Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை - சங்கரி

Featured Replies

குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி
 
“மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டுவேனாயின் அதை வைத்தே ஒரு பூகம்பத்தையே வெடிக்க வைத்திருப்பர்.  
 
கடந்த பல ஆண்டுகளாக விடாதே பிடி என்று அடம் பிடித்து தூண்டிவிட்டு ஒரு இக்கட்டான நிலைமைக்கு தமிழ் மக்களையும் விடுதலைப் போராளிகளையும் யார் கொண்டுவந்தார்களோ அவர்களில் அநேகர் இன்று குத்துக்கரணம் அடித்து அரசோடு ஒட்டிக்கொண்டு விட்டார்கள். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டநிலையில் எதுவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இரட்டை வேடம் போட்ட சிலர் போராளிகளுக்கு துரோகம் செய்த கே.பி போன்ற பலர் பற்றி மூச்சு விடுவதில்லை. அத்தகையவர்களுடன் இவர்களுக்கு இரகசிய உறவும் உண்டு. இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்ற சிலர் அவர்களுடன் உறவு வைத்திருக்கிறார்கள். “வேலையற்றவர்கள்;தான் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்” என்று கூறியவர் உத்தமராக உலகுக்கு காட்டப்படுகின்றார். கல்வியை, உற்றார் உறவினர்களை துறந்து போராடிய இலட்சிய இளைஞன் வேலையற்றவன். இதில் என்ன நியாயம் இருக்கிறது. கடந்த வருடம் ஜெனீவா போகாமைக்கு பொய்யான காரணங்கள் பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் உண்மை விளம்பிகள். இன்று ஏன் ஜெனீவா செல்ல வேண்டும் என்பதற்கு போதிய விளக்கம் தர முடியாதவர்கள் விற்பன்னர்கள். 
 
அன்று நான் எழுதிய கடிதங்கள் பலவற்றில் சிலவற்றையேனும் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் பிரபாகரனும், அவரின் குடும்பமும் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஜெனீவா பிரச்சனை என்ற ஒரு பிரச்சனையே இருந்திருக்காது. விடுதலைப் புலிகளை காலத்துக்குக் காலம் நல்வழிப்படுத்தி போராட்டத்துக்கு வலுச் சேர்க்கத் தவறிவிட்டு இன்று எல்லோரையும் பூண்டோடு பரலோகத்துக்கு அனுப்பி விட்டு உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் பலரில், முன்னிலையில் நிற்பவர்,பொய்யையும் புரட்டையும் கூறி என்மீது குற்றம் சாட்டும் அரியநேந்திரன் அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். வன்னியில் ஏறக்குறைய பதினைந்து போராட்டங்கள் - கவனயீர்ப்பு போராட்டம், உண்ணா விரதப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் என நடந்துள்ளன. இவற்றில் எந்தப் போராட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்கள்? இதுவரை பதினைந்து போராட்டங்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிகரமாக நடத்தியிருந்தும் ஒன்றில் கூட பங்குபற்றாத ஒருவர், இதுபோன்ற ஒன்றையேனும் நடத்தாதவர் தம்பி அரியநேந்திரன., சத்தியம் தவறாது 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவன் நான், வன்முறையை கண்டித்தவன், பட்டம் பதவிகளுக்கு அலையாதவன,; எக்கருத்தையும் துணிந்து கூறிய, கூறிக் கொண்டிருக்கின்ற என்னை விமர்சிக்கும் தகுதி வேறு எவருக்கும் இருந்தாலும் வெறும் பொய்யிலேயே அரசியல் நடத்திய அரியநேந்திரன் என்பவருக்கு நிச்சயமாக இல்லை. அவருடைய அரசியல் கோழைத்தனமான அரசியல். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் சமாதானத்துக்கு வர ஆர்வம் காட்டியவேளை தன் பங்கை சரியாக செய்திருந்தால் ஜெனீவா பிரச்சனை இன்று இருந்திருக்காது.
 
எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை. ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில் சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எவருக்கும் இல்லை. இவ்வளவு தீவிரமாக செயல்படும் இவர் புலிகள் சரணடைய தயாராக இருந்த அந்த இக்கட்டான நேரத்தில் பேச வேண்டியவர்களுடன் பேசி அல்லது வற்புறுத்தியிருந்தால் நிச்சயமாக சகலரையும் காப்பாற்றியிருக்க முடியும். அப்படி செய்வார் என்றே நினைத்தேன். நானே முன்னின்று பாடுபட்டிருப்பேன்.
 
படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரன் உட்பட கொலையுண்ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதற்கும் இடமில்லை என்பதனையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவைப் பற்றி மாத்திரமே நான் கருத்துத் தெரிவித்தேன். ஏனைய நாடுகள் பற்றி எதுவுமே கூறவில்லை என்பதனை சரியாகப் புரிந்துகொள்ள இவர்கள் ஏன் மறுக்கின்றார்கள்? இந்தியா ஓh வல்லரசு. அவர்களுக்கு 47 நாட்டுத் தலைவர்களையும் தொடர்புகொள்வது பெரிய விடயமல்ல. அதை செய்துவிட்டு தன் பங்கை சிந்தித்து செய்திருக்கலாம். 
 
எமது மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் சாத்தியமாகாது. இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படுவது எமது மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதே நான் நன்கு சிந்தித்து எடுத்த முடிவு. நான் கூறியது எனது கருத்தை. தவறு என்றால் சுட்டிக்காட்லாமே. நான் என்ன அடம் பிடித்தேனா?
 
ஊடகம் ஒன்றில் மிகப் பெரிய எழுத்தில் “ஆனந்தசங்கரி மறைமுகமாக அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றாரோ என ஐயம்” என அரியநேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். என்னால் எழுதப்பட்டதாக மூன்று கடிதங்களை ஆதாரமாக காட்டியிருந்தார். முதலாவது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூட்டமைப்பும், தமிழ் மக்களும் சொல்கின்ற நிலையில் இதற்கு மாறாக இந்தியா நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். இவர் ஏதோ தமிழ் மக்கள் சார்பிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் ஏகபிரதிநிதி போல் பேசுகிறார். இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தார்? இரண்டாவது இலங்கை தொடர்பில் மென்போக்கை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை கூறியது என மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  இத்தகைய பொய் உத்தமர்களுக்கு ஏற்றதல்ல. இத்தகைய கடிதம் ஒன்று இருப்பின் அதனை உடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
இறுதியாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் “உயர்மட்டக் குழு” அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் அது சந்தேகம் எனக் கூறியது. இக் கூட்டத்தில் அடுத்த மாதம் 20ம் திகதி வரையில் தமிழரசுக் கட்சியின் செயற்குழுவை கூட்ட நேரமில்லை என்று அக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிரமுகர்கள் மூவரும் கூறினார்கள். இருந்தும் அடுத்த நாளே அவர்கள் கூடி வேறு சில முடிவுகளை எடுத்தார்கள். ஆனால் உயர்மட்டக்குழு அமைப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை இதுவே எனது சந்தேகத்துக்குக் காரணம். இவர்களிடம் வேறு மாற்றுத் திட்டம் இருப்பதாக எண்ணினேன் அது தவறா? இதனால்தான் நான் அது சந்தேகம் என்று கூறினேன். அரசு எவ்வளவு தம்பட்டம் அடித்தாலும் மக்களை பட்டினி போட்டு சித்திரவதை செய்கிறது. பல தலைமுறையாக சேர்த்து வைத்த அத்தனை சொத்துக்களும் அழிக்கப்பட்டும், திருடப்பட்டும் முறையான வீடின்றி தகரக் கொட்டகைகளிலும் கூடாரங்களிலும், பாம்பு நுளம்பு போன்ற விஷசத்துக்களுக்கும் மத்தியில் வாழ்;ந்து கொண்டு எதுவித தொழில் வாய்ப்போ வருமானமோ இன்றி உற்றார் உறவினரை இழந்தும், பிரிந்தும் சொல்லொணா துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பது போதாதென்று பல் வேறு நாடுகளைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளின் முகவர்கள்; என பொய் முத்திரைகுத்தி அத்தகைய நிறுவனங்களை வடக்கே காலடி எடுத்து வைக்காமல் அரசு தடைவிதித்த செயல் மிக மோசமானதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இந் நிறுவனங்கள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் இங்கு பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை. வேலை வாய்ப்புக்களும் கிடைத்தது. 
 
ஏதாவது ஒரு நாடு துணிந்து வந்து தமிழ் மக்களுக்கு பல் வேறு உதவிகளையும் செய்து தொண்டாற்றி வருகிறது என்றால் அது இந்தியா மாத்திரமேயாகும். மற்றைய நாடுகள் அரசின் ஊடாகவே உதவின. இதில் மக்களுக்கு கிடைத்தது சிறு துளியேயாகும். இந்த அரசாங்கம் திட்டமிட்டு இந்தியாவின் உதவியை ஏற்க மறுத்து புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாகும் அதுவும் எமது மக்களையே பாதிக்கும். முன் யோசனை இன்றி நாம் செயல்படக்கூடாது. நாம் மேற்கொள்ளும் தவறான முடிவுகள் எமது மக்களை நிரந்தரமாக பாதிக்கக்கூடும். சோல்ல முடியாத துன்பமாகவும் அது ஏற்படலாமென நான் எண்ணினேன். இது தவறா? இது எனது மனதில் தோன்றியது தவறா? பெரிய குற்றமா? அப்படியானால் அரியநேந்திரனின் வழிகாட்டலில் நடக்கட்டும். நான் யார் அதை எதிர்ப்பதற்கு
 
சிறிமா பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் 1972 இல் தந்தை செல்வாவும், திரு.அமிர்தலிங்கம் குடும்பமும் இந்திய தலைவர்களை சந்திக்கச் சென்று திரும்பினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக முழு தமிழ்ச் சமுதாயமும் அரசுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்பே இந்தியா செல்ல முடியும் என கட்டுப்பாடு 1972 இல் விதிக்கப்பட்டது. (Exit permit) தந்தை செல்வாவோ அமிர் குடும்பமோ வெறுமனே வியாபாரத்துக்கு சென்றவர்கள் அல்ல. அவர்கள் சென்றது அரசியல் நோக்கமாகும். 
 
எது எப்படியிருந்தாலும் திரு அரியநேந்திரனுக்கு இருக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் தூர நோக்கத்துக்கும் எனது அறிவு, ஆற்றல் ஈடு கொடுக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் நலன் கருதியே நான் எனது கருத்துக்களை வெளியிட்டேன் அது தவறு எனின் மக்கள் என்னை மன்னிக்கட்டும். அரசாங்கம் சார்பில் பேசுகிறேன் அல்லது வக்காலத்து வாங்குகிறேன் என்று மக்களுக்கு யார் கூறினாலும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில் நான் பட்டம், பதவி கேட்கவோ, வாங்கியோ பழக்கப்படாதவன் என்பது உலகறிந்த விடயமாகும். அரியநேந்திரனுக்கு பாராளுமன்ற பதவி எப்படி வந்தது என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.
 
 
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர்நாயகம்- த.வி.கூ

Edited by ஊர்பூராயம்

 எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை.

 

ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில் சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எவருக்கும் இல்லை.

 

 

இது மட்டும் நூறுவீதம் உண்மை !

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விமர்சிக்கும் உரிமை இல்லை..?

 

போர் நடந்தபோது மற்றவரின் பிள்ளைகளை போருக்கு அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் என்றார்கள்..

 

போர் முடிந்தபின்னால் மொக்குத்தனமாக எல்லாமே அழிந்துவிட்டது என்கிறார்கள்..

 

ஆகவே இந்த உலகில் மாறாதது ஒன்று விமர்சனம் ஒன்றுதான்.. :rolleyes:

 

 

எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை.

ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே

குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே

கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில்

சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும்

காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு

ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ

வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல

உலகிலுள்ள எவருக்கும் இல்லை.

இது மட்டும் நூறுவீதம் உண்மை !

  • கருத்துக்கள உறவுகள்

பிழைச்சு போங்க !

ஏதாவது ஒரு நாடு துணிந்து வந்து தமிழ் மக்களுக்கு பல் வேறு உதவிகளையும் செய்து தொண்டாற்றி வருகிறது என்றால் அது இந்தியா மாத்திரமேயாகும். மற்றைய நாடுகள் அரசின் ஊடாகவே உதவின. இதில் மக்களுக்கு கிடைத்தது சிறு துளியேயாகும்

"ஆயிரம் பொய்யை சொல்லித்தன்னும் ஒரு கலியாணத்தை கட்டு"

 

நான் நேரத்திற்கே இப்படி பிரச்சனை வரும் என்றதால்த்தான் ஆனந்த சங்கரியை யாரும் கூட்டமைப்பிலிருந்து தாக்க கூடாது. அது நமது உரிமை மட்டுமே என்று எழுதினனான்.

 

வெண்ணை திரண்டுவரும் நேரம், முதல் அமைச்சர் பதவிக்காக அவர் தாழியை உடைத்துவிடுவார் என்பது இந்த கூட்டமைபினருக்கு விள்ங்காது. 

 

எப்பிடியோ K.P.யயும் ஒரு போடு போட்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: ஆனந்தசங்கரி
  By General 
2013-03-04 09:25:40
படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்;ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.