Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லண்டன் GTF மாநாடு! - விரிவான செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
GTF2013CONFERENCE_2013_seithy-150.jpg

உலகத் தமிழர் பேரவையின் இவ் ஆண்டிற்கான சர்வதேச மாநாடு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தில் 27.02.2013 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இலங்கை மீதான அழுத்தங்களும் அதிகரித்துவரும் சூழலில் இம் மாநாடு மேலும் இலங்கை அரசிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக அமைந்துள்ளது.

  

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த இம் மாநாட்டில் பிரித்தானியாவின் மூன்று பெரும் அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அமைச்சர்களான , பிரித்தானியத் துணைத் தலைமை அமைச்சரும், லெபரல் ஜனனாயகக் கட்சியின் தலைவருமான NICK CLEGG, பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ED MILIBAND, லிபரல் ஜனனாயக கட்சியில் மூத்த தலைவரும், அமைச்சருமான ED DAVEY, மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு உறுப்பினர் YASMIN SOOKA, முன்னாள் இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி GORDON WISE, Chanel 4 தொலைக்காட்சியின் "NO FIRE ZONE" ஆவணப் படத்தின் தயாரிப்பாளர் CALLUM MACRAE, பி.பி.சி செய்தியாளர் FRANCIS HARRISON, நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ERIK SOLHIM, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி Professor WILLIAM SCHABAS, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான LEE SCOTT, மற்றும் DOUGLAS ALEXANDER, உறுப்பினர்கலதமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான SIOBHAIN McDONAGH, VIRENDRA SHARMA, SIMON HUGHES, KEITH VAZ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் R.SAMPANTHAN, உட்பட்ட 36 பிரதி நிதிகள் இலங்கை தொடர்பான தமது கருத்துக்களை தெரிவித்ததோடு இவ்வாறான ஒரு மாநாட்டை ஒழுங்கமைத்தமைக்காக உலகத் தமிழர் பேரவைக்கு (GTF) நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

முக்கிய விடையமாக அனைத்து பிரமுகர்களினதும் உரைகளில் இலங்கையில் நடைபெற்ற கொடூர கொலைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றத்திற்குமான சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு போர் முடிவுற்ற பின்னரும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்வதை உணர முடிவதாகவும், அவ்வாறான நிலை நீங்கி சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் தாம் வலியுறுத்துவதோடு அது தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். அத்தோடு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்படுவது பற்றி இம் மாநாட்டின் மூலமாக அனைத்துக்கட்சி ஒற்றூமை உருவாகியுள்ளதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்தனர்.

 

இம் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறீதரன், சந்திரனேரு சந்திரகாந்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

இம் மாநாட்டில் காணொளி மூலமான DAVID CAMERON இன் உரையில், இலங்கையில் "கொமென் வெல்த் மாநாட்டை" நடத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

 

இம் மாநாட்டில் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா, சுவீடன், நோர்வே, டென்மார்க், ஜேர்மனி, போன்ற நாடுகளில் இருந்து தமிழ் அமைப்பு பிரதிநிதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு மாநாடு ஆரம்பமான காலை 10:00 மணியிலிருந்து மாலை 5:00 மணிக்கு நிறைவடையும் வரை தொடர்ச்சியான உரைகளும், மண்டபம் நிறைந்த மக்களுமாக காட்சியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இம் மாநாட்டில் சனல் 4 தொலக்காட்சியின் CALLUM MACRAE யின் "NO FIRE ZONE" ஆவணப்படத்தின் இதுவரை வெளிவராத முக்கிய சில காட்சிகள் திரையிடப்பட்டது.

 

பிரித்தானிய பிரதமர் DAVID CAMERON அவர்களும், பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் DAVID MILIBAND அவர்களும் இந்த மாநாட்டிற்கு தமது வாழ்த்துக்களை காணொளி வடிவில் அனுப்பியிருந்தமையும், அவை அங்கு அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டமையும், ஊடகவியலாளர்களும், மக்களும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடவும் சுதந்திரமான முறையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

இந்த மா நாட்டின் முடிவில் முன்னாள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களின் குரலாக உள்ளும், வெளியும் தொடர்ந்து குரலெழுப்பி வருபவருமான JOAN RYAN அவர்கள் நன்றி உரையினை வழங்கினார்.

 

இம் மாநாடு தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் தமிழர்கள், மற்றும் தமிழர்கள் அல்லாதோரையும் ஒன்றிணைத்த சிறந்த மாநாடாகவும், ஐ.நா அதிகாரி, மனித உரிமை அமைப்பு பிரதி நிதிகள், உட்பட ஒரே மேடையில் கட்சி வேறுபாடின்றி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமர்த்தி அவர்களினூடாக இலங்கையில் நடைபெற்ற போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதப் படுகொலைகள் என்பவற்றிற்கு சர்வதேசத்தின் சுயாதீன விசாரணையை வலியுறுத்திய மாநாடாகவும் அமைந்தமை அனைவரையும் மகிழ்வடைய வைத்ததோடு, சர்வதேசத்தில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் மாற்றங்களும், நகர்வுகளும் இடம்பெறுவதை வெளிப்படுத்தியும் இருந்தது.

 

இந்த மாநாட்டின் மூலம் இலங்கை அரசு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77059&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காத்திரமான செயற்பாடுகள்.. நன்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முக்கியமான சந்தர்ப்பத்துக்கு ஏற்ற செயற்பாடுகள் நன்றிகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான  வேளையில்

காத்திரமான முயற்சி

 

உழைத்தவர்களுக்கும் கலந்து கொண்டு தமது வரலாற்றுக்கடமையை  ஆற்றியவர்களுக்கும் நன்றிகள்

தொடரட்டும் தங்கள் பணி

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள்  உலகத் தமிழர் பேரவையினரே....தேவையான நேரத்தில்....அருமையான அமர்வின் மூலாம் எம்மக்களின் தாகத்தை எடுத்து இருக்கிறீர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.