Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் ஆனால் கண்டனம் தெரிவிக்க?????

Featured Replies

'பேசாலை கொலைகள்; கடற்படை, போலிசார் மீது நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு'-- போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழு

இலங்கையில் மன்னார் மாவட்டம் பேசாலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழோசையிடம் பேட்டியளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்காகப் பேசவல்ல அதிகாரி, தோர்ஃபினூர் ஒமார்சன் , மன்னார் அருகே பேசாலை தேவாலயத்தில் கையெறிகுண்டை வீசியவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் போலத்தான் தெரிகிறது என்றும் இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார்

ராணுவத்தின் மீது எந்த அடிப்படையில் நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் என்றார் அவர். கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் பேசினார்கள் என்றும் இது குறித்த அறிக்கையை விரைவில் அளிப்போம் என்றும் கூறினார் ஒமார்சன்.

இது குறித்து அறிக்கை ராணுவத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதா என்று அவரிடம் கேட்டபோதும், இது வரை அனுப்பவில்லை, அறிக்கை முழுமை பெற்றபிறகு அதை அனுப்புவோம் என்றார்.

சண்டை நடந்த நாளில் பேசாலை பகுதியில், நான்கு பேர்,வாயில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அது குறித்து உங்கள் விசாரணையில் என்ன கண்டறிந்தீர்கள் என்று கேட்டபோது அவர்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் இருவர் கடற்படையினராலும், இருவர் போலிஸ்காரர்களாலும் சுடப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள் என்று அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • தொடங்கியவர்

இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார்.

அப்போ எப்ப தான் தமிழ்மக்கள் சிங்கள வெறி நாய் இராணுவத்தால் படுகொலை செய்யப்படும் போது கண்டனம் தெரிவிப்பிர்கள்?

எமது ஊடகங்கள் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளரை நேர்முகம் காண்டிருக்கிறார்களா?

TamilNet, TamilGuradian, NorthEastern Monthly, TamilPhoneix போன்ற ஆங்கில ஊடகங்கள் ஏன் நேர்முகம் காணமுயலவில்லை. இல்லை அவ்வாறு முயன்று கண்காணிப்புக்குழு மறுத்திருந்தால் அதை அறிவிக்க வேண்டும்.

தமிழர்தரப்பு ஊடகங்கள் அவர்களோடு உறவாடி அவர்களது பேச்சுக்களிற்கும் நடவடிக்கைகளிற்கு பதில் கூறவைக்க வேண்டும். இதை சிங்கள ஊடகங்கள் திறம்படச் செய்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது ஊடகங்கள் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளரை நேர்முகம் காண்டிருக்கிறார்களா?

கேட்டால் ஐபிசி, ரிரிஎன், ரிவிஐ, புதினம், ... கூறுவார்கள் மேலிடத்திலிருந்து வந்தால்தான் நாங்கள் கேட்களாமென்று!! ... விடும் பிழைக்கு நல்ல நொண்டிச்சாட்டு!!!!!

எமது ஊடகங்கள் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளரை நேர்முகம் காண்டிருக்கிறார்களா?

கேட்டால் ஐபிசி, ரிரிஎன், ரிவிஐ, புதினம், ... கூறுவார்கள் மேலிடத்திலிருந்து வந்தால்தான் நாங்கள் கேட்களாமென்று!! ... விடும் பிழைக்கு நல்ல நொண்டிச்சாட்டு!!!!!

ம்.. மேலே சொன்னதெல்லாம் இன்டிப்பென்டன் மீடியாவெண்டு சொல்லவாறமாதிரிக்கிடக்கு..

ஓமோம் இந்த ஆனானப்பட்ட சேதுவே தான் இன்டிப்பென்டன் ஜேனலிஸ்ற் எண்டு சொல்லேக்க மற்றவங்களும் கொஞ்சம் டிஸ்ரன்ஸ் வைச்சிருக்கிதை குறைசொல்லேலாது.

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தமிழில் எமது நாட்டு பிரச்சனைகளைஇ மனிதஉரிமை மீறல்களை விவாதிப்பதை விடுத்துஇ ஆங்கிலத்திலேh

அன்றி புலம்பெயர்ந்த தமிழீழமக்கள் தமதுநாட்டு

மொழிகளில் அந்தநாட்டு மக்களிடமோஇ அந்தநாட்டு ஊடகங்களிடமே விவாதிக்க வேண்டும்

எமது நாட்டு பிரச்சனைகளைஇ மனிதஉரிமை மீறல்களை தமிழ் மொழயில் மடடுமன்றி ஏனைய மொழிகளில் பிரசுரிக்க வேண்டும்

உதாரணமாக

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5102456.stm

http://news.yahoo.com/s/ap/20060619/ap_on_..._lanka_weblog_2

ம்.. மேலே சொன்னதெல்லாம் இன்டிப்பென்டன் மீடியாவெண்டு சொல்லவாறமாதிரிக்கிடக்கு..

ஓமோம் இந்த ஆனானப்பட்ட சேதுவே தான் இன்டிப்பென்டன் ஜேனலிஸ்ற் எண்டு சொல்லேக்க மற்றவங்களும் கொஞ்சம் டிஸ்ரன்ஸ் வைச்சிருக்கிதை குறைசொல்லேலாது.

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

ம்.. எனக்கோ எனது கருத்துக்கோ ஜால்ரா? அதுவும் கனேக்க போட்டிருக்கு..

:P

  • தொடங்கியவர்

ம்.. எனக்கோ எனது கருத்துக்கோ ஜால்ரா? அதுவும் கனேக்க போட்டிருக்கு..

:P

**************************

***********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

**************************

அப்படி போடுங்கோ சசி அண்ணா :P :P :P

***********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

கண்காணிப்பு குழுவோ, நேர்வே தரப்போ இல்லை உலக வங்கிபோன்ற நிறுவனங்களோ தென்னிலங்கை (ஆங்கில மற்றும் சிங்கள) ஊடகங்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆட்பட்டிருந்தார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

தென்னிலங்கை ஊடகங்கள் நோர்வையையும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவையும் பல சந்தர்ப்பங்களில் பக்கச்சார்பாக நிர்ப்பந்திப்பதில் வெற்றி கண்டார்கள். அந்த நிர்ப்பந்தங்களோடு ஒப்பிடும் எமது ஊடகங்கள் ஒரு சாதாரண உறவைக்கூட வைத்திருக்கவில்லை.

தமிழர் தரப்பை எடுத்துக் கொண்டால் புலிகள் கூறினால் மட்டும் தான் தமிழ்தரப்பின் அதிருப்த்தி தெரியவரும், புலிகள் கேள்வி கேட்டால் மாத்திரம் தான் தமிழ்தரப்பிற்கு பதில் அளிக்க வேண்டிய நிலமை இருந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் தமது பங்கை சிறப்பாகச் செய்திருந்தார்கள். ஆனால் அவர்களையும் மேற்குலகத்தாரையும் ஊடகத்தில் இணைத்து விவாதங்களை வெளிக்கொண்டு வந்திருந்தால் கண்காணிப்பு குழுவிற்கு 2 தரப்பு நிர்ப்பந்தமும் தெரியவந்திருக்கும். நடுநிலமையாக நடக்க வேண்டியதன், கதைக்க வேண்டியதன் தேவையை அடிக்கடி உணர்ந்திருப்பார்கள்.

கனடா ஜரோப்பிய ஒன்றியம் போன்றவை தடை செய்த பொழுது அவற்றைப்பற்றி விவாதிக்க கனடா ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை அழைக்கக்கூடிய நிலையில் தரத்தில் எந்த ஒரு ஊடகமும் எம்மிடம் இல்லை. இவர்கள் மாத்திரமல்ல, யுனிசெப், ஜோ பொக்கர் போன்றவர்களையும் எமது ஊடகத்தவர்கள் உறவுகளை உருவாக்கி கேள்விகள் கேக்க வேண்டும்.

1.5...2 லட்சம் ஈழத்தமிழ் மக்கள் இருக்கும் ஜரோப்பாவிற்கு ஜரோப்பிய மற்றும் உலக கரும மொழியாக கருதப்படும் ஆங்கிலத்தில் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்க ஏன் முடியவில்லை?

அதிக நேரம் வேண்டாம், கிழமையில் 1 மணத்தியாலங்களிற்கு?

  • தொடங்கியவர்

நாம் விட்ட தவறில் இதுவும் ஒன்று தான் எல்லாதுறையிலும்

வளந்து விட்டாலும் புலம் பெயர் நாட்டில் உடகத்துறயில் நாம் என்னும் முன்னேறவில்லை(உடகத்துறையில் நன்பர் கூடவா இல்லை) எமது தமிழ் தொலைகாட்ட்சியில் வரும் செய்திகள் நான் மட்டக்களப்புக்கு எனது வீட்டுக்கோ இல்லை யாரவது நன்பர்களுகோ போன் பான்னினால் தெரியும்.

முக்கியமாக யாருக்கு எமது நாட்டு பிரச்சனை தெரியவேண்டும்?

அங்கு தான் நாம் பெரிய இடைவெளி விட்டு விட்டோம்..

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை கனடா தடை செய்ததாலை பாதிப்பில்லை ஈயூ தடைசெய்ததாலை ஒரு பிரச்சனையுமில்லையெண்டுதானே நியூசிலை சொல்லி பாத்தனான். ஒருத்தரும் நமக்கு தேவையில்லையெண்டுதானே நியூசிலை சொல்லிக் கேட்டனான்.

ஊந்துகள் உருளியள் எலலாம் ரான்சிலேற்பண்ணி

இவ்வளவு கஸ்ரப்பட்டிருக்கவேணாம்..

நியூஸ் பாத்துக்கொண்டிருக்கேக்கை இடையில மறிச்சல்லே கேக்கிறான் .. உந்துருளியெண்டால் என்னவெண்டு..

ஊரிலை ஹலோ எண்டால் கிலோவிலை கொட்டுண்ணுது எண்டு சொல்லுறாங்கள்.. அந்தளவுக்கு அங்கை சனம் முன்னேறீட்டுது.. இஞ்சைதான் குளிர்களி சாப்பிடுறம்..

நான் பீற்ரர் ஜேசுதாசன்ரை இங்கிலீஸ் நியூஸ் ஒவ்வொரு கிழமையும் தவறாமல் கேக்கிறனான் என்னை ஒருத்தரும் குறை சொல்லேலாது.

உந்த வெள்ளைக்காரங்களும் கேப்பாங்கள்தானே? அவங்களுக்கு பீற்ரர் ஜேசுதாசின்ரை இங்கிலீசு விளங்கும்தானே?

அப்பிடி ஒரு நியூஸ் போகுதெண்டு அதை நோட்டீசா அடிச்சு விட்டால் அல்லது இங்கிலீசு ரிவி றேடியோவிலை அட்வடைஸ் செய்தால் காணாதே? ஒரு ஐடியாதான்........

தயவு செய்து தங்கிலீஸ் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள். :P :P :P

:twisted: :P :roll:

  • தொடங்கியவர்

தயவு செய்து தங்கிலீஸ் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள். :P :P :P

«Å÷ «ôÀÊ ¾¡ý §ÀÍÅ¡÷ :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியூஸ் பாத்துக்கொண்டிருக்கேக்கை இடையில மறிச்சல்லே கேக்கிறான் .. உந்துருளியெண்டால் என்னவெண்டு.. ஊரிலை ஹலோ எண்டால் கிலோவிலை கொட்டுண்ணுது எண்டு சொல்லுறாங்கள்.. அந்தளவுக்கு அங்கை சனம் முன்னேறீட்டுது.. இஞ்சைதான் குளிர்களி சாப்பிடுறம்

நான் இந்த யாழ் இணையத்தில் இணைந்த முதற் காரணம் இங்கே நண்பர்கள் பயன்படுத்தும் தூய தமிழ் நடையே. இங்கு பங்குபற்றிய சில நாட்களிலேயே நானும் ஓரளவு தூய தமிழில் எழுதக் கற்றுக் கொண்டேன். ஆகவே உந்துருளி என்றால் என்ன என்று கேட்டறிவது நல்லது தானே. கிலோவுக்கு பழந்தமிழ் வீசை என்பது எனத்தெரிந்துகொண்டேன். ஆனால், கிலோ என்பதை பேச்சுவழக்கில் சொல்வது தவறில்லை. நாணயப்பரிமாற்றம் போன்று, சந்தைபடுத்தலுக்கு பாவிக்கும் ஆங்கிலச் சொற்களும் பேச்சுவளக்கில் இருந்தாலும், எம் தமிழீழத்தில் தூய தமிழை பாவனக்குக் கொண்டுவந்ததினால் தான், தற்போது உந்துருளியென்றால் என்ன என்பதை உலகத்தமிழர் அறிந்து கொள்கிறார்கள் இல்லையா?

விடயத்திற்கு வருவோம். "கவலை" தெரிவித்தவர் தன் கண்டனத்தை தெரிவித்தாரா? இன்று பாப்பரசர் கேப்படிகொல்லை யில் இறந்தவர்க்கு தன் "இரங்கலை"த் தெரிவித்திருந்தாராம் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் எம் தமிழ் குடும்பங்கள் கொடூரமாகக் கொலையுண்டது இவர் காதுக்கு எட்டவில்லையா?

விடயத்திற்கு வருவோம். "கவலை" தெரிவித்தவர் தன் கண்டனத்தை தெரிவித்தாரா? இன்று பாப்பரசர் கேப்படிகொல்லை யில் இறந்தவர்க்கு தன் "இரங்கலை"த் தெரிவித்திருந்தாராம் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் எம் தமிழ் குடும்பங்கள் கொடூரமாகக் கொலையுண்டது இவர் காதுக்கு எட்டவில்லையா?

அவளவுக்கு தென் இலங்கை பாதிரியார் மார் சுறு சுறுப்பு

எமது தமிழ் பாதிரியார் மார் இப்படி சுறு சுறுப்பா செயற்பட்டால் அடுத்த படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்கள் பட்டியலிலும் அவர்கள் பெயர் வரும் தடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து தங்கிலீஸ் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள். :P :P :P

முன்பெல்லாம் தங்கிலீஸ் பேசினா கத்தி வைக்கிற நம்ம வெட்டுற மன்னர்கள் இப்ப என்ன தூங்கிக்கொண்டிருக்கினமோ :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.