Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் பயிற்சிக்குத் தடை; போர்க் குற்றச்சாட்டுகளே காரணம்

Featured Replies

இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச் சாட்டுகளின் எதிரொலியாகவே, அமெரிக்காவில் இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் லெஹி சட்டத்தின் அடிப்படையிலேயே, இலங்கையின் உயர் மட்டப்படை அதிகாரிகளுக்கான கட்டளைப் பயிற்சிநெறி வாய்ப்புக்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்தச் சட்டம், மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய  வெளிநாட்டுப் படையினருக்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளைத் தடைசெய்கிறது.

இந்தச் சட்டத்தின் மூலம் இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்கவும் முடியும். இதனால், அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களின் பெயர்களை மட்டுமே பயிற்சிக்காக தருமாறும் இலங்கை அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, கொழும்பு வந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலகத்தைச் சேர்ந்த பிரதி உதவிச்செயலர்கள் ஜேம்ஸ் மூர், விக்ரம்சிங், ஜேன் சிம்மர்மன் ஆகியோரிடம் பேசவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/News_More.php?id=325551795027345512

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பயங்கரவாதிகள் பல நாடுகளையும் ஏமாற்றி போரில் பங்குகொள்ள வைத்துவிட்டனர். இப்போதுதான் தாங்கள் ஏமாறினது தெரிந்து ஒவ்வொருவராக கழட்டிக் கொள்ளுகினம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பயங்கரவாதிகள் பல நாடுகளையும் ஏமாற்றி போரில் பங்குகொள்ள வைத்துவிட்டனர். இப்போதுதான் தாங்கள் ஏமாறினது தெரிந்து ஒவ்வொருவராக கழட்டிக் கொள்ளுகினம்..! :D

பெரிய அளவிலான செலவிலும் முயற்சியிலும்  USTPAC (United States Tamil People Action Council) என்ற அமைப்பு, செனட்டர் லேஹீ  மூலம் அறிமுகப்படுத்திய சட்ட திருத்தங்கள் காரணமாக இது நடந்திருக்கிறது. ஸ்ரீ லங்கா அரசு இந்த சட்ட திருத்தங்களை "லீஹி சட்டங்கள்" என்று குறிப்பிடுகின்றது.

http://www.ustpac.org/

http://www.leahy.senate.gov/press/statement-on-the-situation-in-sri-lanka

Edited by Jude

அவர்களுக்கு  எனது நன்றிகள்.

பெரிதாக அவர்களை  அறிந்திருக்கவில்லை. அறிமுகப்படுத்தி  கொஞ்சம் எழுத முடிந்தால் பலருக்கும் பிரயோசனமாக இருக்கும்.

நன்றி தங்களது நேரத்திற்கு யூட்.

முயற்சிகள் தொடரட்டும்! செலவீனங்களைக் குறைக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டத்தை தொடர்ந்து மாற்றாமல் .., இதையே தொடர்ந்தால் நலம்....

இந்தச் சட்டத்தின் மூலம் இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்கவும் முடியும். இதனால், அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களின் பெயர்களை மட்டுமே பயிற்சிக்காக தருமாறும் இலங்கை அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அமெரிக்க அரசினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்களின் பெயர்களை தருமாறு கேட்டுள்ளார்களே...முற்றுமுழுதாக பயிற்சி தடைப்படவில்லை என்பதை தான் இவ்வரிகள் காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.