Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!

Featured Replies

அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது.

mali.jpg

250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாபலி என்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரையும் இராணுவ முகாமையும் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். மத்திய மாலியின் முக்கிய நகரமான செகவ் நகரத்தில் வசிக்கும் 60 பிரெஞ்சு நாட்டினரை பிரான்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றியிருக்கிறது.

இந்தச் சூழலில் மாலிக்கு அனுப்பப்படும் தரைப்படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக்கி 2,500 ஆக உயர்த்தப் போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஐவரி கோஸ்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு படைகள் தரை வழியாக மாலிக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு ஆப்பிரிக்காவில் லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட், மாலி என்ற நான்கு நாடுகளின் மீது போர் தொடுத்து

பிரான்ஸ் தனது முன்னாள் காலனிகளின் மீது நவீன காலனியாதிக்கத்தை செலுத்தியிருக்கிறது.

2011ல் லிபியாவில் கடாபியின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டிய பிறகு மேற்கத்திய நிறுவனங்கள் பல லடசம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வளங்களை கைப்பற்றியிருக்கின்றன. கடாபியின் ஒருங்கிணைப்பில் செயல்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்திய கூட்டமைப்புகள் கலைக்கப்பட்டு அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்கா முழுவதும் இராணுவத் தளங்களை அமைக்க ஆரம்பித்திருக்கின்றன.

2011ல் பிரான்ஸ் ஐவரி கோஸ்டின் உள்நாட்டு போரில் தலையிட்டு தனது கைப்பாவையான அலசானே அவுத்தாரா என்பவரை அதிபராக்கியது.  செனகலில் அமெரிக்க, பிரெஞ்சு ஆதரவுடன் நடந்த எதிர்க் கட்சி போராட்டங்களின் மூலம் மேக்கி சால் என்பவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அல்ஜீரிய அரசுடன் பிரான்ஸ் பல ஆயிரம் கோடி யூரோ மதிப்பிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறாக தனது ஆதிக்க வளையத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் அடுத்த கட்டமாக மாலியின் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை செலுத்துகிறது.

french-troops-21st-rima.jpg

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய போராளிகள் லிபிய இராணுவத்தில் பணி புரிந்த துவாரக் இன வீரர்களும் சேர்ந்து கொண்டு மாலியின் வடபகுதியை கைப்பற்றினர்.  மாலியில் கலகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த இராணுவ தளபதிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு எதிராகத்தான் பிரான்ஸ் இப்போது இராணுவ நடவடிக்கை எடுக்கிறது. அதன் காலனிய கைப்பாவை அரசுகளான ஐவரி கோஸ்ட், நைஜர், செனகல், நைஜீரியா போன்ற நாடுகள் பிரான்சுடன் இணைந்து கொள்ள ஆயிரக்கணக்கான படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளன. அல்ஜீரியா பிரான்சின் வான் வழித்தாக்குதல்களுக்கு வசதியாக தனது தளங்களை திறந்து விட்டிருக்கிறது.

தமது உலகளாவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் நீட்சியாக அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.  ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

http://www.vinavu.com/2013/01/17/france-invades-mali/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபிரிக்காவின் முதுகெலும்பாக சீனா வந்துகொண்டிருக்கின்றது.அதை இவர்களால் சகிக்க முடியவில்லை அல்லது தாங்க முடியவில்லை.அதன் வெளிப்பாடுதான் இவை அனைத்தும்.......

  • தொடங்கியவர்

'Mali a potential Afghanistan for France'

'Mali mess a consequence of Libya revolution funded by the French'

http://www.youtube.com/watch?v=Sww-y6cDHIk

  • தொடங்கியவர்

Despite the 100-year plunder by European colonial powers,Africa is still a mineral rich territory.

From diamonds to gems, from sodium to uranium, from oil and gas to Nile and gold mines, the once forgotten continent is today a honeypot for flies from the capitalist West and bees from pseudo-socialist China.

03(59).jpg

The US gets about 18 percent of its energy supplies from AfricaBy 2015, this figure is expected to rise to 25 per cent. Africa also provides about one-third of China’s energy needs, in addition to copper, platinum, timber and iron ore.

The slain Libyan leader Muammar Gaddafi resisted the Africom and the plunder of Africa by outside powers. He promoted African unity and proposed an African central bank and monetary union, earning the wrath of those who were salivating over Africa’s rich minerals.Seeing that African nations were paying US$ 500 million every year to a French company for satellite services, Gaddafi proposed to launch an African satellite. When the African nations found it difficult toraise the US$ 400 million required for the project, Libya donated US$ 300 million, thus enabling Africans to connect with the rest of the world.

http://www.dailymirror.lk/opinion/172-opinion/25090-mali-start-of-the-second-gang-rape-of-africa.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது.

mali.jpg

250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாபலி என்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரையும் இராணுவ முகாமையும் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். மத்திய மாலியின் முக்கிய நகரமான செகவ் நகரத்தில் வசிக்கும் 60 பிரெஞ்சு நாட்டினரை பிரான்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றியிருக்கிறது.

இந்தச் சூழலில் மாலிக்கு அனுப்பப்படும் தரைப்படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக்கி 2,500 ஆக உயர்த்தப் போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஐவரி கோஸ்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு படைகள் தரை வழியாக மாலிக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு ஆப்பிரிக்காவில் லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட், மாலி என்ற நான்கு நாடுகளின் மீது போர் தொடுத்து

பிரான்ஸ் தனது முன்னாள் காலனிகளின் மீது நவீன காலனியாதிக்கத்தை செலுத்தியிருக்கிறது.

2011ல் லிபியாவில் கடாபியின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டிய பிறகு மேற்கத்திய நிறுவனங்கள் பல லடசம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வளங்களை கைப்பற்றியிருக்கின்றன. கடாபியின் ஒருங்கிணைப்பில் செயல்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்திய கூட்டமைப்புகள் கலைக்கப்பட்டு அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்கா முழுவதும் இராணுவத் தளங்களை அமைக்க ஆரம்பித்திருக்கின்றன.

2011ல் பிரான்ஸ் ஐவரி கோஸ்டின் உள்நாட்டு போரில் தலையிட்டு தனது கைப்பாவையான அலசானே அவுத்தாரா என்பவரை அதிபராக்கியது.  செனகலில் அமெரிக்க, பிரெஞ்சு ஆதரவுடன் நடந்த எதிர்க் கட்சி போராட்டங்களின் மூலம் மேக்கி சால் என்பவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அல்ஜீரிய அரசுடன் பிரான்ஸ் பல ஆயிரம் கோடி யூரோ மதிப்பிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறாக தனது ஆதிக்க வளையத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் அடுத்த கட்டமாக மாலியின் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை செலுத்துகிறது.

french-troops-21st-rima.jpg

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய போராளிகள் லிபிய இராணுவத்தில் பணி புரிந்த துவாரக் இன வீரர்களும் சேர்ந்து கொண்டு மாலியின் வடபகுதியை கைப்பற்றினர்.  மாலியில் கலகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த இராணுவ தளபதிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு எதிராகத்தான் பிரான்ஸ் இப்போது இராணுவ நடவடிக்கை எடுக்கிறது. அதன் காலனிய கைப்பாவை அரசுகளான ஐவரி கோஸ்ட், நைஜர், செனகல், நைஜீரியா போன்ற நாடுகள் பிரான்சுடன் இணைந்து கொள்ள ஆயிரக்கணக்கான படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளன. அல்ஜீரியா பிரான்சின் வான் வழித்தாக்குதல்களுக்கு வசதியாக தனது தளங்களை திறந்து விட்டிருக்கிறது.

தமது உலகளாவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் நீட்சியாக அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.  ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

http://www.vinavu.com/2013/01/17/france-invades-mali/

இந்த கட்டுரைக்கு வினவு இணையத்துக்கு நான் அனுபப்பிய பின்னுட்டம்
அவர்களது இணையத்தில் இது இருக்கிறது
 
உங்களது இந்தக் கட்டுரையை படித்த போது யானையை பார்த்த பர்வையற்றவன் கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.
பிரான்ஸ் செய்வது சரியா என்பதற்கு அப்பால் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதம் சரியத் சட்டத்தின் ஆட்சியை நிலையிறுத்துகிறோம் என்று சொலிக் கொண்டு மாற்று மத, மற்று கலாச்சார மாற்று அரசியல் வழிமுறை கொண்டவர்கள் அழித்தொழிப்பதும் தலைவெட்டுவதும் கைவெட்டுவதும் சவுக்கடி கொடுப்பதும் பள்ளிகளுக்குள் புகந்து ஜிகாத் என்ற பேரில் குழந்தைகளை சுட்டுக்கொல்வதும்? பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகள் கொல்ப்பட்டுவிட்டார்கள் என்று 10ம் 14 ம் நூற்றாண்டு தலைக்குத்தலை பழிக்குபழி என்ற காட்டமிராண்டித் தனத்தை இப்போதும் பிடித்துக் கொண்டு தொங்குவது எந்தவகையில் நியாமானது? முற்போக்தனமானது?; இந்த கும்பலுக்கு இஸ்லாமிய போராளிகள் என்ற மகுடம் வேறு.
உண்மையில் பாலஸ்தீனத்தின் பிஎப்எல்பி இயக்க போராளிகள் மற்றும் குர்திஷ் விடுதலை இயக்கத்தினரை அவர்களிடம் வலது சந்தர்ப்பவாத தவறுகள் இருந்தாலும் நான் இஸ்லாமிய போராளிகள் என்று ஒத்துக்கொள்வேன்.
பொதுவுடமை சிந்தனையை மட்டுமல்ல  சாதாரண முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பின் சிவில் நிர்வாகச் சட்டங்களை கூட மறுதலிக்கும் இந்த அடிப்படைவாதிகளை உங்கள் கட்டுரையில் அம்பலப்படுத்த தவறியது ஏன்? 
  • தொடங்கியவர்

வணக்கம் நவம்,

நிச்சயம் இஸ்லாமிய அடிப்படை வாதம் சரியத் சட்டத்தின் ஆட்சி என்பன அடிப்படை மனித உரிமைகளை மீறுபவன.

ஆனால் இதே மாதிரியான கொள்கைகளை உடைய சவூதியுடன் பிரான்சும் மற்றைய  மேற்குகலமும் நல்ல உறவை கொண்டுள்ளன.

இதே மேற்குலகம் அன்று அப்காசிச்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக தலிபான்களை வளர்த்தது.

எனவே மேற்குலகம் தனது தேவைகளையே முன்வைக்கின்றது என்பது தான் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.