Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான தருணம் வந்துவிட்டது! - பிரித்தானிய முன்னாள் இராஜதந்திரி

Featured Replies

பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான தருணம் வந்துவிட்டதாக முன்னாள் இராஜதந்திரியும், பொதுநலவாய அமைப்பின் பத்து முன்னணி உறுப்பினர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினருமான Sir Ronald Sanders தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறு செய்வதன் மூலமே தனது 2.1 பில்லியன் மக்களிடத்தில் பொதுநலவாய அமைப்பு நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், பொதுநலவாய அமைப்பின் உயர்ந்த கொள்கைகளான ஜனநாயகம், மனிதவுரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை சிறிலங்கா மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

'பொதுநலவாய அமைப்பின் உயரிய கொள்ளைகளை பேணிப் பாதுகாப்பதும், அதனை உயர்த்திப் பிடிப்பதும் உறுப்பு நாடுகளின் கடமையாகும், ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதில் இருந்து மீறிவிட்டது.

 

இந்நிலையில் பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்தி, இவ்வமைப்பின் பெறுமானங்கள் தொடர்பில் சிறிலங்காவுக்கு காலவரையறையுடன் கூடிய நிகழ்ச்சி நிரல் ஒன்றைக் கொடுத்து பொதுநலவாய அமைப்பின் நடவடிக்கைக் குழுவால் கண்காணிக்க வேண்டும்.

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலமைப்புக்கு முரணான வகையில் பதவி நீக்கியதை அடுத்து, இத்தகையதொரு அவசிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நீதியாளர் சபை, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா மற்றும் இவ்வமைப்பின் உப அமைப்புக்கள் விடுத்த எச்சரிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி புறக்கணித்துள்ளார்.

 

பிரதம நீதியரசருக்கு எதிரான கண்டன பதவி நீக்க நடைமுறையில் முறைகேடுகள் இருப்பதாகவும், இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் சிறிலங்காவின் உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்ததையும், மீறி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பொதுநலவாய அமைப்பின் அரசியல் தலைவர்களின் உச்சி மாநாடு இவ்வாண்டு இலங்கையில் நடத்தப்படவுள்ள நிலையில், காலம் தாழ்த்தாது இந்த மாநாட்டை பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் வேறொரு நாட்டில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பொதுநலவாய அமைப்பின் அரசியல் தலைவர்கள் பங்கேற்றால், அது உலகுக்கு தவறான செய்தியை வெளிப்படுத்தும்.

 

சிறிலங்கா அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கனடாவும், பிரித்தானியாவும் குரல் எழுப்பியது போன்று அமைதி காக்கும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளும் குரல் எழுப்ப வேண்டும்.

 

இந்நிலையில், பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்தி, சிறிலங்காவுக்கு காலவரையறையுடன் கூடிய நிகழ்ச்சி நிரல் ஒன்றைக் கொடுத்து பொதுநலவாய அமைப்பின் நடவடிக்கைக் குழுவால் கண்காணிக்க வேண்டும்; என இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=727b67e2-4e42-4471-b9a3-cd90d9ba2462

இந்திரன் கெட்டதும் பெண்ணலே சந்திரன் கெட்டதும் பெண்ணலே.  மகிந்தன் கெட்டதும் பெண்ணலே?

 

மகிந்தாவுக்கு பெட்டி கட்டப்போறது பெண்கள் என்று  ஜெயா டி.வி சாத்திரம் சொன்னபின்னர் சாத்திரத்தை நம்பாமல் அதை எடுத்தெறிந்து நடந்ததால் மகிந்தாவுக்கு எமதர்மராணியாக சிராணி பண்டாரநாயக்கா மாறியிருக்கிறார். :D

 

காளியின் கோழியை களவெடுத்த மேர்வின் சில்வாவிடமாவது கேட்டிருந்தால் தனது அனுபவத்தை சொல்லிக்கொடுத்திருந்திருப்பார்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

Save the Commonwealth Brand: Tell Sri Lanka 'Enough'

 

Sri Lanka government has now done enough to warrant moving the venue for November’s CHOGM to another country.  The Government cannot spurn the advice of the Secretary-General, Commonwealth legal organisation and other international groupings and yet demand to be privileged to host CHOGM.  After all, the location for hosting a Heads of Government meeting must be in the interest of the Commonwealth as a whole.

 

http://www.huntingtonnews.net/53873

 

இலங்கை மனித உரிமைகள் மறுக்கும் நாடுகளில் முன்னணி வக்கிக்கிறது. சிராணி பதவி விலக்கப்பட்டது சில சட்ட நுணுக்கங்களால். அதாவது மகிந்தா குடும்பம் 13ம் திருத்தத்தை அழிக்க முயல அது மறுக்கபட்டிருக்கிறது. 13ம் திருத்த இணைப்பான வடக்கு-கிழக்கை பிரித்ததின் சூத்திர தாரி உச்ச நீதி மன்றம். எனவே 13ம் திருத்ததின் அடுத்த காலையும் ஒடிக்க மகிந்தா உச்ச நீதிமன்றத்திடம் அதே விதமான உதவியை நாடியதில் புதுமை ஒன்றும் இல்லை.

 

ஆனால் வழமையாக அரசை காப்பாற்றும் நீதிமன்றம் அரசை கைவிட்டதுதான் புதுமை. அதன் காரணம், வெளியே, உச்ச நீதி மன்றத்திற்கும், அரசுக்குமிடையில் சட்ட நுணுக்கம்தான் பிரச்சனை போலத்தென்பட்டலும், உண்மையான பிரச்சனை உள்ளே அடங்கியிருந்த ஊழல். நீதியரசரின் கணவர். ஊழலை மறைக்க மகிந்தா கேட்டது சிராணிவீட்டு பானையை மட்டுமே. ஆனால் அதற்கு போட்டியாக சிராணி மகிந்தாவீட்டு யானையை பிடிக்க போனதுதான் பிரச்சனையின் ஆரம்பம். இதில் இருப்பது மெல்லிய சட்ட நுணுக்கமும், பாரிய ஊழல்களும். இதில் யாரராவது மனித உரிமைகளை இணைத்து பொது நாலவய மகாநாட்டை நிறுத்துமாறு கூறுவது இலங்கையை திருத்தாது. ஆனால் நீதியரசரை நீக்கியதை காரணமாக கூறி நிறுத்தலாம். உண்மையில் அவரை நீக்கிய ஒன்றும் பொதுநலவாயத்தின் மதிப்பை மாசுபடுத்தும் செயல் அல்ல. இலங்கை கடந்த 65 வருடகாலமாக மெல்ல சர்வாதிகாரத்திற்குள் சென்றுகொண்டிருந்த போது  இந்த நீதி மன்றம் ஒன்றும் வக்கேசன் போயிருந்ததல்ல.

 

இலங்கை மனித உரிமைகளை மீறும்போது அதை வெளிப்படையாக கூறி அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கைக்கு பொதுநலவாய மகாநாட்டை நடத்தும் உரிமையை மறுத்திருந்தால் இலங்கை நிச்சயம் ஒரு பாடம் கற்றிருக்கும். இப்போ அரசியல் வஞ்சம் தீர்க்க, சிராணியின் பதவி விலக்கலை கையில் எடுத்து,  அதில் இல்லாத மனித உரிமை பிரச்சனையை அதோடு இழுத்து ஒட்டுவதால் இலங்கை வைரத்தை வைரத்தால் தான் வெட்டலாம் என்ற பாடத்தைதான் படிக்க போகிறது. வஞ்சத்தை வஞ்சத்தால் வெட்டும் போட்டியில்தான் சிராணியும் அரசும் ஈடுபட்டார்கள். எனவே சிராணியின் நீக்கத்தை மனித உரிமை மீறல்களுடன் தொடுத்தால் அதில் சம்பியனான இலங்கை அப்படி ஒன்றும் அசந்து போகப் போவதில்லை.

 

மேலும் அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கைக்கு மகாநாட்டை பெற்றுக்கொடுத்த ரஞ்சன் மாத்தாயும், இந்தியாவும் இன்னமும் மனம் மாறவில்லை. குடும்ப ஊழலிருந்து மாட்டுப்பட்டிருக்கும் சிராணியை பதவி நீக்கியது பெரிய விடையமில்லை. இலங்கை மனிதஉரிமைகளை மீறுவது பாரதூரமான விடையம். எனவே சிராணியை நீக்கியதற்காக மகாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கையிடம் காரணம் கூறாமல், இலங்கை மனித உரிமைகளை மீறுவதால் புறக்கணிக்கப் போவதாக கூறுங்கள்.

Edited by மல்லையூரான்

கொமன்வெல்த் அமைப்பை கிண்டலடித்த பாலித கொஹன்ன [ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 00:44 GMT ] [ தா.அருணாசலம் ]

Palitha%20Kohona.jpgகொமன்வெல்த்துக்கு என்ன பெறுமதி உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன.

சிறிலங்கா அரசாங்கம் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளது குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதுகுறித்து நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநதி பாலித கொஹன்னவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போதே,"கொமன்வெல்த்துக்கு என்ன பெறுமதி உள்ளது?" என்று கிண்டலாக அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130118107619

 

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி முன்னாள் என்ற பெயர் வந்ததும் தான் இவர்கள் விழி திறக்கிறார்கள்????

  • தொடங்கியவர்

'பொதுநலவாய அமைப்பிற்கு என்ன பெறுமது உள்ளது?' என கேட்பதில் நியாயம் இருந்தாலும் அதை போர்குற்றவாளிகள் கேட்பதுதான் வேடிக்கை .

அதெப்படி முன்னாள் என்ற பெயர் வந்ததும் தான் இவர்கள் விழி திறக்கிறார்கள்????

 

"இந்நாள்" என்ற நிலையில் உள்ளபோது அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் மேலும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்.

"முன்னாள்" ஆனவுடன் சொல்வார்கள். ஆனால் அதை இன்றைய இந்நாள் உறுப்பினர்கள் செவிமடுக்க வேண்டிய கட்டாயமில்லை.

"இன்னாள்" உடம்பிலை நோகாமிலிருக்க பாவிக்கும் ஆயுதம்தான் முன்னாள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

"இந்நாள்" என்ற நிலையில் உள்ளபோது அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் மேலும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்.

"முன்னாள்" ஆனவுடன் சொல்வார்கள். ஆனால் அதை இன்றைய இந்நாள் உறுப்பினர்கள் செவிமடுக்க வேண்டிய கட்டாயமில்லை.

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தொடக்கம் இந்திய ராணுவ ஆலோசகர்கள் ஹரிஹரன் போன்றவர்களும், கருணாநிதி வரை பதவியிலிருக்கும் போது... எதுவும் கூறமாட்டார்கள். பதவியில் இல்லாத, போது மட்டும், ஈழப்பாசம் பொத்துக் கொண்டு வந்து, விடும்.

நாளைக்கு... பான்கி மூனுக்கும் அந்தப் பாசம் வரும்.

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தொடக்கம் இந்திய ராணுவ ஆலோசகர்கள் ஹரிஹரன் போன்றவர்களும், கருணாநிதி வரை பதவியிலிருக்கும் போது... எதுவும் கூறமாட்டார்கள். பதவியில் இல்லாத, போது மட்டும், ஈழப்பாசம் பொத்துக் கொண்டு வந்து, விடும்.

நாளைக்கு... பான்கி மூனுக்கும் அந்தப் பாசம் வரும்.

 

இந்தியர்களின் நிலை வேறு. அவர்கள் மீண்டும் பதவியை கைப்பற்றுவதற்காக ஆடும் நாடகம் தான் திடீர் ஈழ பாசம். :D

  • கருத்துக்கள உறவுகள்

"இந்நாள்" என்ற நிலையில் உள்ளபோது அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் மேலும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்.

"முன்னாள்" ஆனவுடன் சொல்வார்கள். ஆனால் அதை இன்றைய இந்நாள் உறுப்பினர்கள் செவிமடுக்க வேண்டிய கட்டாயமில்லை.

 

பெருமையாக  இருக்கு

துளசியிடமிருந்து  வரும் கருத்துக்களை  பார்க்கும்போது..........

 

தொடருங்கள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.