Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு ஒரு வார கால கொழும்பு சுற்றுலா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு ஒரு வார கால கொழும்பு சுற்றுலா! 
[Monday, 2013-01-07 11:00:02]
 
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவாரத்திற்கு கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று கொழும்புக்கு செல்லவுள்ளனர். எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து தமிழ் யுவதிகள் 8ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
 
  
தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவது இதுவே முதற்தடவையாகும்.
 
தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதேசங்கள் தொடர்பாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ரவிபிரிய தகவல் தருகையில், கொழும்பை வந்தடையும் அவர்கள் முதலில் தமது கல்விச் சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுள் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றதனால் கடந்த மாதம் அவர்களை திருகோணமலைக்கு சுற்றுலாக்கு அழைத்துச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு அடியிலை 109 கீதாஞ்சலிகள் வேண்டும்.

 

இதற்கு சாதரண அப்பாவிகள் பொருத்தமா?

 

அதனால் இன்னும் பிரச்சனை போய் முடியவில்லை.

 

இப்ப தெரியுது இடையிலை ஏந் கீதாஞ்சலியும் பாடியது என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை வைத்து, சிறிலங்கா சாதிக்க நினைப்பது என்ன?
January 9, 2013, 5:47 am|views: 201
 
அண்மையில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களை காட்சிப் பொருளாக்கி, சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 119 
தமிழ் பெண்கள், இராணுவ உடையில் கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டனர்.
 
நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட யுவதிகள் மாலை கொழும்பை சென்றடைந்தவர்களுக்கு இராணுவத்தினால் வரவேற்று அளிக்கப்பட்டது.
 
அத்துடன் கலை நிகழ்ச்சியுடன் விருத்துபசாரமும் வழங்கப்பட்டு, நிகழ்வை முடித்துக் கொண்டனர்.
 
கொழும்பு வந்திருக்கும் இவர்கள், ஒருவார காலத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.
 
கொழும்பு தேசிய அருங்காட்சியகம், விகாரமகாதேவி பூங்கா, கொழும்பு பல்கலைக்கழகம், உலக வர்த்தக மையம், 
மிருகக்காட்சிச்சாலை, ஜனாதிபதி செயலகம், இராணுவத் தலைமயகம், கொழும்புத்துறைமுகம், பியகம சுதந்திர வர்த்தக வலயம் என பல்வேறு இடங்களுக்கு தமது பயணத்தை மேற்கொள்வர் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
இந்த சுற்றுலாவின் மூலம் சிறிலங்கா என்ன சொல்ல முனைவது என்ன?
 
தமிழ் யுவதிகளை கொழும்பில் காட்சிப்படுத்தியன் மூலம் இன ஒற்றுமையில் நாடு அமைதியாக இருக்கிறதென மேற்குலக 
நாடுகளுக்கு காட்டும் முயற்சியாக கூட இருக்கலாம்.
 
அல்லது இராணுவத்தில் இணைந்தால், பிரமாண்டங்களுடன் கூடிய ஆரம்பர வாழ்க்கை வாழ முடியும் என காட்டி, அடுத்த கட்ட யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சியாக கூட இருக்குமென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
tamil1.jpg
 
tamil2.jpg
 
tamil3.jpg
 
tamil4.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகள் கொழும்பில் - இராணுத்தளபதியின் மனைவி சந்தித்து கலந்துரையாடினாராம்!  
[Tuesday, 2013-01-08 23:19:36]
 
சிறிலங்கா இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்து படைத்தரப்பால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதிகளை இராணுத்தளபதியின் மனைவியார் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர்களுக்கு விருந்துவைத்ததாகவும் படைத்தரப்பு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

புலிகள் சிறுவர்களை வலுக்கட்டயாமாக சேர்த்தார்கள் என்று முதலைக்கண்ணீர் வடித்தவர்களை இன்று காணோம்  :wub:

tamil2.jpg
 
 
 

 

 

மேலே உள்ள படத்தில் இடது கைப்புறமாக மறைப்பு செய்யப்பட்டு உள்ளது .

கொழும்பு தேசிய அருங்காட்சியகம், விகாரமகாதேவி பூங்கா, கொழும்பு பல்கலைக்கழகம், உலக வர்த்தக மையம்,

மிருகக்காட்சிச்சாலை, ஜனாதிபதி செயலகம், இராணுவத் தலைமயகம், கொழும்புத்துறைமுகம், பியகம சுதந்திர வர்த்தக வலயம் என பல்வேறு இடங்களுக்கு தமது பயணத்தை மேற்கொள்வர் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

புணர்வாழ்வு என்ற போர்வையின் கீழும் இதைத்தானே செய்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அதானே.. எதுக்கு கைகளை உருமறைப்பு செய்திருக்கிறான்கள்?

Chain போட்டு சிறை கைதிகள் மாதிரிதான் அழைத்து செல்கிறார்கள். இவர்களில் யாரோ வேதனைகள் தாங்க முடியாமல் தப்பி ஓட பார்த்திருக்கலாம். 

 

 

கூத்தமைப்பு கட்டாயம் இந்த படங்களை பற்றி பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்க வேண்டும்.

 

Edited by மல்லையூரான்

இந்தச் சகோதரிகளின் படத்தைப் பார்க்கின்ற போது குற்ற உணர்ச்சி மட்டுமன்றி புலம் பெயர்ந்த தமிழர்களின் மீதும் அவர்களது மீட்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்களது பணத்தைச் சுருட்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவர்கள் மீது ஆத்திரமே வருகின்றது. உண்மையைச் சொன்னால் இந்த சகோதரிகள் சிலர் குறிப்பிடுவது போன்று பலாத்காரமாகப் பிடித்து படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் அல்ல. ( அவர்கள் இப்போது படையிலிருந்து வெளியேற விரும்புவது வேறு விடயம்) அதற்கு மாறாக பணத்தாசை காட்டி படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். உலகெங்கும் வாழும் தமிழர்களால் கைவிடப்பட்டவர்களாய் தமது அன்றாடப் பிழைப்பிற்கே அல்லல் படும் குடும்ப சு+ழல் காரணமாக சிங்களப் படைகளின் குணவியல்பு தெரிந்திருந்தும் படையில் இணைந்து கொண்டவர்கள். இந்தச் சகோதரிகள் போன்று அல்லாடும் அத்தனை குடும்பங்களிற்கும் நிதி வளங்களை ஏற்படுத்தி அவர்களது வாழ்வினை மேம்படுத்தத் தேவையான அளவு பணம் புலத் தமிழர்களிடமும் அவர்களது 'மீட்பர்களிடமும்' இருக்கிறது. ஆனால் இவர்களெல்லாம் மனச்சாட்சியை அடகு வைத்து விட்டு வாய் வீரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தாயக மீட்புப் போர் நடைபெற்ற காலத்தில் புலத்தில் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துக்கள் தான் எத்தனை? அவற்றில் எத்தனை இன் றுதனி மனித சொத்துக்களாகி விட்டன. எத்தனை மீட்பர்கள் தொழில் ஏதும் செய்யாமல் இருந்து கொண்டே 2009 இற்குப் பின்னர் பெரும் வீடுகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். இந்தப் பணமெல்லாம் அந்தச் சகோதரிகளைச் சென்றடைய வேண்டிய பணமல்லவா? தாயக மீட்புப் போர் நடைபெற்ற காலத்தில் மாத மாதம் 200, 500, 1000 என மாதா மாதாம் பணம் வழங்கி வந்தவர்கள் எத்தனை பேர்? அவை வெற்றிச் செய்திகள் தந்த ஊக்கத்தில் வழங்கப்பட்டவை மட்டும் தானா? எமது மக்களின் விடிவுக்காக வழங்கப்பட்டவை அல்லவா? நிதி சேர் நிகழ்வுகளில் தாம் அணிந்திருந்த தாலிக் கொடிகளைக் கூடக் கழற்றிக் கொடுத்த பெண்களைப் பற்றிப் பெருமை பேசினோமே? அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள்? அல்லலையே தம் வாழ்க்கையாக்கி ஏதாவது ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கும் எம் மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு அவர்களது இந்த நிலைக்கு சிங்கள அரசை மட்டும் குற்றவாளியாக்கி எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்...

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் திமிர் ல போய் இணைந்தவ இவைக்காக எல்லாம் பாவப்படவோ பரிதாபப்படவோ முடியா

இதெல்லாம் திமிர் ல போய் இணைந்தவ இவைக்காக எல்லாம் பாவப்படவோ பரிதாபப்படவோ முடியா

 

http://www.youtube.com/watch?v=QzNbHEpqQAw

உண்மைதான் மணிவாசகன் ,இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் உறவுகள் இல்லாதவர்கள் ,மலையகத்திலிருந்து குடியேற்றபட்டவர்கள் .பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது அனுபவித்தால் மட்டும் புரியும் .விரும்பி போனவர்கள் தானே எக்கேடாவது கெடட்டும் என்றும் சிலர் இங்கு நினைக்கின்றார்கள் ,இவர்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது தாம் என்பதை மறந்துவிட்டார்கள் போல .

உண்மைதான் மணிவாசகன் ,இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் உறவுகள் இல்லாதவர்கள் ,மலையகத்திலிருந்து குடியேற்றபட்டவர்கள் .பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது அனுபவித்தால் மட்டும் புரியும் .விரும்பி போனவர்கள் தானே எக்கேடாவது கெடட்டும் என்றும் சிலர் இங்கு நினைக்கின்றார்கள் ,இவர்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது தாம் என்பதை மறந்துவிட்டார்கள் போல .

 

வடக்கில் இராணுவத்தை அகற்றினால் பசி, பட்டினி போய்விடும். அப்படித்தான் எமது மக்கள் வாழ்ந்தார்கள்.

 

முடிந்தால் இராணுவத்தை அகற்றுங்கள், அரசியல் தீர்வை முன்வையுங்கள்.

 

புலம்பெயர் தமிழர்களையே குற்றம் சொல்லுவது  வெறும் வெற்று கருத்து.

உண்மைதான் மணிவாசகன் ,இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் உறவுகள் இல்லாதவர்கள் ,மலையகத்திலிருந்து குடியேற்றபட்டவர்கள் .பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது அனுபவித்தால் மட்டும் புரியும் .விரும்பி போனவர்கள் தானே எக்கேடாவது கெடட்டும் என்றும் சிலர் இங்கு நினைக்கின்றார்கள் ,இவர்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது தாம் என்பதை மறந்துவிட்டார்கள் போல .

இப்ப என்றாலும் விளங்குதா புலிகள் இருந்தால் நம் குலப் பெண்களுக்கு இந்த நிலைமை வராது என்று . கிட்ட தட்ட இந்தியாவில் புளட் வதை முகாமில் போராட சென்ற தமிழ் பெண்கள் நிலைமைதான் இது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.