Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கப் பிரேரணை; ஆதரிக்க இந்தியா முடிவு; கொழும்பு மீது கோபமே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கப் பிரேரணை; ஆதரிக்க இந்தியா முடிவு; கொழும்பு மீது கோபமே காரணம்
 
இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு நாடு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது.
 
ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்ப மாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணையை வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது.
 
அண்மையில் நடைபெற்ற இலங்கை  இந்திய கூட்டு ஆணைக்குழுவின் எட்டாவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் டில்லி சென்றிருந்தவேளை, ஜெனிவா பிரேரணையை தமது அரசு ஆதரிக்கவுள்ள விடயத்தை இந் திய அதிகாரிகள் கோடிகாட்டியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
 
கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்தும்வரை தாம் சர்வதேசத்தின் பக்கம் நிற்கவேண்டிய நிலை உள்ளது என்றும் பீரிஸிடம் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
எனினும், தமது பக்க நியாயங்களைத் தொடர்ச்சியாக இந்தியாவிடம் எடுத்துரைக்கும் இலங்கை அரசு, அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கடந்த வியாழக்கிழமை இவ்விடயத்தை உறுதிப்படுத்தியிருந்தார்.
 
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை  சர்வதேசத்தின் உதவியுடன் முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தி கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை எதிர்த்த நாடுகள் சிலவும் இம்முறை இலங்கைக்கு எதிராகத் திரும்பும் அபாயமுள்ளது என்றும், சீனா, கியூபா, ரஷ்யா, சவூதி அரேபியா உள்ளிட்ட இலங்கை சார்பான நாடுகள் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் வெளியேறியுள்ளதால் மாநாடு இலங்கைக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
எனினும், எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசும் தயாராகிவருகின்றது. இதற்காக தமது இராஜதந்திரிகளையும் அது உஷார்படுத்தியுள்ளது.
 
மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை விவகாரம் ஜெனிவாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை தெரிந்ததே.
 
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை 24 நாடுகள் ஆதரித்ததுடன், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் எட்டு நாடுகள் மறைமுகமாக ஆதரவைத் தெரிவித்தன. 15 நாடுகள் பிரேரணையை எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மூவரடங்கிய அமெரிக்க பிரதிநிதிகள் குழு, உறுதியாக நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். 
 
இந்நிலையிலேயே, இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இராஜதந்திர மட்டத்தில் கசிந்துள்ளது. தமிழகத்தில் எழும் எதிர்ப்பலைகள், இந்தியாவின் இதர மாநிலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டே இலங்கையை எதிர்க்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
 
04 பெப்ரவரி 2013, திங்கள் 8:45 மு.ப

வழமைபோல இந்தியப் போலி ஜனநாயகவாதிகளின் "கதக்களி" ஆரம்பமாகியுள்ளது!

cartoon-02.02.2013.jpg

எனினும், எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசும் தயாராகிவருகின்றது. இதற்காக தமது இராஜதந்திரிகளையும் அது உஷார்படுத்தியுள்ளது.
 
மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை விவகாரம் ஜெனிவாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை தெரிந்ததே.
 
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை 24 நாடுகள் ஆதரித்ததுடன், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் எட்டு நாடுகள் மறைமுகமாக ஆதரவைத் தெரிவித்தன. 15 நாடுகள் பிரேரணையை எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறிலங்காவின் 65 வது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு செயற்படும் 15 நாடுகளின் தூதுவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் இன்று நடைபெறும் சுதந்திரதின நிகழ்வுகளுக்காக இவர்கள் சிறிலங்கா அரசின் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 நாடுகளின் தூதுவர்களும், 3 நாடுகளின் உயர்ஆணையர்களும், ஒரு நாட்டின் இராஜத்தந்திர விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியும் உள்ளடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், அசர்பைஜான், கசாக்ஸ்தான், பெரு, சுலோவேனியா, ஸ்வீடன், புர்கினா பாசோ, அல்ஜீரியா, டொமினிக்கன் குடியரசு, வெனிசுவேலா, உக்ரெய்ன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், ருவாண்டா, பபுவா நியுகினியா, உகண்டா ஆகிய நாடுகளின் உயர் ஆணையர்களும், லெசோதோ நாட்டின் இராஜதந்திர விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியுமே சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் சுமார் 40 நாடுகளின் தூதரகங்கள் மட்டுமே அமைந்துள்ளன. புதுடெல்லியில் உள்ள சுமார் 80 நாடுகளின் தூதரகங்களே சிறிலங்காவுக்கான இராஜதந்திரப் பணிகளையும் ஆற்றி வருகின்றன.

இத்தகைய நாடுகளின் தூதர்கள் 15 பேரே கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் கசாக்ஸ்தான், வெனிசுவேலா, புர்கினோ பாசோ, உகண்டா, பெரு ஆகிய நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=891321811604477728

உதயனையை அந்த படுபாவிகள் போட்டு நொறுக்கிப்போட்டு இல்லாத பொல்லாத பொய் வழக்கெல்லம் போட்டு முடிஞ்சு வச்சிருக்கிறாங்கள். அந்த வயித்தெரிச்சலைலை உதயன் இந்தியா ஆதரிக்கும் என்று எழுத்துகிறது. கிந்திய பொக்கிரிகளை நம்ப இயலாது. போன தடவை கிந்தி பிரேரணையை அண்டிக்கெடுக்கவிட்டால் இந்த தடவை பிரேரணையுடன் இலங்கை திருந்திவிடும். 

 

போனமுறை பிரேரணையுடன் உபகாரியதரிசி பிளேக்கே கிந்தியாவுக்கு பலதடவை போனவர். இந்த முறை இன்னமும் அமெரிக்கா பிரேரணையையே கொடுக்கவில்லை. போனதடவை கிருஸ்ணா இலங்கை 13ம் திருத்தத்தை அரைகுறையாகத்தன்னும் அமூல் செய்தால் பிரேணனை இல்லை என்று இலங்கைக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த முறை எதுவும் இல்லை.

 

இவற்றின் கருத்து கிந்திக்கு இலங்கையிடம் பிரேரணையை வைத்து லாபம் தேடத்தக்க பிடி ஒன்றும் இல்லைப் போலிருக்கு. அதாவதி கிந்தி வாக்களிக்காவிட்டாலும் பிரேரணையை முன்னெடுக்கலாம் என்று அமெரிக்க ஆதரவுத் தரப்பு நம்புகிறது.

அமெ. உயர்குழு டில்லியுடன் பேச்சு; இலங்கை மீதான தீர்மானம் குறித்து இந்தியாவுக்கு விளக்கம்

 

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு புதுடில்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டு அங்கு பேச்சு நடத்தியுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் மூவரும் இலங்கைப் பயணம் முடிந்த கையோடு புதுடில்லி சென்று பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

அந்தப் பேச்சுக்களின் போது ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை மீதான பிரேரணை குறித்து அமெரிக்க அதிகாரிகள் புதுடில்லிக்கு விளக்கமளித்துள்ளனர் என்று தெரியவருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட டில்லி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை இந்தக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நோக்கம், அதற்கு இந்தியாவின் ஆதரவு, தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை, இலங்கைப் பயணத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் உட்பட முக்கிய பல விவகாரங்கள் தொடர்பில் இச்சந்திப்புகளின் போது கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கை இன்னும் பின்னடைவான நிலையிலேயே இருக்கின்றது. எனவே, நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கு இலங்கையை ஊக்குவிக்கும் வகையிலேயே இம்முறை பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது என இந்திய இராஜதந்திரிகளிடம் அமெரிக்கக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கக் குழுவுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளின்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு மூவரடங்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவினர் கடந்த  2 ஆம் திகதி இலங்கை வந்தனர்.

அமெரிக்கப் பிரதி உதவி வெளிவிவகாரச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பிரதி உதவிப்பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங், பிரதி உதவி வெளிவிவகாரச் செயலாளர் ஜேன் சிம்மர்மான் ஆகியோர் மூவரடங்கிய இராஜதந்திரக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

கொழும்புக்கு விரைந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னரே இக்குழு அரச மட்டத்திலான அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராஜதந்திரக்குழுவின் பயண நிகழ்ச்சி நிரலில் இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பயணம் குறித்த விடயங்களே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக அதுவும் இலங்கைப் பயணம் முடிவடைந்த கையோடு அமெரிக்கக்குழு டில்லி சென்றுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=554711812705540481

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் நல்லது ...
 
வழமையான பல்லவிதான் எதற்கும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.