Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் - கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் - கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!
By Kavinthan Shanmugarajah 
2013-01-09 12:08:57
 
இந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான  சுவரொட்டிகளிலேயே  இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.
 
Kamalposters1A.JPG
குறித்த சுவரொட்டிகளில்  நடிகர் கமல்ஹாசனை கலையுல போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
  • கருத்துக்கள உறவுகள்

கமலஹாசனின் ரசிகர்கள், தேசியத் தலைவரிலும் அன்புள்ளதால்..... அவரின் புகைப்படைத்தையும்... இணைத்து ஆர்வக் கோளாறால்... சுவரொட்டி ஒட்டியமைக்கு, ஏன்.... பரபரப்பு ஏற்பட வேணும்.

அதுதானே. இது பரபரப்புக்காக ஒட்டியதா? பரபரப்புக் காரர்களால் ஒட்டியதா?

பிரபாகரன் – கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!

  • Wednesday, Jan 9, 2013 5:31 pm

Kamalposters1A.jpgஇந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான  சுவரொட்டிகளிலேயே  இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளில்  நடிகர் கமல்ஹாசனை கலையுல போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனை தமிழினத் தேசியத் தலைவர் பிரபாகரன் எப்போதும் சந்தித்ததே கிடையாது. இது போலியான புகைப்படம். சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்காக கமல்ஹாசனின் ரசிகர் கூட்டம்மொன்று இச்செயலை புரிந்துள்ளது. இது கண்டித்தக்க ஒன்றாகும்.

கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமே. கோடி கோடியாக தமிழர்களின் பணத்தை தனது படங்கள் மூலம் சுருட்டியவர். தவிர அவர் எந்த வகையிலும் தமிழர்களுக்காக பாடுபடவில்லை.

ஆனால், பிரபாகரன் உலகத் தமிழர்களுக்கே அடையாளம் கொடுத்த தமிழ் இனத் தலைவன், தமிழ் இனத்தை காக்க வந்த போர் வீரன். அவரோடு கமல்ஹாசனா? இதை எங்களால் பொறுத்துக் கொள்ளமுடியாது என தமிழ் உணர்வாளர்கள் கொதித்து போயியுள்ளனர்.

திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியை அகற்றுவதற்கான நடவடிக்கையில் தமிழர் இயக்க உணர்வாளர்கள் களம் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

 

http://www.semparuthi.com/?p=84203

 அற்பத்தனமான விளம்பர யுக்தி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.