Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீதான தீர்மானம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்! - ஆதரவு தரும்படியும் கோரிக்கை!!

Featured Replies

சிறிலங்கா மீதான தீர்மானம்: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்! - ஆதரவு தரும்படியும் கோரிக்கை!!

                             

                                        

                                             9a4deded-ee37-405d-945e-f0393f6693021.jp

                                        

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்

கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானம்

தொடர்பில் அமெரிக்கா இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளது.

 

அத்துடன், சிறிலங்கா மீதான இத்தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும்படியும் இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு

விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய்

நேற்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியைச் சந்தித்துக்

கலந்துரையாடி இருந்தார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற

இச்சந்திப்பில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ், அமெரிக்க

இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரச் செயலாளர் வென்டி ஷேர்மன்,

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நான்சி ஜே.பவல் ஆகியோரும் கலந்து

கொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது அமெரிக்கா, இந்தியா ஆகிய

நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதார ரீதியிலான இருதரப்பு உறவு,

பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் குறித்து

பேசப்பட்டிருப்பதுடன், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு

வரப்படவுள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் தொடர்பிலும் கருத்துப்

பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போதே சிறிலங்கா மீது கொண்டு

வரப்படவுள்ள புதிய தீர்மானம் தொடர்பில் முழு விளக்கத்தையும் இந்திய

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் அமெரிக்க வெளிவிவகார

அமைச்சர் ஜோன் கெரி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன்,

சிறிலங்கா மீதான இத்தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும்படியும் ரஞ்சன்

மத்தாயிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, 'ஆசியப்

பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அமெரிக்கா கரிசனை

கொண்டுள்ளது.

அவ்வடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கத்தை

ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா மீது இத்தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

இதற்கு தெற்காசிய பிராந்தியத்தின் முக்கிய பங்காளியான புதுடில்லியின் ஆதரவு

அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது' என்றும் இந்தச் சந்திப்பின் போது

இந்தியத் தரப்பிடம் அமெரிக்கக் குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள்

தெரிவிக்கின்றன.

அதேவேளை, 'ஜெனிவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட

தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் அலட்சியப்படுத்தி சர்வதேசத்தின்

கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை என்பது உட்பட சிறிலங்கா அரசாங்கம்

தொடர்பில் மேலும் பல விடயங்களை இந்தியாவின் இராஜதந்திர குழுவுக்கு அமெரிக்க

வெளிவிவகார அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன்,

ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய்  இறக்குமதி செய்வது மற்றும் இவ்விரு

நாடுகளுக்கும் இடையிலான உறவுசுளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது

தொடர்பிலும்

இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை,

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி எதிர்வரும் ஜூன் மாதம்

இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கு செல்லவுள்ள

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து முக்கிய

விடயங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக அமெரிக்கத் தரப்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு

வரப்படவுள்ள சிறிலங்கா மீதான புதிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்கும்

என தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங் நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=9a4deded-ee37-405d-945e-f0393f669302

  • கருத்துக்கள உறவுகள்

போட்டாங்கள் போல கிடக்கு ...வேகம் குறைக்க...

போட்டாங்கள் போல கிடக்கு ...வேகம் குறைக்க...

 

பாலகன் பாலச்சந்திரனின் விடயம் அதற்கு இடங்கொடாது.

சிங்களம் ஒபாமா வெல்லக்கூடாது என விரும்பி செயலிலும் இறங்கியது - சரிவரவில்லை.

 

ஜோன் கெரி - பழுத்த அரசியல்வாதி. ஒபாமாவின் ஆசிய கொள்கை முன்னெடுப்பிற்கு உதவுவார். அதில் இலங்கையும் உண்டு.

  • தொடங்கியவர்

ரஞ்சன் மாத்தாய் பொதுநலவாய கூட்டத்தை இலங்கைக்கு எடுத்துக்கொடுக்க உழைத்தவர். நிருபம்மா ரவோதான் வல்வெட்டித்துறை, யாழ்பாணம் ஆஸ்பத்திரி கொலைகளை நிர்வகித்த நபர் என்று நினக்கிறேன். இவர்கள் கெடுத்தால் கெடுபட முடியாதவர் இருக்க முடியாது. இதில் ஜோன் கெரி எவ்வளவுக்கு நிண்டுபிடிப்பரோ தெரியாது.

 

கில்லரி கேட்ட மாதிரி தமிழருக்கு ஒடு தீர்வு கொடுக்க வேண்டும் அரசர் குடும்பத்தை யோன் கெரி கேட்ககூடிய சந்தர்ப்பம் குறைவு. ஆனால் ஐ.நா.பாதை மூலம் அமெரிக்கா எமக்காக அழுத்தம் தொடர்ந்தும் கொடுக்கும். இது தீர்வு வரும் வரைக்கும் போக ஒரு சந்தர்ப்பம் இருக்கு. மிகச் சிறிய தீர்வாக இந்தியா 1987 தொடக்கம் விரும்பும் 13ம் திருத்தம் கிடைத்தாலே அது இலங்கையின் அரசியல் அமைப்பு சரித்திரத்தில் இதுவரையில் நடவாத கொந்தளிப்பு ஒன்றை கொண்டுவந்துதான் ஆறும்.  இதற்கு காரணமானவர்கள் இருவர்.

 

சோல்பரியும், பிளேக்கும் இலங்கை சரித்திரத்தில் இலங்கை மக்களின் குணநல இயல்புகளை விளங்காமல் இலங்கை மக்களில் வாழ்வில் தலையிட்டு அழுங்கு பிடித்தனமாக நடந்து பிரதானமாக சிங்கள, தமிழ் இரு சமூக மக்களின் வாழ்வையும் சிதைத்த அரசியல் வாதிகள்.

 

சோல்பரி பல தமிழ்தலைவர்களால் குறை கூறப்பட்ட விறைத்த மண்டை அரசியல் வாதி. பொன்சேக்கா கூறுவது போல கோமாளிகள்தான் என்றாலும் இந்திய அரசியல்வாதிகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தமது  அரசியல் அமைப்பை தமக்கு எழுதிக்கொண்டார்கள். அது பெரிய சாதனை இல்லைத்தான் என்றாலும் இதுவரை அதனுடன் அவர்களால் இந்திய ஜன்நாயத்தை இன்னமும் தாக்குப்பிடிக்க முடிகிறது. இது மற்றைய தென்கிழக்கு நாடுகளில் என்றோ அழிந்துபோய்விட்டது.  இலங்கைக்கு அத்தகைய ஆற்றல் இருக்கவில்லைஎன்பதால் பிருத்தானியா, ஒரு சிங்கள் தமிழ், முஸ்லீம்மகளுக்கான அரசியல் அமைப்பொன்றை எழுதி அதன் பிரகாரம் சுதந்திரம் கொடுக்க சோல்பரியை அனுப்பியது.

 

இவர் பழைய டொனமூர் அறிக்கையே தனது அடிப்படையாக கொண்டார். சிங்கள மக்களை, தமிழ் மக்களை நாடி பிடித்தறியும் ஆற்றல் இல்லாதவராக காணப்பட்டார். இலங்கையில் ஏற்கனவே நடந்து, அதை இலங்கையில் வைத்து அதே இனங்களுக்குள் சமாளிக்க முடியால், இங்கிலாந்து எடுத்து சென்று தீர்த்துவைத்த இனக்கலவரத்தின் சரித்திரம் அறியாதவரராக இங்கிலாந்திலிருந்து வந்தார்.  இதனால் அவர் சிங்கள மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ அவர்களின் இயல்பு ஏற்ற அரசியல் அமைப்பாக ஒன்றை எழுத தவறினார். சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து  இன்று நாடு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், அறிவு முன்னேற்றங்களை எல்லாம் இழந்து வங்குரோத்து நிலை வந்திருப்பது சோல்பரியின் அரசியல் அமைப்பு மட்டும்தான் காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. பொதுவாக அரசியல் ஆய்வுகளில் காணப்படகூடியதான சோல்பரி  அரசியல் அமைப்பின்  திறனாய்வுகள் விமர்சனங்கள் பெரும்பாலும் தமிழ் தலைவர்களினுடையதாகத்தான் இருக்கும். மிகச்சில, நாடு பாதாழத்திற்குள் விழபோகுது என்றதை எதிர்வு கண்ட இடதுசாரிகளிடம் இருந்து வந்தவை. செல்வநாயகம், பொன்னம்பலம் போன்றோர் பிரிவினை வாதிகளாக கழிக்கபட்ட மாதிரியே இடது சாரிகளும் ஏகாதியபத்திய வாந்திக்காரர்களாக சிங்கள மேட்டுக்குடி தலைமைகாளால் கழித்துவைக்கப்பட்டார்கள்.  இவர்களுக்கு சிறிமா அரசியலில் இடம் கிடைத்த போது இவர்கள் கொளகை வாதிகள் என்ற கோற்றை கழட்டிவைத்துவிட்டு அடிவருடிகள் என்ற கோற்றை அணிந்து இருந்தார்கள். ஆனால் சிங்கள மேட்டுக்குடிகள் தமக்கு சோல்பரி விட்டு சென்ற சந்தர்ப்பத்தை உபயோக்கிக்க வெக்கமோ, தயக்கமோ காட்டவில்லை.

 

சிங்கள மக்களுக்கு உபயோகமில்லாத வகையில், தமது விருபத்திற்கு ஏற்ப அரசியல் அமைப்பை எழுதிவாங்கிக்கொண்ட சிங்கள தலைவர்கள் 1956 ஆக 15 ஆண்டுகளிலேயே அது சிங்கள மக்களுக்கான அரசியல் அமைப்பல்ல  என்ற செயதியை புட்டுவைக்க ஆரம்பித்தார்கள்.  சிங்கள மக்களுக்கு ஏற்ற அரசியல் அமைப்பை சோல்பரி எழுத தவறியதால் அந்த இடைவெளியை பாவித்து சிங்கள மேட்டுக்குடிகள் அவர்களுக்கு புதிய அரசியல் அமைப்புக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். இடதுசாரிகள், சிங்களமக்கள் முதலாளித்துவம்  என்ற அடர்ந்த காட்டுக்குளால் பயணித்து நாட்டிந் கல்வி, சுகாதாரம், பொருளாதாரதை பெருக்கி சுபிட்சமான இன்பமான வாழ்கையை நடத்தகூடிய அரசியல் முதிர்ச்சிப் பக்குவம் இல்லாதிருந்தார்கள் என்பதை கண்டுவைத்திருந்தார்கள். அதனால் ஜனநாயக சோசலிச, மார்க்சிச சோசலிச கொள்கைகளின் சார்பில் அரசியல் அமைப்பு திருத்தப் படவேணும் என்றார்கள். சிறிமாவோவால் சோல்பரியின் அரசியல் அமைப்பை மாற்றி சிங்கள மக்களுக்கான அரசியல் அமைப்பை எழுத  சிங்கள மக்களிடம் ஆணை கேட்ட போது 1970 ல் அது வந்துகிடைத்தது.

 

அந்த நேரம் கண்டிய மேட்டுக்குடிகள் தங்களை பலப்படுத்தும் நோகத்துடன் கேட்ட ஆணையை அரசியல் முதிர்ச்சி அடைந்திராத சிங்கள மக்கள் அறிந்திருக்கவில்லை. கிடைத்த ஆணையை வைத்து சோல்பரியின் கோமாளி அரசியல் அமைப்பு சிங்கள அத்தனகலை மேட்டுக்குடிகளின் கொலைகார அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டது. அன்று இலங்கையின் அரசியலின் கொள்கை வானின் நட்சத்திரங்களாக வீற்றிருந்த இடதுசாரிகள் அரசியல் அமைப்பை திருத்த சிங்கள மக்களால் கொடுக்கப்பட்ட முதல் சந்தர்பத்தில் தமது சுயரூபமான துரோகத்தை சிங்களமக்களுக்கு காட்டி, அரசியல் அமைப்பென்ற பேரில்  கொல்வினாடி சில்வாவும்  என் எம் பெராரவும் சிங்கள மக்களை அத்தனகலை அரச குடும்பத்திற்கு அடிமை சாதனம் எழுதினார்கள்.  சிங்கள அரச குடும்பங்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக சோல்பரி சிங்கள மக்களை விளங்கி எழுத்தாத அரசியல் அமைப்பை மாற்றி தம் அரசியல் ஆசைகளை பெருக்கி தம்மை முடி சூடாமன்னர் நிலைகளில் இருந்து முடிசூடிய மன்னர்கள் ஆக்கிவிட்டார்கள்.  சோல்பரி உயிருடன் இருக்கிறாராக இருந்திருந்தால் அவரின் தவறை சுட்டிக்காட்டி நாம் அவருடன் விவாதிக்க நிறைய இருந்திருக்கும்.

 

இன்றைய இலங்கையின் முன்னேற்றங்களுக்கு காரணமானவர்  பிளேக். அமெரிக்காவின் தற்கால இலங்கைக்கான கொள்கைகளை வகுத்தவர் அவர். அமெரிக்க அரசியல் வட்டங்களில் குடும்பத்தின் திறமைகள் காரணமாக செல்வாக்கு பெற்றிருப்பவர். சோல்பரி நடந்து கொண்டதுமாதிரியே தமிழ் மக்களையோ சிங்கள் மக்களையோ நாடி பிடித்தறிந்து கொள்ள மறுத்துவிட்டார். அதே விறைத்த மண்டை குணத்துடன்  நடந்து கூடைகள் கூடைகளாக சிதைந்த தழிழ் மக்களின் சதைகளையும் இரத்தங்களையும் காட்சிக்கு வைக்க காரணமானர். இன்றைக்கு தமிழர் சுதந்திரமாக, நிம்மதியாக  வாழ்ந்திருந்திருக்க கூடிய சந்தரப்பத்தை அழித்தார். தனது விருபத்திற்கான சிங்கள் மக்களையே கிளியை பிடித்து பிராந்தின் கையில் கொடுபது போல, தான் கோத்தபயாவுடனும் மகிந்தாவுடனும் வைத்திருந்த சினேகிதத்திற்காக அவர்களால் இனி மீள முடியாத சர்வாதிகாரதிற்கு அடிமை ஆக்கினார்.

 

ஜோன் கெரி இவர்கள் இருவரையும் தனது குருக்களாக கொள்வாராக. அவர்களிடமிருந்து படித்த பாடங்களை நினைவில் வைத்திருக்கட்டும். சிங்கள மக்களால் கொண்டு இழுக்க முடியாத சுமையை சோல்பரியும், பிளேக்கும் அவர்கள் மீது தள்ள்ளீயது போன்ற  ஒரு செய்லை செய்ய முயலாது இருப்பாராக. தென்கிழக்காசிய நாடுகளில் காணப்படும் மேட்டுக்குடித்தனதிற்கு சிங்கள மக்கள் விதி விலக்கல்ல. அந்த நாடுகள் ஒன்றாலும் சுதந்திரம் அடைந்ததால் மட்டும் மேலே வர முடியவில்லை. புத்தியை பாவித்து பூனையையும் கிளியையும் ஒரேகூட்டில் அடைக்கும் சமாதன கதையை தவிர்ப்பாராக. எதோ கவிதை அழகுக்காக புகழேந்தி "மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும் ஒரு கூட்டில் வாழுமுலகு" என்று நளமகாராஜன் ராச்சியத்தை பாடினார். அது நல்ல ஒரு செந்தமிழ் கவிதை மட்டுமே. உண்மையல்ல. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.