Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தந்தை, தாயை இழந்த நிலையில் 5,732 சிறுவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் தந்தையை இழந்த சிறுவர்கள் 4,679 பேரும் தாயை இழந்த சிறுவர்கள் 1,053 பேரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையை இழந்த நிலையில்,

நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும் காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும் கோப்பாயில் 186 சிறுவர்களும் சாவகச்சேரியில் 551 சிறுவர்களும் கரவெட்டியில் 354 சிறுவர்களும் பருத்தித்துறையில் 461 சிறுவர்களும் மருதங்கேணியில் 73 சிறுவர்களும் உள்ளனர்.

தாயை இழந்த நிலையில்,

நெடுந்தீவில் 27 சிறுவர்களும் வேலணையில் 56 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 20 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 56 சிறுவர்களும் காரைநகரில் 38 சிறுவர்களும் நல்லூரில் 50 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 145 சிறுவர்களும் சங்கானையில் 73 சிறுவர்களும் உடுவிலில் 13 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 67 சிறுவர்களும் கோப்பாயில் 121 சிறுவர்களும் கரவெட்டியில் 120 சிறுவர்களும் சாவகச்சேரியில் 109 சிறுவர்களும் கரவெட்டியில் 120 சிறுவர்களும் பருத்தித்துறையில் 113 சிறுவர்களும் மருதங்கேணியில் 45 சிறுவர்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.sankathi24.com/news/26021/64/5-732/d,fullart.aspx

அண்மையில் இணைக்கப்பட்ட ஒரு செய்தியின் படி வறுமை காரணமாக அண்ணளவாக 60000 தமிழ் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகி இருந்தார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

 

எனவே வறுமையை எவ்வாறு ஒழிக்கலாம் என்பதை எமது சமூகம் ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது.

வறுமையும் கல்வியும் ஒன்றை ஒன்று இல்லாமல் செய்கின்றன.

 

 

வறுமையால் கல்வி கற்க முடியாத நிலை.
கல்வி இல்லாததால் நல்ல தொழில்வாய்ப்புக்கள் இல்லாத நிலை.


ஒரு பரந்துபட்ட அரசியல் தீர்வுடனான அணுகுமுறை இல்லாமல் இருப்பதால் புற்றுநோய் போல இது பரந்து வருகின்றது,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய தினம் இந்த செய்தியை பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. ஆவன செய்யப்பட வேண்டும்.ஒரு புறம் கொழுத்து குத்தியாட்டம்...மறுபுறம்....அனாதையும் பட்டினியும்....ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனும் வெட்கிதலைகுனிய வேண்டும்.இனியும் அரசியல் வேண்டாம்....ஒன்றுபடுவோம்....வருங்காலத்தை கட்டியெழுப்புவோம் வாருங்கள்.

தனி ஒருவராலோ இல்லை ஒரு சில அமைப்புக்களாலோ இந்த சமூக பிரச்னைக்கு தீர்வு காணலாம் என நான் எண்ணவில்லை.

 

 

எமது இனத்தால் தீர்வு காண முடியும்.


அது நடக்க வேண்டும் என்றால் முதலில் சிங்கள இராணுவம் அதை ஒட்டி வாழும் ஒட்டுக்குழுக்கள் அகற்றப்படல் வேண்டும்.



ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை நாம் பேசாமலும் இருக்க முடியாது.

 

 

எனவே, எமது கோயில்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், ஊர்ச்சங்கங்கள் தம்மாலான திட்டமிட்ட உதவிகளை சிங்களத்தின் ஒட்டுக்குழுக்களின் கவனத்தை ஈர்க்காமல் செய்யவேண்டும்.


நீண்டகால அடிப்படையில் உதவுவது கடினம். எனவே அங்குள்ள மக்களே தாமே தமது பொருளாதார பலத்தை கட்டி எழுப்பக்கூடிய திட்டங்களை அமுல்படுத்தினால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்... கவலையான செய்தி. இது, எதிர்காலத்தில்... பாரிய பிரச்சினைகளை உருவாக்கும். விரைந்த நடவடிக்கை தேவை.

தாயகத்தில் பல சமூக, கலாச்சார பிரச்சனைகளுக்கும் கூட மூலகாரணமாக இருப்பது வறுமைதான்.

உறவுகளே ஒருமுறை நில்லுங்கள்...............நின்று.நிதானித்து.ஐந்து நிமிட உரையான கிளிநொச்சி பாரதி புரம் மகாவித்தியாலயத்தின் தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய.திரு.இராசேந்திரம் ஐயா அவர்கள் ஆற்றும் இந்த உரையைக் கேளுங்கள்..

 

தன்பாடசாலையில்படிக்கும்.போரால் பெற்ரோரை பறி கொடுத்தமாணவர்களில் ....நுாறு ..மாணவர்களுக்கு உதவும் உறவகளால் மாதாந்த உதவி கிடைப்பதைப்பற்றி கூறும் அவர் அந்த நுாறு மாணவர்களும் ஒவொரு மாதமும் வங்கியில் அந்த பணத்தை எடுப்பதற்காக மாதத்தில் நுாறு தடவை தான் கையொப்பம் இடும்போதெல்லாம் பொறுப்பாளர் திரு.சு.வெற்றிமயில்நாதன் மற்றும்

 

 

சிவிஸ் நாட்டிலிருந்து இந்த குழந்தைகளுக்கு உதவும் அந்த முகம் தெரியா நுாறு முகங்களுக்குரியவர்களின் முகங்கள்...... தன் நினைவில் வரும் ....என்று கூறும் அவர்.. சிவிஸ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் வெற்றிமயில்நாதனின் குழந்தைகள்.சாகித்தின்.ஓவியா. தாயகன்.மூவரும் அங்கு ஆற்றிய உரையும் தமிழுக்கு வாழ்த்து சொன்ன முறையும்.தமிழ் என்பது திரு வெற்றிமயில் நாதன் அவர்களின் குடும்ப சொத்து என்று கூறும் அவர்...

 

166524_471325922904974_131204988_n.jpg

 

 

முகநூல்

பலர் உதவுகின்றனர்! இன்னும் பலர் முன்வரவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.