Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தூதரகம் முற்றுகை போராட்டம் : மனிதநேய மக்கள் கட்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரனை கொடூரமாக கொலை செய்த ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் முன்பு இன்று(22.02.13) மாலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக, புனங்குடி அனீஃபா, இயக்குனர் புகழேந்தி, மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 
இந்த போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி :
 
“ இலங்கையில் இனவெறி கொண்ட ராஜபக்சே அரசு தமிழீழ மக்களை போர் என்ற பெயரில், கொடூர கொலை செய்து அழித்தது. தற்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். 2009 மே-19 அன்று ஐந்து மெய்க்காவலர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்துள்ளது ராஜபக்சே அரசு. பிரபாகரனின் வம்சத்தில் யாரும் இருக்கக்கூடாது என்பதே அவர்களது எண்ணம். ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்றால் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராட முன்வர வேண்டும். அடுத்த மாதம் மேற்கத்திய நாடுகள் ஜெனிவாவில் கொண்டுவரும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு சமரசமின்றி ஆதரிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வற்புறுத்துகிறது” என்றார்.
 
போராட்டத்தின் போது ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முன்னேறிய போது, பாதுகாப்புக்குப்பிற்கு நின்ற காவல்படையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர்.
 

 



mmk5.jpg



mmk1.jpg



mmk2.jpg



mmk3.jpg



mmk4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mmk5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே..!!


 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளுக்கு நன்றிகள் பல

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே.....உங்கள் எழுச்சி எம் கண்ணீரைத் துடைத்தெறியட்டும்....

இலங்கை தூதரகம் முற்றுகை : 100 பேர் கைது

 

சென்னை: சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர், மேலும் பிரபாகரன் மகனை பிடித்து வைத்து இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்தனர்.  ஐ.நா,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர். தமிழர் உணர்வை புரிந்து கொண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

 

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=41399

நன்றி  தமிழக முஸ்லிம் உறவுகளே..!!

கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி...

தக்க சந்தர்ப்பத்தில் முக்கியமான போராட்டத்தில் கலந்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.