Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள்

Featured Replies

 

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?

  • Replies 132
  • Views 54.6k
  • Created
  • Last Reply

எங்கே நிம்மதி............  

 

கவிஞரின் வரிகளில் டிஎம்எஸ் இன் குரலில் இன்று கேட்டாலும் திகட்டாத பழைய பாடலொன்று.   

 

முன்னூறுக்கு மேற்பட்ட இசை வாத்தியங்கள் பாவித்து (அதில் எழுபது வயலின்கள்) இசையமைக்கப்பட்ட பாடல்.

அந்தக் காலத்திலேயே காட்சியமைப்பிலும் புதிய உத்திகளைப் பபுகுத்தியுள்ளார்கள்.

 

படம்: புதிய பறவை

 

http://www.youtube.com/watch?v=GeHzASYET2Y

 

 

 

கவிதை அரங்கேறும் நேரம்..........

 

அந்த எழு நாட்கள் படத்திலிருந்து

ஜெயச்சந்திரன் ஜானகியின் இனிமையான குரலில்

 

http://www.youtube.com/watch?v=OvSdzh2S12w

 

Edited by தப்பிலி

நானும் இந்த திரியில் இணைந்திருக்கிறேன். எனக்கும் பல பழைய பாடல்கள் பிடிக்கும். ஆனால் எந்த பாடல் யாருடைய இசை என்பதெல்லாம் தெரியாது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: விழியே கதை எழுது
படம்: உரிமைக்குரல்
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசிலா
 

 

http://www.youtube.com/watch?v=ba6q4xIchXY

 

 

விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம்
தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
 
கனவில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
 
மேகங்கள் போல் நெஞ்சில் ஒடும்
வானத்தை யார் மூட கூடும்
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது
இந்த பூவை யார் கொய்வது
ஊமைக்கு வேறேது பாஷை
உள்ளத்தில் எதேதோ ஆசை
 
தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது 
எண்ணத்தில் என்னென்ன தோற்றம்
என் நெஞ்சதில் நீ தந்த மாற்றம்

பாடல்: இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்
பாடியவர்: ஜேசுதாஸ்
படம்: நீதிக்கு தலைவணங்கு

 

இதில் சீழ்காய் வலிப்பது விஸ்வநாதன் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

 

http://www.youtube.com/watch?v=LoHIb8IvdDc

 

பாடல்:  சரவண பொய்கையில் நீராடி
  படம் : இது சத்தியம்
    இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    பாடியவர் : பி.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்


    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…

    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா

 

 

MOVIE : ANANDHA JOTHY
MUSIC : VISWANATHAN-RAMAMURTHY
SINGER : P SUSHEELA
LYRICS : KANNADHASAN

 

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே
மறையதெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா
என்னை புரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

பாடல்: உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா  :D
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

 

பாடல்: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
பாடியவர்கள்: T.M.சௌந்தர்ராஜன், P. சுசீலா
படம்: அன்பே வா

 

http://www.youtube.com/watch?v=q2T2CLz6OiE&list=PLD4E88B49BD842BF9

  • கருத்துக்கள உறவுகள்

படம் -----சூரியகாந்தி

பாடியவர் T M..சௌதரராஐன்.

இசை எம் எஸ்.விஸ்வநாதன்.

 

Edited by eelapirean

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு

 

 

அற்புதமான பின்னணி இசை. மிருதங்கத்துடன் சேர்ந்து வரும் 'ஷெனாய்' , புல்லாங்குழல் இசை  இதயத்தை ஊடுருவிச் செல்லும்.

 

'காவியத் தலைவி' படத்திலிருந்து பி சுசிலாவின் இனிமையான குரலில். 

 

 

Edited by தப்பிலி

எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் இசையில் உணர்வுகளை உருவாக்கி நம்முன் நிழலாக நர்த்தணம் புரிய வைப்பதில் சிரம் இருப்பதில்லை. சில வாத்திய இசை வித்துவாங்கள் அந்த வாதியங்களையே வசங்களை பேசி நாடகத்தை நடிக்க வைத்துவிடுவார்கள். 

 

விஸ்வநாதனின் இசை, இவற்றையெல்லாம் சர்வசாதாரணமாக கடந்து போய், சில சமையங்களில் தனக்கென்று சில காவிய வசனங்களை, எதோ ஒரு எழுதாத கவிதையை, இன்னும் புரியாத  ஒரு மொழியொன்றை கூட பேச ஆரம்பித்து விடுவதுண்டு,  அந்த மொழியில் மயங்கி போன மனம் அந்த இசையின் பொருளை ஆராய முயல்வதுண்டு. அந்த அருவ சாரீரத்தின் உருவத்தை காண ஏங்கி அதை தேடி அலைவதுண்டு. 

 

அப்படி ஒரு இசை அமைப்புத்தான் "ஒருநாள் இரவு பகல் போல் நிலவு".  1960களில் அந்த பாடலை ஒருதவை கேட்டால் மனம் பல நாட்களுக்கு தொடந்து எதையோ தேடிக்கொண்டிருக்கும். கண்கள் நடந்து போகும் தெருவெல்லாம் எதையோ சல்லடை போட்டு தேடும்.  

 

 

Edited by மல்லையூரான்

http://www.youtube.com/watch?v=Zw7itoxi70A  

 

காலங்களில் அவள் வசந்தம் Lyrics


படம்: பாவ மன்னிப்பு
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ் 
இசை: விஸ்வனாதன்-ராமமூர்த்தி

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

(காலங்கலில் அவள்)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள்)

Edited by மல்லையூரான்

http://www.youtube.com/watch?v=NLeQ2aY_EYE

 

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த

 
படம் : பாத காணிக்கை
குரல் : பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிகர்கள்: சாவித்திரி


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி

(எட்டடுக்கு)

Edited by மல்லையூரான்

Deivam Thantha veedu veedhi irukku - Aval oru Thodar Kadhai

படம் : அவள் ஒரு தொடர்கதை 
பாடியவர் : கே.ஜே. ஏசுதாஸ்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வெளியான ஆண்டு : 1974

பாடல் ஒளிவடிவில்...




பாடல் வரிகள்...

ம்ம்ம்... ம்ம்ம்ம். ஹோ.....

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன
அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன ?...

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

Song: Ennai maranthathen - பாடல்: என்னை மறந்ததேன் தென்றலே? 
Movie: Kalangarai vilakkam - திரைப்படம்: கலங்கரை விளக்கம்
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1965

 

 

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ? ஒன்றும்
அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் எங்கே சென்றாயோ?
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ? இந்த
நிலமாளும் மன்னன் நீயான போதும் நாளாளும் சொந்தம் இல்லையோ?

கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போகும் நெஞ்சம் நெஞ்சம் மலராக மாறாதோ?

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளார்ந்து நின்றாயே - இன்று
முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில் எனை வாழ வைத்துச் சென்றாயே
வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ?
எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ?

என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்

Edited by மல்லையூரான்

படம்: சுமைதாங்கி
பாடல்: மயக்கமா கலக்கமா
பாடியவர்: P.B.சீனிவாஸ்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்தி
வரிகள்: கண்ணதாசன் 


http://www.youtube.com/watch?v=dMWH4GpzhU8


மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)

பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!

 

நோட்டி முருகன் :o  :D

 

 

 

சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்) 


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்) 


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
படம்; தீர்க்க சுமங்கலி
பாடியவர்கள் : வாணி ஜெயராம்

 

 

பின்னணி இசை1: 8-வயலின்+புல்லாங்குழல்

பல்லவி:

audio.gif
Listen Song
 

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

பின்னணி இசை2: 12+8+4

 

சரணம்1:

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?

பின்னணி இசை3: 4+4+6+2

சரணம்2:

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம் 
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

பாடல்: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
பாடியவர்: P.சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
படம்: புதிய பறவை

 

http://www.youtube.com/watch?v=3pQyUoo-wwA&list=PLD4E88B49BD842BF9&index=34

பாடல்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
பாடியவர்கள்: T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா
படம்: நினைத்ததை முடிப்பவன்
 

  • கருத்துக்கள உறவுகள்

"ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து" மிகவும் பிடித்த பாடல்.. பாடலை காட்சிப்படுத்தியவிதம்தான் நன்றாக இல்லை. :(

"ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து" மிகவும் பிடித்த பாடல்.. பாடலை காட்சிப்படுத்தியவிதம்தான் நன்றாக இல்லை. :(

 

ஓம் அண்ணா, எனக்கும் பாட்டு பிடிக்கும் பாடல் காட்சி பிடிக்கவில்லை.

ஆனால் இந்த படம் பார்த்தேன். படத்தில் mgr க்கு மஞ்சுளா cool drink இல் ஏதோ கலந்து கொடுக்க, mgr அதில் மாறாட்டம் செய்தவுடன் மஞ்சுளாவே அதை குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்து விட்டது. படத்திற்கேற்ப பாடலை எடுக்க போய் அது இப்படி அமைந்து விட்டது. :D

 

Edited by துளசி

பாடல்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
பாடியவர்கள்: P.சுசீலா, T.M.சௌந்தர்ராஜன்
படம்: பாலும் பழமும்

 

http://www.youtube.com/watch?v=88WREnjAp28

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.