Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்:-
13 டிசம்பர் 2012
 
யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார். வலிகாமம் பகுதி விளையாட்டுத்துறை அதிகாரியொருவரது மகளான 21 வயதுடைய நடராசா கியானி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடை பகுதியினிலுள்ள அவரது வீட்டிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மரணித்தவர் படித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் அவர்கள் வீடு திரும்பியிருந்த வேளை அம்மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையினில் சடலமாக கிடந்துள்ளார்.
 
யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான இவர் தற்போதைய பகிஸ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகத்திறகு சென்றிருக்கவில்லை. வீட்டிலேயே தங்கியிருந்ததாக பெற்றோர் மேலும் தெரிவிக்கின்றனர். தற்போதைய பல்கலைக்கழக சூழலில் மாணவியினது மரணம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.  

கொலையா? தற்கொலையா? காரணம் என்ன?

 

பல்கலைக்கழக பிரச்சினைக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா? :unsure:

 

பெற்றோர் இல்லாத நேரம் இராணுவத்தால் ஏதும் துன்புறுத்தல் இடம்பெற்றதா? அல்லது வேறு நபர்களால்? அல்லது தற்கொலையா? எதுவும் தெரியவில்லை. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலையா? தற்கொலையா? காரணம் என்ன?

 

பல்கலைக்கழக பிரச்சினைக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா? :unsure:

 

பெற்றோர் இல்லாத நேரம் இராணுவத்தால் ஏதும் துன்புறுத்தல் இடம்பெற்றதா? அல்லது வேறு நபர்களால்? அல்லது தற்கொலையா? எதுவும் தெரியவில்லை. :(

மேலதிக விபரங்கள் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இக்கொலைக்கும் கீழே இணைத்த செய்திக்கும் தொடர்பு இருக்கலாம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=113001

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யாழ். பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம் :3 மாணவிகளுக்கு புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு! 
[Friday, 2012-12-14 08:47:35]
சுன்னாகம் கந்தரோடை ஐயநார் வீதி வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் மரணமான இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரணமான பெண் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான 21 வயதுடைய நடராசா கியானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்ற போது குறித்த பெண் படித்துக் கொண்டிருந்ததாகவும் பெற்றோர் வீடு திரும்பிய வேளை, அப்பெண் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கழுத்தில் படுக்கை விரிப்பின் ஒரு பகுதி சுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மூவரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். யாழில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வருமாறு இம்மாணவிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதி சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்படுள்ளார் !

 

ஆனால் மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்டுள்ளது !!

 

A female student of the Jaffna University has reportedly been found strangled to death at her house in Chunnakam under mysterious circumstances on Friday (14), as three more female students have been summoned to report immediately to the Jaffna police amid mounting tension and fears in the war-ravaged northern peninsula.

 

According to news sources in Jaffna, 21-year old Fine Arts Faculty student identified as Nadarasa Kiyani was found dead with the bed sheet tightly wrapped around her neck at her house at Iyanar road Kantharodai, Chunnakam, when the parents returned home from routine shopping in Chunnakam town, located five miles north of Jaffna town.

 

The parents have said that she was studying at her desk when they left home.

 

The autopsy report of the deceased, however, has declared that the death was due to heart attack, a latest report from Jaffna said.

 

http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/politics-a-current-affairs/239-female-jaffna-university-student-strangled-to-death-as-tid-summons-three-more

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.

அப்படியானால் பல்கலைக்கழக பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் போலிருக்கு. :(

எமது உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !

 

யாழ் பல்கலைக்கழக மாணவிகளை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விட்டுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது சிங்கள பயங்கரவாத அரசு இந்த மாணவச் செல்வங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடித் தனத்தை அறிந்தும் சர்வதேச சமூகம் தன்னுடைய கோர முகத்தை மெளனித்து வைத்திருப்பது மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் எமக்கும் பெரும் வேதனையை தருகிறது.

 

இன்று நள்ளிரவு3 மணியளவில் எமது தாயகம் எங்கும் வீதிச் சோதனைஎன்ற பெயரில் ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு இலங்கை இராணுவம் புகுந்து புலிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளதாக அறிந்துள்ளோம். கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

எமது தாயகம் எங்கும் இராணுவ ஆட்சியே நடப்பது உறுதியாக உள்ளது.  இதை அறிந்து புலத்தில் உள்ள எம் உறவுகள் உங்கள் உரிமைக் குரலை வீச்சாக்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

 

- முகநூல் ஊடாக

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.