Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் நிலையை நாடிபிடித்துப் பார்க்கப் போகிறாராம் பீரிஸ் – கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GL.peris-12.jpg

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று புதுடெல்லி செல்லவுள்ள நிலையில், இந்தியாவின் நிலையை நாடிபிடித்துப் பார்க்க இந்தப் பயணத்தை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 

இந்திய - சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பிற்பகல் புதுடெல்லி செல்கிறார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தைச் சந்தித்துப் பேசவுள்ள அவர், வரும் புதன்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்ப்புகளின் மூலம் இந்தியாவின் நிலையை நாடி பிடித்துப் பார்க்க முடியும் என்று ராஜபக்ச அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. 

இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கான ஆதரவு நாடுகளின் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கியுள்ள சிறிலங்காவுக்கு, இந்தச் சந்திப்புகளின் பின்னர், இந்தியாவை அதில் உள்ளடக்கலாமா என்று தெரிந்து விடும். 

கடந்தமுறை சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தபோது, சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்ற ரஸ்யாவும், சீனாவும் இப்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130121107637

இதயத்துடிப்பை பார்க்கவேண்டும். ஆனால், இதயம் சீனாவில் உள்ளதே  :D 

யாருக்காவது இலஞ்சம் குடுத்து திசை திருப்ப போகிறார்.

 

அதுதான் சரியான வசனம். அவர் யாரின் நாடித்துடிப்பையும் அறியவேண்டியதில்லை. அது அவர்களுக்கு தெரிந்ததே. காங்கிரஸ் பதவியில் இருக்கும் வரை இந்தியா லஞ்சம் என்ற மயக்க மருந்தால் செத்த மாடு. அதனால் வெளியுலக நடப்புகளுக்கு பிரதிபலிப்பு காட்ட முடியாது.அவர் இன்னொரு டோஸ் கொடுத்து கூட்டத்தொடர் நேரம் மயக்கத்தை நிச்சயம் செய்ய என்று போகிறார்.

 

அமெரிக்கா திருகோணமலை துறைமுகத்தை பிடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்காவை பிரேரணை நேரம் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் இவர் இந்தியாவில் வைக்கப்போகும் வாதம். இந்தியாவுக்கு அமெரிக்கப் பயம் ஊட்டுவதால் மட்டுமே புதிய பிரேரணையை வலுவிழக்க செய்யலாம். 

 

இலங்கையிலும் நிலவரங்கள் வேறு. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும், கனடாவையும் தவிர அமெரிக்கா, நோர்வே, அவுஸ்திரேலியாவால் இலங்கையின் தில்லுமுல்லுகளை இனம் கண்டறிய முடியவில்லை. இவர்கள் அரசியல் காரணங்களுக்குகாக இலங்கையுடன் மெத்தப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இலங்கை இன்று அல்லது நாளை முடியாட்சி நாடாக தன்னைத்தான் அறிவித்தால் அதன் பிரதான பாகம் தமிழர் மீது வஞ்சம் தீர்க்க முயன்ற சோனியா முசோலினியிற்கும், பேராசையால் அலைந்த அமெரிக்க இராஜதந்திரி ரொபேட் பிளேக்கும் தான் போகும்.

 

மகிந்தா போரை வெல்ல முடியாது என்று கணக்கு பார்த்துதான் புலிகள் இலங்கை தேர்தலில் பங்குபற்றாக்கொள்கையை தொடந்து கடைப்பிடித்தார்கள். போரை வெல்ல வைத்து மகிந்தாவை அசைக்கமுடியாத மலை உச்சிக்கு இட்டு சென்ரறவர்கள் சோனியாவும் பிளேக்கும் தான். அதிலும் சோனியா வெறிக்கோபத்துடன் வஞ்சமாக நடந்தார். ஊழலால் சூழப்பட்டிருந்த அவரின் அரசில் பின்னால் வரவிருப்பதை எதிவு கூறதக்க ஆலோகர்கள் அவரிடம் இருக்கவில்லை.றைதை மகிந்தா கூட்டம் நன்றாகத்தான் கணக்கு போட்டது.

 

ஆனால் பிளேக் மிக நன்றாக எல்லாவற்றையும் கணக்கு பார்த்திருந்திருபார். மகிந்தாவும், தனது நண்பனான கோத்தாவும் பதவியில் வந்த பின்னர் நிச்சயமாக பதவியை இறுக்கி பிடிப்பர்கள் என்பதை உணர்ந்திருந்தார். இது அமெரிக்க முதலீடுகளுக்கும், அரசியல் முயற்சிகளுக்கும் இலகுவாகத்தான் இருக்க போகிறது என்று கணக்கு போட்டார். நிச்சயமாக பழைய எகிப்திய, பாகிஸ்தானிய சர்வாதிகாரிகள் அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததை கனவில் எண்ணித்தான்  இலங்கையில் சர்வாதிகாரம் முளைவிட உதவினார். ஆனால் சிங்கள கலாச்சாரத்தின் தன்மை எப்போதுமே வளர்த்த கடா மார்பில் பாய்வதே. அதுதான் இன்று பிரிசு இந்தியா செல்கிறார், இந்தியாவை அமெரிக்காவுக்கு எதிராக திருப்ப. 

ஒபாமா உள்ளேயும், உலக அரங்கிலும் புஸ் அதிகாரிகள் செய்தவை பலவற்றை திருத்த வேண்டும். கிளின்ரன் கால அமெரிக்க-இந்திய  பரஸ்பர நம்பிக்கைகளை திரும்ப கொண்டுவரவேண்டும். அப்போதுதான் இந்த இரு பெரியநாடுகளின் சுண்டெலி எதிரியான இலங்கை, அவர்கள இரண்டுடனும் நண்பனாகவே நடித்து  இரண்டு நாடுகளுக்குமிடையில் கல்லுக்குத்தி, தனது தந்திர அரசியல் முன்னெடுப்புகளை தொடர முடியாமல் போகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வழமையாக ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது கொண்டுவருவதற்கு இருந்தால் சிறிலங்காவில் உள்ள முக்கிய தலைகள் இந்தியாவிற்கு ஓடுவார்கள் அதன் தொடர்ச்சிதான் இதுவும்.
 

 

 

Edited by தமிழரசு

பீரிஸிடம் விசாரிக்க வேண்டும்: வேல்முருகன்
January 21, 2013


டெல்லியில் வர்த்தக உறவு பற்றி பேச வரும் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாடு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை டெல்லிக்கு வருகைதர உள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான வர்த்தக உறவு பற்றிய இரண்டு நாள் மாநாடு போட்டுப் பேசப் போகிறார்களாம்.

 

தமிழ் மக்களுக்கு நீதி கோரி சர்வதேச சமூகமே கரிசனை காட்டி வருகிறது. போர்க் குற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டாகிவிட்டது.

 

http://www.alaikal.com/news/?p=120979

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Worth reading this:(reads like srilanka's PR work) SOUTH ASIA INTELLIGENCE REVIEW

Weekly Assessments & Briefings

Volume 11, No. 29, January 21, 2013

http://satp.org/admin/email/uploaded/srilanka.jpg

http://www.satp.org/satporgtp/sair/index.htm#assessment1

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிலையை நாடிபிடித்துப் பார்க்கப் போகிறாராம் பீரிஸ் – கொழும்பு ஊடகம்

 

ஒண்னும் தெரியாத பாப்பா.. உள்ளாற போன உடன் போட்டாளாம் தாழ்பா..பீரீசு இது ஏதும் தெரியாத பச்சை பிள்ளையாப்பா...ஒரே டமாஸ்தான்..

Hyderabadi%20Dum%20Chicken%20Biryani.jpg

oldmonk_rum.jpg

டிஸ்கி:

நேராக கைதராபாத்து சென்று ஒரு(HCB) கைதராபாத்து சிக்கன் பிரியாணி மற்றும் அங்கிட்டு பக்கத்தில் உள்ள ஒயின்சாப்பில்  தேவையான அளவு ஓல்டு மாங்கு கட்டிங்கு( சரக்கு) வாங்கிட்டு போனால் ஆச்சு.. இதுக்கு போய் என்ன MBBS.. MD ரொக்குதராட்டாம் பல்ஸ் பிடிக்கிறது.. நாடி பிடிக்கிறது... ரெல் ரெல் மீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்னும் தெரியாத பாப்பா.. உள்ளாற போன உடன் போட்டாளாம் தாழ்பா..பீரீசு இது ஏதும் தெரியாத பச்சை பிள்ளையாப்பா...ஒரே டமாஸ்தான்..

Hyderabadi%20Dum%20Chicken%20Biryani.jpg

oldmonk_rum.jpg

டிஸ்கி:

நேராக கைதராபாத்து சென்று ஒரு(HCB) கைதராபாத்து சிக்கன் பிரியாணி மற்றும் அங்கிட்டு பக்கத்தில் உள்ள ஒயின்சாப்பில்  தேவையான அளவு ஓல்டு மாங்கு கட்டிங்கு( சரக்கு) வாங்கிட்டு போனால் ஆச்சு.. இதுக்கு போய் என்ன MBBS.. MD ரொக்குதராட்டாம் பல்ஸ் பிடிக்கிறது.. நாடி பிடிக்கிறது... ரெல் ரெல் மீ

 

அந்தாளின்ர உடல் நிலைமையைப் பார்த்தால் இதை எல்லாம் அடிக்க முடியாது மனந்தாலே (முகந்தாலே)போதும்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.