Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை

Featured Replies

தற்போது பல்கலைக்கழக அனுமதியிலுள்ள மாவட்ட கோட்டா முறையை மாற்றி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய புதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

 

1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தரப்படுத்தலை தமிழ் அரசியல்வாதிகள் முழுமையாக எதிர்த்தனர். இதுவே தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. இதனால் பலரும் கருகினர்.


தற்போது 40 சதவீதத்தினர் திறமை அடிப்படையிலும் 55 சதவீதமானோர் மாவட்ட கோட்டா முறையிலும் 5 சதவீதமானோர் பின்தங்கிய மாவட்ட கோட்டா அடிப்படையிலும் தெரிவாகினர்.

 

மாவட்ட கோட்டாவானது 1993 இல் நடந்த சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள 'கோட்டா' பின்னர் ஏற்பட்ட சனத்தொகை மாற்றத்தை கணக்கில் எடுக்கவில்லை. என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


வடக்கில் தற்போது சனத்தொகை பாரிய வீழ்ச்சிக்கண்டுள்ளது. இருப்பினும் வடக்கு 1993 ஆம் ஆண்டு சனத்தொகை அடிப்படையிலான உயரளவு கோட்டாவை அனுபவித்து வருகின்றது. 1993 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சம் பேர் இருந்தனர். அந்த சனத்தொகை தற்போது 4 இலட்சமாக தற்போது வீழ்ச்சிக்கண்டுள்ளது.

 

இந்த மாற்றமான நிலைமை கொழும்பிலும் காணப்பட்டுள்ளது. அதாவது, கொழும்பில் சனத்தொகை பல்வேறு காரணங்களினால் அதிகரித்துள்ளது. ஆனாலும் கொழும்புக்கான பல்கலைக்கழக அனுமதி குறைந்த கோட்டாவையே பெற்றுவருகின்றது.


இது பற்றி உயர்க்கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டுக்கேட்டபோது எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்காதமுறையில் புதிய அனுகுமுறை படிப்படியாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58252-2013-02-03-17-07-57.html

  • கருத்துக்கள உறவுகள்

1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தரப்படுத்தலை தமிழ் அரசியல்வாதிகள் முழுமையாக எதிர்த்தனர். இதுவே தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. இதனால் பலரும் கருகினர்.

மேற்கண்ட காலப்பகுதியில், வடமாகாணம் கல்வியில் முன்னிலை வகித்தது!

 

இப்போது மிகவும் பின் தங்கிய மாகாணமாக ( முழு இலங்கையிலும் கூட இருக்கலாம்) உள்ளது!

 

எனவே, அனுமதிப் புள்ளிகளையும், இதற்கேற்றது போலக் குறைப்பார்களா?

 

இல்லாவிட்டால், இதுவும் ஈழத்தமிழனை ஓரங்கட்டும் இன்னொரு செயலாகவே இருக்கப்போகின்றது!

  • தொடங்கியவர்

slide-20-728.jpg?1216904851

அன்றும்  இன்றும் மாறாத காரணிகள் ...

  • தொடங்கியவர்

இலங்கையில் தற்போது தேசிய மட்டத்திலான திறமை அடிப்படையிலும் மாவட்ட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.


1970களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக அனுமதியில் அரசு கொண்டுவந்த 'தரப்படுத்தல்' நடைமுறை தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைய காரணமானது என்ற வாதம் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.

 

மாணவர்கள் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படாமல் மாவட்ட ஒதுக்கீடு அடிப்படையில் உள்வாங்கப்பட்டபோது பெருமளவிலான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்க நேரிட்டமை குறித்து பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அக்காலத்தில் தமிழர் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பும் அதற்கு கிளம்பியது.

 

ஆனால் 1978-இன் பின்னர் வந்த அனுமதி நடைமுறை, கல்வியில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு காரணமாகியுள்ளது.

இந்த நிலைமையில், இலங்கையில் தற்போதுள்ள நடைமுறை குறித்து தமிழ், முஸ்லிம் தரப்பினரிடமிருந்து பெரியளவில் முறைப்பாடுகள் வெளிவரவில்லை என்றே கல்வியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எனினும் தேசிய மட்டத்தில் திறமையுள்ள மாணவர்கள் பலர் தற்போதுள்ள நடைமுறையால் பல்கலைக்கழக வாய்ப்பை இழப்பதாக கடந்த சில ஆண்டுகளாக பெரும்பான்மை சமூகத்திலிருந்தே முறைப்பாடுகள் வெளிப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலைமையில், பல்கலைக்கழக அனுமதியில் மாற்றம் கொண்டுவருவதற்கு நாட்டின் உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக கல்வித்துறைசார் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

1993-ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படியே பல்கலைக்கழகங்களுக்கு மாவட்ட ரீதியாக மாணவர்கள் உள்வாங்கப்படுவதாகவும் இலங்கையின் வடக்கு மாவட்டங்களில் தற்போது சனத்தொகை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் நாட்டின் உயர்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

 

இந்த நிலைமையில் மூத்த கல்வியலாளரும் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வித்துறையின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசியரியர் சோ. சந்திரசேகரன் அவர்களிடம் தமிழோசை கருத்து கேட்டது.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130204_chandrasekaram.shtml

நல்லிணக்க ஆணைகுழுவின் நோக்கமே எதாவது வழிகளில் தமிழர் மேலே போய்விடாமலிருக்க வேண்டுமென்பதுதான். எப்படி முஸ்லீம் மாணவர்கள் மட்டும் சட்டக்கல்லூரிக்கு போகிறார்கள் என்பதை நல்லிணக்க ஆணைகுழு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க இல்லையா?

வடகிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்!

மேலும் வட மாகாணத்தின் சனத்தொகை இன்று 8 இலட்சத்தின் மேல் இருக்கும்.

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்களில் நடந்தது இனப்படுகொலையின் அதி உச்சம்.

 

 

தராதரப்படுத்தல் இனவழிப்பின் புற்றுநோய் .

  • கருத்துக்கள உறவுகள்
மாணவர்கள் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படாமல் ஒதுக்கீடு அடிப்படையில் உள்வாங்கப்பட்டபோது பெருமளவிலான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்கின்றனர்
பிப் 5, 2013
     
மாணவர்கள் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படாமல் மாவட்ட ஒதுக்கீடு அடிப்படையில் உள்வாங்கப்பட்டபோது பெருமளவிலான தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்க நேரிட்டமை குறித்து பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
 
1970களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழக அனுமதியில் அரசு கொண்டுவந்த 'தரப்படுத்தல்' நடைமுறை தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைய காரணமானது
 
அக்காலத்தில் தமிழர் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பும் அதற்கு கிளம்பியது. ஆனால் 1978-இன் பின்னர் வந்த அனுமதி நடைமுறை, கல்வியில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு காரணமாகியுள்ளது.
 
இந்த நிலைமையில், சிறீலங்காவில் தற்போதுள்ள நடைமுறை குறித்து தமிழ், முஸ்லிம் தரப்பினரிடமிருந்து பெரியளவில் முறைப்பாடுகள் வெளிவரவில்லை என்றே கல்வியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் தேசிய மட்டத்தில் திறமையுள்ள மாணவர்கள் பலர் தற்போதுள்ள நடைமுறையால் பல்கலைக்கழக வாய்ப்பை இழப்பதாக கடந்த சில ஆண்டுகளாக பெரும்பான்மை சமூகத்திலிருந்தே முறைப்பாடுகள் வெளிப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலைமையில், பல்கலைக்கழக அனுமதியில் மாற்றம் கொண்டுவருவதற்கு நாட்டின் உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக கல்வித்துறைசார் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
1993-ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படியே பல்கலைக்கழகங்களுக்கு மாவட்ட ரீதியாக மாணவர்கள் உள்வாங்கப்படுவதாகவும் சிறீலங்காவின் வடக்கு மாவட்டங்களில் தற்போது சனத்தொகை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் நாட்டின் உயர்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.http://www.sankathi24.com/news/26576/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.