Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி
Posted by: Mathi      Published: Tuesday, December 18, 2012, 10:04 [iST]
 
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.
புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
மஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில மஞ்சள் மழை பெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட நம்ம வானமும் பெண்ணினமா? அதுதான் அடிக்கடி நீலிக்கண்ணீர் வடிக்கின்றது, இப்ப பொழுதுபோகவில்லையென கலர் கலரா :icon_mrgreen:  :lol:  :wub:

 

 

ஜிங்குசா ஜிங்குசா செகப்புக் கலரு ஜிங்குசா
பச்ச கலரு ஜிங்குசா மஞ்ச கலரு ஜிங்குசா
வன்ன வன்ன சேலைங்க வசதியான சேலைங்க
வானவில்லப் புழுஞ்சிவந்து சாயம்போட்ட சேலைங்க
???ஓடு எங்க உல்லம் ஓடும் சேலைங்க
உருதியான சேலைங்க உடுத்துவாங்க ஏழைங்க

(ஜிங்குசா)

புல்ல பொரந்தா அ கன்னத் தொரந்தா தொட்டில் கட்ட முன்னால்

வரும் சேல
பொன்னு ஒருத்தி அட பூவா சமஞ்சா சொந்தம் எல்லாம் கொண்டு வரும்

சேல
ஜிங்குசா ஜிங்குசா சேலச் சத்தம் ஜிங்குசா சேலப் பாட்டு

சிங்குசா
பென்பார்க்கப் போகும்போதும் சேலதான் சேலதான்
கல்யானம் நிச்சயமா சேலதான் சேலதான்
சீர்வரிச என்ரதுேஸ் சேலதான் சேலதாஸ்
சீதனத்தில் முதல்வரிச சேலதான் சேலதான்
கல்யான மேடயில கட்டுவதும் சேலதான்
கட்டிலுக்கு வேருதினுசில் கொட்டுவதும் சேலதான்

(ஜிங்குசா)

எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் நம் பன்பாட்டுக்குப் பேரு

சொல்லும் சேல
சால்வார் கமீசு அது எல்லாம் தமாசு அட சந்தோஷத்த

அல்லித்தரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா கொமரிக்குந்தான் ஜிங்குசா கெழவிக்குந்தான்

ஜிங்குசா
இந்திராகாந்தி கட்டியதும் சேலதான் சேலதான்
அம்மனுக்குச் சாத்துரதும் சேலதான் சேலதான்
வெல்லக்காரி இங்கவந்தா சேலதான் சேலதான்
வெலினாட்டிலும் நம்ம பொன்னுங்க சேலதான் சேலதான்
நாகரீகம் மாரும்போதும் மாரிடாத சேலதான்
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் வருவதிந்த சேலதான்

(ஜிங்குசா)

 

அந்தி வானத்து நிறமாம்

அழகிய மஞ்சள் சிவப்பாம்

முண்டி முந்தி சேர்த்து

மூட்டைப்பணத்தை பதுக்கி

கோட்டை வீடுகள் கட்டி

கொலு இருக்க வந்தவருக்கு

வாழ்வினோட்டம் முடிஞ்சிருக்கு

வயதும் போய் வானப்பும் போய்

மாளும் நாளும் வந்திட்டுது

ஆதவனேகி அந்தியுமாகி

மேகம் சரிந்து மஞ்சலும் சிவப்பாய்

அந்தி மழை பொழிகிறது

அகிலம் அழியப்போகிறது.

 

sad-smiley.jpg

 

 

எம்பிலிபிட்டியவிலும் மீன் மழை: புளத்சிங்களவில் ஜெலி மழை?   face.jpg By Kavinthan Shanmugarajah 

2012-12-18 19:36:11  

எம்பிலிபிட்டிய, சீய கனுவ கொடிகந்த பிரதேசத்திலும் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இம்மழை பெய்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்திளும் நேற்று பகல் வேளையில் மீன் மழை பெய்திருந்தது.

நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்திருந்தன.

அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப் படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கபட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகச் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் சிகப்பு மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இதுமட்டுமன்றி புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்தியாவின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மஞ்சள் நிறத்தில் மாவு போல மழை பெய்ததாகவும் இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2150

சிவப்பு மழை, மீன்மழை, கடல்பாம்புகள் படையெடுப்பு - அசாதாரண நிகழ்வுகளால் பதற்றத்தில் சிறிலங்கா [ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 05:38 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

Sl-people.jpgசிறிலங்காவில் அசாதாரண நிகழ்வுகள் சிலவற்றால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது. 

மாயன் நாட்காட்டி குறித்த வதந்தி சிறிலங்காவில் அதிக பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், விண்கற்கள் சில விழுந்த சம்பவங்களும் கடந்த வாரம் இடம்பெற்றன. 

இதனால் பீதியுற்றிருந்த மக்களுக்கு நேற்று, காலி, மாத்தறை பகுதிகளில் பெய்த சிவப்பு மழை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. 

ஏற்கனவே சிறிலங்காவின் பல இடங்களில் சிவப்பு மழை பெய்திருந்தது. 

பொலநறுவையில் அசாதாரணமாக நாய்கள் இறந்து கிடந்ததற்கும் சிவப்பு மழையின் தாக்கமே காரணம் என்றும் கூறப்பட்டது. 

இந்தநிலையில், நேற்று மாத்தறை, கிரிந்த, புஹுல்வெல்ல பிரதேசத்திலும் சிவப்பு மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வரை இந்த மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேவேளை, காலியில் மத்தேகம, வந்துரம்பையிலும் நேற்று சுமார் 15 நிமிடங்கள் சிகப்பு மழை பெய்துள்ளது. 

மேலும் கம்புறுப்பிட்டியவில் நேற்று மழையுடன் பெரிய மீன்களும் வானத்தில் இருந்து வீழ்ந்துள்ளன. 

இதனால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருந்தொகைப் பாம்புகள் நேற்று மாலை படையெடுத்துள்ளன. 

இரண்டு தொடக்கம் நான்கு அடி நீளம் வரையான இந்தப் பாம்புகளை காண பொதுமக்கள் கூடி வருகின்றனர். 

கடந்த 2004ம் டிசம்பர் 26ம் நாள் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரும், இதுபோன்று கல்லடிப் பாலத்தில் பெருந்தொகைப் பாம்புகள் படையெடுத்திருந்தன. 

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட முன்னரும் இதுபோன்று கல்லடிப் பாலத்துக்குக் கீழ் பெருந்தொகைப் பாம்புகள் படையெடுத்து வந்தன. 

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட நினைவு நாள் நெருங்கி வரும் நிலையிலும், மாயன் நாட்காட்டி பற்றிய வதந்தி பரவியுள்ள நிலையிலும், நிகழ்ந்து வரும் இத்தகைய அசாதாரண சம்பவங்கள் சிறிலங்கா மக்களிடையே பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

எனினும், சிவப்பு மழை, மீன் மழை, பாம்புகளின் படையெடுப்பு, நாய்களின் அசாதாரண மரணங்கள், விண்கற்கள் பற்றிய அச்சம் போன்ற சந்தேகங்களைத் தீர்க்க, தகுந்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அளிக்க சிறிலங்கா அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20121218107461

திஸ்ஸமஹாராமயில் இறால் மழை

 

நாட்டின் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்து வருகின்ற நிலையில், திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இறால் மழை பெய்துள்ளது.  திஸ்ஸமஹாராம விகாரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த இறால் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/55132-2012-12-19-15-15-54.html

Digital camera வும் smart phone னும் மலிந்து இருக்கும் உலகில் இந்த மழைகளை படம் பிடிக்க ஒருத்தர் கூட இருக்கவில்லையா எனும் கேள்வி வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராரியோவின் சட்பறியில் பல ஆண்டுகளுக்குப் முன்னர் இவ்வாறு அமில மழை பெய்திருந்தது. காற்றில் ஹைட்ரஜன் சல்ஃபைட் அதிக அளவில் கலந்ததால் பின்னர் அமில மழையாகப் பெய்திருந்ததாம்.. :rolleyes:

 

இன்று, அங்கே பாறைகள் எல்லாம் கறுப்பாக இருக்கும். மரங்களும் அந்த இடங்களில் வளருவது குறைவு.

 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வளர்ந்த நாடுகள் செய்ததை இன்று வளரும் நாடுகள் செய்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.