Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த அரசுக்கு 2015இல் முற்றுப்புள்ளி வைக்க ஒபாமா நிர்வாகம் சதி! - அமைச்சர் விமல் வீரவன்ச கூக்குரல்!!

Featured Replies

மஹிந்த அரசுக்கு 2015இல் முற்றுப்புள்ளி வைக்க ஒபாமா நிர்வாகம் சதி! - அமைச்சர் விமல் வீரவன்ச கூக்குரல்!!

 

'ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்து, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட முடியாதவாறு தடுத்து நிறுத்தி, இந்த அரசை இல்லாமல் செய்வதற்கே ஒபாமாவின் பிரதிநிதிகள் திட்டம் தீட்டி வருகின்றனர்.'

இவ்வாறு தெரிவித்தார் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ.

அமைச்சர் விமல் வீரவன்ஸ நேற்றுப் புதன்கிழமை கல்கிஸையில்  வீடமைப்புத் திட்டமொன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:

பராக் ஒபாமாவின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகின்றனர். இலங்கையில் நீதி சட்டம் குலைந்து போயுள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு அங்கு நித்திரை கொள்ள முடியவில்லையாம். இலங்கை வரும் பிரதிநிதிகளிடம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை சாட்சி சொல்ல வைப்பதற்கு இங்குள்ள சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் சில முகவர்களும் முயற்சிக்கின்றனர்.

ஷிராணி பண்டாரநாயக்க குற்றம் இழைத்தவர். அவர் நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள்மூலம் பதவி நீக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைத் தீர்மானத்தை நிறைவேற சாட்சிக்காரராகவும் பாவித்தார்கள். அவர் இலங்கைக்கு எதிராகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு  எதிராகவும் இலங்கை ஊடகங்களில் தெரிவித்த கருத்தே சில வெளிநாட்டு சக்திகளுக்கு சாட்சியாக அமைந்தன.

மேலும் இலங்கைக்கு எதிராக வேண்டுமென்று யுத்தக்குற்றப் பழிசுமத்தி ஐ.நா. மனித உரிமையிலும் நிறைவேற்றினார்கள். இத்திட்டத்திற்கு சில வெளிநாடுகளில் உள்ள வெள்ளைப் புலிகளும் அந்த நாட்டில் வாழும் இலங்கைப் புலிகளும் மிகவும் பிரயத்தனம் செய்துவருகின்றன.

பின்லேடனைப் பிடிப்பது எவ்வாறு? பின்லேடன் பாகிஸ்தானில் உள்ளார் என அமெரிக்காவின் இரகசியத் துப்பு தேடுபவர்கள் பாகிஸ்தானுக்குள் உட்புகுந்தனர். அதன்பின் பாகிஸ்தான் முழுவதிலும் பின்லேடனைப் பிடிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர்.

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்து அதனை முழு நாட்டுக்கும் அமுல்படுத்தும் திட்டத்தின் கீழ் செயற்பட்டனர். அதன் பின்னர் பாகிஸ்தான் வாழும் மனிதர்களிடையே ஒரு பயங்கரத் தொற்றுநோய் பரவியுள்ளதாக செயற்படத் தொடங்கினர்.

அதனைக் கண்டுபிடிப்பதற்கு பாகிஸ்தானில் வாழும் சகல மக்களுக்கும் நாடு முழுவதிலும் இரத்த பரிசோதனை நடத்தப்படல் வேண்டும் எனச் செயற்பட்டனர். அதற்காக ஒரு கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தினர். அந்த இரத்தப் பரிசோதனைகளை அமெரிக்காவுக்கு கொண்டுசென்றனர்.

அதற்காக பாகிஸ்தான் இரத்தப் பரிசோதக அதிகாரியை அமெரிக்காவுக்கு அழைத்தனர். அவருக்குப் பெரும்தொகைப் பணம் வழங்கினார்கள். அதில் பின்லேடனின் இரத்த பரிசோதனை உள்ளதா எனப் பரிசோதித்தனர். அவர் பாகிஸ்தானில் இருப்பதை உறுதிப்படுத்தினர். அவரது டி.என்.ஏ. இரத்த பரிசோதனை மூலம் அவரது முகவரியையும் கண்டுபிடித்தனர். அமெரிக்கப் படையினர் பின்லேடன் வாழும் வீட்டைச் சுற்றிவளைத்து அவரைப் படுமோசமாகக் கொலைசெய்தனர். இவ்வாறு சதித்திட்டங்களைச் செயற்படுத்துபவர்கள்தான் அமெரிக்கர்கள்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் இவ்வாறே பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பர்னாட் குவான்கர் எனும் இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களைக்கூட கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க முற்பட்டனர். அத்தருணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்புக்கு வெளியே சென்று எம்பிலிப்பிட்டியவில் தங்கிநின்று அவர்களை அங்கு அழைத்துவரும்படி  உத்தரவிட்டிருந்தார்.

அவர்களை திறந்த அரங்கில் ஒரு மரத்திற்குக் கீழ் இருக்கச்சொல்லியே ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து கொழும்புக்கு வழியனுப்பி வைத்தார். அவர்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கும் மேலும் அவர்கள் விதித்த நிர்ப்பந்தங்களுக்கும் ஜனாதிபதி தலைசாய்க்கவில்லை. அந்தச் சம்பவ வடுக்கள் இன்னும் அவர்களது நெஞ்சில் இருந்து அகலவில்லை.

அதுமட்டுமல்ல, அமெரிக்கா சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி மஹிந்த அரசைக் கவிழ்ப்பதற்குப் பெரும் திட்டம் தீட்டி அவருக்குத் தேவையான நிதி ஆலோசனைகளையும் வழங்கினர்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக யோசனைகளைக் கொண்டுவந்து சர்வதேச நீதிமன்றத்தில் அதனைப் பரிசீலிப்பதற்கு சில அதிகாரிகளை நியமித்து, அதனை அமுல்படுத்தி, 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட முடியாதவாறு தடுத்து நிறுத்தி இந்த அரசை இல்லாமல் செய்வதற்கே அமெரிக்காவின் ஒபாமாவின் பிரதிநிதிகள் திட்டம் தீட்டி வருகின்றனர்.

அதன்பின்னர் இந்த நாட்டின் இராணுவத்தினரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது உரையில் தெரிவித்தார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=7ee198be-52e6-4b27-99e9-6a4d4fb35384

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாடன் பிடிபட்ட கதையை இவரைவிட மிக நவீனமாக வேறு ஒருவராலும் சொல்லமுடியாது.  மனுசன் பின்னிற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த அரசுக்கு 2015இல் முற்றுப்புள்ளி வைக்க ஒபாமா நிர்வாகம் சதி! - அமைச்சர் விமல் வீரவன்ச கூக்குரல்!!

இவர் சொல்வது 100% உண்மை 2013 க்குள்ளாற  நீங்க ஆப்பு வைக்க ரெடியாகும் போது 2015 அமெரிக்காரன் கொஞ்சம் தூரம்தாம்...

 

மகிந்த கூட்டம் உடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து
அமெரிக்காற்கான ஏற்றுமதிகளை நிறுத்தவேண்டும்

 

இப்படி விமல் கேட்டு உண்ணாவிரதம் இருக்கலாம்  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.