Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன்

25 பெப்ரவரி 2013

சேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ''இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்'

அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு சிறிய அழகிய, கவர்ச்சி மிக்க தீவின் தற்காப்பு  உத்திகளின் திரட்சியும், தொடர்ச்சியுமே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும்.

ஜெனிவாவில் இக்கொள்கையானது மறுபடியும் ஒரு முறை அடுத்த மாதம் சோதனைக்கு உள்ளாகப் போகிறது. இலங்கைத்தீவின் மூத்த சமூகச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது போல், ஜெனிவாவைப் பற்றிய ஒரு பயப் பிராந்திக்குள் கொழும்பு சிக்குண்டிருக்கிறது. இப்பயப் பிராந்தியை உருவாக்கியதிலும் பெருப்பிப்பதிலும் ஊடகங்களுக்கு கணிசமான பங்குண்டு. வெளியிலிருந்து வரும் இவ் அச்சுறுத்தலை கொழும்பானது எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மூத்த மற்றும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்கத்திற்கு கருத்துக்களைக் கூறவும் ஆலோசனை கூறவும் இடித்துரைக்கவும் முற்பட்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஆனால், இலங்கை தீவு பிரிட்ஷ்காரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் பின் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இவ் அச்சுறுத்தலை ஏதோவொரு விதத்தில் வெற்றிகரமாக எதிர்கொண்டதே இலங்கைத் தீவின் நவீன வரலாறாக உள்ளது.

உதாரணமாக 1971இல் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின்போது அப்போது ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசாங்கம் சீனாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதைப் போலவே, 4ஆம் கட்ட ஈழப்போரின்போது இப்போதுள்ள அரசாங்கமானது சீனவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. மேற்கு நாடுகளிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதாவது, உள்நாட்டில் அச்சுறுத்தல்கள் எழும்போதும் வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வரும்போதும் தங்களுக்கிடையில் பகை நிலையில் காணப்படும் வெளிச் சக்திகளை வெற்றிகரமாக கையாண்ட ஓர் அனுபவம்  கொழும்பிற்கு உண்டு.

இதைப் போலவே, 1988இல் இந்தியா ''ஓபரேஷன் பூமாலை' என்ற பெயரில் உணவுப் பொதிகளை வானிலிருந்து போட்டபோது ஏற்பட்ட அச்சுறுத்தலை ஓர் உடன்படிக்கையாக மாற்றிய வெற்றிகரமான அனுபவமும் கொழும்பிற்கு உண்டு. தமிழர்கள் இந்தியப் படை வரும் என்று காத்திருந்த ஓர் காலகட்டத்தில் வரவிருந்த படையை அமைதி காக்கும் படையாக மாற்றியதில் கொழும்பிற்கு கணிசமான பங்குண்டு. மேலும் மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும், தமிழர்களோடு மோதவிட்டதும் கொழும்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள்தான். எனவே, வெளி அச்சுறுத்தல்களையும் வெளியாரின் பின்பலத்தோடு உள்ளிருந்து எழும் அச்சுறுத்தல்களையும் வெற்றிகரமாக கையாண்ட ஒரு பாரம்பரியம் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டு. இதன் பின்னணியில் வைத்தே இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறதென்பதையும் பார்க்க வேண்டும்.

கொழும்பிலுள்ள கே. கொடகே போன்ற ஓய்வு பெற்ற மற்றும் மூத்த கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப்படி கொழும்பானது தன்னுடைய சொந்த நலன்களை முன்நிறுத்தியே முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற அபிப்பிராயம் தூக்கலாகக் காணப்படுகிறது. பேரரசுகளிற்கிடையிலான மோதுகளத்தில் சிறிய இலங்கைத்தீவானது தனக்கிருக்கக்கூடிய ''லக்ஸ்மன் ரேகையை'த் தாண்டிச்சென்று ஒதோவொரு பேரரசை ஆதரிப்பதன் மூலம் மற்றொரு பேரரசின் பொறிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுவது தெரிகிறது.

மூத்த ராஜதந்திரிகளான  கொடகே போன்றோர் இந்திய – அமெரிக்க உறவின் நெருக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முன்னாள் அமெரிக்க இராஜங்கச் செயலாளரான பேர்ண்ஸ் கூறியது போல், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவெனப்படுவது பூகோள பங்காளித்துவமாக வளர்ச்சி பெற்றிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எனவே, அமெரிக்காவைக் கையாள்வது என்பது இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவை வெற்றிகரமாக் கையாள்வதுதான். அதாவது, பனிப் பாறையைக் கையாள்வதுதான் என்பதை அவர்கள் அரசாங்கத்திற்கு சூசகமாக உணர்த்த முற்படுகிறார்கள். 

அரசாங்கத்திற்கு இப்போதுள்ள அடிப்படைப் பிரச்சினையே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதா அல்லது தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதா என்பதல்ல. மாறாக, சீனாவை கைவிடுதா? இல்லையா என்பதுதான். இதை இன்னும் யதார்த்த பூர்வமாக கூறின் சீனாவை எந்தவிற்கு அரவணைப்பது அல்லது எந்தளவிற்குக் கைவிடுவது என்பதே. சிங்கள வெகுசனங்களின் மத்தியில் சீனாவைக் குறித்து மதிப்பார்ந்த ஒர் மனப்பதிவே உண்டு. மங்கோலிய இன மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு கௌரவமான உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு பௌத்தமும் ஒரு காரணம். மேலும் சீனாவானது சிங்கள மக்களைப் பொறுத்தவரை என்றைக்குமே ஒரு பனிப்பாறையாக இருந்ததில்லை.  தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்ற கருத்து இந்தியாவின் மீது சலிப்பும், கோபமும் அடைந்திருக்கும் சில மூத்த தமிழ் பிரஜைகள் மத்தியிலும் காணப்படுகிறது. 

சீனாவானது இலங்கைதீவை வெளிப்படையான ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு அணுகத்தேவையில்லாத அளவிற்கு இப்பிராந்தியத்தில் இலங்கைத் தீவிலிருந்து கணிசமான அளவு தொலைவில் அமைந்திருக்கிறது.  அதோடு, உலகளாவிய நிதி முலாதானத்தின் விரிவாகத்தைப்பொறுத்த வரை சீனாவானது சிறிய, வறிய மற்றும் நலிந்த ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் மத்தியில் நிகரற்ற ஒரு கொடையாளியாக எழுச்சிபெற்று வருகின்றது. கம்போடிய நாட்டின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுடைய ஒருவர், தன் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகின்  மிக நெகிழ்ச்சியான ஒரு கொடையாளி நாடாக சீனா உருவாகிவிட்டது. 

மேற்கத்தையே நாடுகள் கொடை வழங்கும்போது  அதற்குரிய முன்னேற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் என்று பல படிமுறைகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். குறிப்பாக, உதவி பொறும் நாடானது ஜனநாயகம், பண்மைத்துவம், நிதி நடவடிக்கைகைளில் வெளிப்படைத் தன்மை போன்ற முன் நிபந்தனைகளுக்கு உடன்படி வேண்டியிருக்கும். ஆனால், சீனா என்ற கொடையாளியைப் பொறுத்த வரை இப்படிப்பட்ட வரையறைகள், படிமுறைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று நம்பப்படுகிறது. நேட்டோ விரிவாக்கமானது படைகளை நகர்த்துகிறது. சீனாவிரிவாக்கமானது சந்தையின் எல்லைகளைத்தான் நகர்த்துகிறது. எனவே, சீனாவிடம் கடன் பெறும் எந்தவொருசிறிய நாடும் இலகுவாக அந்த ராஜதந்திர கடப்பாட்டுக்குள் இருந்து வெளியில் வரமுடியாத ஒருநிலையே காணப்படுகிறது.இத்தகையதொரு பின்னணிக்குள் வைத்தே கொழும்பிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான உறவை ஆராயவேண்டும்.

இப்போதுள்ள பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு கால ராஜிய நடவடிக்கைகளை கொகுத்தும், பகுத்தும் நோக்கின் அது அகவயமான முடிவுகளையும் புறவயமான முடிவுகளையும் கலந்து எடுக்கும் ஓர் அரசாங்கமாகவே காணப்படுகிறது. ஆசிய மையச் சிந்தனை அல்லது உள்நாட்டிலுள்ள தீவிர தேசிய வாத சக்திகளுக்குத் தலைமை தாங்குவது என்பவை எல்லாம் சிறிலங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சிப் பரம்பரியத்தின் ஏற்கனவே, இருந்து வந்த ஒருபோக்குத்தான். இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றிகளின் கைதியாகவுள்ளது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது கட்டியொழுப்பியிருக்கும் வீரப் படிமம் நிகரற்றதும், பிரமாண்டமானதும், மிகத் தூலமானதுமாகும். எனவே, தனது வெற்றிச் சிறையிலிருந்து இறங்கி வருவதில் இந்த அரசாங்கத்திற்கு என்று சில அடிப்படையான நடைமுறை சார் வரையறைகள் உண்டு. அது அகவயமான முடிவுகளை எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனாலும், சிறிய இலங்கைத்தீவின் வெற்றிகரமான வெளியுறவுத்துறை பாரம்பரியத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தலைகீழான முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுக்கலாமா? என்பது சந்தேகமே. அப்படியொரு விலகலான முடிவை எடுக்க முற்பட்டதானால்தான், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் வந்த  ஆண்டுகளில் ஜெனிவாவில் இந்த அரசாங்கம் கண்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு வந்த கண்டத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகக் கடக்க முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டையும் இலகுவாக கடக்க முடியாதிருக்கும். ஏனெனில், இந்த ஆண்டில் வரப்போகும் கண்டமானது, கடந்த ஆண்டை விட கடினமானதாக இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. அதைக் கடப்பதென்றால் மேற்கு நாடுகளை அனுசரித்துப்போகும் சில முடிவுகளையாவது எடுக்க வேண்டி வரும்.

மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவதென்றால் அதற்கு இரண்டு தளங்கள் உண்டு. முதலாவது அடிப்படையானது. அதாவது, சீனாவை ஏதோ ஒரு அளவிற்கு தள்ளிவைப்பது. இரண்டாவது தமிழர்கள் சம்பந்தப்பட்டது. அதாவது இச்சிறு தீவினுள் எந்த கதவினூடாக மேற்கு நாடுகள் நுழைய முற்படுகின்றனவோ அந்த வழியில் ஏதும் சுதாகரிப்புக்களைச் செய்வது. இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அதைக் கண்காணிப்பதற்குமான ஏதோ ஒரு பொறியமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, அதில், மேற்கின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், அத்தகைய ஏதாவது ஒரு கண்காணிப்புப் பொறிமுறைக்கூடாகத்தான் மேற்குநாடுகள் இச்சிறு தீவினுள் தமது பிடியை மேலும் இறுக்க முடியும். 

இச்சிறிய அழகிய தீவை சக இனங்களுடன் கௌரவமான, நீதியான வழிகளில் பங்கிடத் தயாரில்லை என்றால் வெளியாரிடம் பணிவதைத்தவிர வேறு வழிகள் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எனப்படுவது நீதியின் மீதே கட்டியெடுப்பப்படுகின்றது. நீதி இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருப்பதில்லை. சமுகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண முடியாத நாடு எப்பொழுதும் வெளியாருக்கு திறந்துவிடப்பட்டே இருக்கும். வெளியாருக்குத் திறந்தவிடப்பட்ட ஒரு நாடு என்றைக்குமே சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கையை வைத்துக்கொண்டிருக்க முடியாது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89019/language/ta-IN/article.aspx

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வெளியுறவு கொள்கையும், பாதுகாப்பு கொள்கையும், புவிசார் அரசியலும் என்பவற்றில் பாரிய ஆராச்சி  கட்டுரைகள் எழுதியவர்கள் ஒதுங்கிவிட்டார்கள். அதாவது  ஊழலில் தோய்ந்த கருணாநிதி கண்ட  காட்சி  மத்தியில் காங்கிரசுக்கு காத்திருக்கிறது என்பதை இவர்கள் உணர தலைப்பட்டிருக்கிறார்கள். அந்த சங்கடத்திலிருந்து வெளியேற, நிலாந்தன் புதிய பாதை கண்டுபிடிக்க முயல்கிறார். இதனால் தவிர்க்க முடியாமல், வழமையான  குயக்க ஆராச்சியாளர்கள் மாதிரியே, முன்னு பின் முரனாக எழுதுகிறார். அதுவும் வேறு வேறு கட்டுரைகளில் அல்ல . ஒன்றிலேயே.. மொத்ததில் நிலாந்தனின் வெளியுறவுக்கொள்கை என்பது  ஒரு நீலவானம். அவரின் வசனத்தில் அதி சீனாவின் இலகுக் கடனில்தான் ஆரம்பிக்கிறது. அங்கே கொள்கை ஒன்றும் இல்லை.  இந்த கடன் எந்த ஒரு பொருளாதார குறிக்கோளை வைத்தும் படுவதல்ல.   இது மகிந்தாவின் மடி நிரப்ப படும் கடன். இந்த கொள்கையால்தான் நுரை சோலை அனல் மின்னிலையம் பறி போகிறது.  சாம்பூர் மின்னிலையம் போவிட்டது. இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றொல், டீசல் போன்றவற்றை இறக்கத் தயாராகி வருகிறது. இதில் வெற்றிகரமான வெளியுறவு கொள்கை ஒன்று  பொதிந்திருக்கிறது என்று நிலாந்தன் தன்னைத்தான் முட்டாளாக்குகிறார். IMF, Wold bank கடன் கொடுப்பதுண்டு. நிபந்தனைகள் அதிகம். மேற்கு நாடுகள் கடன் கொடுப்பதில்லை. அவர்களின் தனியார் கம்பனிகள் முதலிடும். அவற்றைப் பெற்றுக்கொள்ள  அவர்களுடன் நிலையான பொருளாதார உடன்படிக்கைகளில் இறங்க வேண்டும்.கணக்குப் பரிசோதனை, வங்கி நடை முறை, உள்நாட்டு வியாபார சட்டங்கள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய மாற்றப்படவேண்டும். முதுகில் புண் இல்லையாயின் வேலிக்குள்ளால் நுளைவது ஒன்றும் கடிமானது அல்ல. ஆனால் மடி நிரப்ப கேட்கும் கடன்கள் இதில் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும்.

சீனா கடன்கொடுக்கும். சீனா நேராக முதலிட விரும்பாது. கம்யூனிச நாடான சீனா அதை பெரிய எடுப்புகளில் நாடுகளில் செய்யவில்லை.  ஆனால் இலங்கையின் கதை வேறு. இந்தியா சீனாவை விட நல்ல கடன்கள் கொடுக்க வந்தும் மகிந்தா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நிலாந்தன் சொல்வது  போன்ற பனிமலை கதையால் அல்ல.  இந்திய அரசின் உதவிகளை இலங்கை ஏற்கவில்லை. இந்திய கம்பனிகளை அரசு ஏற்கவில்லை. சர்வதேச கம்பனிகளை அரசு ஏற்கவில்லை. IMF உடன் அரசால் ஒத்து போக முடியவில்லை. எனவவே தொட்டம் தொட்டமாக முழந்தாளுக்கும், மோட்டந்தலைக்கும் முடிச்சு போட்டு விளகங்கள் கொடுப்பதால் பலன் இல்லை. மகிந்தவின் அரசு முனேற்றத்திற்கு கடன்  வாங்க போகவில்லை. இதானால் கடன் வாங்க முடியாமல் தவிக்கிறது. இது சீனாவையும் உள்ளடக்கித்தான்.  சீனாவும் இப்போ இலங்கைக்கு எளிதில் கடன் கொடுக்க விரும்பவில்லை.  தனது மடியை நிறைக்க பிச்சைக்கு போகும் அரசுக்கு சீனா வற்றாத ஊற்றாக  கடன் கொடுக்கும் என்பதும் உண்மை அல்ல. (மேலும் நிலாந்தனின் கடன் கொள்கையில்  வெளிநாடு சீனாவாக மட்டும்தான் என்றிருக்க முடியும். அதை வெளிநாட்டு கொள்கை என்பதை நிலாந்தன் சீனநாட்டுக்கு கொள்கை என்று  பெயரை மாற்றிவிட்டுத்தான்  கட்டுரையை தொடரவேண்டும். ) அமெரிக்கன் கம்பனி ஒன்று மாத்தள விமான நிலையம் கட்டுவதாயின் அவர்கள் இலாப-நட்ட ஆராய்சி செய்தாக வேண்டும். அதன் பின்னர் கம்பனி 51% அரசு 49% பங்கு போட வேணும் என்பார்கள். அரசுக்கு கடன்பட தனியார் வங்களுக்கு தம் நாட்டு அரசுகளை ஒப்பந்தங்கள் செய்ய வைப்பார்கள். இலாபம் 25, 50, 60 வருடங்களுக்கு பங்கு தொகையை வைத்து பிரிக்கப்படும்.   சீனா கடன்கொடுத்து மேலே வந்த நாடு ஒன்றை இதுவரையில் தெரியாது. எனவே வெளிநாட்டுக்கொளகையாக ஒன்றை ஆரம்பித்துவைக்கும் எந்த நாடும் சீனாவுடன் கடன் பட்ட நாடுகளின் சரித்திரத்தை அறியாமல் செயமாட்டார்கள்.  இலங்கைக்கும் வெளிநாட்டுக் கொள்கை இருப்பதாக நிலாந்தன் காட்டுவது  வெறும் உருவகதையே. சீன இன மக்களால்  ஆளப்படும் சிங்கபூர், காங்கொங், தாய்வான்  போன்றவை சீனாவுக்கு கடன் கொடுக்க கூடிய பொருளாதார முன்னேற்றத்தில் இருக்கின்றன. அவை சீனாவிடம் கடனுக்கு போகவில்லை. அதில் இருந்து விளங்க வேண்டும்  சீனக் கடன்களின் நுடபங்களை பற்றி.

ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன்

25 பெப்ரவரி 2013

சேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ''இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்'

அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு சிறிய அழகிய, கவர்ச்சி மிக்க தீவின் தற்காப்பு  உத்திகளின் திரட்சியும், தொடர்ச்சியுமே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும்.

இலங்கையில் ஒரு வெளியுறவு கொள்கையும் இல்லை. சிறிமாவும் மகிந்தாவும், சீனாவின் கால்களில் விழுந்தார்கள். இவர்கள் இருவரையும் விட இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள் சீனாவுடன் பெரிய உறவு வைக்கவில்லை. மகிந்தா காலம் (2009) வரைக்கும் கிட்டத்தட்ட ஒரு பெரிய வியாபாரமும் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருக்கவில்லை.  நிலாந்தனின் "கவர்ச்சி. திரட்சி, தொடர்ச்சி" நல்ல அடுக்கு மொழி.கள்.  ஆனால் இலங்கையின் SLFP, அதிலும் சிறிமாவும், மகிந்தாவும் தான் சீனாவிடம் மண்டியிட போனவர்கள்.   

ஜெனிவாவில் இக்கொள்கையானது மறுபடியும் ஒரு முறை அடுத்த மாதம் சோதனைக்கு உள்ளாகப் போகிறது. இலங்கைத்தீவின் மூத்த சமூகச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது போல், ஜெனிவாவைப் பற்றிய ஒரு பயப் பிராந்திக்குள் கொழும்பு சிக்குண்டிருக்கிறது. இப்பயப் பிராந்தியை உருவாக்கியதிலும் பெருப்பிப்பதிலும் ஊடகங்களுக்கு கணிசமான பங்குண்டு. வெளியிலிருந்து வரும் இவ் அச்சுறுத்தலை கொழும்பானது எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மூத்த மற்றும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்கத்திற்கு கருத்துக்களைக் கூறவும் ஆலோசனை கூறவும் இடித்துரைக்கவும் முற்பட்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஆனால், இலங்கை தீவு பிரிட்ஷ்காரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் பின் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இவ் அச்சுறுத்தலை ஏதோவொரு விதத்தில் வெற்றிகரமாக எதிர்கொண்டதே இலங்கைத் தீவின் நவீன வரலாறாக உள்ளது.

அரசாங்கம் மூத்த கொள்கை வகுப்பளர்களிடம் சென்று கொள்கைகள் வகுத்து கொள்வதாக இன்னொரு படம் காட்டுகிறார் நிலாந்தான். நிலாந்தனுக்கு உண்மையில் அவர்கள் யார் என்பது தெரியாது.   தயான் ஜெயதிலகா, ரஜிவ விஜசிங்கா, வாசுதேவ மாதிரி யாரும் மகிந்தாவுடன் இல்லை.  எனவே இந்த மூத்த ராஜதந்திரிகள்  சில வகுப்புவத மொட்டைகளும், மேவின் சில்வா, சம்பிக்க , விமலுமாக மட்டும்தான் இருக்க முடியும், மிகுதி முழுவதும்றைலங்கை அரச குடும்பத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுகிறது. அதில் மகிந்தா சமரசிங்கா, பீரிஸ் போன்றவர்களுக்கு கூட இடம் இல்லை.

உதாரணமாக 1971இல் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின்போது அப்போது ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசாங்கம் சீனாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது.(இதில் நிலாந்த ந் கதையை திரிக்கிறார். கல்வரம் முஅடக்கபடும் வரையும் எந்த சீனத்துர்ப்பும் இலனகைக்குள் வரவில்லை. ஆரம்பத்தில் தமிழரும் பின்னர் இந்த்தியாவும் மட்டும்தான் இதில் பிர்தான பாகம் வகித்தது. சீனா வ்ந்தது என்பது பச்சை பொய். அது இந்திரா காந்திகாலம் என்பதை நிலாந்தன் தெரிய வேண்டும்)  அதைப் போலவே, 4ஆம் கட்ட ஈழப்போரின்போது இப்போதுள்ள அரசாங்கமானது சீனவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. மேற்கு நாடுகளிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதாவது, உள்நாட்டில் அச்சுறுத்தல்கள் எழும்போதும் வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வரும்போதும் தங்களுக்கிடையில் பகை நிலையில் காணப்படும் வெளிச் சக்திகளை வெற்றிகரமாக கையாண்ட ஓர் அனுபவம்  கொழும்பிற்கு உண்டு. (இதில் பாரிய இராஜதந்திர பாகம் கதிர்காமரினது மட்டும். இந்த அரசு இந்தியாவையோ அமெரிக்காவையோ ராஜதந்திரத்தில் சரியாக கையாளவில்லை. அமெரிக்கா தனது ஏமாற்றதை காட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தியா விரைவில் ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் இருக்கு-  இந்தியா, அமெரிக்கா போரில் தாமாக வந்துதான்  இலங்கைக்கு உதவினார்கள். இலங்கை  இழுத்துவரவில்லை.) 

இதைப் போலவே, 1988இல் இந்தியா ''ஓபரேஷன் பூமாலை' என்ற பெயரில் உணவுப் பொதிகளை வானிலிருந்து போட்டபோது ஏற்பட்ட அச்சுறுத்தலை ஓர் உடன்படிக்கையாக மாற்றிய வெற்றிகரமான அனுபவமும் கொழும்பிற்கு உண்டு. தமிழர்கள் இந்தியப் படை வரும் என்று காத்திருந்த ஓர் காலகட்டத்தில் வரவிருந்த படையை அமைதி காக்கும் படையாக மாற்றியதில் கொழும்பிற்கு கணிசமான பங்குண்டு. மேலும் மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும், தமிழர்களோடு மோதவிட்டதும் கொழும்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள்தான். எனவே, வெளி அச்சுறுத்தல்களையும் வெளியாரின் பின்பலத்தோடு உள்ளிருந்து எழும் அச்சுறுத்தல்களையும் வெற்றிகரமாக கையாண்ட ஒரு பாரம்பரியம் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டு. இதன் பின்னணியில் வைத்தே இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறதென்பதையும் பார்க்க வேண்டும்.( ரஜீவை ஏமாற்றியது J.R. இவர் 100% மேற்கு நாடுகள் சார்பானவர். இந்திராகந்தி மேற்குநாடுகளுக்கு எதிரானவர். J.R. மகிந்தா மாதிரி அல்லாமல் ஒரு சர்வதேச இராஜதந்திரி. இதேபோலத்தான் கதிர்காமரும். இவர்கள் கடைப்பிடித்த வெளிநாட்டுகொள்கை நிலாந்தன் எழுத்தும் சிறிமா, மகிந்தா சீன அடிவருடல்களுக்கு மாறானது. இதில் நிலாந்தன் காட்டும் ஒற்றுமை இன்னொரு முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்குமான முடிச்சே. J.R  ஏமாற்றியது உண்மை. சோனியாவை மகிந்தா ஏமாற்றவில்லை. சோனியாகூட்டம் மகிந்தாவால் எவ்வளவு ஒதுக்கப்பட்ட பின்னரும் இன்னும் போகத்தாயாரில்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இதில் அறிவுவழியான ஏமாற்றம் ஒன்றும் நடக்கவில்லை )

கொழும்பிலுள்ள கே. கொடகே போன்ற ஓய்வு பெற்ற மற்றும் மூத்த கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப்படி கொழும்பானது தன்னுடைய சொந்த நலன்களை முன்நிறுத்தியே முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற அபிப்பிராயம் தூக்கலாகக் காணப்படுகிறது.பேரரசுகளிற்கிடையிலான மோதுகளத்தில் சிறிய இலங்கைத்தீவானது தனக்கிருக்கக்கூடிய ''லக்ஸ்மன் ரேகையை'த் தாண்டிச்சென்று ஒதோவொரு பேரரசை ஆதரிப்பதன் மூலம் மற்றொரு பேரரசின் பொறிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுவது தெரிகிறது.(இங்கே கொழும்பின் நலன் என்ப்படுவது மகிந்தா குடும்ப நலனா அல்லது இலங்கை பொது மக்கள் நலங்களா என்பதை நிலாந்தன் கவனிக்க மறுக்கிறார்)

மூத்த ராஜதந்திரிகளான  கொடகே போன்றோர் இந்திய – அமெரிக்க உறவின் நெருக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முன்னாள் அமெரிக்க இராஜங்கச் செயலாளரான பேர்ண்ஸ் கூறியது போல், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவெனப்படுவது பூகோள பங்காளித்துவமாக வளர்ச்சி பெற்றிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எனவே, அமெரிக்காவைக் கையாள்வது என்பது இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவை வெற்றிகரமாக் கையாள்வதுதான். அதாவது, பனிப் பாறையைக் கையாள்வதுதான் என்பதை அவர்கள் அரசாங்கத்திற்கு சூசகமாக உணர்த்த முற்படுகிறார்கள். (இதில் ஒன்றும் பெரிய உண்மை இல்லை. இலங்கையில் அமெரிக்க தலையீட்டை இந்தியா இதுவரை ஓரவு சமாளித்தது. ஆனல் வரவிருக்கும் பிரேரணையில் இந்தியா கையறு நிலையில். எனவே மேற்கு நாடுகளுடன் ஒத்து போகத்தயாராகிவிட்டது. இதில் இலனகையால் இந்தியாவை மிரட்டி எதுவும் செய்ய முடியவில்லை)

அரசாங்கத்திற்கு இப்போதுள்ள அடிப்படைப் பிரச்சினையே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதா அல்லது தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதா என்பதல்ல. மாறாக, சீனாவை கைவிடுதா? இல்லையா என்பதுதான். இதை இன்னும் யதார்த்த பூர்வமாக கூறின் சீனாவை எந்தவிற்கு அரவணைப்பது அல்லது எந்தளவிற்குக் கைவிடுவது என்பதே. சிங்கள வெகுசனங்களின் மத்தியில் சீனாவைக் குறித்து மதிப்பார்ந்த ஒர் மனப்பதிவே உண்டு. மங்கோலிய இன மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு கௌரவமான உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு பௌத்தமும் ஒரு காரணம். மேலும் சீனாவானது சிங்கள மக்களைப் பொறுத்தவரை என்றைக்குமே ஒரு பனிப்பாறையாக இருந்ததில்லை.  தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்ற கருத்து இந்தியாவின் மீது சலிப்பும், கோபமும் அடைந்திருக்கும் சில மூத்த தமிழ் பிரஜைகள் மத்தியிலும் காணப்படுகிறது. (சரித்திர காலத்தில் இந்தியா என்ற நாடு இருக்கவில்லை. கடந்த 500 ஆண்டுகள் இலங்கை அன்னியர் ஆட்சியில் இருந்தது. சுதந்திரத்தின் பின்னர் தான் இந்தியா உருவானது. இந்தியா மீது பகமை உணர்வு பெரிதாக வந்தது J.R கால்த்தில். சிறிமா காலத்தில் சிறிமாவும் இந்திராகாந்தியும் தங்களை நண்பிகளாகவே காட்டினார்கள். எனவனிந்த பனிப்பாறை கதையின் பெரும் பகுதியும் கற்பனை. சிங்களம் புத்தநாடாக இருந்ததால் வடக்கில் இருந்த தமிழர்களின் சமயத்தை கொண்டிருந்த இந்தியா மீது சற்று கவனமாகத்தான் நடந்தது. இதை தாய்வான்- சீனா, அமெரிக்கா-கியுபா உறவாக காட்ட முடியாது. சீனா உலகின் வட்டிக்காற செட்டியானது ராஜபக்சா , சந்திரிக்கா கலங்களிலேயே. எனவே நிலாந்தனின் சரித்திரம் இங்கே உபயோகம் இல்லாத ஒரு கதை அளப்பு மட்டுமே.)

சீனாவானது இலங்கைதீவை வெளிப்படையான ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு அணுகத்தேவையில்லாத அளவிற்கு இப்பிராந்தியத்தில் இலங்கைத் தீவிலிருந்து கணிசமான அளவு தொலைவில் அமைந்திருக்கிறது.  அதோடு, உலகளாவிய நிதி முலாதானத்தின் விரிவாகத்தைப்பொறுத்த வரை சீனாவானது சிறிய, வறிய மற்றும் நலிந்த ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் மத்தியில் நிகரற்ற ஒரு கொடையாளியாக எழுச்சிபெற்று வருகின்றது. கம்போடிய நாட்டின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுடைய ஒருவர், தன் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகின்  மிக நெகிழ்ச்சியான ஒரு கொடையாளி நாடாக சீனா உருவாகிவிட்டது. (சீனா சிறிய நாடுகளுக்கு மலிவான பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. ஆனால் எந்த நாட்டிலும் பெரிய சமூக சேவையில் இன்னும் இறங்கத்தொடங்கவில்லை. சீனாவின் பிரபல நட்பு, சிதைந்த அரசியல் நாடுகளுடன் மட்டுமே. வியாபார உறவு மேற்கு நாடுகளுடந்தான் பிரதானமாக. இதனால்தான் மேற்குநாடுகள் இன்னமும் சீனாவை வைத்து பாதுகாப்பு சபையிலும் சட்டங்கள் இயற்றுகின்றன)  

மேற்கத்தையே நாடுகள் கொடை வழங்கும்போது  அதற்குரிய முன்னேற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் என்று பல படிமுறைகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். குறிப்பாக, உதவி பொறும் நாடானது ஜனநாயகம், பண்மைத்துவம், நிதி நடவடிக்கைகைளில் வெளிப்படைத் தன்மை போன்ற முன் நிபந்தனைகளுக்கு உடன்படி வேண்டியிருக்கும். ஆனால், சீனா என்ற கொடையாளியைப் பொறுத்த வரை இப்படிப்பட்ட வரையறைகள், படிமுறைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று நம்பப்படுகிறது. நேட்டோ விரிவாக்கமானது படைகளை நகர்த்துகிறது. சீனாவிரிவாக்கமானது சந்தையின் எல்லைகளைத்தான் நகர்த்துகிறது. எனவே, சீனாவிடம் கடன் பெறும் எந்தவொருசிறிய நாடும் இலகுவாக அந்த ராஜதந்திர கடப்பாட்டுக்குள் இருந்து வெளியில் வரமுடியாத ஒருநிலையே காணப்படுகிறது.இத்தகையதொரு பின்னணிக்குள் வைத்தே கொழும்பிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான உறவை ஆராயவேண்டும்.(இதில் நிலாந்தன் வர்த்தக உறவை கொடையாளிகள் என்று தப்பு கணக்கு போட்டு எழுதுகிறார்.  இது நிலாந்தனுக்கு அரசியல் விளங்கும் படி நிலையை காட்டுகிறது) கொடை என்பது திரும்ப பெறப்பட போவத்தில்லாத உதவிகள். உதாரணத்திற்கு அமெரிக்கன் CARE இப்படியானதொன்று. மேற்குநாடுகளின் NGOக்கள் இதில் அடங்கும். சீனா கொடுத்த  BMICH, Lotus Cultural Center இவற்றில் அடங்கும். இதிலும் சீனா செய்வதற்கும் மேற்கு நாடுகள் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அவை தேவையை அறிந்து மட்டும்தான் கொடுப்பவை. சீனா தனக்கு அது ஒரு தொழிலாக இருக்கும் என்றால் ஒரு உதவி செய்யும்

இப்போதுள்ள பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு கால ராஜிய நடவடிக்கைகளை கொகுத்தும், பகுத்தும் நோக்கின் அது அகவயமான முடிவுகளையும் புறவயமான முடிவுகளையும் கலந்து எடுக்கும் ஓர் அரசாங்கமாகவே காணப்படுகிறது. ஆசிய மையச் சிந்தனை அல்லது உள்நாட்டிலுள்ள தீவிர தேசிய வாத சக்திகளுக்குத் தலைமை தாங்குவது என்பவை எல்லாம் சிறிலங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சிப் பரம்பரியத்தின் ஏற்கனவே, இருந்து வந்த ஒருபோக்குத்தான். இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றிகளின் கைதியாகவுள்ளது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது கட்டியொழுப்பியிருக்கும் வீரப் படிமம் நிகரற்றதும், பிரமாண்டமானதும், மிகத் தூலமானதுமாகும். எனவே, தனது வெற்றிச் சிறையிலிருந்து இறங்கி வருவதில் இந்த அரசாங்கத்திற்கு என்று சில அடிப்படையான நடைமுறை சார் வரையறைகள் உண்டு. அது அகவயமான முடிவுகளை எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனாலும், சிறிய இலங்கைத்தீவின் வெற்றிகரமான வெளியுறவுத்துறை பாரம்பரியத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தலைகீழான முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுக்கலாமா? என்பது சந்தேகமே. அப்படியொரு விலகலான முடிவை எடுக்க முற்பட்டதானால்தான், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் வந்த  ஆண்டுகளில் ஜெனிவாவில் இந்த அரசாங்கம் கண்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு வந்த கண்டத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகக் கடக்க முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டையும் இலகுவாக கடக்க முடியாதிருக்கும். ஏனெனில், இந்த ஆண்டில் வரப்போகும் கண்டமானது, கடந்த ஆண்டை விட கடினமானதாக இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. அதைக் கடப்பதென்றால் மேற்கு நாடுகளை அனுசரித்துப்போகும் சில முடிவுகளையாவது எடுக்க வேண்டி வரும்.

மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவதென்றால் அதற்கு இரண்டு தளங்கள் உண்டு. முதலாவது அடிப்படையானது. அதாவது, சீனாவை ஏதோ ஒரு அளவிற்கு தள்ளிவைப்பது. இரண்டாவது தமிழர்கள் சம்பந்தப்பட்டது. அதாவது இச்சிறு தீவினுள் எந்த கதவினூடாக மேற்கு நாடுகள் நுழைய முற்படுகின்றனவோ அந்த வழியில் ஏதும் சுதாகரிப்புக்களைச் செய்வது. இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அதைக் கண்காணிப்பதற்குமான ஏதோ ஒரு பொறியமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, அதில், மேற்கின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், அத்தகைய ஏதாவது ஒரு கண்காணிப்புப் பொறிமுறைக்கூடாகத்தான் மேற்குநாடுகள் இச்சிறு தீவினுள் தமது பிடியை மேலும் இறுக்க முடியும். 

இச்சிறிய அழகிய தீவை சக இனங்களுடன் கௌரவமான, நீதியான வழிகளில் பங்கிடத் தயாரில்லை என்றால் வெளியாரிடம் பணிவதைத்தவிர வேறு வழிகள் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எனப்படுவது நீதியின் மீதே கட்டியெடுப்பப்படுகின்றது. நீதி இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருப்பதில்லை. சமுகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண முடியாத நாடு எப்பொழுதும் வெளியாருக்கு திறந்துவிடப்பட்டே இருக்கும். வெளியாருக்குத் திறந்தவிடப்பட்ட ஒரு நாடு என்றைக்குமே சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கையை வைத்துக்கொண்டிருக்க முடியாது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89019/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வெளியுறவு கொள்கையும், பாதுகாப்பு கொள்கையும், புவிசார் அரசியலும் என்பவற்றில் பாரிய ஆராச்சி  கட்டுரைகள் எழுதியவர்கள் ஒதுங்கிவிட்டார்கள். அதாவது  ஊழலில் தோய்ந்த கருணாநிதி கண்ட  காட்சி  மத்தியில் காங்கிரசுக்கு காத்திருக்கிறது என்பதை இவர்கள் உணர தலைப்பட்டிருக்கிறார்கள். அந்த சங்கடத்திலிருந்து வெளியேற, நிலாந்தன் புதிய பாதை கண்டுபிடிக்க முயல்கிறார். இதனால் தவிர்க்க முடியாமல், வழமையான  குயக்க ஆராச்சியாளர்கள் மாதிரியே, முன்னு பின் முரனாக எழுதுகிறார். அதுவும் வேறு வேறு கட்டுரைகளில் அல்ல . ஒன்றிலேயே.. மொத்ததில் நிலாந்தனின் வெளியுறவுக்கொள்கை என்பது  ஒரு நீலவானம். அவரின் வசனத்தில் அதி சீனாவின் இலகுக் கடனில்தான் ஆரம்பிக்கிறது. அங்கே கொள்கை ஒன்றும் இல்லை.  இந்த கடன் எந்த ஒரு பொருளாதார குறிக்கோளை வைத்தும் படுவதல்ல.   இது மகிந்தாவின் மடி நிரப்ப படும் கடன். இந்த கொள்கையால்தான் நுரை சோலை அனல் மின்னிலையம் பறி போகிறது.  சாம்பூர் மின்னிலையம் போவிட்டது. இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றொல், டீசல் போன்றவற்றை இறக்கத் தயாராகி வருகிறது. இதில் வெற்றிகரமான வெளியுறவு கொள்கை ஒன்று  பொதிந்திருக்கிறது என்று நிலாந்தன் தன்னைத்தான் முட்டாளாக்குகிறார். IMF, Wold bank கடன் கொடுப்பதுண்டு. நிபந்தனைகள் அதிகம். மேற்கு நாடுகள் கடன் கொடுப்பதில்லை. அவர்களின் தனியார் கம்பனிகள் முதலிடும். அவற்றைப் பெற்றுக்கொள்ள  அவர்களுடன் நிலையான பொருளாதார உடன்படிக்கைகளில் இறங்க வேண்டும்.கணக்குப் பரிசோதனை, வங்கி நடை முறை, உள்நாட்டு வியாபார சட்டங்கள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய மாற்றப்படவேண்டும். முதுகில் புண் இல்லையாயின் வேலிக்குள்ளால் நுளைவது ஒன்றும் கடிமானது அல்ல. ஆனால் மடி நிரப்ப கேட்கும் கடன்கள் இதில் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும்.

சீனா கடன்கொடுக்கும். சீனா நேராக முதலிட விரும்பாது. கம்யூனிச நாடான சீனா அதை பெரிய எடுப்புகளில் நாடுகளில் செய்யவில்லை.  ஆனால் இலங்கையின் கதை வேறு. இந்தியா சீனாவை விட நல்ல கடன்கள் கொடுக்க வந்தும் மகிந்தா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நிலாந்தன் சொல்வது  போன்ற பனிமலை கதையால் அல்ல.  இந்திய அரசின் உதவிகளை இலங்கை ஏற்கவில்லை. இந்திய கம்பனிகளை அரசு ஏற்கவில்லை. சர்வதேச கம்பனிகளை அரசு ஏற்கவில்லை. IMF உடன் அரசால் ஒத்து போக முடியவில்லை. எனவவே தொட்டம் தொட்டமாக முழந்தாளுக்கும், மோட்டந்தலைக்கும் முடிச்சு போட்டு விளகங்கள் கொடுப்பதால் பலன் இல்லை. மகிந்தவின் அரசு முனேற்றத்திற்கு கடன்  வாங்க போகவில்லை. இதானால் கடன் வாங்க முடியாமல் தவிக்கிறது. இது சீனாவையும் உள்ளடக்கித்தான்.  சீனாவும் இப்போ இலங்கைக்கு எளிதில் கடன் கொடுக்க விரும்பவில்லை.  தனது மடியை நிறைக்க பிச்சைக்கு போகும் அரசுக்கு சீனா வற்றாத ஊற்றாக  கடன் கொடுக்கும் என்பதும் உண்மை அல்ல. (மேலும் நிலாந்தனின் கடன் கொள்கையில்  வெளிநாடு சீனாவாக மட்டும்தான் என்றிருக்க முடியும். அதை வெளிநாட்டு கொள்கை என்பதை நிலாந்தன் சீனநாட்டுக்கு கொள்கை என்று  பெயரை மாற்றிவிட்டுத்தான்  கட்டுரையை தொடரவேண்டும். ) அமெரிக்கன் கம்பனி ஒன்று மாத்தள விமான நிலையம் கட்டுவதாயின் அவர்கள் இலாப-நட்ட ஆராய்சி செய்தாக வேண்டும். அதன் பின்னர் கம்பனி 51% அரசு 49% பங்கு போட வேணும் என்பார்கள். அரசுக்கு கடன்பட தனியார் வங்களுக்கு தம் நாட்டு அரசுகளை ஒப்பந்தங்கள் செய்ய வைப்பார்கள். இலாபம் 25, 50, 60 வருடங்களுக்கு பங்கு தொகையை வைத்து பிரிக்கப்படும்.   சீனா கடன்கொடுத்து மேலே வந்த நாடு ஒன்றை இதுவரையில் தெரியாது. எனவே வெளிநாட்டுக்கொளகையாக ஒன்றை ஆரம்பித்துவைக்கும் எந்த நாடும் சீனாவுடன் கடன் பட்ட நாடுகளின் சரித்திரத்தை அறியாமல் செயமாட்டார்கள்.  இலங்கைக்கும் வெளிநாட்டுக் கொள்கை இருப்பதாக நிலாந்தன் காட்டுவது  வெறும் உருவகதையே. சீன இன மக்களால்  ஆளப்படும் சிங்கபூர், காங்கொங், தாய்வான்  போன்றவை சீனாவுக்கு கடன் கொடுக்க கூடிய பொருளாதார முன்னேற்றத்தில் இருக்கின்றன. அவை சீனாவிடம் கடனுக்கு போகவில்லை. அதில் இருந்து விளங்க வேண்டும்  சீனக் கடன்களின் நுடபங்களை பற்றி.

மேற்குறித்த மேற்கோளில் உள்ளது நான் இணைத்த பதிவின் அல்லது எனது கருத்தின் ஒரு பகுதி அல்ல.

மல்லையூரான் பதியும்போது தவறுவிட்டாரா அல்லது எனது கருத்துப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்!

கிருபன்: உங்கள் கணனயில் பார்க்கும் போது நான் எனது கருத்துக்களை italicsல் எழுதி நிலாந்தனின் கருத்துக்களில் இருந்து வேறுபடுத்தியிருப்பது உண்மையில் தெரியவில்லையா அல்லது வழமை போல விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்: உங்கள் கணனயில் பார்க்கும் போது நான் எனது கருத்துக்களை italicsல் எழுதி நிலாந்தனின் கருத்துக்களில் இருந்து வேறுபடுத்தியிருப்பது உண்மையில் தெரியவில்லையா அல்லது வழமை போல விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா? :unsure:

இதில் விளங்காதது போன்று நடிப்பதற்கு ஒன்றுமில்லை.

கிருபன் சொன்னது போன்ற தோற்றத்தைத் தருமாறு பதிந்தது நீங்கள். அது italics இல் இருந்தால் உங்கள் கருத்து, இல்லையென்றால் எனது கருத்து என்ற விதண்டாவாதம் வேண்டாம். 

தங்கள் தவறைத் திருத்துமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கின்றேன் :wub:  

நீண்டநாட்களாக தொடர்ந்து சிங்களம் இராஜதந்திர ரீதியாக வெற்றி கொள்ள முடியாது என்பதை இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன.  

இருந்தும் நாம், தமிழர்கள், தொடர்ச்சியாக போராடவேண்டும் என்றும் சிங்கள அடக்குமுறைகள் காட்டுகின்றன. 

அப்படி போராடும்பொழுது வெற்றிகள் வந்தே தீரும்.

இதில் விளங்காதது போன்று நடிப்பதற்கு ஒன்றுமில்லை.

கிருபன் சொன்னது போன்ற தோற்றத்தைத் தருமாறு பதிந்தது நீங்கள். அது italics இல் இருந்தால் உங்கள் கருத்து, இல்லையென்றால் எனது கருத்து என்ற விதண்டாவாதம் வேண்டாம். 

தங்கள் தவறைத் திருத்துமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கின்றேன் :wub:  

விளங்காவிட்டால் வேறு கதை. விளங்காதமாதிரி நடித்தால் செய்ய ஒன்றும் இல்லை. என்ன நடந்தது என்று தெரிந்தபின்னர் பெரிய கணக்கர் மாதிரி கதைத்து விதண்டவாதம் விட்டால் நான் அதை கவனிக்கவேண்டியதேவை இல்லை.

நீங்கள் பதிந்தவையை அதன் மேலேதான் தான் இருக்கிறது.

அதில் திருத்துவதற்கு ஒன்றும் இல்லை.  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி நான் பதிய முடியாது. நிலாந்தனின் எழுத்தியதற்கு மட்டும்தான் எழுதியிருக்கிறேன் எனபதையும் கவனிக்க வேண்டும். யாழில் ஒருவர் இன்னொருவர் மாதிரி பதிந்து ஆள் மாறாட்டம் செய்ய முடியுமாயின் அதை யாரிடம் எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் தயவுசெய்து விளங்கிகொள்ளவும்.

Edited by மல்லையூரான்

தங்கள் கருத்தை எனது பெயருக்குள் போட்டு எழுதியது கள்ளக் கையெழுத்துப் போட்டுக் கடிதம் எழுதியது போன்று என்பது உங்களுக்குப் புரியவில்லை.

அந்தக் கருத்து இப்படி வந்திருக்கவேண்டும். மல்லையூரானுக்கு கருத்துப் பதிவதில் சிக்கல் உள்ளது என்பது தெரிகின்றது :icon_mrgreen: 

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வெளியுறவு கொள்கையும், பாதுகாப்பு கொள்கையும், புவிசார் அரசியலும் என்பவற்றில் பாரிய ஆராச்சி  கட்டுரைகள் எழுதியவர்கள் ஒதுங்கிவிட்டார்கள். அதாவது  ஊழலில் தோய்ந்த கருணாநிதி கண்ட  காட்சி  மத்தியில் காங்கிரசுக்கு காத்திருக்கிறது என்பதை இவர்கள் உணர தலைப்பட்டிருக்கிறார்கள். அந்த சங்கடத்திலிருந்து வெளியேற, நிலாந்தன் புதிய பாதை கண்டுபிடிக்க முயல்கிறார். இதனால் தவிர்க்க முடியாமல், வழமையான  குயக்க ஆராச்சியாளர்கள் மாதிரியே, முன்னு பின் முரனாக எழுதுகிறார். அதுவும் வேறு வேறு கட்டுரைகளில் அல்ல . ஒன்றிலேயே.. மொத்ததில் நிலாந்தனின் வெளியுறவுக்கொள்கை என்பது  ஒரு நீலவானம். அவரின் வசனத்தில் அதி சீனாவின் இலகுக் கடனில்தான் ஆரம்பிக்கிறது. அங்கே கொள்கை ஒன்றும் இல்லை.  இந்த கடன் எந்த ஒரு பொருளாதார குறிக்கோளை வைத்தும் படுவதல்ல.   இது மகிந்தாவின் மடி நிரப்ப படும் கடன். இந்த கொள்கையால்தான் நுரை சோலை அனல் மின்னிலையம் பறி போகிறது.  சாம்பூர் மின்னிலையம் போவிட்டது. இலங்கை சீனாவிடம் இருந்து பெற்றொல், டீசல் போன்றவற்றை இறக்கத் தயாராகி வருகிறது. இதில் வெற்றிகரமான வெளியுறவு கொள்கை ஒன்று  பொதிந்திருக்கிறது என்று நிலாந்தன் தன்னைத்தான் முட்டாளாக்குகிறார். IMF, Wold bank கடன் கொடுப்பதுண்டு. நிபந்தனைகள் அதிகம். மேற்கு நாடுகள் கடன் கொடுப்பதில்லை. அவர்களின் தனியார் கம்பனிகள் முதலிடும். அவற்றைப் பெற்றுக்கொள்ள  அவர்களுடன் நிலையான பொருளாதார உடன்படிக்கைகளில் இறங்க வேண்டும்.கணக்குப் பரிசோதனை, வங்கி நடை முறை, உள்நாட்டு வியாபார சட்டங்கள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய மாற்றப்படவேண்டும். முதுகில் புண் இல்லையாயின் வேலிக்குள்ளால் நுளைவது ஒன்றும் கடிமானது அல்ல. ஆனால் மடி நிரப்ப கேட்கும் கடன்கள் இதில் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும்.

சீனா கடன்கொடுக்கும். சீனா நேராக முதலிட விரும்பாது. கம்யூனிச நாடான சீனா அதை பெரிய எடுப்புகளில் நாடுகளில் செய்யவில்லை.  ஆனால் இலங்கையின் கதை வேறு. இந்தியா சீனாவை விட நல்ல கடன்கள் கொடுக்க வந்தும் மகிந்தா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நிலாந்தன் சொல்வது  போன்ற பனிமலை கதையால் அல்ல.  இந்திய அரசின் உதவிகளை இலங்கை ஏற்கவில்லை. இந்திய கம்பனிகளை அரசு ஏற்கவில்லை. சர்வதேச கம்பனிகளை அரசு ஏற்கவில்லை. IMF உடன் அரசால் ஒத்து போக முடியவில்லை. எனவவே தொட்டம் தொட்டமாக முழந்தாளுக்கும், மோட்டந்தலைக்கும் முடிச்சு போட்டு விளகங்கள் கொடுப்பதால் பலன் இல்லை. மகிந்தவின் அரசு முனேற்றத்திற்கு கடன்  வாங்க போகவில்லை. இதானால் கடன் வாங்க முடியாமல் தவிக்கிறது. இது சீனாவையும் உள்ளடக்கித்தான்.  சீனாவும் இப்போ இலங்கைக்கு எளிதில் கடன் கொடுக்க விரும்பவில்லை.  தனது மடியை நிறைக்க பிச்சைக்கு போகும் அரசுக்கு சீனா வற்றாத ஊற்றாக  கடன் கொடுக்கும் என்பதும் உண்மை அல்ல. (மேலும் நிலாந்தனின் கடன் கொள்கையில்  வெளிநாடு சீனாவாக மட்டும்தான் என்றிருக்க முடியும். அதை வெளிநாட்டு கொள்கை என்பதை நிலாந்தன் சீனநாட்டுக்கு கொள்கை என்று  பெயரை மாற்றிவிட்டுத்தான்  கட்டுரையை தொடரவேண்டும். ) அமெரிக்கன் கம்பனி ஒன்று மாத்தள விமான நிலையம் கட்டுவதாயின் அவர்கள் இலாப-நட்ட ஆராய்சி செய்தாக வேண்டும். அதன் பின்னர் கம்பனி 51% அரசு 49% பங்கு போட வேணும் என்பார்கள். அரசுக்கு கடன்பட தனியார் வங்களுக்கு தம் நாட்டு அரசுகளை ஒப்பந்தங்கள் செய்ய வைப்பார்கள். இலாபம் 25, 50, 60 வருடங்களுக்கு பங்கு தொகையை வைத்து பிரிக்கப்படும்.   சீனா கடன்கொடுத்து மேலே வந்த நாடு ஒன்றை இதுவரையில் தெரியாது. எனவே வெளிநாட்டுக்கொளகையாக ஒன்றை ஆரம்பித்துவைக்கும் எந்த நாடும் சீனாவுடன் கடன் பட்ட நாடுகளின் சரித்திரத்தை அறியாமல் செயமாட்டார்கள்.  இலங்கைக்கும் வெளிநாட்டுக் கொள்கை இருப்பதாக நிலாந்தன் காட்டுவது  வெறும் உருவகதையே. சீன இன மக்களால்  ஆளப்படும் சிங்கபூர், காங்கொங், தாய்வான்  போன்றவை சீனாவுக்கு கடன் கொடுக்க கூடிய பொருளாதார முன்னேற்றத்தில் இருக்கின்றன. அவை சீனாவிடம் கடனுக்கு போகவில்லை. அதில் இருந்து விளங்க வேண்டும்  சீனக் கடன்களின் நுடபங்களை பற்றி.

தான் தான் கைழுத்து திருட்டு விடுகிறார்.

நீங்கள் எழுதும் தபாலில் நான் சிலவற்றை குறிப்பிட்டு அதே தபாலில் பதில் எழுதி அனுப்ப முடியும் என்பதுதான் உங்களுக்கு ஆச்சரியமான புதுமையாக இருக்கிறது. உங்கள் கை எழுத்து தபாலில் இருக்கிறது எனபதற்காக் அதில் நான் எனது கைப்பட்ட எழுதி இருப்பவற்றுக்கு நீங்கள் கையெழுத்திட்டதாக .......?

பொழுது போகாத விதண்ட வாதம்.

மல்லையூரான்,

இன்னொருவரின் கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு அதனுள் உங்கள் கருத்தை எழுதுவது பொருத்தமற்றது. அது மேற்கோள் காட்டப்பட்ட கருத்தை எழுதியவரின் கருத்தாகவே தோற்றமளிக்கும். உங்களது கருத்தை மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கு வெளியே எழுதலாமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.