Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க இலங்கை அரசு முயற்சி - தடுக்குமாறு மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Karunanidhi_20111012-150.jpg

இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக்கோ‌ரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடித‌ம் மூல‌‌ம் வலியுறுத்தியுள்ளார். இது தொட‌ர்பாக கருணா‌நித‌ி எழு‌தியு‌ள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

  

தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவற்றை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் கிராமங்களின் பெயர்களை மாற்றி சிங்கள பெயர்களை சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றியமைத்தல், இந்து கோவில்களை இடித்தல் போன்ற வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக அதில் அவர் குற்றம்சா‌ட்டியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள கருணாநிதி, தமிழர்கள் ஒடுக்கப்படுவதை வெளிப்படுத்தும் பல்வேறு புள்ளி விவரங்களையும் அந்த கடிதத்தில் கருணாநிதி இணைத்துள்ளார்.

 

அதில், 89 தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள திருக்கோவில் என்ற கிராமத்தின் பெயர் ஸ்ரீகோவிலா என்றும், குடும்பிமலையின் பெயர் தொப்பிகல என்றும் மாற்றப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் நெருக்கமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப் பெரிய கலாச்சாரத்தையும், பழமைவாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக கருணாநிதி தனது கடிதத்தில் குற்றம்சா‌ட்டியுள்ளார்.

எனவே, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் இந்தக் கொடுமைகளை உடனே தடுத்து நிறுத்தும் தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளதாகவும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=74247&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அந்த கட்டுரை வேண்டுமென்று சில நோக்கங்களை முன் நகர்க்க எழுதப்பட்டது. அது என்ன என்று கூறுவது கஸ்டம்.  இந்தியாவை காப்பது நமது நோக்கம் இல்லை என்றாலும் இந்தியாவை தாக்கி இருக்கும் விதம் சந்தேகத்திற்குரியது.

 

மற்றயது பிளேக்க தாக்கப்பட்ட, இடம், காலம், விதம், அதன் முடிவு எல்லாமே வேண்டுமென்றே திரிக்கபட்டிருக்கிறது.

 

தொப்பிகல வெற்றியின் பின்னர்தான் பிளேக் மட்டக்களப்புக்கு போனார். தாக்குதல் மட்டகளப்பு விமானத்தளத்திற்கு அருகில் நடந்தது. இதில் பிளெக் தனது அப்பிராயப்படி புலிகள் தனது வரவை தெரிந்திருக்கவில்லை என்றும் தான் அந்த தாக்குதலின் இலக்கு அல்ல என்றும் கூறியிருந்தார். இந்த பயணம் அரசு செய்து கொடுத்ததல்ல. பிளேக் கேட்டு பெற்றிருந்த பயணம். போனது பிளேக் மட்டும் அல்ல 20 அளவான மேற்கு நாட்டும் மற்றய நாட்டும் தூதுவர்கள். 

 

யுத்தக்கட்டுரைகளை இன்றைய காலகட்டத்தில் தவிர்ப்பதுதான் ராஜதந்திர போராடத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும். நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, மேர்குநாடுகள் சீனாவுக்காக சிங்கள அரசை ஆதரித்தார்கள் என்பது. தெங்கிழக்காசியாவை விட்ட பின்னர் இதை பிளேக்கின் தலைமை அதிகாரியாக இருந்த அமிர்தாஜ் கண்டித்து புத்தகமும் எழுதினார். இன்ந்த சீனா பீதிக்கொள்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த பிளேக் தனிக்காரணமாக இருந்தார். ஆனல் இதில் நன்மை அடந்தது சீனா மட்டுமே. இந்தியா இலங்கைக்கு விளக்கு பிடித்துவிட்டு இன்று நன்றாக உதை வாங்கியிருக்கிறது.

 நாம் அவர்களுக்கு தெரிய படுத வேண்டியது 65 ஆண்டுகளாக  நாமும் சிங்கள அரசை ஆதரித்து இன்று கையறுந்து போய் இருக்கிறோம் என்பதுதான். அவர்கள் தங்களின் மூன்று வருட பாடத்தை நமது 65 வருட பாடத்துடன் ஒப்பிட்டு உண்மையை கண்டு கொள்வது அவர்களின் நமைக்குமே.

இந்த வாரம் பீரிஸ் வருகிறார் டெல்லிற்கு.

 

சிலவேளை காதும் காதும் வைத்தால் போல சில விடயங்களை இந்தியா கூறலாம். வரும் பங்குனியில் மீண்டும் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் சிங்கள நாட்டிற்கு எதிராக ஆதரவை சேர்க்கலாம். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கலாம் என வெருட்டலாம்.


ஆனால், இவை வெறும் வெருட்டல்கள் என்றே மகிந்தா கூட்டம் நடக்கும் வரை, இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது.

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டு இருந்தவருக்கு இப்பொழுது மட்டும் அக்கறையாக்கும்.

கடிதம் எழுதி அனுப்புவதை எப்ப தான் நிறுத்தப்போகிறாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவரு இரண்டு கல்யாணம் கட்டி தமிழ் கலாச்சாரத்த காப்பாற்றி இப்போ ஏனைய நாடுகளில் இருக்கும் கலச்சாரத்த பற்றி கவலை படுறார் ஆக்கும். :D

Sri Lanka: Is Delhi Dumb?

 

The international community, unfazed by Delhi’s truancy, should do all it can to aid the people of Lanka preserve what they have left of 60 years of albeit imperfect democracy before it is shackled further.

 

http://www.southasiaanalysis.org/node/1140

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிறத கதைப்பம் அண்ணா :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியோ இந்தியாவை தொடர்ந்தும் ஆளப்போவது காந்தி பரம்பரை தான் அவர்களில் மாற்றம் வரவே வராது unless தமிழ் நாடு அரசியல் கட்சிகளை நம்பி அவர்கள் ஆட்சியில் அமர்வது தீர் மானிக்கப்படுமாக இருந்தால் இவர்களும் இலங்கை தமிழர் நலனை ஒரு விட்டுக்கொடுக்க முடியாத நிபந்தனையாக வைத்தால் ஒருவேளை நடக்கலாம் மற்றும்படி no chance at all.

2016 இல் காலம் முடியும் பாராளுமன்றம் / நாடாளுமன்றம் 2023 வரை நீடிக்கப்படலாம் என சில செய்திகள் கசிந்துள்ளன.

 

இது உண்மையானால்...நாட்டில் என்ன நடக்கும் என யோசிக்கமுடியாமல் உள்ளது  :wub: 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆட்சி கூட வரலாம்

எப்பிடியோ இந்தியாவை தொடர்ந்தும் ஆளப்போவது காந்தி பரம்பரை தான் அவர்களில் மாற்றம் வரவே வராது unless தமிழ் நாடு அரசியல் கட்சிகளை நம்பி அவர்கள் ஆட்சியில் அமர்வது தீர் மானிக்கப்படுமாக இருந்தால் இவர்களும் இலங்கை தமிழர் நலனை ஒரு விட்டுக்கொடுக்க முடியாத நிபந்தனையாக வைத்தால் ஒருவேளை நடக்கலாம் மற்றும்படி no chance at all.

 

மத்தியில் இராகுல் போட்டிபோடுவது என்பது காங்கிரசின் முடிவின் ஆரம்பம்.

வரும் காலங்களில் டெல்லியின்  மாற்றங்கள் இந்தியா முழுவதும் உணரப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியை நோக்கி இராணுவ அணி ஓன்று நகருவதாக செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது நினைவிருக்கலாம் பின்பு அது ஒரு பயிற்சி என்று சொல்லப்பட்டது

19ம் திருத்தம்தான் இலங்கையின் அரசியல் அமைப்புச்சட்ட சரித்திரத்தில் மிக சுவாரசியமனதாக இருக்க போவது. 19ம் தவறினல் அது 20. 19 ஆவது தவற ஒரு நியாமும் இல்லை. ஆனால் இதே எதிர்பார்பை சர்வதேசம் கணித்திருக்கும் என்பதும், அதன் காதில் பூ சுத்துவதற்காக இலங்கை அரசு 19ல் சில ஏமாற்றுக்களை கொண்டுவந்துவிட்டு 20ல் சொலிட் அடி ஒன்று அடிக்கும். சர்வதேசம் மார்ச்சில் என்ன செய்கிறது என்பதை பொறுத்து திருத்தங்கள் 19ம் 20 தங்கள் வடிவங்களை பெறலாம்.

இராணுவ ஆட்சி கூட வரலாம்

 

உலகின் 20ஆவது பெரிய இராணுவத்தை.. இனி சும்மா இரு என்றாலும் சிக்கல். அவர்களுக்கு 'வேண்டியதை' கொடுக்காமல் விட்டாலும் சிக்கல்.

 

 

இந்த சிக்கல் சிங்கள பொருளுதாரம் சரிந்தால் நடக்கலாம்.

 

அப்பொழுது இராணுவ ஆட்சி அமையலாம், எமது மக்களுக்கும் விடிவு கிடைக்கலாம்.

19ம் திருத்தம்தான் இலங்கையின் அரசியல் அமைப்புச்சட்ட சரித்திரத்தில் மிக சுவாரசியமனதாக இருக்க போவது. 19ம் தவறினல் அது 20. 19 ஆவது தவற ஒரு நியாமும் இல்லை. ஆனால் இதே எதிர்பார்பை சர்வதேசம் கணித்திருக்கும் என்பதும், அதன் காதில் பூ சுத்துவதற்காக இலங்கை அரசு 19ல் சில ஏமாற்றுக்களை கொண்டுவந்துவிட்டு 20ல் சொலிட் அடி ஒன்று அடிக்கும். சர்வதேசம் மார்ச்சில் என்ன செய்கிறது என்பதை பொறுத்து திருத்தங்கள் 19ம் 20 தங்கள் வடிவங்களை பெறலாம்.

 

19 என்பது புதிய அரசியலமைப்பை கொண்டதாக அமையலாம்.

 

ஆனால் ஜே.ஆர். தந்த இந்த அரசியலமைப்பை பதவியில் உள்ளவர்கள் எவ்வாறு வெறுப்பார்கள்  :lol: 

இராணுவத்தில் கடந்த ஆண்டு 75,000 வீரார்கள் விட்டு விலத்திவிட்டார்கள் என்ற செய்தி என்ன நோகத்திற்காக வெளிவிடப்பட்டது என்பது ஒரு சிக்கலான விடையம். உண்மையில் கோத்தா இராணுவத்தை அடக்கிவிட்டரா அல்லது வடக்கு கிழகில் இப்போ இராணுவம் இல்லை என பொய் கூற இதை அவிழ்த்துவிட்டர்களா தெரியாது. ஆனால் பொன்சேக்காவின் விசுவாசிகள் தலைமை வகிக்கும் ரெமெண்டுகள் சில பாதிப்பை கண்டிருக்கலாம்.

19ம் திருத்தம்தான் இலங்கையின் அரசியல் அமைப்புச்சட்ட சரித்திரத்தில் மிக சுவாரசியமனதாக இருக்க போவது. 19ம் தவறினல் அது 20. 19 ஆவது தவற ஒரு நியாமும் இல்லை. ஆனால் இதே எதிர்பார்பை சர்வதேசம் கணித்திருக்கும் என்பதும், அதன் காதில் பூ சுத்துவதற்காக இலங்கை அரசு 19ல் சில ஏமாற்றுக்களை கொண்டுவந்துவிட்டு 20ல் சொலிட் அடி ஒன்று அடிக்கும். சர்வதேசம் மார்ச்சில் என்ன செய்கிறது என்பதை பொறுத்து திருத்தங்கள் 19ம் 20 தங்கள் வடிவங்களை பெறலாம்.

 

water600.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.