Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவை குறி வைக்கும் எமது ஏவுகணை : வடகொரியா

Featured Replies

வட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின் கவனத்தைச் சமநிலையில் கையாள வேண்டுமென அவர் தெரிவித்தார்.

 

ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அறிக்கை வெளியிடுகையில், பாதுகாப்பவையின் புதிய தீர்மானம் வரவேற்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை மற்றும் நிதான அமைதி நிலையை நிலைநிறுத்தும் ஒரே வழிமுறையாக, பேச்சுவார்த்தை இருப்பதாக அவர் கூறினார்.

 

http://tamil.cri.cn/121/2013/01/23/1s124774.htm

 

 

US condemns North Korea nuclear test threat

 

 

 

Edited by akootha

சீனா, வட கொறியா விவகாரத்தில் நடப்பது போல இலங்கை விவகாரத்தில் நடக்கும் சந்தர்ப்பம் இல்லை. இது நீண்ட துர, ஏவுகணைகள், அணு ஆயுதம் சம்பந்தமானவை. சீனா அவற்றை வடகொறியா, தென் கொறியா மீதுதன்னும் பாவிப்பதை விரும்பாது. இதனால் சர்வதேசத்துடன் சேர்ந்து அத்தகைய தடைக்களுக்கு ஆதரவு அளிக்கும்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவை குறி வைக்கும் எமது ஏவுகணை : வடகொரியா

 

பசுபிக் சமுத்திரத்திலும், கொரிய குடா பகுதியிலும் தற்போது பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இருந்து கொங் லீ தெரிவித்துள்ளார்.

 

நேற்று முன்தினம் ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த பின்னர் வட கொரியா நேரடியாக அமெரிக்காவிற்கு எதிராக தனது எதிர்ப்பை இன்று தெட்டத் தெளிவாகவே திசை திருப்பியுள்ளது.

 

வடகொரியா தன்னுடைய மூன்றாவது நீண்ட தூர ஏவுகணையை ஏவப்போவதாக அறிவித்துள்ளது, அணு குண்டு தாங்கி நீண்ட தூரம் பறக்கும் இந்த ஏவுகணை அமெரிக்காவை நோக்கி குறி வைக்கப்படும் என்றம் வட கொரியா தெரிவித்துள்ளது.

 

இனிமேலும் ஒளிவு மறைவாக பேச தம்மிடம் எதுவும் கிடையாது என்று தெரிவித்த வடகொரிய படைத்துறை அமைச்சர் அமெரிக்காவை நோக்கி தமது நீண்ட தூர ஏவுகணைகள் திருப்பப்படும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு செய்தித்தாபனம் கே.சி.என்.ஏ அறிவித்தது.

 

வடகொரியாவின் இந்த முயற்சி பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியதோடு, இன்று வியாழன் காலை ஆசிய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சிகயையும் ஏற்படுத்தியது.

 

இதுவரை தென் கொரியாவை எதிரிபோல காட்டிவந்த வடகொரியா இப்போது தனது நேரடி எதிரி அமெரிக்காவே என்று அறிவித்திருப்பது, அதனுடைய நட்பு நாடான சீனாவுக்கு பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.alaikal.com/news/?p=121129



oba110.jpg



வடகொரியாவின் நண்பர்கள் அந்த நாடு எடுத்த முடிவால் எட்ட நிற்க வேண்டிய நிலை உள்ளதாகவும் சீனா நடுநடுங்கிபடி கூறியுள்ளது.
வடகொரியா இந்த முடிவுக்கு வெளிப்படையாக வருவதைவிட அதனிடம் இனி வேறு மார்க்கங்களும் இருக்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது.


காரணம் ஐ.நா பாதுகாப்பு சபை ஏறத்தாழ ஈராக்கில் சதாம் உசேனுக்கு, எகிப்திய கொஸ்னி முபாரக்கிற்கு, லிபிய கடாபிக்கு விதித்த தடையைப் போன்ற ஆபத்தான தடைகளை வட கொரியா மீதும் ஈவு இரக்கமின்றி அமல் செய்துள்ளது.

 

பாதுகாப்பு சபை தீர்மானத்தின்படி முதலாவது வட கொரிய தலைவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு, இவர்கள் வேறெந்த நாட்டு விமான நிலையங்களிலும் இறங்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

 

அதேவேளை வட கொரியாவிற்கு வருமானம் தரும் நிறுவனங்களின் வெளிநாட்டு சொத்துக்கள் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் முடக்கப்பட்டு, உறைய வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

 

இதனால் ஐ.நாவை பகைத்து மற்றய நாடுகள் எதுவும் வடகொரியாவை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்த அபாயமான நிலையில் வடகொரியா நீண்ட தூர ஏவுகணையையும், அணு குண்டு வெடிப்பையும் நடாத்துவதைத் தவிர அதற்கு வேறு வழி கிடையாது.
மேலும் தென் கெரியரான பான்கி மூனை செயலராகக் கொண்ட ஐ.நா வை வடகொரியா ஒரு பொருட்டாக மதிக்க வேண்டிய யாதொரு முகாந்திரமும் இனிக் கிடையாது என்று வட கொரிய ஆய்வாளர் கூறுகிறார்கள்.

 

அமெரிக்கா தனது உள்நாட்டு பொருளாதார நெருக்கடியை மட்டும் பார்த்துக் கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என்ற தகவல் ஒபாமா பதவியெடுத்த மறுநாளே வெள்ளை மாளிகையின் சுவரில் மோதியிருக்கிறது.

 

பிரான்ஸ் ஆபிரிக்காவில் சிக்குண்டு போக அமெரிக்கா பசுபிக்கில் குதிக்க வேண்டிய நிலை மேலை நாட்டு படைகளை பிளவுபடுத்தும் அபாயம் கொண்டது.

 

இரண்டு உலகப் போர்களில் ஒன்றாக செயற்பட்ட நேசநாட்டு அணி போல ஓர் அணியை ஏற்படுத்த இயலாத நிலையை புதிய தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது.

 

 



northko2.jpg

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.nytimes.com/2013/01/25/world/asia/north-korea-vows-nuclear-test-as-threats-intensify.html?_r=0

 

அமெரிக்கர்களின் கருத்தை பார்க்கும் போது வடகொரியாவுடன் பேச வேண்டும் என்கிறார்கள். யப்பான்,தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அணு ஆயுதங்களை செயற்படுத்த அமெரிக்க ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் அமெரிக்காவின் தலையில் அணுக்குண்டு விழும்போது அமெரிக்கா யோசிக்கும் என்கிறார்.சண்டியர்கள் மட்டும்  வடகொரியாவை போட்டு தாக்க வேண்டும் என்கிறார்கள்.

  • தொடங்கியவர்

அமேரிக்கா வட கொரியா விடயத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பான் சார்ந்தே முடிவுகளை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

 

 

அதேவேளை வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அளவிற்கு ஏவும் நிலைக்கு வந்துவிட்டது போலுள்ளது.எனவே பேசித்தான் ஆகவேண்டும்  :icon_idea: 

 

 

  • தொடங்கியவர்

அணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்

 

கொரிய மத்திய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வட கொரியாவுடன் தொடர்பான ஐ•நா பாதுகாப்பவையின் தீர்மானத்துக்கு வட கொரியத் தேசிய பாதுகாப்புக் கமிட்டி 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா, மேலும் உயர்நிலை அணு ஆற்றல் சோதனையை மேற்கொள்வதாகவும், நாட்டு சுய நிர்ணய உரிமையை உறுதியாகப் பாதுகாக்கப் போராடுவதாகவும் இவ்வறிக்கை சுட்டிகாட்டியது.


மேலும், ஐ•நா பாதுகாப்பவைக்கு நியாயம் மற்றும் தனது சமத்துவத் தன்மையை இழந்துள்ளதால், இல்லாததால், 6 தரப்புப் பேச்சுவார்த்தை மற்றும் செப்டம்பர் 19 பொது அறிக்கையை வட கொரியா கடைப்பிடிக்க போவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.cri.cn/121/2013/01/24/1s124820.htm

  • கருத்துக்கள உறவுகள்

சீனா பிள்ளையையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது.

  • தொடங்கியவர்

வட கொரியாவின் அணுச் சோதனை பற்றிய அமெரிக்காவின் கருத்து

 

மூன்றாவது முறை அணுச் சோதனை மேற்கொள்வதற்காக வட கொரியா அறிவித்துள்ளதற்கு, அமெரிக்க 24-ஆம் நாள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


வடகொரியாவின் திட்டம், தேவையில்லாத ஆத்திர மூட்டலாகும். இதனால், வட கொரியா சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும்.  வெள்ளை மாளிக்கையின் செய்தித்தொடர்பாளர் Jay Carney அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவத் தரப்பு, இந்நிகழ்ச்சியின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்துகின்றது. எந்த  ஆத்திரமூட்டலையும் பன்முகங்களிலும் சமாளிக்க அமெரிக்கா தயாராகியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Leon Panetta உறுதியாகக் கூறினார்.

 

http://tamil.cri.cn/121/2013/01/25/61s124836.htm

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டே இருக்காமல் யாராவது  தொடங்குங்கோ   எங்களுக்கு  கதை கேட்டு போரடிக்குது 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு அடிக்கும்போது பிரான்சுக்கு மேலால போகாதமாதிரி மற்றப்பக்கத்தாலை அடியுங்கோடாப்பா...உங்கட கொரியசாமானுவளை நம்பேலா..இடைவளியில மக்கராகி எங்களுக்கு மேலயும் விழுந்துதுலைச்சிடும்... :(

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா.. ஒருத்தனை ஒருத்தன் அடிச்சு சாவுங்கப்பா.. பூமியில் மக்கள் தொகை பாரம் குறையட்டும்... எவ்வளவு கிரவுடு..? :rolleyes:

அமெரிக்காவுக்கு அடிக்கும்போது பிரான்சுக்கு மேலால போகாதமாதிரி மற்றப்பக்கத்தாலை அடியுங்கோடாப்பா...உங்கட கொரியசாமானுவளை நம்பேலா..இடைவளியில மக்கராகி எங்களுக்கு மேலயும் விழுந்துதுலைச்சிடும்... :(

 

கொரியாக்கு கடல் தாண்டினால் அமெரிக்கா எனும் நிலையில் ஜப்பான் காரன் தான் தங்கள் நாட்டில் விழுந்து விடுமோ என்று கவலைப்பட வேண்டும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி........வடகொரியா என்ன கோதாரிக்கு அமெரிக்காவோடை சண்டித்தனம் காட்டுது? என்ன பிரச்சனை? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
தென் கொரியாவில் அமெரிக்காவின் துருப்புக்களை வைத்துக்கொண்டு தமக்கு வெருட்டல் விடும் அமெரிக்கா.
 
தாம் அணு ஆயுதம் செய்வதை காரணம் காட்டி பொருளாதார தடையை வடகொரியா மீது அமெரிக்கா ச்செய்வது தமது மக்களை பட்டினி போட்டு கொல்வது என்பன அமெரிக்கா மீதான ஆத்திரத்தை வடகொரியாவுக்கு கொடுத்துள்ளது.
 
நிச்சயமாக சீனாவின் தூண்டுதலும் இருக்கும் என்றும் நம்பலாம்.
  • தொடங்கியவர்

வட கொரியா நாட்டின் வரைபடத்தை கூகிள் இன்று வெளியிட்டது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.