Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணை தலைவர் ராகுல் ! காங்கிரசில் நம்பர்-2 பதவி

Featured Replies

Tamil_News_large_629738.jpg

ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று இரவு, அவர் நியமிக்கப்பட்டார்.

அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, சிந்தன் ஷிவிர் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது.

 

இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், உட்கட்சி மோதல்களை தவிர்த்து விட்டு, ஒற்றுமையாக செயல்பட்டால் தான், அடுத்த லோக்சபா தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என, மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.இரண்டாவது நாளான நேற்று, கட்சியின் பொதுச் செயலர் ராகுல் தான், முக்கிய விஷயமாக முன் நிறுத்தப்பட்டார். கட்சியில் உள்ள, அவரது ஆதரவாளர்கள், ஜோதிராதித்யா சிந்தியா, ராஜிவ் சுக்லா, மணி சங்கர் அய்யர், ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா உள்ளிட்ட பலரும், ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த தேர்தலில், அவரையே, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

பிரதமர் வேட்பாளராக்கவும் வலியுறுத்தல் : ஜிதின் பிரசாதா பேசியதாவது:அடுத்த லோக்சபா தேர்தலில், இளைஞர்களின் பங்கு முக்கியமானது. அதிக அளவில், இளைஞர்களை, கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே, வெற்றியை எட்டிப் பிடிக்க முடியும். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை அறிவிக்க வேண்டும்; அதற்கு, இது தான், சரியான நேரம். இவ்வாறு ஜிதின் பிரசாதா பேசினார். காங்., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான, வீரப்ப மொய்லி பேசியதாவது: ராகுல், ஏற்கனவே தலைவர் தான். அதில், எந்த சந்தேகமும் இல்லை. நமக்கு நிலையான தலைவர்கள் இருப்பது, பெருமையான விஷயம்.

 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, எந்த காலத்திலுமே, கட்சியின் முக்கிய பொறுப்பை, திறமையான தலைவர்கள் வகித்துள்ளனர். இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.மத்திய அமைச்சர், ராஜிவ் சுக்லா பேசியதாவது: அடுத்த தேர்தலின் பிரதமர் வேட்பாளராக ராகுலை நியமிக்க வேண்டும் என்பதே, கட்சியில் உள்ள, பெரும்பாலான தலைவர்களின் விருப்பம். இந்த கோரிக்கையை, அவ்வப்போது, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

 

ஆனாலும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் பொறுப்பு, ராகுல், சோனியா ஆகியோரின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியதாவது: கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதை முடிவு செய்ய வேண்டியது, ராகுலே. மக்களுக்கு, அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வது தான், நம் நோக்கம். இவ்வாறு, மணிசங்கர் அய்யர் பேசினார்.

 

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தலைவர்கள், ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பேசியதை அடுத்து, ராகுலுக்கு எந்த நேரத்திலும், முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, டில்லி அரசியல் வட்டாரத்தில், நேற்று மாலையிலிருந்தே, தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற, காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நேற்றிரவு நடந்தது. இதில், அனைவரும் எதிர்பார்த்தபடியே, காங்கிரஸ் கட்சியின், அகில இந்திய துணை தலைவர் என்ற, மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி, ராகுலுக்கு வழங்கப்பட்டது. கட்சியின் துணை தலைவர் பதவிக்கு, ராகுலின் பெயரை, காங்., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, அந்தோணி முன் மொழிந்தார்.செயற்குழு, அதை ஏற்றுக் கொண்டது.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சியில், சோனியாவுக்கு அடுத்ததாக, நம்பர்-2 இடம், ராகுலுக்கு கிடைத்துள்ளது.ராகுல், கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள, காங்கிரஸ் தொண்டர்களிடையே, உற்சாகம் கரை புரண்டோடியது. நேற்று இரவு முழுவதும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

நியமன பதவிக்கு முற்றுப்புள்ளி : @@காங்கிரஸ் சிந்தனையாளர் கூட்டத்தில், கேரள மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசியதாவது: கட்சியின் அனைத்து மட்டங்களிலும், அனைத்து பதவிகளுக்கும், தேர்தல் மூலமாகவே, ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். நியமனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதன் மூலமாகவே, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராகுலின் நடவடிக்கை மூலமாகவே, இது சாத்தியமானது. இதேபோல், மற்ற பதவிகளுக்கும் தேர்தல் மூலமாகவே, ஆட்களை நியமிக்க வேண்டும். நியமனங்கள் மூலம், பதவிகள் நிரப்பப்பட்டால், கட்சி பலவீனமடைந்து விடும். இவ்வாறு ரமேஷ் சென்னிதலா பேசினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%A3-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-184800838.html

  • தொடங்கியவர்

I will transform India, Rahul Gandhi says

 

"I have great experience...in the last eight years that I have worked with the party I have seen it is a great organization and together we will transform the country. It is a great party," said the 42-year-old scion of the Nehru-Gandhi dynasty, who was the party's general secretary, before his elevation.

 

Rahul becomes the third vice president of the Congress after Arjun Singh under Rajiv Gandhi and Jitendra Prasada under Sitaram Kesri.

 

http://timesofindia.indiatimes.com/india/I-will-transform-India-Rahul-Gandhi-says/articleshow/18095323.cms

  • தொடங்கியவர்

தமிழக கருத்துக்கள்

 

எஞ்சி இருக்கின்ற புலிகளுக்கும் வயிற்றில் புளி கரைக்கின்றவிடயம் .

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் லிங்கனும் ஒபாமாவும் அதிபராக வரலாம் என்றால் இந்தியாவில் ஏன் சாதாரண திறமையுள்ள குடிமகன் வர முடியாமல் உள்ளது?

 

இராகுலை அடுத்த போதுதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக  நியமிப்பது மூலம் இந்திய மக்களுக்கு சோனியா குடும்பம் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது.படுதோல்வியை கையளிப்பது மூலம் இந்த குடும்ப முட்டாள் அரசியலை விடுத்து தகுதியானவர்களை தெரிவுசெய்யும் கலாச்சாரம் உருவாகவேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
எஞ்சி இருக்கின்ற புலிகளுக்கும் வயிற்றில் புளி கரைக்கின்றவிடயம் .

 

யாருக்கு புளியைக்கரைக்குதோ இல்லையோ

 

காலையில் எழும்பி  பல்லுக்கூட துலக்காமல் இதை மணந்து பிடித்து எழுதும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.............. :(

  • தொடங்கியவர்

லோக்சபா தேர்தல் திரைமறைவு பேச்சுவார்த்தை தீவிரம்

 

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தங்களுடன் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன், கூட்டணி அமைக்கவும், சில கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்தும், திரைமறைவில் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளன.
இன்னும் ஆறு மாத காலத்திற்கு, மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில், எதிர்க் கட்சிகள் ஈடுபட வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில், லோக்சபா தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தலில், “தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது’ என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டார். “லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி தொடரும்’ என்றும், “தே.மு.தி.க., என்ற பெயரிலேயே, தி.மு.க., உள்ளது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். “தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற அடிப்படையில், சுபகாரியங்கள் அரங்கேறும், இம்மாதத்தில், அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்த பேச்சு வார்த்தையும், மறைமுகமாக துவக்கியுள்ளன.

 

 

இது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
காங்கிரஸ், பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரஸ் அல்லது பா.ஜ., தலைமையில் அமையும் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, அந்த நேரத்தில் முடிவெடுக்கலாம் என, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

 

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை எதிர்கொள்ள, மற்ற மாநில கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள, அ.தி.மு.க., தயாராகியுள்ளது. அ.தி.மு.க.,வின் அதிகார சக்தியாக வலம் வரும், “நால்வர் குழு’வை சேர்ந்த அமைச்சர்களில் சிலர், பா.ம.க., – ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் பூர்வாங்க பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளனர்.

 

பா.ம.க., – ம.தி.மு.க.,வுக்கு தலா, 3 தொகுதிகள், ஒதுக்கீடு செய்வதற்குரிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்த இரு கட்சிகளும், கூட்டணி அமைக்க பச்சைக் கொடி காட்டி விட்டது. ஆனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.

 

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அ.தி.மு.க., அணியில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளன.
இந்த இரு கட்சிகளுக்கும், தலா இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க.,வுடன் நெருக்கமாகவே உள்ளது. ஆனால், சமீபத்தில், சென்னை நகரில், மாநகராட்சி சார்பில், மலிவு விலை ஓட்டல்கள் துவக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணனுக்கு என்னை பிடிக்காது’ என, ஏற்கனவே, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதன் மூலம், தி.மு.க., அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேருவதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

 

அ.தி.மு.க., அணியில் மார்க்சிஸ்ட் இடம்பெற இருப்பதால், ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து, ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை. அடுத்த மாதம், 4ம் தேதி, ம.தி.மு.க., பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. முன்னதாக, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவது குறித்த கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கவுள்ளனர். தி.மு.க., அணியில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது; புதிய வரவாக, தே.மு.தி.க.,வை நம்பியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், போன்ற கட்சிகளுக்கும் சேர்த்து, 16 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 24 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

 

இதற்கான பேச்சு வார்த்தையும், தி.மு.க., தரப்பில் துவக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தே.மு.தி.க., பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த அக்கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கூட்டணி வைப்பதற்கு அச்சாரமாக தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது. அதன் பின், மாநாடு நடத்தி, அதில் இறுதி முடிவு வெளியிடப்படும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.alaikal.com/news/?p=120921

 

யாருக்கு புளியைக்கரைக்குதோ இல்லையோ

 

காலையில் எழும்பி  பல்லுக்கூட துலக்காமல் இதை மணந்து பிடித்து எழுதும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.............. :(

போராளிகள் தூங்குவதும் இல்லை பல்லு தீட்டுவதும் இல்லை .

  • தொடங்கியவர்

adade-19.jpg

India-transl3.png

  • கருத்துக்கள உறவுகள்
போராளிகள் தூங்குவதும் இல்லை பல்லு தீட்டுவதும் இல்லை .

 

இந்த சொல்லில் பெரும் மரியாதை வைத்திருக்கின்றேன்

கெடுத்து விடாதீர்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் ஆள்கள் கூறுவது போல ராகுல் பெரிய ஆளுமை மிக்க தலைவரெல்லாம் கிடையாது. ராகுலை விட அவரது சகோதரி பிரியங்கா திறமையானவர். அடுத்த இந்திரா என அவரது பதின்ம வயதுகளிலேயே வருணிக்கப்பட்டவர். பிரியங்கா பிரதமராவதற்கு முக்கிய தடைகளாக அவரது கிறிஸ்தவ கணவர் மற்றும் இத்தாலியரான தாய் போன்ற காரணங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்துகான ஒரு மாயையான விசுவாசம் இந்தியா முழுவதும் உண்டு. அந்த ஆதரவும்  இல்லாவிடில் இன்று பல காங்கிரஸ் தலைவர்கள் காணாமல் போயிருப்பார்கள். தங்கள் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்ளவே பதவி வெறிபிடித்த பல மூத்த தலைவர்கள் ராகுலை ஆதரிக்கின்றனர்.

  • தொடங்கியவர்

ராகுல் காந்தியால் தேர்தல் வெற்றிகளை பெற முடியுமா?

 

இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன. அவரால் அடுத்து வரக்கூடியத் தேர்தல்களில் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என ஒரு சாராரும், அவருக்கு அத்தகைய வல்லமை இல்லை என்று மறு சாராரும் கூறுகிறார்கள்.



தற்போது காங்கிரஸ் கட்சி தோல்வி மேல் தோல்வியடைந்து ஒரு நெருக்கடியில் உள்ளது என்றும், ராகுல் காந்தியால் உறுதியாக கட்சிக்கு வெற்றியை தேடித் தரமுடியும் என்று கூற முடியாது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ''இந்து''பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம்.


இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்துவதில் ஓரளவுக்கு அவர் வேலை செய்திருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவரால் பெரிய அளவில் ஒன்றும் சாதித்துவிட முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

 

 

"பெரிய வெற்றிகளைப் பெறவில்லை"



மாநிலக் கட்சிகள் பலமாக இருக்கும் சூழலில், அவரால் அக்கட்சிகளின் தலைவர்களை எந்த அளவுக்கு சமாளிக்க முடியும் என்பதும் கேள்விக்குறியே என்றும் கூறுகிறார் ராம்.

இதுவரை அவரால் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றிகளைப் பெறவில்லை எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படுவதும் சந்தேகமே எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் பெரிய பலத்துடன் இருப்பதாக கருத முடியாது என்றும், குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, மாநில அரசியலைவிட்டு தேசிய அரசியலுக்கு வரும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே எதிர்ப்பார்கள் எனவும் என் ராம் கூறுகிறார்.

 

2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு ராகுல் காந்தியே காரணம் என அக்கட்சி கூறியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஒரு குடும்பத்தை மட்டுமே காங்கிரஸ் கட்சி நம்பியுள்ளமை மிகவும் பரிதாபகரமான நிலை எனவும் என் ராம் சுட்டிக்காட்டுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/01/130120_rahulgandhi.shtml

  • தொடங்கியவர்

என்ன சாதித்தார் ராகுல் ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.