Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் இறுதியில் சவேந்திர சில்வாவை பதவி நீக்க சரத் பொன்சேகா முயற்சித்தார்! - கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் இறுதியில் சவேந்திர சில்வாவை பதவி நீக்க சரத் பொன்சேகா முயற்சித்தார்! - கொழும்பு ஊடகம்

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அப்பதவியில் இருந்து நீக்க சிறிலங்காவின் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகா முயற்சி மேற்கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

இவ்வூடகத்தில் படைத்துறை ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரை ஒன்றிஜலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடபில் இக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி  அதிகாலை 3 மணியளவில் சிறிலங்கா படைத்தரப்பால் முற்றுகையிடப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து நந்திக்கடல் வழியாகத் தப்பிச் செல்ல விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படை நடவடிக்கையை அடுத்தே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு சரத் பொன்சேகா முடிவு செய்திருந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் மற்றும் கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர் படைத்தரப்பின் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சிறிலங்கா படைத்தரப்பின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் எண்ணியிருந்தனர்.

 

மே மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி இருந்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பானவர்களைக் கடுந்தொனியில் கண்டித்திருந்தார்.

 

இந்நிலையில் போர்முனை நிலவரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மூலம் தலைமையில் எதிர்கொள்ள விரும்பினார்.

 

அத்துடன், சவேந்திர சில்வா வகித்த 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பதவியை அப்போது 59வது படைப் பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் ஒப்படைத்து விடும்படி சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

 

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அதிகாலை விடுதலைப் புலிகள் இரண்டாவது தடவையாக தப்பிக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் இத்திட்டம் சரத் பொன்சேகவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், சரத் பொன்சேகாவின் இந்தத் திட்டத்துக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒப்புக் கொள்ளவில்லை. தன்னால் இவ்விரு பொறுப்புகளையும் சரியாகக் கையாள முடியும் என அவர் சரத் பொன்சேகாவுக்கு உறுதியளித்தார்.

 

அதேவேளை, இது தொடர்பில் சவேந்திர சில்வாவின் சார்பாக சிறிலங்கா படைத்தரப்பின் அப்போதைய வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய சரத் பொன்சேகாவிடம் பேசியிருந்தார் என இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=ce5d584f-5003-479f-b56b-3af1dd69c100

  • கருத்துக்கள உறவுகள்

leader-V-Prabakaran1-100x100.jpg

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொன்சேகா முற்பட்டதாகத் தெரிவித்து குறித்த ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,

 

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,2009 மே 17ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்துக் கொண்டு நந்திக்கடல் வழியாகத் தப்பிச்செல்வதற்கு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை 58வது டிவிசன் தளபதி பதவியில் இருந்து நீக்க சரத் பொன்சேகா முடிவு செய்திருந்தார்.

 
அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர்.
 
 
மே17ஆம் திகதி நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் சீனப் பயணத்தை முடித்து திரும்பிய அப்போதைய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பின்னடைவுக்கு பொறுப்பானவர்களை கண்டித்ததுடன் சூடாகவே நடந்து கொண்டார். களநிலவரங்களை மீளாய்வு செய்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தாக்குதல் நெருக்கடியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மூலம் கையாள விரும்பினார்.
 
அதேவேளை, அவர் வகித்து வந்த 58வது டிவிசன் கட்டளைத் தளபதி பதவியை, அப்போது 59 வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் ஒப்படைத்து விடும்படியும் அவர் பரிந்துரைத்தார்.
 
2009 மே 18ஆம் திகதி அதிகாலை விடுதலைப் புலிகளின் இரண்டாவது முறியடிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒப்புக் கொள்ளவில்லை. தன்னால் இரண்டு பொறுப்புகளையும் கையாள முடியும் என்று அவர் சரத் பொன்சேகாவுக்கு வாக்குறுதி அளித்தார்.
 
அப்போது வன்னிப்ப டைகளின் கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும், சவேந்திர சில்வாவின் சார்பாக சரத் பொன்சேகாவிடம் பரிந்து பேசியிருந்தார் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
 

அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர்.

பல நெருக்கடிகளை தவிர்க்க இல்லை வெற்றி கொள்ள மீண்டும் திட்டமிட்ட முறையில் 'புலிகளை' வளர்க்கவேண்டிய தேவை சிங்களத்திற்கு உள்ளது.

 

தமிழர் தரப்பு இதற்குள் மாட்டுப்பட   கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

Maj.Gen.shavendra-silva-mulli.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சரியாகச் செயற்படத் தவறிய சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு, அப்போதைய சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள பத்தி ஒன்றிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. 

2009 மே 17ம் நாள் அதிகாலை 3 மணியளவில், முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்துக் கொண்டு நந்திக்கடல் வழியாகத் தப்பிச்செல்ல விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை 58வது டிவிசன் தளபதி பதவியில் இருந்து நீக்க சரத் பொன்சேகா முடிவு செய்திருந்தார். 

அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர். 

மே17ம் நாள் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் சீனப் பயணத்தை முடித்து திரும்பிய அப்போதைய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பின்னடைவுக்கு பொறுப்பானவர்களை கண்டித்ததுடன் சூடாகவே நடந்து கொண்டார். 

களநிலவரங்களை மீளாய்வு செய்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தாக்குதல் நெருக்கடியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மூலம் கையாள விரும்பினார். 

அதேவேளை, அவர் வகித்து வந்த 58வது டிவிசன் கட்டளைத் தளபதி பதவியை, அப்போது 59 வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் ஒப்படைத்து விடும்படியும் அவர் பரிந்துரைத்தார். 

2009 மே 18ம் நாள் அதிகாலை விடுதலைப் புலிகளின் இரண்டாவது தப்பியோடும் முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. 

ஆனால், அதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஒப்புக் கொள்ளவில்லை. 

தன்னால் இரண்டு பொறுப்புகளையும் கையாள முடியும் என்று அவர் சரத் பொன்சேகாவுக்கு வாக்குறுதி அளித்தார். 

அப்போது வன்னிப்ப டைகளின் கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும், சவீந்திர சில்வாவின் சார்பாக சரத் பொன்சேகாவிடம் பரிந்து பேசியிருந்தார் என்றும் சாமிந்ர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20121224107487

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சவேந்திர சில்வா ஒரு விளம்பரப் பிரியர் என்றும், வேறு பல தகுதியான சிங்களப் பயங்கரவாதிகளை மீறி முன்னுக்கு வந்தவர் என்றும் அப்போதே சிங்களவர்களால் விமர்சிக்கப்பட்டவர். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் ஒரு குண்டை வெடிக்க வைக்கவேண்டியது. மார்ச் மாசம் ஐநாவில் ஒப்பாரி வைக்க வேண்டியது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.