

வந்திட்டார் நக வைத்தியர்

ஓய் ஜெயதேவன் திருந்தீட்டீரா

:twisted: :twisted: :twisted:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியுமே அதன் பெயர் றிம்மி மார்ட்டின் விற்றமின் சத்து

எனக்கு கொஞ்சம் வேனுமே அனுப்ப முடியுமா :?: :P

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியுமே அதன் பெயர் றிம்மி மார்ட்டின் விற்றமின் சத்து அது போத்திலாக தான் விப்பார்களாம்

அது என்ன நாய்குட்டி பெயரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி ஜெயதேவன். சகி வெள்ளை வெள்ளையா ஏதோ ஒரு விற்றமின் காணாட்டில்த்தான் அப்படி வாற எண்டு எங்கயோ வாசிச்ச ஞாபகம். ஆனால் என்ன விற்றமின் எண்டு மறந்து போனன். கிடைத்தால் இணைக்கிறன்.

கல்சியம் என்று வாசிச்ச ஞாபகம்.

கல்சியம் என்று வாசிச்ச ஞாபகம்.

ஓமண்ணா கல்சியம் குறைபாட்டிலா நிறையப்பிரச்சினைகள் இருக்கு குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கிற ஆக்களுக்கு ஏன் என்று சொன்னால் இங்க நாங்கள் குடிக்கிற தண்ணில கல்சியம் இல்லை. அதால சில பேருக்கு முதுகு முள்ளந்தண்டு எலும்பு தேயுற எண்டு எல்லாம் எனக்கு தெரிஞ்ச ஆக்களுக்கு நடந்து இருக்கு. ஆகவே எல்லோரும் கல்சியம் நிறைய உள்ள ஜீஸ் வகைகளைக் குடியுங்க. ஊரில என்றால் கிணத்து தண்ணில நிறைய கல்சியம் இருக்கு. அதால இந்தப்பிரச்சினைகள் இல்லை.

தகவலுக்கு மிகவும் நன்றிகள்

  • 3 weeks later...
:D டாக்டரிட்ட போகாம வைத்தியம் பண்ண நிறை வழி இருக்குப்போல.. :D

Edited by vikadakavi

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அகத்தின் அழகு நகத்தில் தெரியும்" புதிய தத்துவமாக இருந்தாலும் பல விடயங்களை புரிய வைக்கின்றது, இணைப்புக்கு நன்றி.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நகத் தோற்றத்தின் மூலம் உடல் நலத்தை அறியலாம்*அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

inl06pl4.jpg

வாஷிங்டன்: "ஒருவரின் நகங்களின் தோற்றத்தை வைத்தே அவரது மொத்த உடல் நலத்தை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்' என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

<<உங்கள் நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள், உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என சிலர் கூறுவதைப் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது, "உங்கள் நகங்களை காட்டுங்கள், உங்களுடைய உடல் நலத்தைப் பற்றி சொல்கிறோம்,' என கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த சில டாக்டர்கள். அமெரிக்காவின் மயோ கிளினிக் அகடமியைச் சேர்ந்த தோலியல் (டெர்மட்டாலஜி) நிபுணர்கள் இதுகுறித்து ஆராய்ந்து அறிவித்துள்ளனர். ஒருவரது நகங்கள் கீழ்கண்டவாறு அமைந்திருந்தால், அவரது உடலில் என்ன குறைகள் இருக்கும் என விளக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற நகம்: சற்றே நிறம் குன்றி காணப்படும் இந்த வகை நகங்கள் மிக கடினமாக இருக்கும். நகத்தின் வளர்ச்சி மிக மெதுவாக இருக்கும். பாதிப்பு: இதுபோன்ற நகத் தோற்றத்தை பெற்றுள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு இருக்கும். நுரையீரல் பாதிப்பும் இருக்கும்.

டெர்ரிஸ் நகம்: நகத்தின் நிறம் வெள்ளையாகவும், நுனிப்பகுதி கருப்பு வளையம் உடையதாகவும் காணப்படும்.பாதிப்பு: இருதய கோளாறு, கல்லீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் இருக்கும். ஊட்டச் சத்தும் குறைவாக இருக்கும்.

கிளப்பிங்: விரலின் நுனிப்பகுதி அகன்றும், அதற்கேற்றவாறு நகம் வளைவாகவும் இருக்கும். பாதிப்பு: குறைந்த ரத்த அழுத்தம், நுரையீரல், இருதயம், குடல், கல்லீரல் தொடர்பான நோய்கள் இருக்கும்.

ஸ்பூன் நகம்: இந்த வகை நகம் உட்புறத்தில் குழிவானதாகவும், ஓரப்பகுதி உயர்ந்தும் இருக்கும். பாதிப்பு: இரும்புச் சத்து குறைபாடு இருக்கும்.

பிளவு: இந்த வகை நகங்கள் எளிதில் உடையக்கூடியவை. நகத்தின் அடிப் பகுதியில் இருந்து நகம் தொங்கிய நிலையில் இருக்கும். பாதிப்பு: தைராய்டு மற்றும் படை நோய், "சோரியாசிஸ்' நோய் பாதிப்பு இருக்கும்.

நகக் கீறல்: நகங்களில் கீறல்கள் காணப்படும். பாதிப்பு: "சோரியாசிஸ்' என்ற தோல் நோய், தோல் அலர்ஜி ஆகிய பாதிப்புகள் இருக்கும்.

ஒழுங்கற்ற வளர்ச்சி: நகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு கோடுகள் மற்றும் தடங்கள் இருக்கும். பாதிப்பு: மாரடைப்பு, ஊட்டச் சத்து குறைபாடு ஆகிய பாதிப்புகள் இருக்கும்.

  • 9 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நகம் சொல்வது என்ன?

நகங்கள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் நகத்தைப் பற்றி முழுமையாக அறியாமல் நகம் தானே என்று அலட்சியமாக இருப்பவர்களும் உள்ளனர். நம் முகத்தை எவ்வாறு பாதுகாக்கின்றோமோ அதே போல் நம் நகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

நகங்களின் முக்கியத்துவம்?

நகங்களை பராமரிப்பது குறித்து தோல் மருத்துவர் கூறும் ஆலோசனைகள்:  

டென்ஷனாகும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் நடிக்கும் பழக்கம் நம் உடலுக்கு நாமே கேடு ஏற்படுத்தி கொள்வதற்கு சமம்.

நகக்கணுக்களில் நோய் கிருமிகள் அதிகம் தாக்ககூடும், எனவே நகம் கடிப்பதால் எளிதில் நோய்கள் தொற்றும்.

நகங்களை வெட்டி தூய்மையாக வைத்து கொள்வது உடலுக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்கலாம்.

நகங்கள் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்கை பெற வேண்டும்.

நகங்களினால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள்......

நம் உடலில் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டும் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும். வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்களில் சொத்தை, புண், உடைதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

• நகங்கள் அடிக்கடி உடைகின்றதா இதற்கு காரணம் மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருக்கும். இது சிறுநீரக பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

• நகங்கள் வெலுத்ததாக இருக்கின்றதா? இரத்த சோகை, சிறுநீரக தொடர்பான பிரச்னையாக இருக்கலாம்.

• தோற்றத்துக்கு மங்கலாக தென்பட்டால் கவனியுங்கள் மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

• அகண்டு வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு குறைவாக கிடைக்கிறது. இதை உடனே கவனியுங்கள் இல்லையென்றால் நுரையீரல் பாதிக்கப்படலாம்.

உங்கள் நகங்கள் நிறம் மாறுகிறதா கவனியுங்கள்?

• பலருக்கு நகங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இவ்வாறு இருந்தால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

•  நீலநிறமாக மாறி இருந்தால் இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்றும் இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

• நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அறிகுறி என்று சொல்லலாம்.

• நகங்களில் வண்ணம் வைக்கும் பெண்கள் தொடர்ந்து வைக்காமல் 15 நாளைக்கு ஒருமுறை சூரியஒளி படும்படி விட்டு அதன்பின் வைக்கலாம். இல்லையெனில் மஞ்சள் நிறமாகவும் பொலிவு இழந்தும் காணப்படும்.

http://www.dinamani.com/health/article1261547.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.