Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் ஏலத்துக்கு வரும் அனுராதபுர காலத்து சந்திரவட்டக்கல்

Featured Replies

லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி செனரத் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.



130120173739_buddhist_temple_step_stone_

30 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு

அதிக விலையில் சந்திரவட்டக்கல் ஏலத்துக்கு வருகிறது



கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் பழமையான இந்த சந்திரவட்டக்கல் பிரிட்டன் பணத்தில் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு கோடி ரூபா) பெறுமதியானது என்று பிரிட்டிஷ் பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

 

ஒரு தொன் எடையும் 8 அடி நீளமும் கொண்ட கிரானைட் கருங்கல்லால் ஆன இந்த கல் 1950களில் தேயிலைத் தோட்ட முதலாளி ஒருவரால் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போன்ஹாம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

 

இதேவேளை, அனுராதபுர வரலாற்று பாரம்பரிய பிரதேசத்தில் 1890-களில் இருந்தே தொல்பொருள் ஆய்வுகள் நடந்துவருவதாகவும் அங்கிருந்து சந்திரவட்டக்கல் ஒன்று காணாமல்போயிருப்பதற்கான பதிவுகள் எதுவும் தம்மி்டம் இல்லை எனவும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் செனரத் திசாநாயக்க தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

அனுராதபுர காலத்தைச் சேர்ந்த 8 சந்திரவட்டக்கற்கள் தம்மால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தக் கல் தொடர்பான எந்தவொரு பதிவும் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

 

பிரிட்டனில் இருக்கின்ற கல் தொடர்பில் இலங்கைத் தூதரகம் ஆராய்ந்து பார்ப்பதாகவும் உண்மையான சந்திரவட்டக்கல் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அதனை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் செனரத் திசாநாயக்க தெரிவித்தார்.

 

அனுராதபுர இராசதானிக் காலத்தில் (கி.மு. 400- கி.பி.1017 வரையான காலம்) அமைந்த விகாரைகளின் நுழைவாயிலில் கருங்கல்லால் அமைந்த மிகப்பெரிய படிக்கல்லே சந்திரவட்டக்கல்; குதிரை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் மற்றும் சில பறவைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் பௌத்தக் கட்டடக் கலையில் மிகவும் பிரபல்யம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிட்டனின் காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து பல்வேறு தொல்பொருட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அவை இன்று லண்டன், பொஸ்டன் மற்றும் பல வெளிநாட்டு நகரங்களில் இருப்பதாகவும் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர் கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/01/130120_moonstonesrilnkalondon.shtml

  • தொடங்கியவர்

The Daily Mail said:

 

“The moonstone, weighing nearly a ton, was thought to have been too heavy and cumbersome for the previous homeowner to move so he left it behind. Experts believe that the six-inch thick step, which is covered in intricate and beautiful animal carvings, could be up to 1,300 years old.
 

“It is just one of seven temple steps from the ancient Sri Lankan city of Anuradhapura left in existence today. The step is now owned by an unidentified woman who has kept it outside the front door of her bungalow home near Exeter, Devon, for people to walk on.
 

“However, she is now selling it at auction as she is downsizing and, like the previous owner, is unable to take it with her. The popularity of ancient Eastern art has greatly increased in recent years and the step is expected to sell for a £30,000 to £50,000 when it goes on sale at an auction.
 

Sam Tuke, of auctioneers Bonhams, told Daily Mail that the vendor could remember playing on the step as a child after her parents bought the family home from the tea planter in the 1950s. She had inherited the bungalow after her father died, and with it the step.”

 

  • கருத்துக்கள உறவுகள்
அனுராதபுர இராசதானிக் காலத்தில் (கி.மு. 400- கி.பி.1017 வரையான காலம்) அமைந்த விகாரைகளின் நுழைவாயிலில் கருங்கல்லால் அமைந்த மிகப்பெரிய படிக்கல்லே சந்திரவட்டக்கல்; குதிரை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் மற்றும் சில பறவைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் பௌத்தக் கட்டடக் கலையில் மிகவும் பிரபல்யம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில ஒரு 'எருதும்' இருக்குது போலக் கிடக்கு!

 

பொலனறுவைச், சிவன் கோவிலில் களவெடுத்த கல்லா இருக்கும்! :D  

எதற்கும் அதிகார சின்னங்களான வாள், கேடயம், முடி போன்றவற்றில் இலங்கை அரசு அக்கறை காட்டும். இது மிதிகல்லாக பாவிக்கப்ட்டது. இதை யாரவது இலங்கை அரசை வாங்கும் படி நிர்ப்பந்திக்கலாம் என்பதால் அவர்கள் இது பொய்க்கல்லு என்றுவிடுவார்கள். :unsure:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யார் வாங்கினாலும் எமக்கு எப்பயனும் இருக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.