Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசின் தடுமாற்றமும் சுவாமியின் அதிரடி வருகையும் (சமகாலப் பார்வை)

Featured Replies

இந்திய அரசியலில் ஒரு கோமாளி என வர்ணிக்கப்பட்டாலும், சுப்பிரமணிய சுவாமியின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. அரசியலில் அவர் பிரபலமான தரகர். ஒரு தேநீர் விருந்தை நடத்தியே ஆட்சியைக் கவிழ்த்த பெருமைக்குரியவர். இதனைவிட ஈழப் பிரச்சினையில் அவரது கோட்பாடு என்ன என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமியின் திடீர் கொழும்பு விஜயம் இராஜதந்திர வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
அண்மைக்காலமாக இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி இலங்கை அரசை நியாயப்படுத்திவந்த சுப்பிரமணியம் சுவாமி திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை கொழும்பு வந்தார். வந்த உடனடியாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகைக்குச் சென்று சந்தித்தார். இரு தரப்பினரும் என்ன பேசினார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. அடுத்ததாக இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவைச் சந்தித்த பின்னர் உடனடியாகவே அவர் இந்தியா திரும்பிவிட்டார்.
 
இவற்றைவிட அவரது நிகழ்ச்சி நிரலில் எதுவும் இருக்கவில்லை. அதனைவிட அவரது விஜயம் உத்தியோகபூர்வமானதா அல்லது தனிப்பட்ட விஜயமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வர வேண்டிய தேவை ஒன்று அவருக்கு இருக்கவில்லை. ஆக, இது தனிப்பட்ட ஒரு விஜயமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த சுவாமிக்கு அலரிமாளிகையில் செங்கம்பளம் விரிக்கப்பட்டது எதற்காக?
 
சுவாமியின் விஜயம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட காரணங்கள் உள்ளன. அதுவும் ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ள பிரேரணை தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் டில்லி திண்டாடிக்கொண்டுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தத் திடீர் விஜயமும் இரகசியப் பேச்சுக்களும் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
 
டில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய ‘டீல்” ஒன்றைக் கொண்டுவருவதற்கான தனது ‘தரகர் வேலை’யை சுவாமி முன்னெடுக்கின்றாரா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. வழமையாக கொழும்புக்கும் டில்லிக்கும் இடையில் இவ்வாறான ‘டீல்”களைச் செய்பவராக சென்னையிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான எம்.ராம் இருந்துள்ளார். இப்போது பதவியில் இல்லாத ராம் செல்வாக்கற்றவாகவும் ஆகிவிட்டார். அந்த இடத்தை சுவாமி பிடித்துக்கொண்டுள்ளார்.
 
ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படும் என அமெரிக்க அறிவித்த கணத்திலிருந்தே அதனை ஆதரிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் இந்தியாவின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் உருவாகியிருந்தது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்களும் இதற்காகக் குரல் கொடுத்தன. ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த அதிகரித்த அழுத்தங்களின் பின்னணியில்தான் இந்திய அமைச்சர் நாராயணசாமி இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உறுதியளித்திருந்தார். அதேபோல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களைச் சந்தித்த போது இதே பதிலைக் கூறியிருந்தார்.
 
ஆனால், கடந்த புதன்கிழமை இந்தியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார். அது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது உரிய வேளையில் பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தப்படும் என்பதுதான் அவரது நிலைப்பாடாக இருந்தது. இது ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தியா தடுமாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் சுப்பிரமணியம் சுவாமியின் அதிரடியான வருகையும் இந்தச் சந்தேகங்களை அதிகரிப்பதாகவே இருக்கின்றது.
 
கொழும்பு விஜயத்தின்போது, அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக இலங்கை அஞ்சத் தேவையில்லை என்ற வகையில் சுவாமி தெரிவித்திருந்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. இலங்கையைப் பாதுகாப்பதற்கான பொறிமுறை ஏதாவது இந்தியாவிடம் உள்ளதா என்ற கேள்வியை இது எழுப்புவதாக இருக்கின்றது. கடந்த வருடத்தைப் போல இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சி ஒன்றை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதற்கான காரணங்கள் உள்ளன.
 
இந்திய மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதோ அல்லது அவர்கள் மீதான நெருக்குவாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதோ இரண்டாம் பட்சம்தான். ஈழத் தமிழர்களின் பிரச்சினையைப் பயன்படுத்தி தன்னுடைய பிராந்திய நலன்களைப் பெற்றுக்கொள்வதுதான் அதன் இலக்கு. இந்திரா காந்தியின் காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் மூலோபாயம் இதுதான். இது தொடர்பான தமது இலக்கை அடைவதற்காகத்தான் இன நெருக்கடியை இந்தியா பயன்படுத்திவந்துள்ளது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவைக் கொண்டுவந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் இன்றைய தலையிடி. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைதான் இந்தியாவிடம் இன்றுள்ள ஒரே துரும்புச் சீட்டு. ராஜபக்ஷவைப் பணிய வைப்பதற்கு இதனைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என டில்லியில் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். இதனை எதற்காகப் பயன்படுத்துவது என்பதில்தான் இந்தியா இன்று குழம்பியிருக்கின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால் அதன் பின்னர் தமது பிராந்திய நலன்சார்ந்து எதனையும் செய்ய முடியாது என்பது டில்லிக்குத் தெரியும். அதாவது: சீனா மேலும் ராஜபக்ஷவுடன் நெருங்குவதற்கு இது காரணமாகிவிடலாம்.
 
அதாவது, தம்மிடமுள்ள துரும்புச் சீட்டைப் பயன்படுத்தி அதிஉச்ச பலனைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியாவை இன்று குழப்பும் விடயம். கொழும்புக்கும் இந்தியாவின் இந்தக் குழப்பம் தெரியாததல்ல. அதற்கேற்றவகையில்தான் கொழும்பும் காய் நகர்த்துகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை வைத்துள்ள இந்திய இராஜதந்திரிகள் சிலரும் இதன் பின்னணியில் இயங்குவதாகத் தெரிகின்றது. இவை அனைத்தினதும் உச்ச கட்டமாகத்தான் சுப்பிரமணியம் சுவாமியின் அதிரடி வருகை அமைந்திருந்தது என பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகளைக் கொண்டுள்ள அரசியல் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதியுடன் சுவாமி பேச்சுக்களை நடத்திய போது பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ மட்டும்தான் அவருடன் இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. இதிலும் ஒரு செய்தி உள்ளது!
 
- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.

Edited by ஊர்பூராயம்

 அதாவது, தம்மிடமுள்ள துரும்புச் சீட்டைப் பயன்படுத்தி அதிஉச்ச பலனைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியாவை இன்று குழப்பும் விடயம். கொழும்புக்கும் இந்தியாவின் இந்தக் குழப்பம் தெரியாததல்ல. அதற்கேற்றவகையில்தான் கொழும்பும் காய் நகர்த்துகின்றது.

 

 

உப்புச்சப்பு இல்லாத பதின்மூன்றாவது திருத்த சட்டத்தையே இந்தியாவால் அமுல்படுத்த முடியுமா?

 

இந்தியாவுக்கு சீனாவுடன் மகிந்த கூட்டம் மேலும் இறுக்கமாக சேர்ந்து விடுமா என்ற பயம் இருக்கலாம். ஆனால் அந்த பயத்தை தானே உருவாக்கியது.

 

 

இந்த விடயங்களில் அமெரிக்க அரசு இந்தியாவை விட தெளிவாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.