Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்காக உயிரை பணயம் வைத்து செயற்பட்டவர்களை கைவிட்டு வெளிநாடு செல்ல தயாரில்லை! - ஷிராணி

Featured Replies

எனக்காக உயிரை பணயம் வைத்து செயற்பட்டவர்களை கைவிட்டு வெளிநாடு செல்ல தயாரில்லை! - ஷிராணி
          


[Friday, 2013-02-01 17:11:45]

             
                         shiranibandaranayake-seithy-150.jpg
                                 


நம்பிக்கையில்லாத தீர்மானம் தொடர்பில் உயிரை பணயம் வைத்து செயற்பட்டவர்களை
கைவிட்டு விட்டு தமது உயிரை மாத்திரம் காப்பாற்றிக் கொள்வதற்கான எந்த
தேவையும் தமக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி
பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். பல வெளிநாடுகளில் இருந்து ஷிராணி
பண்டாரநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான
செய்திகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் சட்டத்தரணிகள்
ஒன்றியத்தின் முக்கிஸ்தர் ஒருவரிடம் இதனை கூறியுள்ளார்.


தன்னை மாத்திரமல்ல நீதித்துறையின் சுதந்திரம் கொலை செய்யப்பட்டு விட்டது.
இன்னும் கொலை செய்ய வேண்டியது எதுமில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம்
தொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியாக குரல் கொடுக்கவில்லை.


நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தேன். இதன் போது
என்னுடன் மேலும் பலர் இணைந்து குரல் கொடுத்தனர். அவர்களின் உயிர்களுக்கு
அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறான நிலையில் எனது உயிரை மாத்திரம் பாதுகாக்கும்
நோக்கில் எங்கும் செல்ல போவதில்லை. இது எனது நாடு எனது மக்கள் எனவும்
ஷிராணி பண்டாரநாயக்க கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=75070&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

செயலிலும் காட்டி இந்த மகிந்த கூட்டத்தை கலைக்க வேண்டும் தாயே !

  • தொடங்கியவர்

கெதியிலை பாஸ் போட் பறி போகும். குடியுரிமை போனாலும் போகலாம். 

  • தொடங்கியவர்

வெளியில் போனால் போர்குற்ற சாட்சியம் கொடுக்க வேண்டி வரும். அதை மகிந்தா விரும்பமாட்டார். அதனால் காரியவாசம் பயங்கர பிச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். அதை இவ தவிர்க்க வேண்டியது கடமை. பராளுமன்ற தொகுதி வாக்குறுதி அளிக்கப்பட்ட அனோமாவே வெளியே போக முடியாமல் போய்விட்டது.(அதுவேதான் கிரோனிக்காவினதும், தாயினதும்  கதை. கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கைலாயம் அனுபி வைப்பத்தாக கதை அளந்து விக்கிரமாதித்தன் கிளியான  மகிந்தா பலரை ஏமாற்றிவிட்டார். அந்த வரிசையில் கடைசிச் சிங்கம்  சர்த் என் சில்வா; சிராணிக்கு எதிராக கதைத்தவர்)

 

பொன்சேக்காவை மேற்குலகம் கைவிட்டதின் காரணம் அவர் போர்குற்றத்தில் சம்பந்தப்பட்டு சாட்சியம் அளிக்க தயார் இல்லாமை.  எனவேதான் இவவும் மேற்கு நாடுகளை நம்பி நடுத்தெருவில் போய் நிற்க விரும்பமாட்டா. 

Edited by மல்லையூரான்

தமிழ் இனத்தின் பின்னடைவுகளுக்கு அவர்களின் நாட்டைவிட்டு தப்பி ஓடும் மனப்பான்மையும் முக்கிய ஒரு காராணம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.