Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் முதலீடு செய்ய தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு இணையத்தளத்தை முடக்கியவர் அறிவிப்பு

Featured Replies

சிறிலங்கா மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல் – ஒவ்வொன்றாக முடங்கும் அரச இணையங்கள் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 11:20 GMT ] [ தா.அருணாசலம் ]

srilankan-ports-hacked.jpgசிறிலங்கா அரசின் பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம்மிக்க இணையத்தளங்களை முடக்கும் போர் தீவிரமடைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக சிறிலங்கா அரச இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மறைமுகப்போரின் ஒரு கட்டமாக, சிறிலங்கா முதலீட்டுச் சபையின் இணையத்தளம் இன்று முடக்கப்பட்டுள்ளது. 

டவி ஜோன்ஸ் என்ற ஊடுருவல்காரரால், சிறிலங்கா அரசின் இணையத்தளங்களை முடக்கும் போர் நடத்தப்பட்டு வருகிறது. 

சிறிலங்கா முதலீட்டுச்சபையின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 2000 இற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் விபரம் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட அனைத்துமே ஊடுருவல்காரரால், இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

சிறிலங்காவில் முதலீடு செய்ய விரும்பும் எவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும், ஏனென்றால் தானே தற்போது முதலீட்டுத் தரவுகளை கையாள்வதாகவும் இணையத்தளத்தை முடங்கியவர் அதில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் டவி ஜோன்ஸ் எனப்படும் இணைய ஊடுருவல்காரரால், தாமரைத் தடாகம் அரங்கின் இணையமும் முடங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,கடந்த செவ்வாய்க்கிழமை டவி ஜோன்ஸ் இணைய ஊடுருவல்காரரால் சிறிலங்கா துறைமுக அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ரூபவாஹினி தொலைக்காட்சி உள்ளிட்ட இரண்டு அரச தொலைக்காட்சிகளினதும் இணையத்தளங்களும் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையத்தின் இணையத்தளம் ஊடுருவல்காரரால் முடக்கப்பட்டது தெரிந்ததே. 

அதன் பின்னர் அடுத்தடுத்து சிறிலங்கா அரசின் முக்கிய இணையத்தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் சைபர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130125107660

 

 

இப்பொது வெளிச்சம் யார் யாருக்கிடையில் தகராறு என்பது. மேற்கு நாடுகள் வந்து இலங்கையில் முதலிட வேண்டுமாயின் என் கடனை உடனே வட்டியுடன் கட்டு என்பதுதான் பொருள். ....

 

அவளைத்தொடுவானேன். ......

 

 

இதே போல ஒரு காட்சி கந்தன் கருணையில் வீரவாகுதேவர் வள்ளி, தெய்வானைக்கிடையில் படுவதாக வருகிறது

 

 

றைக்கோட்டை அடுத பக்கம் மாற்றிப்போட மார்ச்சுவரையில் எடுக்கும்.

 

 

 

மார்ச்சுவரைக்கும் இணையதளங்கள் நிண்டு பிடிக்க கஸ்ட்டப்பட போகின்றன.......

 

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:

 

ஒரே டமாஸ்தான். அடியுங்கடா ஒருவனை ஒருவன்; பூமி பாரம் குறையட்டும்.( புரட்சியின் பாதை)

:D

 

Edited by மல்லையூரான்

டவி ஜோன்ஸ் என்ற புனைபெயர் ஊடுருவலாளரும் பணத்தை இலக்காக கொண்டுள்ளார் போல்லுள்ளது. அதனால் இவர் அதை அரசிடம் இருந்து பெறும்வரை தாக்கலாம். அரசும் கொடுக்காது. ஆகவே தாக்குதல் தொடரலாம்.

  • தொடங்கியவர்

டவி ஜோன்ஸ் என்ற புனைபெயர் ஊடுருவலாளரும் பணத்தை இலக்காக கொண்டுள்ளார் போல்லுள்ளது. அதனால் இவர் அதை அரசிடம் இருந்து பெறும்வரை தாக்கலாம். அரசும் கொடுக்காது. ஆகவே தாக்குதல் தொடரலாம்.

தாமரைத்தடாகம் என்பது பராகிரமபாகுவின் நினைவில் சீனா இலங்கைகு கட்டிக்கொடுத்த கலை அரங்கம். சகல மென் பொருள்களும் சீனாவிலிருந்தே வந்திருந்திருக்கும்.

 

சீனா ஒளிவு மறைவில்லாமல்த்தான் தனது கையாட்களிடம் இந்த முடக்கல் வேலையை  கையளித்திருக்கிறது.

 

டவ் யோன்ஸ் என்ற அமெரிக்க பங்கு சந்தை கம்பனியின் பெயரை டப்பிங் செய்து பாவிக்கிறார் ஊடுருவல் காரர். இவரின் நோக்கம் மேற்குலக மிரட்டல்களுக்கு பயந்து இலங்கை தனது சீனா சம்பந்தமான கொள்கைகளை மாற்றிவிடாமலிருக்க வேண்டும் என்பதாகும்.

 

தனது நோக்கத்தை தெளிவாக காட்ட தேவையான தளங்களை மட்டும் தெரிவு செய்கிறார்.

 

முதலில் இலங்கையின் பாதுகாப்பு பிரசாரத்தைதான் தகர்த்தார். பின்னர் மற்றைய பிரச்சர தளங்களை தகர்த்தார். இன்று இலங்கையின் பிரச்சார நோகங்களுகெல்லாம் ஆணி வேராக இருக்ககூடிய முதலீட்டு பிரச்சரத்தை தகர்த்துவிட்டார். இது இன்று வரையும் எல்ல தமிழரும் கூடி செய்த புறக்கணி சிறிலனகாவை விட பலம் வாய்ந்த செய்கை.

 

இலங்கை சீனாவிடம் கடன் வாங்கிக்கொண்டு மேற்குநாடுகளின் முதலீடுகளை வைத்து சீனாவுக்கு "பேய் பேய்" சொல்ல முயற்சித்திருக்கு. இதனால் நல்ல பாடம் கற்றிருக்கு. மார்ச் வரைக்கும் இலங்கை தனது இரட்டை முகத்தை காட்டவிடாமலிருக்க சீனா இந்த வழியில் முயற்சிக்கிறது. மேற்குலகம் வரவிருக்கும் பிரேரணையை காட்டி தங்கள் பக்கம் வைத்திருக்க முயல்கின்றன. 

 

மகிந்தா புலியை கிளறிவிட்டு செய்யும் ராஜதந்திரம் இந்த முறை வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால் அவர் அதையும் முயற்சிக்கிறார். வேறு ஏதாவது idea வும் போடுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட!! வெகு சுவாரஸ்யமாக இருக்கிறதே!

 

நடக்கட்டும்!! நடக்கட்டும்!!...

 

 

நல்ல செய்தி.... :D யாழ் கவனம்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Srilankan President Mahinda rajapaksha theatre Lotuspond site hacked

 

The hacker with online handle "Davy jones" has claimed to have hacked the Srilankan President Mahinda rajapaksha theatre Lotuspond website(lotuspond.lk)

The hacker breached the database server and leaked the compromised data in pastebin(pastebin.com/zUZ29Lnd)

The dump contains database details, admin user name , email address and hashed password.

The hacker also claimed to have hacked few Tv channel database and extracted more than 8000 email ids and passwords.(pastebin.com/mHCTDRQW)

Recently, the same hacker breached the server of Sri lankan Port authority website and defaced it.  He also hacked the two famous Sri Lankan Tv Channel websites namely Rupavahini TV and One SriLanka.

 

http://www.ehackingnews.com/2013/01/srilankan-president-mahinda-rajapaksha.html

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்சவையும், குணதாச அமரசேகராவையும், உடனடியாகச் சபைக்கு அழைக்கிறோம்!

 

இறைமை, தன்னாதிக்கம் என்ற வார்த்தைகள் எல்லாம் அடிக்கடி பாவிக்கிற உங்கள், இறைமை இப்போது, அடைவு வைக்கப்பட்டிருக்கின்றது! :D

அண்மைக்காலமாக அமெரிக்க அரசு உட்பட்ட தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தமது மீதான கவனத்தை இவர்கள் ஈர்க்கின்றனர்.

 

பலரும் இலகுவான கடவுச்சொற்களை வைத்திருப்பது, அதாவது தரப்படும் கடவுச்சொல்லையே மாறுவதில்லை,  இவ்வாறான தாக்குதல் செய்பவர்களை கவர்ந்து இழுக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.