Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய காங்கிரஸ் அரசு விரும்பினாலும்கூட இனி இலங்கை அரசை காப்பாற்ற முடியாது – மனோ

Featured Replies

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
விடுதலை புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட வேண்டுமென்ற பொதுவான இலக்கு, கடைசிகட்ட யுத்தத்தின் போது இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இருந்தது. இதனாலேயே பொதுமக்கள் இழப்புகளை பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் யுத்தம் நடத்தப்பட்டது.
 
பொது மக்கள் இழப்புகளை பற்றி, மேற்குலக நாடுகள் அந்த வேளையில் குரல் எழுப்பிய போதெல்லாம் இந்திய மத்திய அரசு, இலங்கை அரசின் பெரியண்ணனாக இருந்து, சின்ன தம்பியை காப்பாற்றியது. இது உலகம் அறிந்த உண்மை. அந்த வேளையில் இலங்கையில் யுத்தத்திற்கும், சமாதான அரசியல் தீர்வுக்கும் இடையில் தடையாக இருப்பது விடுதலை புலிகள் தான் என்றும், அந்த இயக்கம் அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதான அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், யுத்தம் முடிந்தவுடன் 13ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் முன்கொண்டு செல்ல இலங்கை அரசு தயாராக இருக்கின்றது என்றும், இந்திய அரசியல் தலைவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்.
 
ஆனால், இன்று யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்தும் இலங்கை அரசு எந்தவித அரசியல் தீர்வையும் தரவில்லை. அதுமட்டும் அல்லாமல், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருந்த இந்தியாவின் குழந்தை 13ம் திருத்தம் முதற்கொண்டு உரிமைகளையும் வெட்டி குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பகிரங்கமாக ஈடுபட்டு, இந்தியாவின் கன்னத்தில் பலமுறை அறைந்துவிட்டது.
 
எனவே இன்றைய சூழலில் இந்திய பெரியண்ணன், இலங்கை அரசை இனியும் காப்பாற்ற முடியாது. இந்த அரசை நம்பி வாழுங்கள் என எமக்கு ஆலோசனை செய்யும் நிலையிலும் இந்திய மத்திய அரசு இல்லை. இதையே இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுக்க வாழும் மக்கள் மத்தியில் உறுதியாக ஏற்பட்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றது. இந்த பொதுஜன அபிப்பிராயத்தை இன்று இந்திய மத்திய அரசு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ மீற முடியாது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும் , உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது

உண்மை

நாலு வருடங்களில் எல்லாம் மறைக்கப்பட்டு மறந்துவிடப்படும் என எண்ணியவர்களுக்கு நெருக்கடிகளை வெற்றிகரமாக தந்த அனைவருக்கும் நன்றிகள்.

குறிப்பாக வை கோ, நெடுமாறன்  அய்யா, நாம் தமிழர், மே பதினேழு அமைப்பு, முதல்வர் உட்பட்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் மேற்குலக அமைப்புக்களான சனல் நாலு, மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு என அனைவரின் உழைப்புக்களும் தொடரவேண்டும்.

இதுக்குத் தான் சொல்லுறது.. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று... சிங்களம் காட்டின பூச்சாண்டி விளையாட்டு எத்தனை... சொனியா மகிந்த ராஜபக்சா நினைத்து பார்த்து இருப்பினமா...தாங்கள் செய்த கொலைக் காட்சி காணொளி வெளி உலகத்துக்கு போக்கும் என்று.. கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டினம்........ 2008-2009பது விடுதலை போராட்டத்துக்கு எப்படி உழைத்தோமோ அதே போல் நாங்கள் மறு படியும் உழைக்க வேணும்...தூங்கி கொண்டு இருக்கும் எமது உறவுகளை தட்டி எழுப்புவோம்....முகப் புத்தகம் ஈனையத் தளம் என்று எல்லா இடத்திலையும் சிங்களவன்ட பொய் போலி முகத்தை உலகுக்கு காட்டுவோம்...

நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு !

மலேசியாவில் சீமான் அவர்களின் பத்திரிகையாளர் / அரசியல்வாதிகள் சந்திப்பு

போர்க்குற்றங்கள் : வை கோ, நெடுமாறன்  அய்யா, சுப வீ - விவாதம்

http://www.youtube.com/watch?v=Ad698Mg_XFU

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வருடங்களில் எல்லாம் மறைக்கப்பட்டு மறந்துவிடப்படும் என எண்ணியவர்களுக்கு நெருக்கடிகளை வெற்றிகரமாக தந்த அனைவருக்கும் நன்றிகள்.

குறிப்பாக வை கோ, நெடுமாறன்  அய்யா, நாம் தமிழர், மே பதினேழு அமைப்பு, முதல்வர் உட்பட்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் மேற்குலக அமைப்புக்களான சனல் நாலு, மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு என அனைவரின் உழைப்புக்களும் தொடரவேண்டும்.

இதுக்குத் தான் சொல்லுறது.. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று... சிங்களம் காட்டின பூச்சாண்டி விளையாட்டு எத்தனை... சொனியா மகிந்த ராஜபக்சா நினைத்து பார்த்து இருப்பினமா...தாங்கள் செய்த கொலைக் காட்சி காணொளி வெளி உலகத்துக்கு போக்கும் என்று.. கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டினம்........ 2008-2009பது விடுதலை போராட்டத்துக்கு எப்படி உழைத்தோமோ அதே போல் நாங்கள் மறு படியும் உழைக்க வேணும்...தூங்கி கொண்டு இருக்கும் எமது உறவுகளை தட்டி எழுப்புவோம்....முகப் புத்தகம் ஈனையத் தளம் என்று எல்லா இடத்திலையும் சிங்களவன்ட பொய் போலி முகத்தை உலகுக்கு காட்டுவோம்...

எம் தலைவன் போரைத்தொடர  விரும்பாது ஒரு முடிவெடுத்தான்

இனி  தொடர முடியாது.  மக்களுக்கு இனி  வேதனைகளை  சுமைகளைக்கொடுக்கமுடியாது

ஆனால் அவர் சுதந்திரமாக வாழணும். செய்த தியாகங்கள்  இழந்தவைகள் வீணாகப்போகக்கூடாது என்று கடினமான முடிவெடுத்தான்.

அவனது பார்வை  தூரமானது என்பதை  வரலாறு  நிச்சயம் சொல்லும்.

அதை அடையும் வழியில் எந்த தடைகளையும் தாண்டி ஒன்றாக பயணிப்போம்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.