Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகிரி மீது பிரதமர் அதிருப்தி ?

Featured Replies

முக்கிய நேரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்காமல் இருக்கும் செயலுக்கு மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

 

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், மாதத்தின் பெரும்பாலான நாள்களை மதுரையில் கழிப்பதை மு.க. அழகிரி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அங்கிருந்தபடி அமைச்சகத்தின் அலுவல் பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.


இணை அமைச்சர் மூலம் பணிகள்: அவரது துறையில் கேபினட் அமைச்சர் மேற்கொள்ள வேண்டிய பெரும்பாலான பணிகளை மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா நிறைவேற்றி வருகிறார். இதனால், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைகளில் கேபினட் அமைச்சராக அழகிரி பெயரளவுக்குத்தான் செயல்படுகிறார் என்று பரவலாக மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இந்த நிலையில், தமிழகம் சார்ந்த சில பிரச்னைகளை மத்திய அமைச்சரவையோ, அமைச்சர்கள் குழுவோ விவாதிக்கும்போது அவற்றில் பங்கேற்பதை அழகிரி தவிர்க்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

அழகிரி இல்லை: தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரம் தொடர்பாக அலுவல் பூர்வமற்ற முறையில் பேசலாம்' என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

 

அப்போது அவர்களிடம், ""தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நீங்கலாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோர் இல்லை. எனவே, இந்தப்  பிரச்னை குறித்து பின்னர் விவாதிக்கலாம்'' என்று பிரதமர் கூறியதாகத் தெரிகிறது.


"ஹிந்து' நாளிதழ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாததைப் பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்து விட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.


பிரதமர் அதிருப்தி: ஆனால், மு.க. அழகிரி தலைநகரிலேயே இல்லை என்ற தகவலை பிரதமரிடம் அவரது அலுவலக அதிகாரிகள் கூறினர்.  இதைக் கேட்டதும், ""முக்கியமான நேரத்தில் நடைபெறும் கூட்டங்களில் மத்திய அமைச்சராக இருப்பவர் தில்லியில் இருப்பதைத் தவிர்ப்பது துரதிருஷ்டவசமானது'' என மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

 

"காவிரிப் பிரச்னை தொடர்பாக கடந்த மாதங்களில் தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் பேச நினைத்துள்ளார். அப்போதும் மு.க. அழகிரி தலைநகரில் இல்லாததால், அந்த முயற்சியைப் பிரதமர் கைவிட்டார். இல்லையென்றால் கடந்த சில மாதங்களாக அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிடும் விவகாரத்தில் மத்திய அரசு இந்நேரம் ஒரு முடிவை எடுத்திருக்கும்' என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


சேது திட்டம்: காவிரி விவகாரம் மட்டுமின்றி சேது சமுத்திர கால்வாய் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்காமல் இருப்பதற்கும் அழகிரியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

 

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டுவரை சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன் அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


அந்த அறிக்கையில், ""மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவது பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியமில்லை'' என்று கூறப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, பச்சௌரி குழு அறிக்கை மீது முடிவு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அப்போதே இரண்டு மாத அவகாசம் வழங்கியிருந்தது. இந்த கால கட்டத்தில், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டார். ஆனால், அந்த நேரத்திலும் மு.க. அழகிரி தில்லியில் இல்லை. பல்வேறு சொந்தப் பிரச்னைகளால் அவர் தில்லி வரவில்லை என்று அப்போது கூறப்பட்டது.


இதையடுத்து, கடந்த செப்டம்பரில் சேதுத் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் தனது நிலையைத் தெரிவிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியது. இதனால், மேலும் இரண்டு மாதங்களுக்கு அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன் பிறகும் சேதுத் திட்டம் குறித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அழகிரி இடம்பெறும்போது ஆலோசிக்கலாம் என்று பிரதமர் கருதினார். ஆனால், அவரது எண்ணம் ஈடேறவில்லை. இது போன்ற நடவடிக்கைகளால்தான் அழகிரி மீது பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

http://dinamani.com/tamilnadu/article1444915.ece

மொத்தத்தில் அழகிரியே அமைச்சரவையில் மிக முக்கியமானவர் என்கிறார்களோ!

  • கருத்துக்கள உறவுகள்

பார்ற்றா..தமிழ்நாட்டுவிசயம் எண்டதும்..மன்மோகனுக்கு கூட கோபம் வருது...தமிழன் இழிச்சவாயனாபோனான்...

  • கருத்துக்கள உறவுகள்

தென்பாண்டிச்சிங்கத்துக்கு மதுரையில் ரவுடிகளை மேய்க்கவே நேரம் சரியா இருக்கும். இதுக்குள்ளை மந்திரி வேலையை எங்கையிருந்து பார்க்கிறது?? அப்பிடியே விட்டாலும் பார்க்கத் தெரிஞ்ச மாதிரிதான்... :D

கருணாநிதி அந்த பக்கத்தாலும் குத்துகிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.