Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரன் மீது நல்லூரில் அசிற் வீச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரன் மீது நல்லூரில் அசிற் வீச்சு! 
[saturday, 2012-12-29 10:22:48]
 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் மீது சற்றுமுன் யாழ்.நல்லூர் ஆலய பகுதியில் அசிற் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அசிற் வீசப்பட்ட நிலையில் காயமடைந்த துவாரகேசஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஒட்டுக்குழுக்களினதும் போர்க்குற்ற அடக்குமுறை இராணுவத்தினதும் இன்னொரு 'வீரச்செயல்'  <_<

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபிரிப்பும் அசிட் வீச்சும்..! :D

இது சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளின் கைவரிசை என்று தான் தெரிகிறது.

ஆதாயம் கருதி இதை மூடி மறைக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயலுவதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அசிட் வீச்சுக்கு குடும்ப பிரச்சினையே காரணம்: பொலிஸ்

(சுமித்தி) 

காணிப் பிரச்சினை காரணமாகவே அசிட் ஊற்றப்பட்டதாக மகேஸ்வரனின் சகோதரனும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பயணித்த ஜீப் வண்டியின் கதவைத் திறக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதுகில் அசிட் ஊற்றி விட்டு தப்பியோடியதாகவும், அசிட் ஊற்றியவரை தனக்கு தெரியுமென்றும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர். 

இதன்போது, பொலிஸ் நிலையத்தில் துவாரகேஸ்வரனின் சகோதரி மற்றும் தந்தையாரிடம் இவ்விடயம் குறித்து வினவியபோது, குடும்ப பிரச்சினையே இச்சம்பவத்துக்கு காரணம் என கூறினர். யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/55803-2012-12-29-09-03-56.html

ஓ.. அப்படியென்றால் குடும்பப் பிரச்சினையும் அசிட் வீச்சும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

199627576120610141531_jaffna_town_304x17

அசிட் வீசியது யார் என எனக்கு தெரியும் - துவாரகேஸ்வரன்

முன்னாள் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

இவர், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரபல வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது மகனின் பிறந்தநாளையொட்டி, நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்துவிட்டு தனது வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் ஏற முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் தன்மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வீசப்பட்ட அசிட் தனது கழுத்து மற்றும் முதுகுபுறத்தில் பட்டு தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். 

தாக்குதல் நடத்தியவர்களை தெளிவாக அடையாளம் கண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும், கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கினறார். 

தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகவே, தம்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார். தமக்கு குறிப்பிட்ட இராணுவத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்ப அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையிலேயே தம்மை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக துவாரகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். 

தான் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் எதிரானவர் அல்ல என்றும், எனினும், இராணுவத்தில் இருப்பவர்கள் இராணுவத்திற்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ தளபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கினறார். 

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகிய துவாரகேஸ்வரன் தற்போது யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நேரடியாகச் சென்ற பார்வையிட்டிருப்பதுடன் அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் துவாரகேஸ்வரனின் சகோதரனும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்திருந்தார்கள். 

யாழ்ப்பாணத்தில் அக்காலப் பகுதியில் இடம்பெற்று வந்த பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும், அவர் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகவே, தம்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார். தமக்கு குறிப்பிட்ட இராணுவத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்ப அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையிலேயே தம்மை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக துவாரகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். 

தான் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் எதிரானவர் அல்ல என்றும், எனினும், இராணுவத்தில் இருப்பவர்கள் இராணுவத்திற்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ தளபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கினறார்.

என்னத்தை சொல்ல? தாயக தமிழருக்கா அவர்களுக்குமட்டும்தான் கதைக்க உரிமை இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா பொலிஸ் சொன்னால்... சரியாய்த் தானிருக்கும்.

அசிற்றால் தாக்கியது முன்னாள் இராணுவ அதிகாரி ஜெயக்கொடியே; துவாரகேஸ்வரன் முறைப்பாடு

thuva.jpg

முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதுகிலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேறிய அவர் கொழும்பு வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.

துவாரகேஸ்வரன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்து தனது வாகனத்தில் ஏறிப் புறப்படுவதற்கு முற்பட்டபோதே அவர்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் உடனடியாக தான் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றிவிட்டு அவ்விடத்தில் தேங்கியிருந்த மழைநீரில் உருண்டு புரண்டு எரிவு ஓரளவு குறைந்ததும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறுவது தனக்குப் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ள அவர் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்றுச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அசிட் வீச்சால் அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜெயக்கொடி என்பரே தன்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாக துவாரகேஸ்வரன் "உதயனி'டம் தெரிவித்தார். அசிட் வீசியதைத் தொடர்ந்து ஜெயக்கொடி மோட்டார் சைக்கிளில் அந்த இடத்டதில் இருந்து சென்றார்.

அவருடன் இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கும் நான்கு பேரும் உடனிருந்தனர் எனவும் துவாரகேஸ்வரன் கூறினார். நேற்றுமுன்தினம் காரைநகர் சிவன்கோயிலுக்குத் தான் சென்றபோது அங்கும் ஜெயக்கொடி என்பவர் என்னைப் பின்தொடர்ந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுடன் தொடர்புகொண்டபோது,

அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஜெயக்கொடி என்பவரே அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தான் சந்தேகிப்பதாக துவாரகேஸ்வரனின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதேவேளை
ஜெயக்கொடி என்பவர் முரண்பாடு ஒன்று காரணமாகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். முன்னரும் இவர் முரண்பட்டமையால் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் தெரியப்படுத்தினேன். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்தேன். தற்போது ஜெயக்கொடிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடைபெறுகிறது. அதனாலேயே என்மீது அவர் தாக்குதல் நடத்தினார் என்றார் துவாரகேஸ்வரன்.

http://onlineuthayan.com/News_More.php?id=243801733931417342

உயிரை துச்சமாக மதித்து தொடந்து குற்றம் சாட்டியிருருக்கிறார். 

இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இப்போதைய பிரச்சாரங்கள் பிரதானமாக தமிழரின் பொருளாதரத்தை  சிதைப்பதுதான் நோக்கமாக காணப்படுகிறது. உண்மை வெளிவரும் போது மகேஸ்வரன் குடும்பத்தின் சொத்தை சுரண்டும் முயற்சியே என்பது வெளிவரும். இதுவேதான் கனடாவிலிருந்து திருமணம் செய்யப் போன பெண்ணுக்கும் நடந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.