Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதிப்புமிக்க சம்மந்தர் அய்யா அவர்களுக்கு! புலத்திலிருந்து எழுதும் ஈழ தமிழனின் மடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மதிப்புமிக்க சம்மந்தர் அய்யா அவர்களுக்கு! புலத்திலிருந்து எழுதும் ஈழ தமிழனின் மடல். 
[Friday, 2012-12-14 23:14:22]
 
தங்களின் கடைசி உரையின் தாக்கத்தினால் எழுதும் மடல். தங்களிடம் இருந்து பதில் வரும் எனும் ஒரு சிறு நம்பிக்கையோடு இதை எழுதுகின்றோம்.
விடுதலைப் புலிகள் யாரையும் இலகுவாக நம்புபவதில்லை. ஆனால் அவர்களினால் நேசிக்கப்பட்டவரும் , இலட்சியவாதியுமான தங்களையும் இணைத்தே தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு என்கின்ற எங்களிற்கான கூட்டைக் கட்டியெழுப்பினார்கள். பேச்சுக்கு பேச்சு சம்மந்தர் அய்யாவை கேட்டுச்செய்யுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அவர்களின் மதிப்புகுரியவராக இருந்தீர்கள். ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறைநிலை கட்சியாக மாற்றம் பெற்றது. அதற்கு காரணம் தேசிக்கூட்டமைப்பினரால் பெரிதாக ஒன்றையும் அந்த நிலையில் செய்து கொள்ளமுடியாதிருந்ததே காரணம் என கூறப்பட்டது.
 
முழுமையாக எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டபோது, யாரும் இல்லாத நிலையொன்றில் தமிழர்கள் தாங்கள் தாங்கி நிற்பதற்காகன ஒரு ஆதரவு தளதையும் தங்களின் தேசிய அடையாளதையும் தேடினர். இவ்வாறு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தமிழர்களின் வாழ்வின் இருப்பை உறுதிசெய்வதற்காக மீண்டும் இயங்கு நிலைக்குச்சென்றது. பலர் பாதை மாறிச் சென்ற போதும் ஒரு சிலரை தவிர எல்லோரும் அரசோடு பேசவதற்காக கை கொடுத்தார்களே தவிர, யாரும் கட்சிமாறிப்போய் மந்திரிப் பதவிகளை அனுபவிக்க எத்தனிக்கவில்லை. அவர்கள் கொள்கையிலும், மக்களின் விடிவிலும் எவ்வளவு உறுதியாகவும் உற்சாகத்தோடும் செயற்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். முடிந்த அளவுக்கு இறங்கி வந்து இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுக்களில் ஈடுபட்டீர்கள். அவர்கள் ஒன்றையும் தந்துவிட மாட்டார்கள் என்பது உங்கள் உள் மனதிற்கு தெரிந்தே இருந்தது. நீங்கள் நடத்திய இராசந்திர (diplomatic war) போரின் நோக்கமே கேட்கும் சிறிதைக் கூட இலங்கை அரசாங்கம் தரப்போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே. அதுவே இவ்வளவு காலம் நடந்தேறியது.
 
அவர்கள் கொள்கையிலும், மக்களின் விடிவிலும் எவ்வளவு உறுதியாகவும் உற்சாகத்தோடும் செயற்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். முடிந்த அளவுக்கு இறங்கி வந்து இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுக்களில் ஈடுபட்டீர்கள். அவர்கள் ஒன்றையும் தந்துவிட மாட்டார்கள் என்பது உங்கள் உள் மனதிற்கு தெரிந்தே இருந்தது. நீங்கள் நடத்திய இராசந்திர (diplomatic war) போரின் நோக்கமே கேட்கும் சிறிதைக் கூட இலங்கை அரசாங்கம் தரப்போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே. அதுவே இவ்வளவு காலம் நடந்தேறியது.
 
ஆனால் உங்களோடு பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டு அதையே உலகின் கண்களுக்கு காட்டியவாறு, அவர்களும் தங்கள் உள் மனதின் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக செய்துகொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை உங்களோடு கதைத்துக்கோண்டே கட்டிமுடித்தார்கள். புனர்வாழ்வு நடவடிக்கை எனும் பேரில் பெறப்பட்ட பல தொகை பணத்தை தாங்கள் எடுத்துக் கொண்டு எம் மக்களை அவர்கள் நடுக் காட்டில் விட்டார்கள்.
 
ஆள் ஆளுக்கு தமிழ்த் தேசியம் கதைத்து கட்சிகளை உருவாக்கினால், அதில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்றால் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போயிடும் அல்லவா. மோதிரக் கையினால் குட்டு வாங்கிய கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரித்து வேறு அமைப்பை நிறுவும் முயற்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்காததன் மூலமாக அவை தேசிய கொள்கைகளை மட்டும் பேசிக்கொண்டு தேர்தலில் யாரும் நின்று வெல்ல முடியாது எனும் செய்தியினை மக்கள் உரத்தச் சொன்னார்கள். மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களின் இறுதிக் இலக்கை அடைவதற்காக வே உருவாக்கப்பட்டது என்பதை மக்கள் நம்பியிருக்கின்றார்கள்.
 
தேர்தல் காலங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கள் மாவீரர்களை மதிப்பதாகவும்,தேர்தல் முடிந்த பின்னால் முரண்படுகின்ற பேச்சுக்களாகவும் வருவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் நீங்கள் ஏற்றிய சிங்கக் கொடி நடவடிக்கையினை கூட எங்களைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது ராஐதந்திரமாக தெரிந்தது. அது வேண்டுமென்றே உங்கள் கையில் திணிக்கப்பட்டதாக கூட நாம் உங்களை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து சொல்லிவந்தோம். அங்கே தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்ற முடிவதில்லையே தவிர, யாரும் சிங்கக்கொடியினை ஏற்ற வேண்டும் எனும் கட்டாயம் இருப்பதாக தெரியவில்லை. அப்படியிருந்தால், இப்போது ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் சிங்கக்கொடி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும், உங்களை மதிக்கும் நாம் செய்த பிழையினை குறைகளாக பார்க்காமல் தொடர்ந்து உங்கள் பாதையில் பயணிக்க தயாராக இருந்தோம்.
 
2010 நவம்பர் காலப் பகுதியில் சந்தித்த இரண்டு உறுப்பினர்களின் கருத்துக்கள் படி பேச்சுவார்த்தைக்கு நேரகால அவகாசம் இருப்பதாகவும், 2011 இறுதியில் தங்கள் கட்சி பேச்சுவார்த்தை முயற்சிகளில் இருந்து விலகும் எனவும் அவர்களினால் சொல்லப்பட்டது. பல தெருவோரப் போராட்டங்கிளல் உங்கள் கட்சி உறுப்பினர்கள் பங்கெடுப்பார்கள் ஆனால். உங்களில் ஒரு சிலர் அறிக்கை கூட விடுவதில்லை. நாமும் அதைப் பற்றி குறை படுவதில்லை.
 
கட்சிப் பதிவு
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் அமைப்பை நீங்கள் பதிவு செய்வதை விரும்பவில்லை என்பதையும், அதற்கான முயற்சிகளை நீங்கள் தட்டிக் கழிப்பதாகவும் பலக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உங்களை வெளிநாடுகளில் இருந்து வழிநடத்தும் ஒரு சில தமிழ் அமைப்புக்களும் தாங்கள் செய்வது போன்று நீங்களும் இயங்க வேண்டும் என நினைக்கின்றார்கள். கட்சி பதிவாகி சட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகளையும் கருத்துக்களையும் உள்வாங்கும் ஒரு கட்டமைப்பு உருவாக்கத் தவறிக்கொண்டு இருந்தும் இந்நிலையிலும் நாம் தங்கள் தலைமையின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கின்றோம்.
 
கட்சிக்கான துணைச்சட்டம்(by-law) உருவாக்கப்படவேண்டியதின் அவசியம் என்ன என்பதை நாம் அறிவோம். அது தலைவர் பிழை விட்டாலும் தண்டிக்கும் அதிகாரம் இருக்கும் அல்லவா? வெளிப்படைத் தன்மை சிறிது கூட இல்லாமல், இயங்கும் அமைப்பாக தமிழர் தேசியக் கூட்டமைப்பு இவ்வளவு காலமும் ஓடியிருப்பது நமக்கு வேடிக்கையாக உள்ளது. பூட்டிய கதவுக்குள்ளே முடிவெடுத்து , காரியம் செய்யும் புலத்தில் உள்ள சில அமைப்புக்கள் மாதிரி அவர்கள் உங்களையும் வழிநடத்துகின்றனரோ நனைகக்த தோன்றுகின்றது? இங்கிருந்து கூட்டமைப்புக்காக அனுப்புகின்ற பணம் உங்கள் தனிக் கட்சியின் வங்கிக் கணக்கிற்கு அல்லவா செல்கின்றது? பின்னால் அது எவ்வாறு மற்ற உறுப்பினர்களின் தேவைகளுக்கு பகிர்ந்துக்கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறியலாமா?
 
உங்கள் பக்கத்தில் இருந்து அடிக்கடி முன்வைக்கப்படும் ஒரு காரணம், நீங்கள் துப்பாக்கி நடுவில் நின்று அரசியல் செய்கின்றீர்கள் ஆகையினால் எதையும் நாம் கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்பதே. தொடர்ந்து இந்தப் பரப்புரையினை உங்களைச் சேர்ந்த சிலர் செய்துகொண்டிருக்கும் போது, அங்கே வீதிக்கு இறங்கி கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் நீதி கேட்பதற்கு முன்னே வருகின்றார்கள். பலர் இப்போதும் அடக்குமுறையாளனின் கொடியினை ஏற்று மறுக்கின்றனர்.
 
அவர்களுக்கு எப்படி இந்த துணிவு வந்தது? மக்கள் நாளை நடக்கப்போகும் தேர்தல்களில் மக்களுக்காக வீதிக்கு வந்தவர்களையா அல்லது பயந்துகொண்டு வேதாந்தம் பேசுபவர்களையா ஏற்றுக்கொள்வார்கள்? மக்கள் தாம் சார்ந்த பிரச்சனைகளை துணிந்தவர்களே எடுத்துச்செல்லவேண்டும் என முடிவெடுத்தால் உங்களின் பலரின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் ஒன்றை அடிக்கடி சொல்வீர்கள் "கோசங்களை எழுப்பி உணர்ச்சி வசப்பட்டு" எதனையும் செய்யமுடியாது என. ஆனால், நீங்கள் அதை சொல்கின்ற போதே மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக தெரிகின்றீர்கள். அதை அழகாய் அமைதியாக சொல்ல முடியாதா? அரசியல் தந்திரம் என்பது மிகவும் முக்கியம். அது ஒரு கால அவகாசத்தோடு கட்டுப்பாடுகளோடு பயணிக்கின்றபோதே அவை மிகவும் எதிர்பார்த்த பயனைத் தரும். காலங்களை விரையம் செய்கின்ற போது, உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டு இலங்கை அரசாங்கம் முழு நாட்டையும் சிங்களமயப்படுத்தும் திட்டத்தில் வெற்றிக்கொள்வார்கள். அப்படியொரு நிலை வருகின்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைபிற்காக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவதற்கு சாத்தியமாகும் அல்லவா? கண்ணை இழந்த பின்னால் சூரிய வணக்கம் செய்ய முடியுமா?
 
புலம் பெயர் மக்கள்
 
எமது தாயகத்து மக்களின் விடிவுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே அவர்கள் இறுதி இலக்கினை நோக்கிய பார்வை இருக்கின்றது. 30 வருடங்களாக அவர்கள் பல போராட்ட சுமைகளை தாங்கியவர்கள். கொடுக்கும் பண்பும், உழைக்கும் குணமும் கொண்ட அந்த புலர் பெயர் மக்களே தமிழ் தேசியக் கூட்டமைபின் பலத்தை உறுதிப்படுத்துவர்கள். அவர்களை புறக்கணித்து, ஒரு சிலரின் கருத்துக்களை மட்டுமே உள்வாங்கி பயணிப்பதனால் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு புலம் பெயர் சமூகம் உதவிசெய்யப்போவதில்லை. உங்களை சிலர் வழி நடத்துபவர்கள். பலர் 30 வருடப்போராட்ட வரலாற்றில் ஒரு துரும்பையும் எடுத்துப்போடாதவர்களாக இருப்பார்கள். அவர்களை நம்பினால் கூட்டமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை. அரசனை நம்பி புருசனை கைவிடாதீர்கள். உங்கள் பிரதிநிதிகள் என அடையாளம் காட்டுபவர்கள் கட்சி வளப்பது அல்ல அவர்கள் நோக்கம். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டித்தீர்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். பின்னால், எவ்வாறு மக்களின் ஆதரவை மாற்ற (shift) முடியும்? உங்களை பிரதிநித்துவப் படுத்துபவர்களின் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வளர்ப்பதுவா அல்லது அழிப்பதுவா? உள்வாங்கும் நடவடிக்கையினை நாம் ஒழுங்காக செய்யவேண்டுமல்லவா?
 
இன்று அழிவு நடந்து முடிந்துள்ளது. அந்த அழிவினை செய்கின்ற போது எவ்வாறு உலகம் உறங்கு நிலையில் இருந்ததோ, அப்படியே முடிந்த பின்னாலும் இருந்திருப்பதற்கு நிறையவே சாத்தியம் இருந்தது. புலம் பெயர்ந்த மக்களே தமது தொடர் முயற்சிகளினால் சில நாடுகளின் மனச்சாட்சியை தட்டியெழுப்பினார்கள். உலகம் இப்போது மெதுவாக எம் பிரச்சனைக்கு குரல் கொடுக்க எத்தணிக்கின்றது. இந்த முயற்சிகள் நடக்கின்ற போது, தாங்கள் எவ்வாறு அத்தோடு ஒத்து போவது என யோசித்துப்பார்த்தீர்களா? உலகம் விழிக்கின்ற போது நீங்களோ உறங்கு நிலையில் அரசாங்கத்தோடு இப்போதும் பேசிக்கொண்டிருந்தால் விழிக்கும் உலகம் மீண்டும் உறங்கு நிலைக்கு தள்ளும் படியாக இருக்காதா?
 
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும், கோசவா விடுதலைப்படையும், பலஸ்தீனர் விடுதலை இயக்கமும் ஆயுத போராட்ட வழி வந்தே விடுதலை பயணத்துக்கு பலம் சேர்த்தார்கள். உலகம் அவர்களை பயங்கரவாதிகளாக முதலில் ஒதுங்கினார்கள். அப்படியொரு ஆயுதப்போராட்டத்தை தமிழர்களும் செய்தார்கள். பல வல்லசுகளின் சதிகளினால அது ஒடுக்கப்பட்டது அதற்காக, தோற்றுப்போய்விட்டதனால் சொந்த மக்களே அவர்களின தியாகத்தை கொச்சப்படுத்தலாமா? போராடியவர்களின் அரசியல் அபிலாசைகள் அப்படியே உள்ளதே! அவற்றை நாம் தான் அறவழியில் போராடியெடுக்கவேண்டும். ஆனால், நாம் என்ன செய்கின்றாம் என்பதை ஒரு தரம் யோசித்துப்பார்த்தோமோ. தடை போட்டு, நாம் முழுமையாக தீண்டத்தகாத (untouchable) இனக் குழுமமாக உருவாகியிருக்கின்றோம். அந்த தடைகளை ஒவ்வொரு நாடுகளிலும் நாம் சட்டபடி அகற்ற வேண்டும். அதற்காக புலம் பெயர் நாடுகளில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நாம் அவதானிக்கலாம். இப்படியாக ஒரு வழியில் பயணிக்கும் பொழுதில், நீஙகள் கடைசியாக இலங்கை பாராளமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் எம்மை மிகவும் ஆத்திரத்திரத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
 
கடைசியாக நடந்த மாவீரர் நிகழ்வில் அலை அலையாக மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அதில் ஒருவர் எம்மை கூப்பிட்டு "என்ன உங்கள் தலைவர்" இப்படிச் சொல்லிவிட்டாரே. நாம் யோசிக்காமல் உடனே சொன்னது "அவர் ஒரு போதும் அப்படிச்சொல்லியிருக்க மாட்டார். இது தேவையற்றவர்களின் விசமப் பிரச்சாரமாக இருக்கும்". என்றோம். அதற்கு அவர் சொன்னது "அங்கே அவர் பேசிய காணொளி (video clip) உள்ளது என சொன்னபோதே நாம் எதற்கும் வந்து பார்த்தபின்னால் என்ன நடந்தது என முடிவெடுத்தோம்.
 
ஆச்சரியமும், ஆத்திரமும் எம்மை வாட்டிப்போட்டது. நீங்கள் செய்யும் அரசியல் சாணக்கியம் என்பது விடுதலை புலிகளை தவிர்த்தது. அது சிறந்த பாதையாகவே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் இப்போது புலிகளை மிதித்து அரசியல் செய்திருக்கிறீர்கள். இதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நீங்கள் புரியாதவர்களாக இருக்கமுடியாது. எந்த தேசிய இன விடுதலைப்படைகளும் பிழைகள் விடாமல் போராடியது அல்ல. பிழைகள் திருத்தப்படுவதும், அவை நேர்த்தியாக்கப்படுதலும் வரலாற்றில் நடந்திருக்கின்றன. அதற்காக, நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது அதுவல்ல. தங்களை தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் விடுதலைப் புலிகள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மன்னிக்கும் கேட்கும் போது, இன்னுமொரு படி மேலே செல்வீர்கள் என்பதை அறீவீர்கள். நீங்கள் சிங்களத்தை மகிழ்ச்சிக்கொள்ள வைக்க சொந்த இனத்தை காலில் போட்டு மிதித்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா? உங்களின் எத்தனை உறுப்பினர்களுக்கு இந்த பேச்சு ஆத்திரத்தை எற்படுத்தியிருக்கும் என்பதை அறிவீர்களா? அவர்களும் உங்களைப்போல் சிங்களத்தை மகிழ்ச்சி படுத்த முயற்சிப்பார்களா? அல்லது தமிழுக்காக எழுந்து நிற்பார்களா?
 
உங்களை இன்னும் நம்பியிருக்கும்
 
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
 
ராஜ்குமார் சுப்பிரமணியம்
 
மார்க்கம், ஒன்றாரியோ
 
கனடா
 
எமது தாயகத்து மக்களின் விடிவுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே அவர்கள் இறுதி இலக்கினை நோக்கிய பார்வை இருக்கின்றது. 30 வருடங்களாக அவர்கள் பல போராட்ட சுமைகளை தாங்கியவர்கள். கொடுக்கும் பண்பும், உழைக்கும் குணமும் கொண்ட அந்த புலர் பெயர் மக்களே தமிழ் தேசியக் கூட்டமைபின் பலத்தை உறுதிப்படுத்துவர்கள். அவர்களை புறக்கணித்து, ஒரு சிலரின் கருத்துக்களை மட்டுமே உள்வாங்கி பயணிப்பதனால் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு புலம் பெயர் சமூகம் உதவிசெய்யப்போவதில்லை. உங்களை சிலர் வழி நடத்துபவர்கள். பலர் 30 வருடப்போராட்ட வரலாற்றில் ஒரு துரும்பையும் எடுத்துப்போடாதவர்களாக இருப்பார்கள். அவர்களை நம்பினால் கூட்டமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை. அரசனை நம்பி புருசனை கைவிடாதீர்கள். உங்கள் பிரதிநிதிகள் என அடையாளம் காட்டுபவர்கள் கட்சி வளப்பது அல்ல அவர்கள் நோக்கம். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டித்தீர்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். பின்னால், எவ்வாறு மக்களின் ஆதரவை மாற்ற (shift) முடியும்? உங்களை பிரதிநித்துவப் படுத்துபவர்களின் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வளர்ப்பதுவா அல்லது அழிப்பதுவா? உள்வாங்கும் நடவடிக்கையினை நாம் ஒழுங்காக செய்யவேண்டுமல்லவா?

....
 
உங்களை இன்னும் நம்பியிருக்கும்
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
ராஜ்குமார் சுப்பிரமணியம்
மார்க்கம், ஒன்றாரியோ
கனடா

:rolleyes:  

யார் அவர்கள் ?

:rolleyes:  

யார் அவர்கள் ?

கனடாவில்  65 தாண்டினால் கிடைக்கிற பென்ஸன் காசை எடுத்துக் கொண்டு வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறவர்கள் தானே?

சரி ஏன் இவர்கள் இலங்கைக்கு போய்  இதை எல்லாம் செய்கிறார்கள் இல்லை?

 சிங்களவன் எந்த நாட்டு பிரஜாஉரிமை எடுத்து இருந்தாலும்  சிங்கள நாட்டுக்கு சென்று சேவை செய்கிறான்( முக்கியமாக  இலங்கை திரும்பி சென்று அங்கையே தங்கி)

 பலநாட்டு யூதர்களும் இஸ்ரேல்க்கு சென்று நாட்டுக்கு சேவை செய்கிறான்( முக்கியமாக  நாட்டிலையே தங்கி இருந்து கொண்டு)

ஏன் உந்த ஊழல் நாட்டு இந்தியாவில் பிறந்த பலர் உலகம்பூராகவும் இருந்தாலும் மீண்டும்  இந்தியா சென்று எம்பி  அமைச்சர் என்று ஆகி இருக்கிறார்கள்( முக்கியமாக நாட்டில் இருந்து கொண்ட்டே)

இப்படி பலநாட்டுக் காரர் இருக்கினம் ஆனால்  தமிழன் மட்டும் புலிகளின் கையில்  வடகிழக்கு இருக்கும் போது அந்த பக்கம் தலை வைத்து படுத்து கூட இல்லை ஆனால் புலிகளுக்கு முடிவுரை  செய்ததும் ஆளுக்கு ஆள்   இலங்கையில் இருக்கும்  அரசியல்வாதிகளுக்கு அரிவுரை மட்டும் கொடுக்கிறார்கள் ஏன்?

இதற்கும் நீங்களே பதிலை சொல்லிவிடுங்கள்  :D

மார்கத்தில் பல சுப்பிரமணியங்கள் வேலை இல்லாமல் பிரான்சில இருக்கின்ற மாதிரி இருக்கினம்.

சம்பந்தன் இப்போ காலம் காலமமாக நாங்கள் சொன்னதை சொல்லுகின்றார்கள் ,மிகுதி தமிழர்களும் அதை சொல்லும் காலம் தொலைவில் இல்லை.

அதை விளங்க இவ்வளவு காலம் எடுக்குதே என்பதே எனது ஆதங்கம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்புமிக்க சம்மந்தர் அய்யா அவர்களுக்கு!

புலத்திலிருந்து எழுதும் ஈழத் தமிழனின் மடல். தங்களின் கடைசி உரையின் தாக்கத்தினால் எழுதும் மடல். தங்களிடம் இருந்து பதில் வரும் எனும் ஒரு சிறு நம்பிக்கையோடு இதை எழுதுகின்றோம்.

விடுதலைப் புலிகள் யாரையும் இலகுவாக நம்புபவதில்லை. ஆனால் அவர்களினால் நேசிக்கப்பட்டவரும், இலட்சியவாதியுமான தங்களையும் இணைத்தே தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு என்கின்ற எங்களிற்கான கூட்டைக் கட்டியெழுப்பினார்கள். பேச்சுக்கு பேச்சு சம்மந்தர் அய்யாவை கேட்டுச்செய்யுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அவர்களின் மதிப்புகுரியவராக இருந்தீர்கள். ஆயுதப் போராட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறைநிலை கட்சியாக மாற்றம்  பெற்றது. அதற்கு காரணம் தேசிக்கூட்டமைப்பினரால் பெரிதாக ஒன்றையும் அந்த நிலையில் செய்து கொள்ளமுடியாதிருந்ததே காரணம் என கூறப்பட்டது.

முழுமையாக எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டபோது, யாரும் இல்லாத நிலையொன்றில் தமிழர்கள் தாங்கள் தாங்கி நிற்பதற்காகன ஒரு ஆதரவு  தளதையும் தங்களின் தேசிய அடையாளதையும் தேடினர். இவ்வாறு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தமிழர்களின் வாழ்வின் இருப்பை உறுதிசெய்வதற்காக மீண்டும் இயங்கு நிலைக்குச்சென்றது.

பலர் பாதை மாறிச் சென்ற போதும் ஒரு சிலரை தவிர எல்லோரும் அரசோடு பேசவதற்காக கை கொடுத்தார்களே தவிர, யாரும் கட்சிமாறிப்போய் மந்திரிப் பதவிகளை அனுபவிக்க எத்தனிக்கவில்லை. அவர்கள் கொள்கையிலும், மக்களின் விடிவிலும் எவ்வளவு உறுதியாகவும் உற்சாகத்தோடும் செயற்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். முடிந்த அளவுக்கு இறங்கி வந்து இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுக்களில் ஈடுபட்டீர்கள். அவர்கள் ஒன்றையும் தந்துவிட மாட்டார்கள் என்பது உங்கள் உள் மனதிற்கு தெரிந்தே இருந்தது. நீங்கள் நடத்திய இராசந்திர (diplomatic war) போரின் நோக்கமே கேட்கும் சிறிதைக் கூட இலங்கை அரசாங்கம் தரப்போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே. அதுவே இவ்வளவு காலம் நடந்தேறியது.

ஆனால் உங்களோடு பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டு அதையே உலகின் கண்களுக்கு காட்டியவாறு, அவர்களும் தங்கள் உள் மனதின் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக செய்துகொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை உங்களோடு கதைத்துக்கோண்டே கட்டிமுடித்தார்கள். புனர்வாழ்வு நடவடிக்கை எனும் பேரில் பெறப்பட்ட பல தொகை பணத்தை தாங்கள் எடுத்துக் கொண்டு எம் மக்களை அவர்கள் நடுக் காட்டில் விட்டார்கள்.

ஆள் ஆளுக்கு தமிழ்த் தேசியம் பேசி பேசி கட்சிகளை உருவாக்கினால், அதில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்றால் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போயிடும் அல்லவா. மோதிரக் கையினால் குட்டு வாங்கிய கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரித்து வேறு அமைப்பை நிறுவும் முயற்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்காததன் மூலமாக அவை தேசிய கொள்கைகளை மட்டும் பேசிக்கொண்டு தேர்தலில் யாரும் நின்று வெல்ல முடியாது எனும் செய்தியினை மக்கள் உரத்தச் சொன்னார்கள்.  மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களின் இறுதிக் இலக்கை அடைவதற்காக வே உருவாக்கப்பட்டது என்பதை மக்கள் நம்பியிருக்கின்றார்கள்.

தேர்தல் காலங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கள் மாவீரர்களை மதிப்பதாகவும்,தேர்தல் முடிந்த பின்னால் முரண்படுகின்ற பேச்சுக்களாகவும் வருவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் நீங்கள் ஏற்றிய சிங்கக் கொடி நடவடிக்கையினை கூட எங்களைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது ராஐதந்திரமாக தெரிந்தது. அது வேண்டுமென்றே உங்கள் கையில் திணிக்கப்பட்டதாக கூட நாம் உங்களை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து சொல்லிவந்தோம். அங்கே தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்ற முடிவதில்லையே தவிர, யாரும் சிங்கக்கொடியினை ஏற்ற வேண்டும் எனும் கட்டாயம் இருப்பதாக தெரியவில்லை. அப்படியிருந்தால், இப்போது ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் சிங்கக்கொடி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும், உங்களை மதிக்கும் நாம் செய்த பிழையினை குறைகளாக பார்க்காமல் தொடர்ந்து உங்கள் பாதையில் பயணிக்க தயாராக இருந்தோம்.
2011 நவம்பர் காலப் பகுதியில் அமெரிக்காவில் சந்தித்த இரண்டு உறுப்பினர்களின் கருத்துக்கள் படி பேச்சுவார்த்தைக்கு நேரகால அவகாசம் இருப்பதாகவும், 2011 இறுதியில் தங்கள் கட்சி பேச்சுவார்த்தை முயற்சிகளில் இருந்து விலகும் எனவும் அவர்களினால் சொல்லப்பட்டது. பல தெருவோரப் போராட்டங்கிளல் உங்கள் கட்சி உறுப்பினர்கள் பங்கெடுப்பார்கள் ஆனால். உங்களில் ஒரு சிலர் அறிக்கை கூட விடுவதில்லை. நாமும் அதைப் பற்றி குறை படுவதில்லை.

கட்சிப் பதிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் அமைப்பை நீங்கள் பதிவு செய்வதை விரும்பவில்லை என்பதையும், அதற்கான முயற்சிகளை நீங்கள் தட்டிக் கழிப்பதாகவும் பலக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உங்களை வெளிநாடுகளில் இருந்து வழிநடத்தும் ஒரு சில தமிழ் அமைப்புக்களும் தாங்கள் செய்வது போன்று நீங்களும் இயங்க வேண்டும் என நினைக்கின்றார்கள். கட்சி பதிவாகி சட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகளையும் கருத்துக்களையும் உள்வாங்கும் ஒரு கட்டமைப்பு உருவாக்கத் தவறிக்கொண்டு இருந்தும் இந்நிலையிலும் நாம் தங்கள் தலைமையின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கின்றோம். கட்சிக்கான துணைச்சட்டம்(by-law)  உருவாக்கப்படவேண்டியதின் அவசியம் என்ன என்பதை நாம் அறிவோம். அது தலைவர் பிழை விட்டாலும் தண்டிக்கும் அதிகாரம் இருக்கும் அல்லவா? வெளிப்படைத் தன்மை சிறிது கூட இல்லாமல், இயங்கும் அமைப்பாக  தமிழர் தேசியக் கூட்டமைப்பு இவ்வளவு காலமும் ஓடியிருப்பது நமக்கு வேடிக்கையாக உள்ளது. பூட்டிய கதவுக்குள்ளே முடிவெடுத்து , காரியம் செய்யும் புலத்தில் உள்ள சில அமைப்புக்கள் மாதிரி அவர்கள் உங்களையும் வழிநடத்துகின்றனரோ நனைகக்த தோன்றுகின்றது? இங்கிருந்து கூட்டமைப்புக்காக அனுப்புகின்ற பணம் உங்கள் தனிக் கட்சியின் வங்கிக் கணக்கிற்கு அல்லவா செல்கின்றது? பின்னால் அது எவ்வாறு மற்ற உறுப்பினர்களின் தேவைகளுக்கு பகிர்ந்துக்கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறியலாமா?

உங்கள் பக்கத்தில் இருந்து அடிக்கடி முன்வைக்கப்படும் ஒரு காரணம்,  நீங்கள் துப்பாக்கி நடுவில் நின்று அரசியல் செய்கின்றீர்கள் ஆகையினால் எதையும் நாம் கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்பதே. தொடர்ந்து இந்தப் பரப்புரையினை உங்களைச் சேர்ந்த சிலர் செய்துகொண்டிருக்கும் போது, அங்கே வீதிக்கு இறங்கி கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் நீதி கேட்பதற்கு முன்னே வருகின்றார்கள். பலர் இப்போதும் அடக்குமுறையாளனின் கொடியினை ஏற்று மறுக்கின்றனர். அவர்களுக்கு எப்படி இந்த துணிவு வந்தது? மக்கள் நாளை நடக்கப்போகும் தேர்தல்களில் மக்களுக்காக வீதிக்கு வந்தவர்களையா அல்லது பயந்துகொண்டு வேதாந்தம் பேசுபவர்களையா ஏற்றுக்கொள்வார்கள்? மக்கள் தாம் சார்ந்த பிரச்சனைகளை துணிந்தவர்களே எடுத்துச்செல்லவேண்டும் என முடிவெடுத்தால் உங்களின் பலரின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் ஒன்றை அடிக்கடி சொல்வீர்கள் ”கோசங்களை எழுப்பி உணர்ச்சி வசப்பட்டு” எதனையும் செய்யமுடியாது என. ஆனால், நீங்கள் அதை சொல்கின்ற போதே மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக தெரிகின்றீர்கள். அதை அழகாய் அமைதியாக சொல்ல முடியாதா? அரசியல் தந்திரம் என்பது மிகவும் முக்கியம். அது ஒரு கால அவகாசத்தோடு கட்டுப்பாடுகளோடு பயணிக்கின்றபோதே அவை மிகவும் எதிர்பார்த்த பயனைத் தரும். காலங்களை விரையம் செய்கின்ற போது, உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டு இலங்கை அரசாங்கம் முழு நாட்டையும் சிங்களமயப்படுத்தும் திட்டத்தில் வெற்றிக்கொள்வார்கள். அப்படியொரு நிலை வருகின்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைபிற்காக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவதற்கு சாத்தியமாகும் அல்லவா?  கண்ணை இழந்த பின்னால் சூரிய வணக்கம் செய்ய முடியுமா?

புலம் பெயர் மக்கள்

எமது தாயகத்து மக்களின் விடிவுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே அவர்கள் இறுதி இலக்கினை நோக்கிய பார்வை இருக்கின்றது. 30 வருடங்களாக அவர்கள் பல போராட்ட சுமைகளை தாங்கியவர்கள். கொடுக்கும் பண்பும், உழைக்கும் குணமும் கொண்ட அந்த புலர் பெயர் மக்களே தமிழ் தேசியக் கூட்டமைபின் பலத்தை உறுதிப்படுத்துவர்கள். அவர்களை புறக்கணித்து, ஒரு சிலரின் கருத்துக்களை மட்டுமே உள்வாங்கி பயணிப்பதனால் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு புலம் பெயர் சமூகம் உதவிசெய்யப்போவதில்லை. உங்களை சிலர் வழி நடத்துபவர்கள். பலர் 30 வருடப்போராட்ட வரலாற்றில் ஒரு துரும்பையும் எடுத்துப்போடாதவர்களாக இருப்பார்கள். அவர்களை நம்பினால் கூட்டமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை. அரசனை நம்பி புருசனை கைவிடாதீர்கள். உங்கள் பிரதிநிதிகள் என அடையாளம் காட்டுபவர்கள் கட்சி வளப்பது அல்ல அவர்கள் நோக்கம். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டித்தீர்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். பின்னால், எவ்வாறு மக்களின் ஆதரவை மாற்ற (shift) முடியும்? உங்களை பிரதிநித்துவப் படுத்துபவர்களின் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வளர்ப்பதுவா அல்லது அழிப்பதுவா? உள்வாங்கும் நடவடிக்கையினை நாம் ஒழுங்காக செய்யவேண்டுமல்லவா?

இன்று அழிவு நடந்து முடிந்துள்ளது. அந்த அழிவினை செய்கின்ற போது எவ்வாறு உலகம் உறங்கு நிலையில் இருந்ததோ, அப்படியே முடிந்த பின்னாலும் இருந்திருப்பதற்கு நிறையவே சாத்தியம் இருந்தது. புலம் பெயர்ந்த மக்களே தமது தொடர் முயற்சிகளினால் சில நாடுகளின் மனச்சாட்சியை தட்டியெழுப்பினார்கள். உலகம் இப்போது மெதுவாக எம் பிரச்சனைக்கு குரல் கொடுக்க எத்தணிக்கின்றது. இந்த முயற்சிகள் நடக்கின்ற போது, தாங்கள் எவ்வாறு அத்தோடு ஒத்து போவது என யோசித்துப்பார்த்தீர்களா? உலகம் விழிக்கின்ற போது நீங்களோ உறங்கு நிலையில் அரசாங்கத்தோடு இப்போதும் பேசிக்கொண்டிருந்தால் விழிக்கும் உலகம் மீண்டும் உறங்கு நிலைக்கு தள்ளும் படியாக இருக்காதா?

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும், கோசவா விடுதலைப்படையும், பலஸ்தீனர் விடுதலை இயக்கமும் ஆயுத போராட்ட வழி வந்தே விடுதலை பயணத்துக்கு பலம் சேர்த்தார்கள். உலகம் அவர்களை பயங்கரவாதிகளாக முதலில் ஒதுங்கினார்கள். அப்படியொரு ஆயுதப்போராட்டத்தை தமிழர்களும் செய்தார்கள். பல வல்லசுகளின் சதிகளினால அது ஒடுக்கப்பட்டது அதற்காக, தோற்றுப்போய்விட்டதனால் சொந்த மக்களே அவர்களின தியாகத்தை கொச்சப்படுத்தலாமா? போராடியவர்களின் அரசியல் அபிலாசைகள் அப்படியே உள்ளதே! அவற்றை நாம் தான் அறவழியில் போராடியெடுக்கவேண்டும். ஆனால், நாம் என்ன செய்கின்றாம் என்பதை ஒரு தரம் யோசித்துப்பார்த்தோமோ. தடை போட்டு, நாம் முழுமையாக தீண்டத்தகாத (untouchable) இனக் குழுமமாக உருவாகியிருக்கின்றோம். அந்த தடைகளை ஒவ்வொரு நாடுகளிலும் நாம் சட்டபடி அகற்ற வேண்டும். அதற்காக புலம் பெயர் நாடுகளில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நாம் அவதானிக்கலாம். இப்படியாக ஒரு வழியில் பயணிக்கும் பொழுதில், நீஙகள் கடைசியாக இலங்கை பாராளமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் எம்மை மிகவும் ஆத்திரத்திரத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக நடந்த மாவீரர் நிகழ்வில் அலை அலையாக மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அதில் ஒருவர் எம்மை கூப்பிட்டு ”என்ன உங்கள் தலைவர்” இப்படிச் சொல்லிவிட்டாரே. நாம் யோசிக்காமல் உடனே சொன்னது ”அவர் ஒரு போதும் அப்படிச்சொல்லியிருக்க மாட்டார். இது தேவையற்றவர்களின் விசமப் பிரச்சாரமாக இருக்கும்”. என்றோம். அதற்கு அவர் சொன்னது ”அங்கே அவர் பேசிய காணொளி (video clip) உள்ளது என சொன்னபோதே நாம் எதற்கும் வந்து பார்த்தபின்னால் என்ன நடந்தது என முடிவெடுத்தோம்.

ஆச்சரியமும், ஆத்திரமும் எம்மை வாட்டிப்போட்டது. நீங்கள் செய்யும் அரசியல் சாணக்கியம் என்பது என்பது விடுதலைப் புலிகளை தவிர்த்தது. அது சிறந்த பாதையாகவே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் இப்போது புலிகளை மிதித்து அரசியல் செய்திருக்கிறீர்கள். இதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நீங்கள் புரியாதவர்களாக இருக்கமுடியாது. எந்த தேசிய இன விடுதலைப்படைகளும் பிழைகள் விடாமல் போராடியது அல்ல. பிழைகள் திருத்தப்படுவதும், அவை நேர்த்தியாக்கப்படுதலும்  வரலாற்றில் நடந்திருக்கின்றன. அதற்காக, நீங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மன்னிக்கும் கேட்கும் போது, இன்னுமொரு படி மேலே செல்வீர்கள் என்பதை அறீவீர்கள். நீங்கள் சிங்களத்தை மகிழ்ச்சிக்கொள்ள வைக்க சொந்த இனத்தை காலில் போட்டு மிதித்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா? உங்களின் எத்தனை உறுப்பினர்களுக்கு இந்த பேச்சு ஆத்திரத்தை எற்படுத்தியிருக்கும் என்பதை அறிவீர்களா? அவர்களும் உங்களைப்போல் சிங்களத்தை மகிழ்ச்சி படுத்த முயற்சிப்பார்களா? அல்லது தமிழுக்காக எழுந்து நிற்பார்களா?

உங்களை இன்னும் நம்பியிருக்கும்  

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்

ராஜ்குமார் சுப்பிரமணியம்
மார்க்கம், ஒன்றாரியோ
கனடா

சம்பந்தன் ஐயா பேசவில்லை ..............அவர் வாய் மட்டுமே பேசும் ...........மனம் பேசமுடியாது ............அவர் மனதில் உள்ளதை பேசவேண்டும் என்றால் மீண்டும் விடுதலைப்புலிகள் என்னும் மாவீரம் தமிழரிடையே உருவாக வேண்டும் ................இலங்கை அரசியலிலேயே தமிழ் அரசியல்வாதிகள் தலை நிமிர்ந்து ,நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போட்ட காலம் என்றால் அது விடுதலைப்புலிகள் காலத்திலேயே .......அந்தக்காலம் வெகு விரைவில் வரவேண்டும் என்பதே எம் அனைவரது ஏக்கமும் .அதுவரை இடைவேளை ..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.