Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் சரியானதே - இராணுவம்:-
 
24 ஜனவரி 2013
 
தெற்கைப் போன்றே வடக்கிலும் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் –கோதபாய
 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் சரியானதே என இராணுவம் அறிவித்துள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இராணுவம் நடத்திய விசாரணை அறிக்iகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இராணுவ உயர் அதிகாரிகளினால் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
 
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது.
 
சர்வதேச சமூகத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான இராணுவ விசாரணை அறிக்கை இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இறைமையுடைய நாடு என்ற ரீதியில் பௌதீக ஒருமைப்பாட்டையும், தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை சட்டவிரோதமாகக் கருத முடியாது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சகலவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி பொது மக்களை படையினர் மீட்டெடுத்தாகத் தெரிவித்துள்ளார்.
 
30 ஆண்டுகளாக 20 மில்லியன் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் படையினர் மேற்கொண்ட யுத்தம் நியாயமானது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
யுத்த வலயத்தில் பொதுமக்கள் இழப்புக்களை சூன்யமாக பேணுவதற்கும், மனித உரிமைகளை நிலைநாட்டவும் படையினர் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தெற்கைப் போன்றே வடக்கிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் –கோதபாய ராஜபக்ஷ
 
தெற்கைப் போன்றே வடக்கிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்றே வடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைப் படையினர் இந்த நாட்டில் முகாம்களை அமைத்து இயங்குவதில் தவறில்லை எனவும், வேறும் நாடுகளில் முகாம்களை அமைத்தால்தான் அது பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கிலும் படையினர் முகாம்களை அமைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கு மாகாணத்திலும் காவல்துறையினரே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
அவசர நிலைமைகளின் போதே இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்த நிறைவின் பின்னர் வடக்கில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மூவாயிரம் இராணுவத்தினரை காணவில்லை: கைவிரிக்கும் கோத்தாபய
January 24, 2013, 4:50 pm|views: 273
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோர் தொடர்பில் இந்தியாவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
 
இதன்போது, காணாமல் போனோர் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
 
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். 
 
எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
யுத்தம் இடம்பெறும் நாடொன்றில் காணாமல் போதல், உயிரிழத்தல், காயமடைதல் என்பவை சாதாரணமானவை. 
 
கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் காரணமாக இராணுவத்தைச் சேர்ந்த மூவாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரையில் தெரியாது.
 
இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற இறுதி இரண்டரை வருட காலப்பகுதியில் இராணுவத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனமுற்றுள்ளனர் என கோத்தாபய தெரிவித்துள்ளார்.
 
இறுதி யுத்தத்தின் போது இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்களை முதலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய வைத்தியசாலைகளுமே பொறுப்பேற்றன. அவையே பின்னர் அம்மக்களை பாதுகாப்பு தரப்பினரிடம் அழைத்து வந்தன. இவ்வாறு பாதுகாப்பு தரப்பினரிடம் அழைத்து வரப்பட்டவர்கள் பதியப்பட்டே பொறுப்பேற்கப்பட்டனர்.
 
இராணுவத்தினரிடம் பதிவு செய்யப்பட்ட எவரும் இதுவரையில் காணாமல் போகவில்லை. அவ்வாறு காணாமல் போயிருப்பார்களாயின் அது இந்திய வைத்தியசாலைகளிடமோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ சரணடைந்த போதோ அல்லது அதற்கு முன்னரோ காணாமல் போயிருக்க வேண்டும் என கோத்தாபய மேலும் அங்கு தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

60(1766).jpg

-மேனகா மூக்காண்டி 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட 'இராணுவ விசாரணைச் சபை'யின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. 


பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் சாராம்சம் பின்வருமாறு, 

(அ). இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு சகல முன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இராணுவம் முன்னெடுத்திருந்தது என சபை கண்டறிந்துள்ளது. 

இழப்புக்களை இன்னும் குறைப்பதற்கு காலாட்படை உபாயங்கள், விசேட இராணுவ நடவடிக்கைகள், ஷெல் தாக்குதல்கள், கவச வாகனப் பயன்பாடு, கூட்டுப்படை நடவடிக்கை போன்ற இராணுவ செயற்பாடுகளை நகர்ப்புற போர்க்களம் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

(ஆ). நவீன முறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கருவிகள் என்பவற்றை அடக்கியுள்ள கூட்டுப்படை இராணுவ உபாயங்களை வடிவமைக்க வேண்டும்.
 
(இ). உள்நாட்டுப் போரில் பிரயோகிக்கக் கூடிய சர்வதேச மனிதாபிமான சட்டக் கொள்கைகள், பல்வேறு சிக்கிலான பிரச்சினைகளுக்கு போதுமான தீர்வுகளை தரவில்லை என சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், உள்நாட்டு யுத்த நிலைமையில் சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் நடிபங்கு தொடர்பில் குறிப்பான வழிகாட்டல்கள் இதில் இல்லை எனவும் எனவே, உள்நாட்டு யுத்த நிலைமைகளை அடக்கும் வகையில் புதிய உள்நாட்டு சட்டங்களை உருவாக்க வேண்டும்.

(ஈ). 30 வருட யுத்தத்தின் போது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியின்மை காரணமாக இலங்கை இராணுவம் பாதகமான நிலையில் காணப்பட்டது. எனவே, ஆயுத படையினர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் வகையில் இவற்கற்பிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

(உ). யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கும் வலுவிழந்துபோன வீரர்களுக்கும் நலன்புரி சேவைகளை வழங்கும் பொறிமுறை இப்போதும் காணப்படுகின்றது என்பதை சபை கவனத்தில் கொண்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ளது போன்று இராணுவ தலைமையகத்தில் முன்னாள் இராணுவ வீரர் அலுவல்களுக்கென தனியான பணியகம் அமைக்கப்பட வேண்டும். 

(ஊ). சில நாடுகளின் உள்நாட்டு அமைச்சின் கீழோ அல்லது மாகாண நிர்வாகங்களின் கீழோ பொலிஸ் உள்ளது. அங்கு உள்நாட்டு அமைதி பெருமளவில் இல்லை. இலங்கை பொலிஸானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரவேண்டும். 
 
(எ). தீவின் எந்தப் பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைக்கும் உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது. என்பதை சபை ஏற்றுக்கொள்கின்றது. 

வடக்கு மற்றும் கிழக்கில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, கிழக்கு) அமைக்கப்பட்டுள்ள 5 பாதுகாப்புப்படை தலைமையகங்களை அடக்கும் வகையில் விசேட சபைகள் அமைக்கப்பட வேண்டும். இவை, இராணுவம் தற்போது பிடித்து வைத்திருக்கும் நிலங்கள் பற்றி ஆராய்ந்து பாதுகாப்புக்கு அவசியமென கருதப்படும் நிலங்களை மட்டும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும். 

இந்த நிலங்களுக்கான நட்டஈடு, சந்தை விலையில் வழங்கப்பட வேண்டும். அத்துடன், காணி உரிமையாளர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/57677-2013-01-24-15-10-23.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை, வாசிக்க, வாசிக்கப் புல்லரிக்குதே! :o

தமிழர் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்ற போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ராணுவம் நிராகரித்து விட்டது.

 

இந்தத் தலைப்பு சரியா?

 

என்ன திருகுதாளமோ தெரியாது.  தேவைப்படும் போது இதை அரசு LLRC அறிக்கைக்கு திருத்தமாக பயன் படுத்தும். அதாவது LLRC கூறிய மாதிரி இல்லாமல் இராணுவம் பிழை ஒன்றும் விடவில்லை என்பது.

 

இராணுவ விசாரணை LLRC பரிந்துரைகளின் படியோ அல்லது 2011 மார்ச் ஐ.நா பிரேரணையின் கீழோ வரவில்லை.

 

அரசு இந்த அறிக்கையை மார்சில் ஐ.நா வுக்கு தரும்.(ஏற்கனவே ஐ.நாவுக்கு பதிலாக அளிக்கப்பட்டிருக்கும்).  இதை அவர்கள் ஏற்றால் மார்சில் அதிகார பூரவமாக கையளிக்கப்படும். அவர்கள் நிராகரித்தால் தாங்கள் இனித்தான் கமிசன் அமைத்து விசாரிக்க வேண்டும், ஆகவே முன்னர் அமெரிக்காவுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளவாறு ஐந்து வருடங்கள் அவகாசம் வேண்டும் என்று தவணை கேட்ப்பார்கள்.

 

எந்த உள்நாட்டு, வெளிநாட்டு விசாரணையும், குறந்த பட்டசம், ஐ.நாவின் உள்ளக அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஐ.நா தொடரணிகள் மீது 2008 மார்கழி-2009 தை, மாசி மாதங்களில் நடத்திய தாக்குதல் பற்றிய விபரமான வருணனைக்கு பதில் அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.  அதை சர்வதேச நாடுகள் கேட்க வேண்டும். ஐ.நாவின் உணவு வினியோக ஒப்பந்தகாரர்கள் நட ஈடுபெறத்தக்களவு விபரத்திற்கு விசாரணை இருக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.