Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் கே.பியின் லீலைகள்

Featured Replies

பல வேறுபட்ட முகங்களுடன் செயற்பட்ட கே.பி. தனது லீலைகளைச் சிங்கள அரசுக்குச் சார்பாகத் தற்போது செய்து வருகிறார்.கனடாவில் வாழ்ந்துவந்த சுரேஷ் மாணிக்கவாசகத்தை கனேடியக் காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கைகளை எடுத்தபோது ‘பெரிய மீன்’பிடிபட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்த சிங்களம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத முகவராகச் செயற்பட்டவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதுடன்,சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு வழங்கும் நிலையில் கே.பி. இருக்கிறார் என்றால் இவர் எந்தளவு விசுவாசமாக மகிந்தவுக்கு இருக்கிறார் என்பதை ஒரு குழந்தையினாலேயே இலகுவாகவே அறிய முடியும்.

 

 

சுதந்திரப் பறவையாகப் பறக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் கே.பியைப் பேட்டியெடுக்க டி.பி.எஸ்.ஜெயராஜ் போன்றவர்களை அனுமதித்து இவரின் வாக்கு மூலங்களூடாக ‘மகிந்த அன்ட் கோ’கொலைகாரக் கூட்டங்களைப் பாதுகாக்கும் வேலைகளை மகிந்த செய்கிறார் போலும்.

 

விடுதலைப் புலிகளின் தலைமை எப்போது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததோ அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு விதமான குதர்க்கமான தகவல்களைத் தமிழ் மக்களிடம் கூறி, தமிழகம், தமிழீழம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களைக் குழப்பும் வேலைகளைச் செய்கிறது சிங்கள அரசு. இதற்குத் துணைபோகிறார்கள் தமது இருப்பை உறுதி செய்ய முனையும் எட்டப்பர்கள். எல்லாமே ஒரு நாள் வெளிவரும் அப்போது வெளிக்கும் உண்மை.

 

அனைத்துத் தமிழ் மக்களும் முன் எப்போதும் இல்லாதவாறு உஷாராக இருக்க வேண்டிய தருணமே இது. உலக நாடுகள் அழுத்தம் பிரயோகிக்கும் மனித உரிமைகள் குறித்த செயற்பாடுகளைக் கே.பி. போன்றவர்களைப் பாவித்து மழுங்கடித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது சிங்களத் தலைமை.

 

வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அடுத்த மனித உரிமைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராகக் கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற வாதம் அதிகரிக்கும் இவ் வேளையில் கே.பி. கொடுக்கும் வாக்கு மூலங்கள் மூலமாகத் தப்பிக்கலாம் என்று மகிந்த கருதுகிறார் போலும்.

 

 

 

சரணடையும் கோரிக்கை கொலை செய்யப் போடப்பட்ட நாடகமே

 

 

போர் நிறுத்தத்தை வேண்டி நின்றது தமிழினம். எதிரியானவன் பயங்கர ஆயுதங்களுடன் படையெடுக்கும் போது சிறிய ரக ஆயுதங்களுடன் தற்காப்புப் போர் செய்ய எத்தனிப்பது என்பது யுத்த மரபினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே.ஒரு சிறிய பகுதிக்குள் மக்களைச் செல்லுமாறு பணித்து குறித்த பகுதியை யுத்த சூனியப் பிரதேசமாக அறிவித்தது சிங்களம். இதனை ஐக்கிய நாடுகளின் அமைப்பினரே ஏற்றுக்கொண்டனர்.யுத்த சூனியப் பிரதேசத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதி ஓடிச்சென்று பதுங்கிய பல்லாயிரம் தமிழ் மக்கள் எறிகணைகளாலும், விமானக் குண்டுத் தாக்குதலினாலும் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டார்கள். இவற்றைச் செய்மதியின் துணையோடு படம்பிடித்து ரசித்தன வல்லரசுகள்.

 

விடுதலைப் புலிப் போராளிகளைச் சரணடையச் செய்யும் நாடகம் என்பது குறித்த சில மாதங்களில் போடப்பட்ட திட்டமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுப் பல்வேறு விதமான ஒத்திகைகளுக்குப் பின்னரே அரங்கேற்றப்பட்டது.இவைகள் அனைத்தையும் செய்யப் பாவிக்கபட்ட கருவிகளே கருணா, பிள்ளையான், கே.பி. போன்றவர்கள்.இதற்குச் சன்மானமாக வழங்கப்பட்ட சலுகைகளையே தற்போது இவர்கள் சிறிலங்காவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அப்போதைய சிறிலங்காவுக்கான நோர்வேயின் தூதுவரின் கூற்றின்படி, “விடுதலைப் புலிகள் ஆயுதங்களோடு சரணடைய ஒப்புக் கொண்டால் நோர்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து சிறிலங்காவைக் கேட்டுக் கொள்ள முடியும்" என்றும், "விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை"என்றும் அடித்துக் கூறப்பட்டது.

 

மேலும் அவர் கூறுகையில்“நிச்சயமாக சிறிலங்காவின் இராணுவம் வெற்றி பெறும். எனவே உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். அப்படி விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு சிறிலங்காவை வலியுறுத்தும். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும்"என்றார்.

 

வேடிக்கை என்னவெனில் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டு கண்காணிப்பாளராகச் செயற்பட்டு பின்னர் மகிந்தவினால் பேச்சுக்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நோர்வே நாட்டின் தூதுவரின் இது போன்ற கருத்துக்களின் நம்பகத் தன்மையை அறிய நிச்சயமாக ஆப்கானிஸ்தான் சென்று அங்கு தற்போது நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் இவரைப் பேட்டியெடுத்து உண்மையை உலகத்துக்கு வெளிக் கொண்டு வரவேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது.

 

ஒருவரைப் பேட்டி எடுக்கும் போது அது குறித்த நம்பகத் தன்மையை அறிய குறித்த பேட்டியில் சொல்லப்பட்டுள்ள நபர்களைப் பேட்டியெடுத்து அவர்களுடைய கருத்தையும் எழுதுவதே பத்திரிகை தர்மமாக இருக்க முடியும்.இது போன்ற கட்டுரைகளை வாசித்த பின்னராவது ஜெயராஜ் போன்றவர்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் நோர்வேயின் தூதுவரைப் பேட்டியெடுத்து உண்மையை எழுத வேண்டும். இதனை ஜெயராஜ் செய்யமாட்டார் என்பது மட்டும் திண்ணம் காரணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழர்களின் எதிரிகளுடன் பேரம் பேசும் பழக்கம் உடையவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாததுதான். நிச்சயம் வேறொரு பத்திரிகையாளராவது உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவர் என்பதனை எதிர்பார்ப்போமாக.

 

 

 

ஏமாற்றமடைந்ததாகப் புதுக்கதை விடும் கே.பி.

 

நோர்வேத் தூதுவரின் கருத்துப் பரிமாறுதல்களுக்குப் பின்னர் தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தொடர்பு கொண்ட போது, மிகுந்த ஏமாற்றம் அடைந்தாகக் கூறியுள்ளார் கே.பி.

 

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடைய விடுதலைப் புலிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன் தாம் இறுதிவரை போராடுவோம் என்ற சவாலோடு இருந்தனர் என்று கூறியுள்ளார் கே.பி.

 

ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்த அரசியல் பிரிவுத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த உண்மை. ஒட்டுமொத்த விடுதலைப் புலிப் போராளிகளையும் சரணாகதியாக்கிவிட்டு, ஒரே புதை குழிக்குள் போட்டு அடக்கம் செய்து விடலாம் என்று சிங்களம் கருதியது. இதற்கு உதவியாக இருந்தன பல நாடுகள். இவற்றைச் செயற்படுத்த கே.பி. போன்றவர்கள் மூலமாக வலை விரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாகப் பிடிக்கலாம் என்று கருதியே செயற்பட்டது சிங்களம். இதனை எந்தவித வஞ்சகமும் இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார் கே.பி. என்பதனையே இவருடைய கூற்றுக்கள் பிரதிபலிக்கின்றன.

 

விடுதலைப் புலிகளின் தலைமையின் கொள்கை என்னவென்பதனை நன்கே அறிந்து வைத்திருந்தார் கே.பி. விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்குத் தெரியாத பல சம்பவங்கள் கே.பிக்குத் தெரிந்திருக்க சந்தர்ப்பங்கள் அதிகம். பல்வேறு காலகட்டங்களில் பிரபாகரனுடன் அளவளாவும் நிகழ்வுகள் கே.பிக்கு நீண்ட காலமாகவே இருந்தது. கே.பியுடன் பிரபாகரன் ஒன்றாக செயற்பட்ட காலங்களும் அதிகமாகவே இருந்தன. இப்படியான உறவைப் பேணியவருக்கா பிரபாகரனின் கொள்கைகள் என்னவென்று தெரியாமல் இருந்திருக்க முடியும் என்கிற வினாவே பலர் முன் எழுகிறது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் தந்திரம் வெகு நாட்கள் எடுபடாது என்பதனை கே.பி. உணரும் காலம் வெகு விரைவில் வரும்.

 

கே.பி. மேலும் கூறுகையில்,“எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொது மக்களைக் காப்பாற்ற வேண்டும். இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நாவின் உயர் அதிகாரிகள், தூதர்கள்,கொள்கை வகுப்பாளர்கள் எனப் பல தரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.மார்ச் மாதப் பிற்பகுதியில் சர்வதேச அனுசரணையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை ‘மௌனிக்க’ செய்தல் அது. தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களுக்குக் குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத் திட்டம்."

 

“விடுதலைப் புலித் தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க மூன்று நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள். இந்தத் திட்டம் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது. இந்தத் திட்டம் பற்றித் தெரிவித்து இதற்கான ஒப்புதலைத் தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்குக் கடிதம் அனுப்பினேன். செய்யலாம் என்று அவர் சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன். 16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்" என்று கூறியுள்ளார் கே.பி.

 

வேடிக்கையென்னவெனில், விடுதலைப் போரை முடிக்கப் போடப்பட்ட சதியின் பின்னணியே மேற் கூறப்பட்டுள்ள கருத்துக்கள். அப்பாவி மக்களைக் காக்க வக்கில்லாது நின்ற கே.பி. போன்றவர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்ற முன் முயற்சிகளை எடுத்ததாக கூறுவது வெறும் கண்துடைப்பு நாடகமே. களத்தில் இருந்து எப்படியேனும் புலிப் போராளிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நிலைப்பாடே சர்வதேச நாடுகளின் நோக்காக இருந்தது. இதனையே கே.பியின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது.

 

நோர்வேதான் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட்டது என்று கூறும் கே.பி., மேலும் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்" என்றார்.விஜய் நம்பியார் போன்ற ஐ.நாவின் உயர் அதிகாரிகளே நடேசன் புலித்தேவன் போன்றவர்களின் சாவுக்கு காரணமாக இருந்தார்கள் என்பதனை ஐ.நாவின் உள்ளக அறிக்கையே உறுதிப்படுத்தியுள்ளது.இதிலிருந்து கே.பி. யார் யாருடனெல்லாம் தொடர்புகளை வைத்துத் தமிழீழ விடுதலைக்கு முழுக்குப் போடக் கங்கணம் கட்டி நின்றார் என்பது புலனாகும்.

 

தனது லீலைகள் மூலமாகத் தமிழ் மக்களையும் அவர் தம் விடுதலைப் போரையும் ஒடுக்கலாம் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டவர்கள் தற்போது சிங்களம் அமைத்துக் கொடுத்துள்ள குகைக்குள் இருந்து கொண்டு உலகத் தமிழர்களை மென்மேலும் முட்டாள்களாக்கலாம் என்று கருதிப் பேட்டிகளைக் கொடுப்பதுடன் இவைகள் மூலமாக செய்த தவறுகளில் இருந்து விடுபடலாம் என்று கருதுகிறார்கள் போலும். காலம் ஒரு நாள் உண்மையின் பக்கம் திரும்பும். அப்போது வெளிக்கும் கயவர்களின் லீலைகள் என்னவென்று. இதனை உணர்ந்து செயலாற்றுவதன் மூலமாக மட்டுமே தமிழர்களை யாரும் முட்டாள்களாக்க முடியாது என்பதனை ஒவ்வொரு தமிழனும் உறுதிப்படுத்த முடியும்.

 

இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்....

 

இவ்ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

 

http://eelampresse.com/?p=14265

 

http://naamthamilar.ca/?p=1398

 

http://www.kalapam.ca/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/

 

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலே தடை செய்யப்பட்ட தமிழ்வின்னில்  வந்த செய்தி. ஆதாரம் இல்லாமல் எப்படி இணைக்க முடியும் அகூதா அண்ணா??? :huh:

  • தொடங்கியவர்

யாழிலே தடை செய்யப்பட்ட தமிழ்வின்னில்  வந்த செய்தி. ஆதாரம் இல்லாமல் எப்படி இணைக்க முடியும் அகூதா அண்ணா??? :huh:

 

அது தெரியவில்லை.

பொதுவாக இவரின் ஆக்கங்களை  பல தளங்களும் பிரசுரிப்பது வழமை.

 

எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

  • தொடங்கியவர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பலரும் தற்போது கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடவேண்டிய தேவையில்லை. கருணா,கே.பி மற்றும் பிள்ளையான் போன்ற புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112651

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

 

மூலம் இல்லாத செய்திகளை யாழிலே இணைக்க தடை என்பது உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எதுவித மூலமும் குறிப்பிடவில்லை. மின் அஞ்சலை மூலமாக குறிப்பிடவும் முடியாது.

  • தொடங்கியவர்

 ஒருவரைப் பேட்டி எடுக்கும் போது அது குறித்த நம்பகத் தன்மையை அறிய குறித்த பேட்டியில் சொல்லப்பட்டுள்ள நபர்களைப் பேட்டியெடுத்து அவர்களுடைய கருத்தையும் எழுதுவதே பத்திரிகை தர்மமாக இருக்க முடியும்.இது போன்ற கட்டுரைகளை வாசித்த பின்னராவது ஜெயராஜ் போன்றவர்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் நோர்வேயின் தூதுவரைப் பேட்டியெடுத்து உண்மையை எழுத வேண்டும். இதனை ஜெயராஜ் செய்யமாட்டார் என்பது மட்டும் திண்ணம்.

 

 காரணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழர்களின் எதிரிகளுடன் பேரம் பேசும் பழக்கம் உடையவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாததுதான். நிச்சயம் வேறொரு பத்திரிகையாளராவது உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவர் என்பதனை எதிர்பார்ப்போமாக.

 

 

கே.பி.யின் பேட்டியில் குறிப்பிடப்பட்டவர்களை பேட்டி கண்டு, அதில் கூறப்பட்ட விடயங்களை வினவுதல் தமிழ் ஊடகங்களின் கடமை.

K.P. அரசுக்காகத்தான் இப்போது வேலைசெய்கிறார். ஆனல் அவர் சில உண்மைகளை வெளியேயும் சொல்கிறார். அதை இடை இடை நாம் கவனிக்கலாம்.

 

 

 

“என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்"

இதில் K.P. சொல்வதாவது, தன்னை ஏமாற்றி, ஐ.நா அதிகாரிகள்தான் புலிகளின் தலைவர்களை கொலை செய்தார்கள் என்பதுதான்.   

 

இந்த பேட்டியின் படி K.P சொல்வது , இவர்கள் மூவரையும் போர்குற்ற விசாரணையில் உள்ளடக்க வேண்டும் என்பது. ( நான் என்று சொல்லாமல், என்னை பொறுத்த வரை என்று சொல்லியிருக்கிறார்)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு காலத்தில் மாத்தயா, பின்னர் கருணா, தற்போது கே.பி. என்று புலிகளில் இருந்தவர்களை வைத்து லீலைகள் புரிவதைவிட உருப்படியான காரியங்கள் எதுவும் இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.