Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுஎஸ் தீர்மானம் கொண்டு வருகிறது.. இந்தியா என்ன செய்கிறது?: டி. ராஜா

Featured Replies

டெல்லி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியாதான் தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி. ராஜா வலியறுத்தியுள்ளார்.

 

ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற இலங்கை போர்க் குற்றம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் பேசிய அவர், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் திட்டமிட்டபடியான தமிழர் இனப்படுகொலை தொடர்கிறது.

 

இலங்கையுடன் நட்பு பாராட்டுகிற இந்திய அரசு மனசாட்சியோ பதில் சொல்லட்டும்.. தமிழர் இனப்படுகொலைக்கு உதவுகிறீர்களா? கடந்த ஆண்டு ஜெனிவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. யாழ்ப்பாண மாணவர்கள் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊடகங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சுதந்திர திஅன் விழாவில் பேசிய ராஜபக்சே, தமிழர்களுக்கு சுயாட்சி கிடையாது என்கிறார். ஆனால் நீங்களோ 13-வது அரசியல் திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.. எதற்காக நீங்கள் தமிழர்களை ஏமாற்றுகிறீர்கள்? இந்தியா 13-வது அரசியல் திருத்தம் என்று பேசுவதே ஏமாற்று வேலை. இலங்கையில் ராணுவத்தால் பெண்கள் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.

 

அந்த நாட்டில் புத்தர் சிரிக்கவில்லை. ரத்தக்கண்ணீர் வடிக்கிறார். இந்தியாவால் கட்டிக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிற வீடுகள் தமிழர்களுக்காக கிடைத்திருக்கிறது? தமிழர் பாரம்பரியாக வாழும் பகுதிகளில் ராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது.. தொடர்கிறது..

 

தமிழரின் நிலங்கள், வீடுகள் பறிக்கப்பட்டு தமிழரின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர் தேவாலயங்கள் அழிக்கப்பட்டு, கோயில்கள் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன.

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது.. அதை இந்தியா ஆதரிக்கிறது.. இது மிகப் பெரிய அவமானமாகும். இலங்கைக்கு எதிராக என்னுடைய இந்தியா என்ன செய்தது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 

ஈழத் தமிழர்களை கைவிட்டுவிட்டது இந்தியா. இந்திய அரசு இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/27/india-d-raja-lashed-government-on-lankan-170541.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tamil.oneindia.in/news/2013/02/27/india-d-raja-lashed-government-on-lankan-170541.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எங்களுக்கு ஒண்டும் செய்யத் தேவையில்லை!

 

தாயுமானவ சுவாமிகள் சொன்னது போலச் 'சும்மாயிரு' ந்தாலே போதும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது: டி.ராஜா
உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.


இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அரசு செய்து வரும் துரோகத்தை மறைத்து தமிழ் சமூகத்தை ஏன் மத்திய அரசு ஏமாற்றவேண்டும்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது. அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. 

தமிழரை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ் சமுகத்தை அரசு ஏன் ஏமாற்றுகிறது. 

இலங்கையில் ரத்த ஆறு ஓடுகிறது. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட வேண்டும். 

இலங்கையில் சுதந்திரமாக தேர்தல் நடப்பதில்லை. இலங்கை தமிழர்களின் அடையாளங்கள், பாரம்பரிய உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3231



 

Edited by nunavilan

  • தொடங்கியவர்

ராஜ்யசபாவில் நடைபெற்ற ஈழத்தமிழர் பற்றிய இன்றைய விவாத்தில் பேசிய அனைவரையும் விட டி.ராஜா பேச்சு மிக முக்கியமானது.அவை

1.இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்டு நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலை.

2.இப்பொழுது அங்கு நடைபெற்று கொண்டிருப்பது கலாச்சார இனப்படுகொலை. 

3.இன்னும் இலங்கை தனது அடாவடித்தனத்தை நிறுத்தவில்லை என்பதற்க்கு சமீபத்தில் யாழ்பானத்தில் தமிழ் மாணவர்களின் மீது நடந்த தாக்குதலே சான்று.

4.பிப்.14 2013 இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் தர முடியாது.13வது சட்டதிருத்தை இலங்கை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளாது என்று ராசபக்சே அறிவித்த பின்னும் இன்று வெளிவிவாகார அமைச்சர் சல்மான் குர்ஸித் 13 சட்டத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லுவது இந்த அரசு இலங்கை தமிழர்களின் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது.மேலும் இந்த விசியத்தில் இந்திய மக்களை முட்டாளாக்குகிறது இந்த காங்கிரஸ் அரசு.

5.ஹிட்லர் செய்யாத கொடுமையை தமிழ் பெண்களின்(பாலியல்)மீது இலங்கை இராணுவம் செய்கிறது.

6.இப்பொழுது இலங்கையில் 19,000 விதவைகள் உள்ளனர் இவர்களை பற்றி இராசபக்சே அரசு கவலைபடவில்லை.

7.இலங்கையில் போரின் போது உள்நாட்டிலேயே அகதிகளானவர்களுக்கு இதுவரை இராசபட்சே ஏதுவும் செய்யவில்லை.அன்னால் இதை காரானம் காட்டி இந்தியாவிடம் பல நூறு கோடி வாங்கிகொண்டு இலங்கையில் சீனாவை வளர்க்கிறது இந்த அரசு.

8.அங்கே மிக வேகமாக சிங்கள குடியேற்றமும் இராணுவமயமும் நடக்கிறது.

9.தமிழர்களின் நிலங்கள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

10.தமிழர்களின் அடையாளங்களும் இந்து,முஸ்லிம் மற்றும் கிறுஸ்துவ கோவில்களும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

11.இத்தனைக்கு பிறகும் இந்தியா என் இந்தியா இலங்கை நட்பு நாடு என்று சொல்லுவது நமக்கு மானசாட்சியே இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

12.இதன் பின்னும் அமெரிக்க கொண்டுவறும் வெற்று தீர்மானத்தை தான் பின்பற்றுவோம் என்று சொல்லாமல் சர்வதேச விசாரானை உள்ளிட்ட ஒரு புதிய தீர்மானத்தை இந்தியாவே முன்வந்து முன்மொழிய வேண்டும்.இதுவே அவர்களுக்கான தீர்வாக இருக்கும்.

இப்படியாக தனது கருத்தை மிக ஆணித்தணமாக எடுத்துரைத்தார்.

நீண்ட காலமாக அயராது மட்டுமல்லாமல் சரியான ஆதரங்களுடன் குரல் தந்து வருகின்றார்

 

நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.