Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ம.தி.மு.க வினால் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ம.தி.மு.க வினால் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2013 21:51    
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவினால் இலங்கைக்கு எதிராக 'சுதந்திரத் ஈழம் – பொது வாக்கெடுப்பு' மற்றும் 'தமிழக மீனவர்களைக் காக்கத் தவறும்-மத்திய அரசுக்குக் கண்டனம் 'ஆகிய இரண்டு தீர்மானங்களும் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டன.
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம் இன்று திங்கட் கிழமை காலை தொடங்கி மாலைவரை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதன்போது 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டு தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டதுடன்  ஈழத்தமிழ் சிறப்பு அகதிகள் முகாம்களை மூடுக! என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 
 
சென்னை, அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ – நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுதந்திரத் தமிழ் ஈழம் – பொது வாக்கெடுப்பு
 
உலக வரலாற்றில் கொடிய தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் இந்த அரசாங்கம் நடத்தியது.
 
சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், தாய்மார்கள், முதிர்வயதினர் உள்ளிட்ட, போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள் மிகக் கோரமான முறையில், உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசி, இந்திய அரசும், அணு ஆயுத அரசுகளும் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
தரணியில் வாழ் தமிழர்களின் கடமை
 
இந்த படுகொலைக் குற்றத்தைப் புரிந்த அரசாங்கத்தை அனைத்து உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டிய கடமை, தாயகத் தமிழர்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும், மனித உரிமைகளைக் காக்க வேண்டிய அனைத்து உலக நாடுகளுக்கும் தலையாய கடமை என்பதால், அதற்கு உரிய அனைத்து உலக விசாரணையை நடத்துவதற்கு விரைவுபடுத்தியாக வேண்டும்.
 
தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம், இப்பொழுதுதான் மெல்லமெல்ல உலகத்தின் மனசாட்சியைத் தட்டத் தொடங்கி இருக்கின்றது.
 
மென்னியை முறித்தன.
 
உலகில் எங்கே இனக்கொலை நடைபெற்றாலும், அதனைத் தடுக்கவும், மேலும் தொடராமல் வழிவகை செய்யவும், குற்றம் புரிந்த கொடியோரைக் கூண்டில் நிறுத்தவும் கடமை ஆற்ற வேண்டிய ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், 2009 ஆம் ஆண்டில், இந்திய, சீன, கியூபா அரசுகள், இலங்கை அரசாங்கத்திற்கு  ஆதரவாகச் செயல்பட்டு நீதியின் மென்னியை முறித்தன.
 
கடந்த 2012 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் பேரவை கூடுவதற்கு முன்பாகவே, 'ஒரு நாட்டுப் பிரச்சினையில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது' என்று, இந்திய அரசின் பிரதிநிதி, ஐ.நா. அமைப்பில் அக்கிரமமான கருத்தைப் பதிவு செய்தபோது, மன்மோகன்சிங் அரசின் முகத்திரையைக் கிழித்து, முதல் கண்டன அறிக்கையை பெப்ரவரி 28 ஆம் நாள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கொடுத்தார்.
 
ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டது 
 
ஐ. நா. மன்றத்தின் மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு அறிக்கை, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த போதிலும், உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ, இலங்கை அரசு, 'கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம்' என்ற ஒரு மோசடிக் குழுவை அறிவித்து, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்து, அப்பட்டமான பொய்களை அறிக்கை ஆக்கியது. ஓநாய், ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டது.
 
நீர்த்துப் போகும் துரோகம்
 
ஆனால், எந்தவிதத்திலும் நீதிக்கு வழிகாட்டாத மாய்மால வேலையாக, கடந்த மனித உரிமை பேரவை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த கண்துடைப்பு அறிக்கையைக் கூட, மேலும் நீர்த்துப் போகச் செய்கின்ற துரோகத்தை இந்திய அரசு செய்தது.
 
மனித உரிமை ஆர்வலர்களும், புலம் பெயர் ஈழத்தமிழர்களும், படுக்கொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று, மனித உரிமை பேரவையின் தற்போதைய உறுப்பு நாடுகளின் அரசுகளிடம் தக்க தகவல்களைத் தந்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
 
நயவஞ்சகமான வேலை
 
ஆனால், இப்படி நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, படுகொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, நயவஞ்சகமான வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது.
'இலங்கை இனப்பிரச்சினைக்கு, இலங்கை அரசு மூலமாக, நாங்களே முன்னின்று தீர்வை ஏற்படுத்திக் கொடுப்போம்; நீங்கள் இதில் தேவைக்கு அதிகமாகத் தலையிட வேண்டாம்' என்று, இந்திய வெளியுறவுத்துறையின் மூலம், தூதரகங்கள் மூலமும், திரைமறைவுக் காரியங்களில் வேகமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் ஏழு கோடித் தமிழர்கள் உள்ளனர். எனவே, ஈழத்தமிழர் பிரச்சினையில், இந்திய அரசுக்கு அக்கறை இல்லாமல் போகுமா? என்ற எண்ணத்தைப் பரப்பி வருகின்றது.
 
படுகொலை யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும், இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்பதை, இலங்கை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்தார்.
 
மன்னிக்க முடியாத துரோகம்
 
இந்திய அரசு, ஆயுதங்கள், ரடார்களை அள்ளிக் கொடுத்தது மட்டும் அன்றி, இந்தியக் கடற்படையை நேரடியாகப் போரில் ஈடுபடுத்தியது. மேலும், தமிழர் பகுதிகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்த, இந்திய விமானப் படையின் நவீன கருவிகளையும் பயன்படுத்தியது. இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் வரிசையாக இலங்கைக்குச் சென்று, இராணுவத் தாக்குதலை இயக்கினர். இவையெல்லாம் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
 
கலாசாரப் படுகொலை நடக்கின்றது
 
கூட்டுக்குற்றவாளி என்பதால்தான், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தபோது, வேண்டும் என்றே அதனை எதிர்க்க, இலங்கையோடு இந்திய அரசு பொருளாதார, வணிக ஒப்பந்தங்களைச் செய்தது.
 
தற்போது, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் நிலைமை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம் ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. தமிழர் தாயகமே, இராணுவ முகாம் ஆகிவிட்டது. மாவீரர் துயிலகங்களை இடித்து, இராணுவ முகாம் ஆக்கிவிட்டனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் மொழி, இன அடையாளமே இல்லாமல் அழிக்கின்ற கலாச்சாரப் படுகொலை நடக்கின்றது.
 
இந்திய அரசு வஞ்சகம் செய்கிறது
 
இத்தனைக் கொடுமைகளையும் ஏவி உள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவருக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல, இந்திய அரசு வஞ்சகம் செய்கின்றது. அந்த சதித்திட்டத்தின் ஒரு கட்டம்தான், கடந்த ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் நாள் சாஞ்சிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருவதற்கு ஏற்பாடு செய்தது. மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசும், அந்த வஞ்சகத்துக்குத் துணைபோனது.
 
தற்போது, மனித உரிமை பேரவையின் கூட்டம், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடக்க இருப்பதால், இந்திய அரசு துரோகத்தின் அடுத்த கட்டமாக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும், ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கும், பெப்ரவரி 8 ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது.
 
அன்பையும், கருணையையும் மனித குலத்துக்குப் போதித்த புத்தர் பெருமான் ஞானம் பெற்ற கயாவின் போதி மரத்தைத் தரிசிக்கக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகின்றாராம். அவருக்கு கயா மண்ணை மிதிப்பதற்கே அருகதை இல்லை.
 
பிரதமரின்  இல்லத்தை முற்றுகை இடுவோம்
 
செப்டெம்பர் 21 ஆம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் நடத்திய அறப்போரின்போது, 'இனிமேல் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்தாலும், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் முற்றுகை இடும் அறப்போராட்டத்தை நடத்தும்' என்று கழகம் அறிவித்தது.
 
கள்ள மௌனம் சாதிக்கிறது
 
தமிழகத்தின் தன்மான உணர்ச்சிக்குச் சவால் விடும் திமிரோடு, தமிழ் மக்களின் இருதயங்களில் சூட்டுக்கோலைத் திணிப்பது போல, இலங்கையில் இந்துக் கோவில்களை உடைத்து தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள, இந்துக்கள் வழிபடும் திருத்தலமான திருப்பதிக்கு அழைத்து வந்து வரவேற்கும் அக்கிரமத்தையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது.
இந்தியாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வர ஏற்பாடு செய்து உள்ள இந்திய அரசு, இதுகுறித்த செய்திகள் எதுவும் வெளிவர விடாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பீகாருக்கும் சென்றார்; ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்று வழிபட்டார்  என்று உலகத்துக்குச் சொல்லுவதற்காகவே,மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, இந்தத் துரோகத்திலும், அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
 
திருப்பதியில் கருப்புக்கொடி போராட்டம்
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகையை எதிர்க்கவும், தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், பெப்ப்ரவரி 8 ஆம் தேதி, டெல்லியில் பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்தையும், திருப்பதியில் கருப்புக்கொடி அறப்போரையும், கழகம் அறிவித்து உள்ளது.
 
குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்
 
ஜெனீவாவில், மார்ச் முதல் வாரத்தில் நடைபெற இருக்கின்ற ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை பேரவையின்; 22 ஆவது கூட்டத்தில், தமிழ்படுகொலை செய்த, இலங்கை அரசாங்கம் மீது மீது, பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு, உலகெங்கும் உள்ள மனித உரிமை உணர்வாளர்களும், புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று, குற்றவாளிக் கூண்டில் இலங்கை  அரசு நிறுத்தப்பட வேண்டும் என்றும்,
 
இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, இதற்கு எதிராக, மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது என்றும், இதுகாறும் செய்து வந்த துரோகத்தைத் தொடரக்கூடாது என்றும் வலியுறுத்துவதோடு,
 
பொது வாக்கெடுப்பு
 
இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களும் வாக்கு அளிக்கும் விதத்தில், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய ஆதரவை, இந்தியத் துணைக்கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு தேசிய இன மக்களிடமும், உலக நாடுகளிலும் உருவாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்வது என்றும், இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
 
2. மத்திய அரசுக்குக் கண்டனம்
 
கடந்த ஒரு வாரமாக, 48 ஆம் எண் கொண்ட இலங்கைக் கப்பல்படைக் காவலர்கள், தினமும் மீனவர்களைத் தாக்கி, இரண்டு ஐஸ் பெட்டிகளைத் தூக்கிக் கடலில் போட்டு விட்டார்கள். மீன்களையும் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்கள
 
மேலும், படகில் இருந்த மீனவர்கள், தாக்கி, பலத்த காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவர்களைத் தாக்கும்போது, நீங்கள் எல்லாம் வைகோ ஆட்களா? என்று கேட்டு அடித்து இருக்கின்றார்கள்.
 
கடந்த 30 ஆண்டுகளில், 530 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று உள்ளது. ஆயிரக்கணக்கானோரைத் தாக்கிக் காயப்படுத்தி உள்ளது. படகுகளை உடைத்து, வலைகளை அறுத்து, ஐஸ் பெட்டிகளைக் கடலில் தூக்கிப் போட்டுக் கொடுமை செய்ததும் அல்லாமல், பிடித்து வைத்து இருந்த மீன்களைப் பிடுங்கிக் கொண்டு சென்று உள்ளது. இத்தகைய கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
 
கேள்விக்குறி ஆக்கி இருக்கின்றது
 
கேரள மீனவர்கள் இருவரை  சுட்டுக்கொன்ற இத்தாலியக் கடற்படையினரைக் கைது செய்து, ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் வைத்து உள்ள இந்திய அரசு, தமிழக மீனவரைக் கொன்ற இலங்கையை ஒருமுறையேனும் கண்டித்தது இல்லை. உயிர் இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பு ஈட்டுத் தொகை தந்ததும் இல்லை. மாறாக, இலங்கைக் கடற்படையோடு சேர்ந்து, கூட்டுப் பயிற்சி மேற்கொள்கின்றது.
 
தமிழ் இனத்தை எதிரியாகக் கருதும் இந்திய அரசின் போக்கு, இந்திய ஒருமைப்பாட்டையே கேள்விக்குறி ஆக்கி இருக்கின்றது. இந்திய அரசின் போக்கை, இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது ஆகிய தீர்மானங்களே இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளன.

வைகோ வெறுமே தீர்மானங்களைப் போட்டுவிட்டு நித்திரை கொள்பவர் இல்லை!

அறிக்கை மட்டும் விட்டு பிழைப்பு நடத்த முயலும் கூட்டமைப்பும், நாடு கடந்த அரசும் வைகோவிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

2066463140545121804tblarasiyalnews_95481

இந்திய அரசே மேலும் மேலும் சீண்டாதே தமிழர்களின் தன்மானம் செத்துவிடவில்லை - வைகோ

டெல்லியில் இலங்கை ஜனாதிபதி வருகையை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ எழும்பூர் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும், அவர்களின் பிஞ்சு குழந்தைகள், தாய்மார்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை தலைவர் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தி கூறினோம். மத்திய பிரதேசத்துக்கு வந்தபோது நேரில் சென்று போராட்டம் நடத்தினோம். 

இப்போது திட்டமிட்டு உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவுவதற்காக 7 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு இல்லை என்று காட்டுவதற்காக அழைத்து வருகிறார்கள். ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறல் விசாரணை விரைவில் வர இருக்கிறது. 

அப்போது இலங்கை ஜனாதிபதி பற்றிய எண்ணத்தை தடுப்பதற்காக சோனியா இயக்கும் மத்திய அரசு அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைத்து உள்ளது. 47 உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் இனப்படுகொலை ஆவணங்கள் மற்றும் குறுந்தகடு ஆதாரங்களுடன் கடிதம் எழுதி இருக்கிறோம். 

ஈழத்தமிழர்களை காக்க அன்று தமிழகம் தவறி விட்டது. முத்துக்குமார் உள்பட 17 இளைஞர்கள் தங்கள் இன்னுயிர்களை மாய்த்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த தீ இன்னும் அணையவில்லை. இத்தனைக்குப் பிறகும் இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளது. அதுவும் தமிழகத்தின் தலைவாசலான திருப்பதிக்கு வரவழைக்கிறது. இது தமிழர்களை சீண்டி பார்க்கும் செயல். எனவேதான் அவரை இந்தியாவுக்கு வரவழைத்ததற்காக டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தோம். 

இந்திய அரசை கண்டித்து தன்னலமற்ற தமிழ் அமைப்புகள் போராட்ட களத்தில் உள்ளன. ம.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரத்து 500 பேர் இன்றும் நாளையுமாக ரயில்களில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டு சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவார்கள். 

அதேநாளில் திருப்பதியில் முற்றுகையிடுவோம். திருப்பதிக்கு மஹிந்த ராஜபக்ஷ எப்போது வருகிறார் என்பது மூடு மந்திரமாகவே வைக்கப்பட்டுள்ளது. போராட்ட தீயை அணைக்க நாங்களும் கருப்பு சட்டை அணிந்து போராடுகிறோம் என்று கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார். 

உண்மையிலேயே அவருக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்து விட்டோம். இனியும் ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வர அனுமதிக்க மாட்டோம். வர அனுமதித்தால் மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம் என்று கருணாநிதி அறிவிக்க தயாரா? 

சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். பலரை பலகாலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. இந்திய அரசே மேலும் மேலும் சீண்டி பார்க்காதே. தமிழர்களின் தன்மானம் செத்துவிடவில்லை மானம் அழிந்து விடவில்லை என்று உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க போராடுகிறோம். இந்த போராட்டம் தொடரும். 

இவ்வாறு வைகோ பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன், தியாகு, ஆனூர் ஜெகதீசன், கொளத்தூர் மணி, திருமுருகன்சாந்தி, ஜீவன், நன்மாறன், தென்றல் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

(மாலைமலர்

)

 

மகிந்தராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்னையில் இருந்து மதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் டெல்லிக்கு பயணமாகியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.ரயிலில் செல்லும் போராட்டக்காரர்கள் நாளை மாலை டெல்லியை அடைகின்றனர். டெல்லியில் பிரதமர் இல்லத்தையும் ராஜபக்சே வருகை தர உள்ள திருப்பதியிலும் மதிமுகவினர் வரும் 8ம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Mdmk%201.jpg

Mdmk%202.jpg

Mdmk%203.jpg

Mdmk%205.jpg

 

http://www.sankathi24.com

தமிழகம் தான் தமிழீழ திறவுகோல் , நன்றிகள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.