Jump to content

காலம் தான் பதில் சொல்லும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை கேட்காமல்

உன்னைபற்றி நிறையவே

கனவுகள் கண்டுவிட்டேன்

நீ எனக்காக படைக்க பட்டவன்

என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன்

கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்..

சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய்

மறக்க முடியவில்லை அந்த நாட்களை

மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா?

காலம் பதில் சொல்லும்...

கனவுகள் வெறும் கனவுகளாகவே..

போதுமடா நம் உறவு..

வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு

உன்னுடன் பேசும்போதெல்லாம்

உன்னை தொலைத்த வேதனையில்

நான் வாட தயாராய் இல்லை..

சோகத்தை தணிக்க ,

எனக்கு ஏதும் வழி தெரியவில்லை

கண்ணீரை தவிர...

பாவியடா நான்...

எப்படி தனிமையில்

அவற்றை தணிப்பேன்

உன்னை மறந்து விட்டதாக

நண்பர்களிடம் கூறினாலும்

உன்னை பிரிந்த வலி

இன்னும் ரணமாய்...

என் வாழ்க்கை பக்கங்களை

நிரப்பும் போது நீ

துணையாய் இருக்க ஆசைப்பட்டேன்

கடைசியில் தோழி என்ற வார்த்தையுடன்

முற்று பெற்று விட்டாய்

என் பயணமும் நிற்கப்போவதில்லை

பக்கங்களும் குறையப்போவதில்லை

நீ இல்லாத வெற்றிடம் எனக்கு

வெற்றிக்கு வழி வகுக்குமா??

நிச்சயம் காலம் தான் பதில் சொல்லனும் !!!!!

Link to comment
Share on other sites

இதயத்தின்

வலிகளை

எழுத்தில் நீரும்

தருகின்றீர்

கண்களின்

ஈரத்தை

கவிதையின்

மையுமாக்குகின்றீர்

சோகத்தின்

வடுக்களை

உமக்கு

சொந்தமாக்குகின்றீர்

வேதனையின்

வலிகளை இங்கு

எம்முடன்

பகிர்கின்றீர்

தமிழ் எழுத்தை

இங்கு

சங்கமம்

ஆக்குகின்றீர்

உங்கள்

சோகத்தின்

வேள்வியை

இங்கு நடத்துகின்றீர்

என்னையும்

கவி

எழுதத்

தூண்டுகின்றீர்

உம்மை

ஆற்றுப்படுத

தெரியாமல் என்னைத்

தவிக்க வைக்கின்றீர்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் நன்றி நன்றி நண்பனே.........கவியினால் என் கவிக்கு கருத்து தந்தமைக்கு... நண்பனே நீங்கள் ஆறுதல் படுத்த முடியாது தான் ஏன் எனின் என் சோகமது ஆறாத தீராத வடு நண்பனே....உங்கள் விமர்சனங்கள் சில வேளைகளில் என்னை யொசிக்கவும் வைக்கின்றது... நண்பனே நன்றி..

Link to comment
Share on other sites

இலக்கியன் நன்றி நன்றி நண்பனே.........கவியினால் என் கவிக்கு கருத்து தந்தமைக்கு... நண்பனே நீங்கள் ஆறுதல் படுத்த முடியாது தான் ஏன் எனின் என் சோகமது ஆறாத தீராத வடு நண்பனே....உங்கள் விமர்சனங்கள் சில வேளைகளில் என்னை யொசிக்கவும் வைக்கின்றது... நண்பனே நன்றி..

சோகம் தான் வாழ்க்கை அல்ல வாழ்ந்து நீயும்காட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் இலக்கியன் வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்..... நன்றி நண்பனே

Link to comment
Share on other sites

ம்ம்ம் இலக்கியன் வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்..... நன்றி நண்பனே

சோகத்தின்

வடுக்களை

மாற்றுங்கள்

இன்றுதான்

பிறந்தேன் என

நினையுங்கள்

பழமைகளை

மறக்கப்

பாருங்கள்

எதிர்காலத்தை

நோக்கை

நடவுங்கள்

சிந்தையை

நீயும்

தீட்டுங்கள்

இனிய

கவிதைகளை இங்கு

படையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாயமாக நண்பனே நட்புகள் ஆயிரம் என்னை சூழ இருக்கும் போது எனக்கென்ன கவலை...ம்ம்ம் கட்டாயமால யாழில் என் கவிகள் தருவேன்.....என் கவிகள் யாரையும் பாதிக்காது என்ரு எனகு தெரியும் ஏன் என்றால் என் கவிகள் அனைத்தும் என் நிஜங்கள் :)

Link to comment
Share on other sites

கட்டாயமாக நண்பனே நட்புகள் ஆயிரம் என்னை சூழ இருக்கும் போது எனக்கென்ன கவலை...ம்ம்ம் கட்டாயமால யாழில் என் கவிகள் தருவேன்.....என் கவிகள் யாரையும் பாதிக்காது என்ரு எனகு தெரியும் ஏன் என்றால் என் கவிகள் அனைத்தும் என் நிஜங்கள் :lol:

உங்கள் கவிதைகளை பாடுங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் சோகத்தினால் பாதிக்கப்பட்டு பதப்பட்டிருக்கும்போது பிறக்கும் கவிகள் பல. இளவயதுக் காதல் இனிமையானது அதேபோல் தோல்வியும் தாளமுடியாததுதான். வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். வாழ்ந்து காட்டுங்கள்.

உங்களுக்கு புதிய உறவுகள் இப்போது பலர் இருக்கிறார்கள், களத்தில்!

Link to comment
Share on other sites

சோகம் இல்லாமலும் சில கவிகள் தாருங்கள் இலங்கைப் பெண்ணே :P தங்கள் காதலனுடன் இருந்த இனிமையான நினைவுகளைக் கூட இதமாக எமக்கு எடுத்துத் தரலாமல்லவா? கண்ணீரை மட்டும் கள உறவுகள் வாசிப்பதால் கொஞ்சம் உப்புக் கரிக்கின்றது... 8)

Link to comment
Share on other sites

நமக்கு தான் சோகக்கவிதை தொல்லை என்றால் நீங்களும் நல்லாய் எழுதுகின்றீர்கள்.

இனி சோகம் வேண்டாமே. ஒரு சந்தோசமான கவிதை தாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் நன்றி செல்வமுத்து இருக்கின்ற பல உறவுகளோடு நானும் சந்தோசமாக இருக்க முயற்சி செய்கின்றேன் நன்ரி நண்பனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் கௌரிபாலன் உங்கள் வேண்டுதலுக்கு இணங்க நான் கட்டாயம் சந்தோசத்துடன் கவிகள் தருவேன்... நன்றி நண்பனே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் றமா சோகம் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கு என்று சொல்லி கேள்விப்படிருகின்றேன் இப்போ அதை அனுபவித்து உணருகின்றேன் நண்பியே...ம்ம்ம் உங்கள் வேண்டுதலுக்காக நான் சந்தோசமான கவிகள் தருவேன்.... நன்றி நண்பியே

Link to comment
Share on other sites

  • 1 year later...

அருமையான கவிதை...

காதல் நட்பு என்று வியாக்கியானம் பேசுபவர்கள் படிக்க வேண்டிய கவிதை...

உன்னை கேட்காமல்

உன்னைபற்றி நிறையவே

கனவுகள் கண்டுவிட்டேன்

நீ எனக்காக படைக்க பட்டவன்

என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன்

கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்..

சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய்

மறக்க முடியவில்லை அந்த நாட்களை

மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா?

காலம் பதில் சொல்லும்...

கனவுகள் வெறும் கனவுகளாகவே..

போதுமடா நம் உறவு..

வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு

உன்னுடன் பேசும்போதெல்லாம்

உன்னை தொலைத்த வேதனையில்

நான் வாட தயாராய் இல்லை..

சோகத்தை தணிக்க ,

எனக்கு ஏதும் வழி தெரியவில்லை

கண்ணீரை தவிர...

பாவியடா நான்...

எப்படி தனிமையில்

அவற்றை தணிப்பேன்

உன்னை மறந்து விட்டதாக

நண்பர்களிடம் கூறினாலும்

உன்னை பிரிந்த வலி

இன்னும் ரணமாய்...

என் வாழ்க்கை பக்கங்களை

நிரப்பும் போது நீ

துணையாய் இருக்க ஆசைப்பட்டேன்

கடைசியில் தோழி என்ற வார்த்தையுடன்

முற்று பெற்று விட்டாய்

என் பயணமும் நிற்கப்போவதில்லை

பக்கங்களும் குறையப்போவதில்லை

நீ இல்லாத வெற்றிடம் எனக்கு

வெற்றிக்கு வழி வகுக்குமா??

நிச்சயம் காலம் தான் பதில் சொல்லனும் !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கலைஞன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.