Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளுடன் ஒரு நிமிடம்

Featured Replies

மக்கள் எதனை விரும்பி படிகின்றார்களோ எதற்கு ஆதரவு இருக்கின்றதோ அது தடைகளை தகர்த்து யாழின் ஊடாக எடுத்து வரப்படும் உங்கள் பார்வையில் குப்பையாக இருப்பது இன்னொருவர் பார்வையில் மாறுபடும் இனினும் அதிகமாக இந்திய மற்றும் தமிழக செய்திகளை நான் எடுத்து வருவேன் பிழம்பு அண்ணா மட்டும் எத்தனயோ பணி சுமைகளுக்கு மத்தியில் அதை செய்துகொண்டு இருக்க முடியாது யாழின் நீண்ட கால உறுப்பினன் என்ற முறையில் எனக்கு யாழின் பரந்து பட்ட வளர்ச்சியே முக்கியம் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு அல்ல

 

இரண்டு விடயங்கள் உள்ளன.

 

1. Quantity - எண்ணிக்கை

2. Quality - தராதரம்

 

எதுவித புலமையும் இல்லாமல் நிர்வாணமாக ஒருவன் நடுச்சந்தியில் நின்றாலும் வேடிக்கை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் வரும். நன்கு கற்ற அறிஞன் ஒருவன் மேடையில் சொற்பொழிவு ஆற்றுவதற்கு ஏறினாலும் மக்கள் கூட்டம் வரும்.

 

வளர்ச்சி என்பது எண்ணிக்கையை அதிகரிப்பதன் வாயிலாக வரக்கூடிய ஒன்று என்றால்... இந்நேரம் ரஷ்யா நாட்டு Hackersதான் வலைத்தளத்தில் அதிக வளர்ச்சியடைந்த ஊடகத்தினராய் விளங்கவேண்டும். நோகாமல் ஓரிடத்திலிருந்து எவ்வாறு Trafficஐ கொண்டுவரலாம் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தராதரமில்லாமல் வெற்று எண்ணிக்கையின் அடிப்படையில் ஓர் வலைத்தளத்தை பிரபலப்படுத்துவதை வளர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை.

 

ஓர் தளத்தில் இருந்து நோகாமல் வெட்டி இன்னோர் தளத்தில் அல்லது தமது வலைப்பூவில் விடயங்களை வெட்டி ஒட்டி தாம் பிரபலமாகமுடியும் என்று பலர் நினைக்கலாம். தளங்களை தராதரம் செய்யும் மற்றும் வரிசைப்படுத்தும்போது குறிப்பாக, உதாரணத்திற்கு Googleபோன்ற கட்டுப்பாட்டு அமைப்புக்கள் தன்னிச்சையாகவே - தானியங்கியாகவே இயங்கும் மென்பொருள் அமைப்புக்கள் மூலம் வெட்டி ஒட்டும் தளங்களை இனங்கண்டு வரிசைப்படுத்தலில் அவற்றை பின்னால் தள்ளுகின்றன (கறுப்பு பட்டியல்போல்). இது ஓர் உதாரணம் மட்டுமே.

 

உங்களுக்கு விருப்பமானதை தாராளமாக வெட்டி ஒட்டுங்கள். ஆனால், அவ்வாறு வெட்டி ஒட்டப்படுவனவெல்லாம் யாழின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுகின்றன என்று கூறுவதற்கு இல்லை. அவை யாழின் வீழ்ச்சிக்கும் வழிகோலியிருக்கலாம், வழிகோல் செய்யலாம்.

 

வேகமாக ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பிரதிசெய்பவர்களை செய்தியாளர்கள் என்று கூறலாம் என்றால் இந்நேரம் பலநூறு மில்லியன் கணக்கான செய்தியாளர்களை உலகெங்கும் காணலாம். அவர்கள் மனிதர்களாகக்கூட இருக்கத்தேவையில்லை. வெறும் கணணியாகவும், மென்பொருட்களாகவும் அமையலாம். சிறியதோர் தெரிவு அமைப்பின் மூலம் (Settings) தானியங்கியாகவே பல்லாயிரம் ஊடகங்களின் செய்திகளை யாழ் இணையத்தில் பிரசுரம் செய்யமுடியும். சில வருடங்களின் முன் யாழிணையத்தில் Newsbot எனும் தானியங்கி உறுப்பினர் புதினம் செய்திகளை ஏககாலத்தில் யாழ் ஊர்ப்புதினம் பகுதியில் பிரசுரம் செய்தது நினைவில் வரக்கூடும்.

 

தடைகளைத்தகர்த்து, உயிரைப்பணயம் வைத்து, உயிரைக்கொடுத்து செய்திகளை வெளிக்கொணர்ந்த, உயிர்வலிகொண்டு எழுதப்பட்ட எத்தனையோ மாபெரும் செய்தியாளர்களின் வரலாறுகள் உள்ளன. தாயகத்திலும் செய்தியாளர்களாக செயற்பட்ட ஒரேயொரு காரணத்திற்காக கொல்லப்பட்ட, வாழ்க்கையை இழந்த, சிறைவாசம் பெற்ற எத்தனையோ பல ஊடகவியலாளர்கள் உள்ளார்கள். இவர்களின் பணிகளையெல்லாம் கொச்சைப்படுத்தும்வகையில் நோகாமல் பொழுதுபோக்கிற்கு அங்குமிங்குமாக செய்திகளை எடுத்து வெட்டி ஒட்டுபவர்களிற்கு பெரிய பட்டங்களைக்கொடுத்து உண்மையான செய்தியாளர்களை இழிவுபடுத்தாதீர்கள்.

 

நீங்கள் யாழின் மூத்த உறுப்பினர், சரி. நீங்கள் ஆரம்பித்த மேற்கண்ட தலைப்பிற்கு யாழின் எத்தனை மூத்த உறுப்பினர்கள் ஆதரவு தருகின்றார்கள்? இங்கு சுய விருப்பு, வெறுப்பு என்பது யாரிடமிருந்து உருவாகின்றது?

 

மீண்டும் கூறுகின்றேன், நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தாரளாமாக இணையுங்கள். எனக்கு தனிப்பட எதுவித இலாபமோ நட்டமோ இல்லை. பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் இணைத்துவந்த பார்த்தது, பிடித்தது, கேட்டது பகுதியை நானும் வாசித்து மகிழ்ந்துள்ளேன். ஆனால், எதுவித ஆய்வுகளின் அடிப்படையுமின்றி எதேச்சையான செயற்பாடுகள் யாழினை வளர்ச்சியடைச்செய்யும் என்று தவறான கற்பிதத்தை நியாயப்படுத்தாதீர்கள். இந்தியச்செய்திகளை இணைத்தால் இணையத்தில் வளர்ச்சிபெறலாம் என்பது ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

 

Cut & Paste சிறு குழந்தையும் செய்யும். ஓர் ஆக்கத்தையோ அல்லது நிதானமாக ஓர் கருத்தையோ சுயமாகச்சிந்தித்து எழுதுவதுதான் பெரியவிடயம்! யாழின் வளர்ச்சிக்கு பிரதானமாகத்தேவையானதும் இதுதான்.

 

நன்றி!

Edited by கரும்பு

  • Replies 58
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உங்கள் நீண்ட பதில் கருத்திற்கு ...... வெறுமனே ஒரு ஓரமா உக்காந்து 5 வருடத்திற்கு ஒரு சுய ஆக்கம் எழுதுவதை விட நான் எப்பொழுதும் சிறு குழந்தையாகவே இருக்க விரும்புறேங்க அதான் உங்க பாஷையில சொல்லுவதனால் நாங்க cut and paste தொடர்ந்து செய்துகிட்டு இருக்கம் நீங்க யாழுக்கு சேவையாற்ற விரும்பினால் தனியாக வெறும் விமர்சனங்களை வைப்பதை விட்டு விட்டு.... உங்கள் சுய ஆக்கங்களை எழுதி போடுங்க இல்லை உங்களுக்கு நேரம் இல்லையா? அபிடியே ஓரமா ஒதுங்கிங்க.

யாழுக்கு பெரும்பாலான மக்கள் வருவதே செய்திக்காக தான் அப்பிடி வார மக்கள் தான் உங்கள் சுய ஆக்கங்களையும் படித்து விட்டு போகின்றார்கள் செய்திகள் யாழில் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் காணமல் போய்விடுவீர்கள்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிரை கொடுத்து ஒரு ஊடகவியலாளன் செய்தி செகரிகின்றான் என்றால் அவனுடைய செய்திகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் மட்டுப்படுத்தாமல் பரந்துபட்டு அந்த செய்தி சென்றடைய வேண்டும் என்று யாழில் செய்திகளை இணைக்கும் எமது செய்தி பிரிவை சேர்ந்தவர்களும் மகத்தான சேவையையே செய்கின்றார்கள் அந்த ஊடகவியலாளர்களின் தியாகத்திற்கு சற்று சளைத்ததல்ல எமது செய்தி பிரிவின் சேவை அந்த வகையில் அவர்களும் ஊடகவியலாளர்களே அவர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே யாழில் செய்தி என்பது தேன் மாதிரி அந்த தேனை பருக வரும் வண்டுகள் தான் கவிதை கட்டுரை கதை என்பவற்றையும் படித்து விட்டு செல்கின்றார்கள்...... யாலும் எத்தனயோ உயிர் அச்சிருத்தல்கள்.....விலை பேசல்கள்..... மிரட்டல்கள் இவற்றுக்கு மத்தியில் தான் இன்றும் இயங்கி கொண்டு இருகின்றது....இவற்றுக்கு காரணமே யாழில் வரும் செய்திகள் தான்.....

தமிழ் ஊடகங்களிலையே America ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவித்து சேவை செய்ததும் செய்திகளை இணைக்க கூடிய எமது உறுப்பினர்களே

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளையும் யாழில் பார்க்கக்கூடியதாக இருப்பது உண்மைதான். எனினும் அண்மைக் காலங்களில் தரமற்ற குப்பைகளை அதிகம் வருவதால் தரமான செய்திகளும் விடயங்களும் பின் தள்ளப்படுகின்றன.

 

மேலும் யாழ் களம் செய்திகளைப் பார்ப்பதற்கு மட்டுமன்றி, செய்திகளைப் பற்றிய கருத்தாடல்களையும் புரிய முன்னுரிமை கொடுக்கின்றது. எனினும் பல செய்திகள் எது வித கருத்துக்களும் இடப்படாமல் உள்ளதைப் பார்க்கும்போது எண்ணிக்கையை விட தரமே முக்கியம் என்பது உறுதியாகின்றது..

 

எனவே தமிழகச் செய்திகள், உலகச் செய்திகளில் முக்கியமானவற்றை இணைப்பதுதான் நல்லது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து கிருபண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு சொல்வதும் உண்மைதான்

 

ஆனால் நாங்கள் யாழ் களம் பற்றி  பேசுகின்றோம்

அதன்படி இங்கு செய்திகளை இணைக்கும் நாலு ஐந்து பேருடைய நேரமும்  சேவையும் பாராட்டப்படவேண்டியவை. த்துடன் இவர்கள் இதைச்செய்வில்லையென்றால் யாழ் இல்லை.   காரணம் வேறு எவரும் செய்யப்போவதில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உலக நடப்பு.. வரிசையில் தமிழகச் செய்திகளுக்கு உபதலைப்பு வழங்கியுள்ள நிர்வாகத்திற்கு நன்றிகள்.

 

அத்தோடு பெட்டகம் திறந்திருக்கிறீங்க.. அங்க என்ன போடுறது..??! :icon_idea::)



எங்கட அம்மம்மாட்ட பெரிய பெட்டகம் இருந்தது ஞாபகம். அதன் சாவியை ஒளிச்சு வைச்சிருப்பா. ஏன்னா அதற்குள் தான் வெள்ளிப் பாத்திரங்கள்.. அரிய... எவர் சில்வர்.. மற்றும்.. பித்தளைப் பாத்திரங்கள்.. விலையுயர்ந்த உடுபுடவைகள்.. நகை.. பணம் உட்பட பொருட்களை பதுக்கி.. வைக்கிறவா. :)

Edited by nedukkalapoovan

உலக நடப்பு.. வரிசையில் தமிழகச் செய்திகளுக்கு உபதலைப்பு வழங்கியுள்ள நிர்வாகத்திற்கு நன்றிகள்.

 

அத்தோடு பெட்டகம் திறந்திருக்கிறீங்க.. அங்க என்ன போடுறது..??! :icon_idea::)

எங்கட அம்மம்மாட்ட பெரிய பெட்டகம் இருந்தது ஞாபகம். அதன் சாவியை ஒளிச்சு வைச்சிருப்பா. ஏன்னா அதற்குள் தான் வெள்ளிப் பாத்திரங்கள்.. அரிய... எவர் சில்வர்.. மற்றும்.. பித்தளைப் பாத்திரங்கள்.. விலையுயர்ந்த உடுபுடவைகள்.. நகை.. பணம் உட்பட பொருட்களை பதுக்கி.. வைக்கிறவா. :)

 

தமிழகச் செய்திகளுக்கு தலைப்பு போட்டாலும் இன்னும் கள உறவுகளுக்கு அறிவிக்கவில்லை. பகுதிகளில் மாற்றங்களைச் செய்த பின் அறிவிப்பம் என்று இருக்கின்றம்.

 

பெட்டகம் பகுதி களஞ்சியத்துக்குள் வருகின்றது. முன்னர் இந்தியத் தேர்தல் தொடர்பான பகுதியில் இருந்த திரிகளை அங்கு நகர்த்துவதற்கு இருக்கும் பகுதி அது. ஏனைய கள உறவுகளுக்கும் அதில் பதிவிட உரிமை இருக்கா இல்லையா என இன்னும் test பண்ணவில்லை.

இங்கு சிறிதே மாறுபடுகிறேன்.

நீங்கள் இந்திய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதிந்தால் ஈழத்தின் அவலங்கள், செய்திகள் அனைத்தும் தமிழகத்திற்கு சரிவர சென்றடையாத சூழல் உருவாகும். தமிழக தமிழர்களுக்கு செய்திகளை அறிய, ஆயிரம் வழிமுறைகள் உண்டு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு...?

பதியுங்கள்..ஆனால் தேனில் குழைத்துத் தரும் மருந்தாக ஈழத்தின் செய்திகளை அவசியம் புகுத்திப் பரப்புங்கள்.

இல்லையெனில், பிழைக்கப்போன தமிழர்களுக்கு, இலங்கையில் தனிநாடு தேவையாயென பலரும் 'பேக்கு'களாக இங்கே 'ஞே'யென முழித்துகொண்டிருப்போம்... !

 

தேவையா?

 

தமிழ் நாட்டு வாசகர்களை அதிகம் நாம் பெற்றால் எமது செய்திகள் அவர்களை சென்றடையும்  ஆகவே நானும் இதை வரவேற்கிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.