Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மூச்சு முட்ட' ஆரம்பித்துள்ள சீன பொருளாதார வளர்ச்சி.. 7.8 சதவீதமாக சரிந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'மூச்சு முட்ட' ஆரம்பித்துள்ள சீன பொருளாதார வளர்ச்சி.. 7.8 சதவீதமாக சரிந்தது!
Posted by: Chakra Published: Friday, January 18, 2013, 13:23 [iST]
பெய்ஜிங்: உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக மூச்சு முட்ட ஆரம்பித்துள்ளது.
இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்த சீனாவின் பொருளாதாரம் முதல் முறையாக மிகக் குறைந்த அளவான 7.8 சதவீத வளர்ச்சிக்கு சரிந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2011ல் 9.3 சதவீதமானது. இந் நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவீதத்துக்கு வந்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல அமெரிக்க, ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்களே இயங்கி வருகின்றன. இந் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் தொடர் பொருளாதார மந்தம் காரணமாக சீனாவின் இறக்குமதியை அவை பெருமளவு குறைத்துவிட்டன.
இதனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடி வாங்க ஆரம்பித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் கத்தார் நாட்டுக்கு முடிச்சு கட்ட வேண்டியதுதான் 

அண்மையில் சீனா இலங்கைக்கு கொடுக்கும் கடன்கள் மீதும் சில கட்டுப்பாடுகளை விதித்தமை மேலும் அதன் பொருளாதாரம் சரியலாம் என கூறி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றாலும்  வீக்கம் கண்ட இந்த நாட்டின் சரிவு  உலகை பலமாகப்பாதிக்கும் :(  :(  :(

சரிந்து வந்த சீன பொருளாதாரம் 2012இன் இறுதி பகுதியில் மீண்டும் முன்னேற ஆரம்பித்துள்ளது.

 

China growth shows signs of pick-up from 13-year low

 

China's economy, the world's second largest, is showing signs of a rebound that could help it emerge from its worst economic period in 13 years.

 

According to the latest government figures, growth picked up to 7.9% in the final three months of 2012, from 7.4% in the previous quarter.

 

This was driven by state investment in infrastructure projects and efforts to get consumers and companies to spend.

 

http://www.bbc.co.uk/news/business-21071546

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாடுதான் இப்ப இரட்டை எண்ணில வளருது, அவை அவை 0.1, 0,2 வளர்சியைஏ கொண்டாடினம். சீனாவின் பொருளாதார உயர்வும் உலகபொருளாதாரத்துடன் சேர்ந்தே பாதிக்கப்படும்.

சீனாவுக்கு ஏற்படும் பின்னடைவு தற்காலிகமானது. இன்று உலகின் பெரிய சக்தியாக சீனா உருவாகியுள்ளது எதோற்சையானதல்ல. அதன் உழைப்பும் திட்டமிடலும் வியக்க வைக்கத் தக்கது. தென்னமெரிக்கா, ஆசியாவின் வடபகுதி, ஆபிரிக்கா என்று தந்திரோபாயமாக பொருளாதார ரீதியாக வலுவாக அது காலூன்றியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே தவறு. இறுதிக் காலாண்டில் சீனாவின் பொருண்மிய வளர்ச்சி முன்னையதை விட அதிகரித்துள்ளது. முன்னர் 7.4 ஆக இருந்த அதன் பொருண்மிய வளர்ச்சி தற்போது 7.9 ஆக அதிகரித்துள்ளது. தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த சிறிய நிமிர்வு ஏற்பட்டுள்ளது என்று தான் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழ் ஊடகங்கள்..?????????! :icon_idea:

Edited by nedukkalapoovan

சீனாவுக்கு ஏற்படும் பின்னடைவு தற்காலிகமானது. இன்று உலகின் பெரிய சக்தியாக சீனா உருவாகியுள்ளது எதோற்சையானதல்ல. அதன் உழைப்பும் திட்டமிடலும் வியக்க வைக்கத் தக்கது. தென்னமெரிக்கா, ஆசியாவின் வடபகுதி, ஆபிரிக்கா என்று தந்திரோபாயமாக பொருளாதார ரீதியாக வலுவாக அது காலூன்றியுள்ளது.

 

அசுர வேக வளர்ச்சியில் பல பாதிப்புக்களும் உள்ளாகியுள்ளன.

குறிப்பாக சூழல் மாசடைதல் காரணமாக பல இலட்சம் சீனர்கள் இறக்கும் நிலை உருவாகியுள்ளது.

என்ன தான் சீனா வளர்ந்தாலும் சீனாவிற்கு தனது பொருட்களை விற்க சந்தை தேவை. சந்தை இல்லாவிட்டால் நாட்டில் கலகமும் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.

அமெரிக்காவின் கடன் ஆறு த்ரிலியங்கள் இருந்தாலும் அமெரிக்க சந்தையை சீனா விடாமல் உள்ளது.

இந்த வீழ்ச்சிகள் தற்காலிகமானதாக இருக்கலாம்!
இந்தியர்களே இப்போது பெருமளவு சீன உற்பத்திகளில் தங்கியுள்ளனர்!

Edited by இணையவன்

அடுத்த இரண்டு தலைமுறையும் கடந்த இரண்டு தலைமுறையையும் விட குறைந்த பொருளாதார முன்னேற்றத்தையே காணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.