Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும் யதீந்திரா

Featured Replies

சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும்

யதீந்திரா

 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் சூழலில் இக்கட்டுரை வெளியாகிறது. சம்பந்தனின் உரை குறித்த மாற்றுக் கருத்துகளுக்கு பொங்குதமிழ் இடம்தரும். – ஆசிரியர்

***

 

இம்மாதம் 7ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் அரசியல் தலைவராகவும் கருதப்படும், இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆங்கிலத்தில் இடம்பெற்ற இவ்வுரையில் சம்பந்தர் பயன்படுத்திய சில சொற்களே அவர் மீதான விமர்சனங்களுக்கான காரணமாகும். குறிப்பாக புலம்பெயர் சூழலில் தங்களை புலிகளின் அனுதாபிகள் என்று கருதிக் கொள்ளுவோர் இவ்வாறான விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

விமர்சனங்களுக்கு அப்பால் சம்பந்தர் ஒரு துரோகி என்னும் வகையிலும் இவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் சூழலில் துரோகி என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றாக இருப்பதால், அது குறித்து இப்பத்தி அலட்டிக் கொள்ளவில்லை. சம்பந்தர் முன்னரும் புலிகளின் துரோகிப் பட்டியலில் இருந்த ஒருவர்தான். நீலன் திருச்செல்வம் துரோகி என்னும் அளவுகோலின்படி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அடுத்த இலக்கு சம்பந்தர்தான் என்னும் நிலைமை அன்றிருந்தது. சம்பந்தர் விடுதலைப்புலிகளுக்கு பயந்து, தனது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பலமான பாதுகாப்புடன் இருந்த கதை பலரும் அறிந்த கதையும் கூட.

 

 

ஆனால், அதே இரா.சம்பந்தன் பின்னர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் அடிக்கடி பிரசுரமாகிக் கொண்டிருந்தன. எந்த பிரபாகரனுக்கு பயந்து சம்பந்தன் குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்தாரோ, பின்னர் அதே பிரபாகரனுக்கு அருகில் இருந்து, சம்பந்தன் அரசியல் பேசும் நிலைமை தோன்றியது. அரசியலை ஒரு சினிமா போன்று பார்த்துப் பழகிய தமிழ் சனங்களோ, தம்பியும் ஐயாவும் - அண்ணையும் ஐயாவும் - என்று சாதாரணமாக கடந்து சென்றனர். 'சம்பந்தர் ஒரு பெறுமதியான ஆள், இவரை நாங்கள் பாதுகாக்க வேண்டும்' என்று பிரபாகரன் சொன்னதாகவும் அன்று கதைகள் உலவின. வன்னிச் சூழலில் குறிப்பாக புலிகளின் அரசியல் பிரிவினர் மத்தியில் சம்பந்தன் சரக்குள்ள ஆள் என்னும் அபிப்பிராயம் நிலவியது. இதன் தொடர்ச்சி அதுவரை புலிகளால் துரோகியாக பார்க்கப்பட்ட மிதவாத தலைவரான சம்பந்தன் ஐயா தேசாபிமானியாக உருமாறினார். இதன் பின்னர் தெற்கின் அரசியல் அரங்கிலோ மிதவாதத் தலைவரான சம்பந்தன் விடுதலைப் புலியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இன்றுவரை அது தொடர்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில்தான், சம்பந்தர் மேற்படி சர்ச்சைக்குரிய உரையை ஆற்றியிருக்கிறார். எனது பார்வையில் அது ஒரு சர்ச்சைக்குரிய உரையல்ல, ஆனால் குறித்த உரையை சிலர் சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்குவதன் காரணமாகவே நான் அதனை இங்கு அழுத்தியிருக்கின்றேன்.

 

 

 

அப்படியென்ன சம்பந்தர் தனது உரையில் குறிப்பிட்டுவிட்டார்? - சம்பந்தர் தனது உரையின்போது குறிப்பிட்டிருந்த, விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டனர் மற்றும் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேறச் சொல்லிக் கோரவில்லை ஆகிய இரண்டு விடயங்களே இன்று சிக்கலானதாக நோக்கப்படுகிறது. 2013இற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றியபோது மேற்படி விடயங்களை சம்பந்தர் தெரிவித்திருந்தார். மேற்படி பாராளுமன்ற விவாதம் பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. சம்பந்தரும் உரையை ஆரம்பிக்கும் போதே பாதுகாப்பு விவகாரம் ஒன்றுடனேயே தனது பேச்சை ஆரம்பித்திருந்தார்-

'…. இங்கு சிலர் மத்தியில் ஒரு தவறான நம்பிக்கை (Mistaken believes) நிலவுகிறது. அதாவது தமிழ் மக்கள் இராணுவம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் செல்ல வேண்டுமென்று கூறிவருவதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறானது. இராணுவம் இந்த நாடு முழுவதும் எவ்வாறு இருக்கிறதோ அப்படி இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒடுக்கும் (oppressive) மற்றும் கட்டுப்படுத்தும் (subjugate) நோக்கத்துடன் இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கக் கூடாதென்றே நாங்கள் கூறிவருகின்றோம். தமிழ் மக்கள் தாங்கள் இந்த நாட்டில் சமத்துவமான பிரஜைகளாக (Equal citizens) நடத்தப்படவில்லை என்றவாறு உணராத வகையிலும், தாங்கள் தரக்குறைவான பிரஜைகளாக நடத்தப்படுவதாகவும் உணராத வகையில் இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களது சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் பிரயோகித்து வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். எனவே இதனைக் கருத்தில்கொண்டு வேலைகளுக்கு தேவையான அளவிலும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அளவிலும் இராணுவத்தினர் நிலைகொள்ளலாம் - இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருப்பது போன்ற அடிப்படையில்…'

 

இராணுவ வெளியேற்றம் தொடர்பாக சம்பந்தர் கூறிய விடயங்கள் இவ்வளவே! அடுத்து சம்பந்தர் தெரிவித்த கருத்துக்கள் விடுதலைப்புலிகள் தொடர்பானவை –

'…தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. எங்களது போராட்டத்தின் பின்னால் மிகவும் நியாயபூர்வமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான மனக்குறைகள் இருந்தன. அவைகள் இந்த நாட்டின் முன்னோடி தலைவர்களாகக் கருதப்படும், எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அன்று மேற்கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாடு இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது. நாங்கள் ஒருபோதும் வன்முறையான மக்களாக இருந்திருக்கவில்லை. ஆனால் வன்முறை தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. எங்களது நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதொரு சூழலில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளிவந்தனர்

 

(Emerged). 

தமிழ் மக்களால் சாத்வீக வழியில் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான கோரிக்கைகள் இலங்கையை ஆட்சிசெய்த வெற்றிகரமான ஆட்சியாளர்களால் உள்வாங்கிக் கொள்ளப்படாமையின் காரணமாகவே புலிகள் உருவாகினர். மாறாக விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிவருகைக்கு நியாயபூர்வமான காரணங்கள் இருந்தன. இதனை எவரும் நிராகரிக்க முடியாது. விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் (Civilians) மீது தாக்குதல் மேற்கொண்டபோது, அவர்கள் பயங்கரவாத அமைப்பு என்னும் (In terms of terrorist organization) கருத்து வகைக்குள் வந்தனர். அவர்கள் சாதாரண தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை கொன்றுள்ளனர். மக்கள் தலைவர்களை கொன்றுள்ளனர். இதன்போது அவர்கள் பயங்கரவாத வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர்.

 

விடுதலைப்புலிகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கவில்லை. சிலர் விடுதலைப்புலிகளை அழித்ததாக பறைசாற்றுகின்றனர். ஆனால் நான் சொல்லுவேன் - விடுதலைப்புலிகள் தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். அவர்கள் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் அவதானித்து நடக்காமையின் காரணமாகவே அழிந்தனர். இதுதான் உண்மை. காலம்சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்களை பலவீனப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவர் இன்று எங்களுடன் வாழ்ந்திருந்தால், இன்று நடைபெறும் பல்வேறு விடயங்களை எண்ணி மிகவும் பயங்கரமான உணர்வுக்கு ஆட்பட்டிருப்பார். இன்று நீங்கள் எங்களை விடுதலைப்புலிகளுடைய பதிலி (proxy) அமைப்பு என்று குறிப்பிடுகின்றீர்கள் - ஆனால் விடுதலைப்புலிகள் எங்களின் தலைவரை கொன்றவர்கள். எனது நண்பர்களை கொன்றவர்கள். நான் அவர்களது 'அழித்தொழிக்க வேண்டியவர்களின்' பட்டியலில் இருந்தவன். நாங்கள் எப்படி விடுதலைப் புலிகளின் பதிலி அமைப்பாக இருக்க முடியும். அன்றைய சூழலில் ஒரு அமைதியான சூழலுக்காக நாங்கள் ஒத்துழைத்திருந்தோம்.. '

 

இவைகள்தான் சம்பந்தரது உரையின் சர்ச்சைக்குரிய பகுதியாக நோக்கப்படுகிறது. முதலாவது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பில் சம்பந்தர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் யதார்த்த பூர்வமானது. போர் முடிவுற்ற சூழலில் குறிப்பிட்ட பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்துவதில் இராணுவ நீக்கம் (de-militarization) முக்கியமானது. இங்கு இராணுவ நீக்கம் என்பது இராணுவமே வடக்கு கிழக்கில் இருக்கக் கூடாது என்பதல்ல. இதனைத்தான் சம்பந்தர் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு ஜனநாயக நிர்வாக பொறிமுறையில் இராணுவத்திற்கு என்ன இடமோ, அத்தகையதொரு இடத்தில் இராணுவம் இருக்க முடியும் என்பதுதான் சம்பந்தரின் வாதம். இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் விடயத்தை கூர்ந்து கவனிக்கவில்லையா அல்லது எப்படியாவது சம்பந்தரை விமர்சிக்க வேண்டுமென்னும் உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கின்றனரா? இராணுவ நீக்கம் என்பது, முழுமையான இராணுவ வெளியேற்றம் அல்ல என்பதை விளங்கிக் கொண்டவர்களுக்கு சம்பந்தரின் கூற்று பிரச்சனைக்குரிய ஒன்றாக இருக்காது.

 

அடுத்து சம்பந்தர் விடுதலைப்புலிகள் பற்றி குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் ஆச்சரியமானதல்ல. சம்பந்தரின் பாராளுமன்ற உரையின் வீடியோ ஆவணத்தை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை கவனிக்கலாம். சம்பந்தர் மேற்படி கருத்துக்களை மிகவும் நிதானமாகவும் தெளிவாகவுமே முன்வைத்திருக்கின்றார். முன்கூட்டிய தயாரிப்புடன்தான் அவர் விவாதத்திலும் பங்குகொண்டிருக்கின்றார். விடுதலைப் புலிகள் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்பதுதான் சர்வதேச பார்வை. இது குறித்து தமிழர்கள் என்ன கருதுகின்றார்கள் என்பது வேறு விடயம். ஆனால் இங்கு சம்பந்தர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக குறிப்பிடவில்லை. ஆனால் சாதாரண மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது, ஜனநாயக தலைவர்களை கொலைசெய்தபோது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என்னும் வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர் என்றே குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான கருத்தாக நான் பார்க்கவில்லை. இத்தகையை கண்ணோட்டத்தில் ஏலவே பலரும் எழுதியிருக்கின்றனர். இங்கு ஒரு விடயத்தை கவனிக்கலாம் - சம்பந்தர் தன்னை புலிகளுடன் தொடர்புபடுத்துவதை கண்டிக்கும் வகையிலேயே தனது உரையை ஆற்றியிருக்கின்றார். அவர் மீண்டும் நாங்கள், நான் என்று சொல்வதிலிருந்து, அவர் தமிழரசுக் கட்சியினது நிலைப்பாட்டையே எடுத்தியம்பியிருக்கின்றார்.

 

சம்பந்தரின் உரை ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புக்களை உற்றுநோக்கும் போது ஒரு விடயம் தெளிவாகிறது – தமிழர்கள் இன்னும் திருந்தவில்லை அல்லது திருந்த விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் குறித்த உலகளாவிய பார்வை என்னவென்று பல தடவை இப்பத்தியாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே அதனைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் இன்று எழுந்திருக்கும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் அர்த்தமற்றவை என்பதே இப்பத்தியின் கணிப்பு. விமர்சனங்கள் மிகவும் தேவை ஆனால் அவை யதார்த்த பூர்வமான விமர்சனங்களாக இருக்க வேண்டும். எனவே இங்கு உணர்ச்சிவசப்படுவதை விடுத்து சிந்தித்து செயல்படுவதே முக்கியமானது.

 

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=a8157c94-75b8-44f4-abe0-126c5b6327c7

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்மை ஜனநாயக வாதிகளாகக் காட்ட விரும்புவோர், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழர்கள், புலிகளைப் பயங்கரவாதிகளாக வர்ணிப்பது வழமை. அதுபோன்றுதான் தேவையில்லாத வேளையில் தேவையில்லாத சொற்களைப் புகுத்தி நாடாளுமன்றில் தன்னை ஒரு புலி எதிர்ப்பாளராகக் காட்டியுள்ளார் திரு. சம்பந்தன் அவர்கள். இன்று புலிகள் இருப்பார்களேயானால் இப்படி அவரது ஒரு பேச்சை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.. லக்ஸ்மன் கதிர்காமர் தனது நண்பர் என்றும், அவர் நாடு நாடாகச் சென்று புலிகளைத் தடைசெய்வதை முன்னின்று செய்தவர் என்றும் கூறியுள்ளார். அப்படியானால் அவர் செய்தவைகளை நியாயப்படுத்துகிறாரா? இன்று ஐ.நா சபையே தமிழர்களிடம் மன்னிப்புக்கோர எத்தனிக்கும் வேளையில், சிங்கள இராணுவத்தின், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு வசனம் கூடக் குறிப்பிடாமல், தான் புலிகளுக்கு சார்பில்லாத ஒருவர் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதைக் கூறியுள்ளார். எவருடனாவது வாக்குவாதப்படும் நேரத்தில் எழுந்தமானமாகத் தெரிவிப்பது வேறு, நன்றாக ஆற அமர்ந்து வீட்டில் இருந்து தயாரித்து எடுத்து வந்திருப்பது வேறு. திரு. சம்பந்தரின் தனது உரையில் பல நல்ல விடயங்களும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவராது வாயால் நாடாளுமன்றில் நின்றுகொண்டு புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூற சிங்கள உறுப்பினர்கள் கரகோசம் செய்வது வரவேற்பது எம்மைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாதது. புலிகள் பயங்கரவாதிகள் என்றால் சிறிலங்கா அரசாங்கத்தை எந்த வாதிகள் என்பது? இதை அவர் முதலில் உரக்கக் கூறட்டும்!!!

  • தொடங்கியவர்

பலவற்றை தொடுக்காமல் சம்பந்தரின் பேச்சை மட்டும் யதீந்திர ஆராய்ந்திருப்பதால் அவரின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. அதாவது யதீந்திரா இந்த விடையத்தில் தான் சம்பந்தருடன்தான் பயணிப்பதாக குழப்பமில்லாத முறையில் தெளிவு படுத்தியிருக்கிறார்.

 

பேச்சுவார்த்தை விரைவில் முடிவடைய வேண்டும் என்பதுதான் எமது இன்றைய எதிர்பார்ப்பு. இதனால்த்தான் ஆல்லல்ப்படும் தாயக மக்களுக்கு, இ்லங்கையின் தீர்வொன்றையோ அல்லது சர்வதேச தீர்வொன்றையோ கூடிய விரைவில் பெற்றுக்கொடுக்க முடியும்.

 

அதாவது அரசு தீர்வொன்றை தரச்சம்மதமாயின் அதை விரைவில் சம்பந்தரிடம் கொடுக்க வேண்டும்.  தெரிவுக்குழுவில் அரசு கொடுப்பதற்கும் சம்பந்தருக்கும் பெரிய தொடர்பொன்றும் இருக்காது. அதில் சம்பந்தரின் அனுபவ முதிர்வு செயல்ப்பட இடமில்லை. அதில் வீரவன்சா, சம்பிக்க ரனவாக்க, ரிசாட் பதியுதின் போன்றவர்களின் அரசியல் ஆதிக்கம் தான் செயல்படும். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் தெரிவுக்குழுவைப்பற்றி சட்டை செய்யாமல், பேச்சுவார்த்தை முடிய, சம்பந்தர் வெளிப்படையாக சர்வதேச நாடுகளை உதவிக்கு அழைக்க வேண்டும்.

 

பேச்சு வார்த்தையை வெற்றியிலோ, தோல்வியிலோ முடித்துக்கொள்ள முதல் சம்பந்தர் பழைய அரசுகளோ அல்லது இந்த அரசோ பேச்சுவார்த்தைகளில் முன்னர் விட்ட ஏமாற்றுக்களை கணக்கில் எடுக்காமல் பேச வேண்டும். தமிழருக்கு உதவிக்கு வரத்தயாராக ஏதாவது ஒரு நாடு இருந்தால் அது அத்தகை பேச்சுவார்தையை  மட்டும்தான் ஏற்றுக்கொள்ளும்.

 

சம்பந்தர், இன்றுவரை பேச்சுவார்த்தைகளில் சொல்வது போல், ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வானல், அதில் இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் தொடர அனுமதி அளிக்கப்படுகின்றது என்பதை நாம் அறிவோம். சிங்கக்கொடி வடக்கு கிழக்கில் பறக்கும் என்பதையும் நாம் அறிவோம். 

 

மேலும் போரில் சர்வதேச நாடுகள் புலிகளை அழிக்க வெளிப்படையாக ஆயுத, ஆளுதவிகள் செய்தார்கள். அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் புலிகள் சர்வதேச பயங்கரவாதிகள் என்பது. புலம் பெயர் சமூகம் புலிகளின் இந்தப்பெயரை மறுத்து அவர்களை நியாப்படுத்தும் முயற்சிகளைத் தொடருகிறார்கள். இதன் பலன்  இன அழிப்பு, போர்குற்ற விசாரணை ஒன்றை சர்வதேசம் நடத்தும் போது தேவைப்படும்(சமாதனப்பேச்சுவார்தைகளால் வரத்தக்க தீர்வொன்றின் போதல்ல). ஆனால் சம்பந்தர் இதில் பங்குதாரி அல்ல. அவர் சமாதான தீர்வு பேச்சுவார்த்தையில்த்தான் இப்போது பங்கெடுக்கிறார்.  இது போருக்கு பின்னாலான தீர்வு. எனவே அவர், போரில் தனது தொடர்பையோ, அல்லது புலிகளுடன் தனது உறவையோ தெளிவாக விளங்க வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். புலம் பெயர் தமிழர் தாம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை நிரூபிக்க முயலும் அதே நேரம், சம்பந்தர், புலிகளை பயங்கரவாதிகளாக சர்வதேசத்திற்கு காட்டி புலிகளை அழித்தொழித்த அரசுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதையும் புலம் பெயர் தமிழர் கிரகிக்க வேண்டும்.  இதில் சம்பந்தரும் புலம் பெயர் தமிழரும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது. இருவரினதும் நோக்கங்கள் வேறு வேறு. அதாவது சம்பந்தர் சமாதான பேச்சுவார்த்தையில் சொல்வது, செய்வதை எல்லாம் இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து வைத்து சொந்த வியாக்கியானங்கள் கொடுப்பது புலம் பெயர் தமிழருக்கு தமது நோக்கில் முன்னேறுவதற்கு ஆரோக்கியமாக இருக்கப்போவதில்லை.

 

அரசியலை சரியாக விளங்கிக்கொள்ளவேண்டியது சர்வதேச நாடுகளில் தமிழருக்காக பிரசாரத்தில் ஈடுபடும் புலம் பெயர் தமிழரின் பொறுப்பு. எமது நிலையில் தாயக மக்கள் இல்லை. அவர்களின் பிரதிநிதி சம்பந்தர் நமது பிரச்சார முன்னெடுப்புகளில் பங்குதாரி இல்லை.  நாம் கூட்டமைப்புடன் ஒற்றுமை காணத்தக்க துறைகளை கண்டு பிடித்து அவர்களுடன் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும். இலங்கையின் அரசியல் சூழலில் மறு வளத்தை நாம் வலோற்காரப்படுத்த முடியாது. அதாவது புலம் பெயர் அமைபுக்களிடம் எமது விருப்பு வெறுப்பை சொல்லும் அதே விஸ்தாரணத்தில் கூட்டமைப்பிடம் வலிந்து கேட்க முடியாது.  தனக்கும் புலிகளுக்கும் ஒற்றுமை இருந்ததாகவோ அல்லது வேற்றுமை இருந்ததாகவோ கூறுவது சம்பந்தர் தனது பேச்சுவார்த்தைக்கு தேவையானபடி செய்து கொள்ள வேண்டிய முடிபு.  சமபந்தர் சொல்வதை செய்வதை இலங்கைக்கு வெளியில் தொடர்ந்து பிரஸ்தாபித்து அவரை பிழையாக நிரூபித்து முடிப்பது அவர் பேச்சுவத்தைகளை நேரத்திற்கு முடித்துகொள்ள ஆரோக்கியமான உதவியாக இருக்கப்போவதில்லை.

 

இப்படி பிரச்சாரங்களால் இலங்கையில்  "பேச்சுவார்த்தை நேரத்திற்கு முடிய வேண்டும்" என்ற நமது எதிப்பார்ப்பை நாமே தோற்கடிக்கிறோம்.நமது நோக்கான நடந்து முடிந்த ஆயுதப்போராட்டத்தை நியாப்படுத்தி புலியகள் விடுதலை போராளிகள் என்பதை நிரூபிப்பதில் முன்னேற்றாமல் சர்வதேசத்திற்கு தேவையில்லாத விடையங்களை பெரிதுபடுத்தி அவர்களின் கவனத்தை அவற்றில் திருப்பி நமது நோக்கத்தை நாமே தோற்கடிக்கிறோம். 

Edited by மல்லையூரான்

சம்பந்தரின் உரை ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புக்களை உற்றுநோக்கும் போது ஒரு விடயம் தெளிவாகிறது – தமிழர்கள் இன்னும் திருந்தவில்லை அல்லது திருந்த விரும்பவில்லை.

நன்றி யதீந்திரா .

 

 

இந்தியாவின் மேலிருந்து பேசுவது போலுள்ளது

அது எப்படி சம்ந்தன் அப்படி பேசலாம்? என்ன இருந்தாலும் தமிழர்களுக்காக போராடிய அமைப்பை  விட்டுக் கொடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த தெளிவு..........

நல்ல பேச்சு...........
புலிகளுக்கு எதிராக அவர்களை பயங்கர வாதிகளாக சித்தரிப்பதால். அப்படியே கட்டி தழுவி பாராட்ட வேண்டும் போலும் உள்ளது.
 
இவற்றால் தமிழனுக்கு ஏதும் நன்மை உண்டா? என்றால் எதுவும் இல்லை என்பது தெளிந்த உண்மை.
சம்பந்தாரை நோயுறாமல்  கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று. கோத்தபாயவை சிந்திக்க வைத்திருக்க இந்த பேச்சு நிச்ச்சயம் உதவியிருக்கும் என்பதை மறுக்க முடியாது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தந்திராவின் கட்டுரைக்குள் இருக்கும் மூல மந்திரம் என்ன?

1. புலிகள் இவரையும் போட இருந்தார்கள்.

2. பிரபாகரனாலேயே இவரது மேதாவித்தனம் தலைவணங்கப்பட்டது.

3. ஒரு வேளை புலி இப்போது இருந்தாலும் சம்பந்தர் ஐயாவிற்கு பணியும் என்ற கருத்தும் உணர்வைக்கப்படுகின்றது.

4. போலிப் புலிப்பினாமிகள் தான் இவரை வசைபாடுகின்றனர் என்று சொல்லப்படு அதேவேளை நியப்புலியை எல்லை இல்லாமல் முடிந்தவரை வசைபாடியும் ஆச்சு.

இலங்கை ஜனனாயகத்தில் மக்கள் ஆதரவு என்பது வைப்பாட்டியின் தேவையைப் போன்றது. அதிகாரத்தின் ஆதரவு மனைவியின் தேவையைப் போன்றது. இங்கே சம்பந்தன் போன்ற சுயநலக்குண்டான்கள் வந்தால் தம் தொந்திதான் வளர்க்க முடியும் அன்றி மக்களின் தேவைகள் வளரமுடியாது. இந்தக் கேவல ஜனனாயகத்தில் இந்த மந்திரா சினிமாப்பாணியில் சம்பந்த்தை சம்பந்தம் இல்லாமல் உயர்த்துவது நீண்ட பின்னணிகளின் வாசலால் வந்த உதைப்பு போன்றே உள்ளது. புலிகளின் பலம் நாட்டை ஆண்டபோதே கூட்டணியை புலியால் ஆளமுடியவில்லை அது இந்திய எஜமானின் காலை நக்கும் நாயாகத்தான் விளங்கியது. இல்லை என்றால் எப்படி இந்தியப் பயங்கரவாதம் தமிழ மண்ணில் நரபலி ஆடியபோது அமிர்தலிக்கம் BBCக்கு பேட்டி கொடுப்பார் இப்படி: "இந்திய அமைதிப்படை இறப்பர்குண்டுகளைத்தான் பிரயோகிக்கின்றார்கள்" என்று அந்த வழியால் வந்த இந்த சம்பந்தத்தை அவர் மனசாட்சி அவரை அஞ்ச வைத்திருக்கும் அதை விடுத்து மந்திராவின் கற்பனை எல்லாம் சம்பந்தாபக்தி என்றே சொல்லலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்
இந்தத் தந்திராவின் கட்டுரைக்குள் இருக்கும் மூல மந்திரம் என்ன?

1. புலிகள் இவரையும் போட இருந்தார்கள்.

2. பிரபாகரனாலேயே இவரது மேதாவித்தனம் தலைவணங்கப்பட்டது.

3. ஒரு வேளை புலி இப்போது இருந்தாலும் சம்பந்தர் ஐயாவிற்கு பணியும் என்ற கருத்தும் உணர்வைக்கப்படுகின்றது.

4. போலிப் புலிப்பினாமிகள் தான் இவரை வசைபாடுகின்றனர் என்று சொல்லப்படு அதேவேளை நியப்புலியை எல்லை இல்லாமல் முடிந்தவரை வசைபாடியும் ஆச்சு.

இலங்கை ஜனனாயகத்தில் மக்கள் ஆதரவு என்பது வைப்பாட்டியின் தேவையைப் போன்றது. அதிகாரத்தின் ஆதரவு மனைவியின் தேவையைப் போன்றது. இங்கே சம்பந்தன் போன்ற சுயநலக்குண்டான்கள் வந்தால் தம் தொந்திதான் வளர்க்க முடியும் அன்றி மக்களின் தேவைகள் வளரமுடியாது. இந்தக் கேவல ஜனனாயகத்தில் இந்த மந்திரா சினிமாப்பாணியில் சம்பந்த்தை சம்பந்தம் இல்லாமல் உயர்த்துவது நீண்ட பின்னணிகளின் வாசலால் வந்த உதைப்பு போன்றே உள்ளது. புலிகளின் பலம் நாட்டை ஆண்டபோதே கூட்டணியை புலியால் ஆளமுடியவில்லை அது இந்திய எஜமானின் காலை நக்கும் நாயாகத்தான் விளங்கியது. இல்லை என்றால் எப்படி இந்தியப் பயங்கரவாதம் தமிழ மண்ணில் நரபலி ஆடியபோது அமிர்தலிக்கம் BBCக்கு பேட்டி கொடுப்பார் இப்படி: "இந்திய அமைதிப்படை இறப்பர்குண்டுகளைத்தான் பிரயோகிக்கின்றார்கள்" என்று அந்த வழியால் வந்த இந்த சம்பந்தத்தை அவர் மனசாட்சி அவரை அஞ்ச வைத்திருக்கும் அதை விடுத்து மந்திராவின் கற்பனை எல்லாம் சம்பந்தாபக்தி என்றே சொல்லலாம்!

 

இந்திய ஆமியிடம் எடுத்த இறப்பர் குண்டுகளால்  புலிகள் விளையாட்டுக்கு அவரை சுட்டார்கள்.

 
பாவம் அந்தாள் செத்து போச்சு.
இந்திய இராணுவத்தின் இறப்பர் குண்டுகள் மரணத்தை உண்டுபண்ண கூடியவை என்று பேட்டி  கொடுக்க ஆளில்லாமல் போய்விட்டார்.
 
பி பி சி யில் அமிர்த லிங்கத்தின் பேட்டி "பாகம் இரண்டு" இறப்பர் குண்டுகளை பற்றி விரிவானதாக இருந்திருக்கும்.
இறுதிவரை அது இல்லாமலே போய்விட்டது.
 
'இறப்பர் குண்டுதானே" என்று யாரையும் இனி விளையாட்டாகவும் சுடாதீர்கள் என்று புலிகள் ஒரு பேட்டியை  கொடுத்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.