Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகள் முன்றலில் அகிம்சைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A Massive Peace Walk jointly organized by the Ilankai Tamil Sangam and other Tamil Asssociations

Dear Tamil brothers and sisters of America,

Ilankai Tamil Sangam and other Tamil Associations of USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM.

By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and genocide inflicted upon the Tamil people by the Sri Lankan Government, Military, Army backed Para Militants and troops.

Let us fight for the political rights of all Eelam Tamils.

Dear Tamil brothers and sisters of America

- Collectively let us raise our voices reprimanding President Mahinda Rajapakse Government’s terrorism activities.

- Raise our voice to stop the unleashed brutal ethnic war forced upon our people comprised by the Sri Lankan Government.

- We will appeal to the entire world to protect and preserve the culture in conjunction with the high values of the democracy, by supporting the justifiable wishes of our people who have been harassed, tortured and been victims of genocide by the Sri Lankan Government.

- We have been given an opportunity to raise our voices on behalf of our loved ones in front of the United Nations Headquarters.

- To make use of this opportunity in the proper manner.

* Be present at the United Nations Headquarters to light up

* Solidarity among Tamils by raising your voice against injustice and revenge.

* Fulfill the duty of the time with responsiveness.

Venue: In Front of the United Nations HQ, 42nd St & 1st Ave, NYC.

Friday, 06-30-2006 between 2.00PM and 6.00PM

For additional info. Contact (718) 657-9463.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் தமிழ் மக்களே தாயகத்தில் வாழ்வுக்காக ஏங்கித் துடிக்கும் உங்கள் உறவுகளுக்காக குரல் கொடுக்க உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.எதிரவரும் வெள்ளிக்கிழமை ஒரு மணியில் இருந்து ஆறு மணி வரை ஐக்கய நாடுகள முன்றலில் எமது உரிமைக் குரலையும் ஒலிக்கச் செய்வோம் அனைவரும் வாரீர்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அமெரிக்காவில் வாழும் யுூட் போன்ற நண்பர்களும் இதற்காக ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்பலாம்! ஒருமித்த குரலால் தமிழராய் ஒன்றிணைவோம்!

இளப்பிரியன் முக்கியமான நாட்டிலிருந்து கொண்டு உரிமைக்குரல் எழுப்ப போகின்றீர்கள்.

உங்கள் குரல்களை கேட்டு என்றாலும் அங்கு இருக்கும் வல்லவர்களின் காதுகள் திறபடுகின்றதோ பார்ப்போம்.

அங்கு வாழும் தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு வருவார்கள் என்றே நம்புகின்றோம்.

எம்மவர்களுக்காக ஒலிக்கும் குரல் உலகெங்கும் உரத்துக் கேட்கட்டும். அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றுவார்கள் என நம்புகிறோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அகிம்சைப் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

ஒருவிடயம்: நாங்கள் இங்கே இலண்டனில் நிகழ்த்திய அமைதிப் பேரணியின்போது நாம் துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்திருந்தோம். அதேவேளையில் இன்னொரு பகுதியில் சில சிங்களவர்கள் தாமும் ஒரு துண்டுப்பிரசுரம் தயாரித்து "தமிழ்ச்சமூகம்" இதனை வெளியிடுகின்றது என்கின்ற மாதிரி அச்சடித்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்து அங்கே தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியுடன் சென்றதும் அவர்கள் ஓடிவிட்டார்கள்.

இப்படியான சதிவேலைகள் செய்வதில் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர். நாம் எல்லோரும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைக்குரலால் கதவுகள் திறக்குதோ காதுகள் திறக்குதோ தெரியாது.ஆனால் களத்தில் உள்ள எமது உறவுகளுக்கு வைற்றமின் மாத்திரை மாதிரி இருக்கும்.

இந்தப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அமரிக்காவில் நடைபெறும் உரிமைக்குரல் பாராட்டம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அகிம்சைப் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

ஒருவிடயம்: நாங்கள் இங்கே இலண்டனில் நிகழ்த்திய அமைதிப் பேரணியின்போது நாம் துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்திருந்தோம். அதேவேளையில் இன்னொரு பகுதியில் சில சிங்களவர்கள் தாமும் ஒரு துண்டுப்பிரசுரம் தயாரித்து "தமிழ்ச்சமூகம்" இதனை வெளியிடுகின்றது என்கின்ற மாதிரி அச்சடித்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்து அங்கே தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியுடன் சென்றதும் அவர்கள் ஓடிவிட்டார்கள்.

இப்படியான சதிவேலைகள் செய்வதில் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர். நாம் எல்லோரும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது.

சிங்கள அரசினால் மேற்கொண்ட வங்காலைப்படுகொலைகளின் புகைப்படங்களினைக்காட்டி லண்டனில், சிங்களவர்கள் விடுதலைப்புலிகள் தான் இக்கொலையினைச்செய்தார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள் என நண்பர் ஒருவர் கேள்விப்பட்டதாகச் சொன்னார். உண்மையாகவா?. சிங்களவர்கள்,எட்டப்பர்கள் நடாத்தும் போராட்டங்களினை நாம் கண்காணிக்க வேண்டும்

போராட்டம் இனிதே வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்...

வளர்க தமிழ் தரணியெங்கும்... வாழ்க தமிழீழம்..

கந்தப்பு ஜயா....

ஆமாம் சில துரோகி எச்சில்இலைகள் ஜேவிபி காரரோட சேர்ந்து பொய்பரப்புரைகளை செய்யினம்...கடந்த பிபிஸி எதிர்ப்பு போராட்டத்தில் கூட அவர்களுடன் சில துரோகிகளும் நிண்டவையாம்...

எங்கட இளையோர் போனவங்களாம் உவையள் ஆர் ஆக்கள் எண்டு பார்க்க...

நல்ல அடி போட்டிருக்க வேணும் உவங்களுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசினால் மேற்கொண்ட வங்காலைப்படுகொலைகளின் புகைப்படங்களினைக்காட்டி லண்டனில், சிங்களவர்கள் விடுதலைப்புலிகள் தான் இக்கொலையினைச்செய்தார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள் என நண்பர் ஒருவர் கேள்விப்பட்டதாகச் சொன்னார். உண்மையாகவா?. சிங்களவர்கள்,எட்டப்பர்கள் நடாத்தும் போராட்டங்களினை நாம் கண்காணிக்க வேண்டும்

ஆமாம் அதனைத்தான் நானும் குறிபிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. தலைமைச் செயலகம் முன்னால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி

ஈழத்தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தியும் ஐ.நா. தலைமைச் செயலகம் முன்பாக அமெரிக்காவிலுள்ள தமிழ் மக்கள் அமைதிப் பேரணியை நடத்தினர்.

அமெரிக்காவிலுள்ள பல்வேறு தமிழ் சங்கங்களினால் இணைந்து இப்பேரணி நடத்தப்பட்டது.

பல மாநிலங்களிலும் இருந்தும் பெருந்திரளாக வருகை தந்திருந்த ஈழத்தமிழர்களுடன், தமிழகத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி, தொடர்ந்து நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் கடமை முடிந்து வெளியேறிய அனைத்து நாட்டு பிரதிநிதிகளினதும், அமெரிக்க மக்களினதும் கவனத்தினையும் இப்பேரணி வெகுவாக ஈர்த்திருந்தது.

அமைதிப்பேரணி நடைபெற்ற பகுதியில் சென்ற அனைத்து மக்களுக்கும் அரசினால் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், ஜனநாயகத்தின் உயர் விழுமியங்களையும், மரபுகளையும் உலக நாடுகள் பேண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும், அரசின் நடவடிக்கைகளை விபரிக்கும் விரிவான துண்டுப்பிரசுரங்கள் பெருமளவில் விநியோகிக்கப்பட்டன.

இப்பேரணியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கரான மனித உரிமைகளின் சட்டத்தரணி திருமதி கரன் பாஸ்கர் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

அமெரிக்க மற்றும் கனேடிய தேவாலயங்களில் இருந்து பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

அமைதிப் பேரணியின் சார்பாக விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி.உருத்திரகுமார் தலைமையில், மனித உரிமைகளின் சட்டத்தரணி திருமதி. கரன் பாஸ்கர் உள்ளிட்ட ஏனைய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுமாக ஐவர் அடங்கிய குழு ஒன்று ஐக்கிய நாடுகள் செயலகத்திற்குள் சென்று, ஐ.நா.வின் செயலாளர் கொபி அனானின் பிரதிநிதிகளிடம் மனுவொன்றினை கையளித்தனர்.

ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஒரு மணி நேரமாக அங்கு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர், பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் மனித உரிமைகள் சட்டத்தரணி திருமதி கரன் பாஸ்கர், அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் இளங்கோவன், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சேவியர் அடிகளார், இலங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் ஷ்ரீதரன், அமெரிக்க தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதியாக சேரன் இளங்கோவன், விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் வி. உருத்திரகுமார் மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் கருணாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஊடகங்களில் இந்தப் பேரணி பற்றிய செய்திகள் வந்ததா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.