Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமாற்றப்படுவதை சர்வதேச சமுதாயம் அறியாதுள்ளது: இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ruwan_army.jpg

எஞ்சியுள்ள விடுதலை புலி இயக்கத்தின் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரோபாயங்களினால் தாம் எமாற்றப்படுவதை சர்வதேச சமுதாயம் அறியாதுள்ளது என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இறுதியாக சனல் - 4 தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட படங்கள்  விடுதலை புலி இயக்கத்தில் எஞ்சியுள்ளவர்களின் குழுக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெரும் செல்லாக்கு இருப்பதை காட்டியுள்ளது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.

இந்த படங்கள் உண்மையானவை எனில் எப்போதே அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இவர்கள் இதை சட்ட அமுலாக்கல் நிறுவனங்களிடம் பொருத்தமான சான்றுகளுடன் விசாரணைக்கென வழங்கியிருக்க வேண்டும். ஆனால் முன்னர் எதுவும் செய்யாத அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்விற்கு முன் வெளியிட்டிருப்பதன் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59618-2013-02-26-09-41-56.html

  • கருத்துக்கள உறவுகள்

"சிங்களத்தால் தாம் ஏமாற்றப்பட்டதை சர்வதேச ச்முதாயம் அறியத் தொடங்கியுள்ளது.." இப்படி வரவேண்டும்..!

படங்கள் இராணுவத்திற்குள்ளால்தான் வருகிறது. இவை கோபத்தபயா பாதுகாத்து வரும் பதுகாப்பு அமைச்சின் பெட்டகங்களில் இருந்து எடுத்து கொடுக்கப்பட்டவைதான்.

 

அவை எப்படி பாதுகாப்பு அமைச்சின் பெட்டகங்களை விட்டு வெளியேறி Channel-4 வரையும் சென்றன என்பதை நாம் எதிர்வு கூறி பிழை ஆகாமல்  அமைதியாக இருந்து வணிக சூரியாவும் மற்றய கொலைக் கும்பலும் ஆடப்போகும் நாடகத்தை பார்க்க தயாராக வேண்டும். 

 

ஐ.நா பிரேரணை இலங்கை அரசுக்கெதிரானது. இலங்கைகை இராணுவத்திற்கல்ல. அதாவது இது அரச குடும்பத்தால் பதில் சொல்லப்பட வேண்டியது. இலங்கையில் இப்போ சண்டை இல்லாதிருப்பதால் இராணுவ பேச்சாளர் வெளியே வந்து கூட இருக்க கூடாது. இராணுபேச்சாளர் வருவதின் கருத்து இலங்கை அரசு சிங்கள மக்களுக்கு ஒர் போர் உணர்வை தொடர்ந்து கொடுக்கவே.  சர்வதேசம் பல வழிகளால் இலங்கையில் நடப்பதை அவதானிப்பதால் தான், களங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் படி கேட்கிறார்கள். எனவே இந்த பேச்சு சர்வதேசத்திற்காக இருக்காது.

 

ஐ.நாவை அரச குடும்பம்தான் சந்திக்கிறது. இதற்கு இலங்கை ஊடகங்கள் பெரிய யால்ர போடுகிறாங்கள். ஆனால் நாடு முழுவதும் பெரிய வங்குரோத்தை சந்திக்கிறது. சந்தர்பவசமாக ஐ.நா பிரேரணை அந்த நேரம் வருவதால் அதை இழுத்து நாட்டின் அவலங்களை மூடி நாடகமாடுகிறது  அரச குடும்பத்தின் கைப்பாவையாகிய இந்த இராணுவம். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் ஒருக்கா எமாந்தது போதும்.இப்பதான் கொஞ்சமாய் விழிப்பு வருகுதுஇஅதுக்குள்ள இவர் வேற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

translation of #sinhala media article attacking @nofirezonemovie on #hrc22 #unlk #srilanka - The Human Rights Challenge. The Editorial | 'Dinamina'.

http://www.twitlonger.com/show/l5i7pq

srilanka conspiracy theory nonsense again - Three parties at work in Geneva against Sri Lanka by Keerthi Warnakulasooriya

http://www.twitlonger.com/show/l5i6k7

http://www.divaina.com/2013/02/26/news04.html

"சிங்களத்தால் தாம் ஏமாற்றப்பட்டதை சர்வதேச ச்முதாயம் அறியத் தொடங்கியுள்ளது.." இப்படி வரவேண்டும்..!

அறிய தொடங்கிய பின்னரும் இலங்கை விடயத்தில் சர்வதேசம் அவ்வளவாக மாறவில்லையே... சிங்களவர்களுக்கு செய்யும் உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டு தான் உள்ளார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.