Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் குடியுரிமை - விழிப்புணர்வும், எச்சரிக்கையும் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேவை: விழிப்புணர்வும், எச்சரிக்கையும் 
 
வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை போல, நம்மவர் சிலரது முட்டாள்தனத்தினை நினைக்கையில் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை.
 
பிரித்தானியாவில், குடியுரிமை பெற, 'citizenship test' பாஸ் பண்ண வேண்டும். இதற்கு அரசு புத்தகம் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதனை படித்து பரீட்சை செய்ய வேண்டும்.
 
எனினும் ஆங்கிலம் தெரியாதோருக்கு ஒரு சலுகையாக, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆங்கிலம் படித்து, அதில் புலமை உள்ளதாகக சான்றிதழ் கொடுத்தால், அதனை அரசு ஏற்றுக் கொண்டது.
 
நாளடைவில் புத்தீசல் போல பல போலி நிறுவனங்கள் உருவாகி, தமிழர்களை முகவர்களா கொண்டு, விளம்பரம் செய்து, பலருக்கு இந்த இரண்டாவது வழிமுறை தான் ஒரேவழி என்பது போல தகவல்களைக் கொடுத்து, மூன்று மாதம், இரண்டாகி, பின் இரண்டு வாரமாகி, நான்கு நாட்களாகி, இறுதியில் வரவே தேவையில்லை, பணத்தினை பாங்கில் போட்டால் சான்றிதழ் வீட்ட வரும் என்ற அளவுக்கு போய் விட்டது.
 
மறுபுறம் அனுப்பப் படும் சான்றிதழ், பிரஜாஉரிமை சான்றிதழ் மட்டுமே பெற்றுத் தரும் என்பதையும், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் போது, கட்டாயமான நேர்முக தேர்வு இருக்கும் என்பதனையும் இவர்கள் சொல்வதில்லை.
 
விளைவாக இந்த நேர்முக தேர்வுக்கு, மொழிபெயர்பாளர்களுடன், அப்பாவித் தனமாக சென்றவர்களும் (ஆங்கில புலமை உள்ளதாக சான்றிதழ் அனுப்பிய பின்), சரியான ஆங்கிலம் பேச முடியாதவர்களும், அரச அதிகாரிகளின் கடும் நெருக்கடிகளை சந்தித்தனர்.
 
அவர்களது அகதி வழக்குகளே, நம்பகத்தன்மையில் (Credibility) தங்கி உள்ள நிலையில் இப்படி குளறுபடி, செய்வது, தடியினை கொடுத்து அடி வாங்குவது போல ஆகி விட்டது.
 
இறுதியாக, அரசு இப்போது சத்தமில்லாமல், 'Citizenship Deprivation' notice விடுத்துள்ளதுடன், இரு பரீட்சைக்களுமே (புத்தகப் பரீட்சை, ஆங்கில அறிவுப் பரீட்சை) இவ்வாண்டு ஒக்டோபர் முதல் கட்டாயம் ஆக்கி விட்டது. 
 
 
Removal of citizenship obtained fraudulently (Deprivation)

We may take away your British citizenship if we find that you obtained your registration or naturalisation by fraud, giving false information, or concealing facts that would have affected our decision. This is known as deprivation of citizenship.

Reasons for depriving you of citizenship might include if you:

 
....used false documents to obtain citizenship, or cheated in the Life in the United Kingdom test.
 
அது மட்டும் அல்ல,
 
நம்மவர் இடையே புகழ் மிக்க, பெட்டிசன் படிவமும் இணைத்துள்ளார்கள். உங்களுக்கு தெரிந்த யாரவது இந்த விடயத்தில் சுத்தி இருந்தால் தங்களுக்கு தெரியப்படுத்தலாமாம். (கிழிஞ்சுது போ!)
 
ஆனால் போலி நிறுவனங்களின் தமிழ் பிரதிநிதிகள் அசராமல் (அல்லது விடயத்தின் தீவிரம் புரியாமல்) ஒக்டோபர் மாறுதலுக்கு முன் இந்த (சுத்துமாத்து வழியில்) இரண்டாவது வழியில் சான்றிதழை எடுத்து விடுங்கள் என விளம்பரம் செய்கின்றன.
 
வெளி நாட்டு மாணவர்களை சுத்தும் போலி கல்வி நிறுவனங்களை இழுத்து மூடி, பீலா விட்ட UK Boarder Agency, தனக்கே அல்வா கொடுத்த இந்த நிறுவனங்கள் குறித்து விசாரணை நடாத்தி இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளதால், யார், யாருக்கு பிரச்னை வருமோ தெரியவில்லை. முன்னர் வொர்க்பெமிட் விசா மோசடியில் ஒரு தமிழ் கணவர், மனைவி உள்ளே போனார்கள். அவர்கள் கொண்டுவந்த 79 பேர் குடும்பத்துடன் திருப்பி அனுப்பப் பட்டனர்.
 
குடிவரவு விடயங்களில், (தேவை இல்லாத) சுத்துமாத்து என்பது தலை மேல் தொங்கும் கத்தி. அப்பாவி மக்களும் இந்த போலி கோஸ்டிகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப் படலாம்.
 
இது குறித்து தமிழ் ஊடகங்கள் மக்களுக்கு அறிவித்தாக தெரியவில்லை. 
 
தெரிந்தவர்களுக்கு சொல்லி வையுங்கள்: நேரியவழியில் எப்போதும் பயம் இல்லை.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தா சிறீலங்காவில இருந்து அசைலம் அடிச்ச 90% பேரும்.. ஊருக்கு நடையக் கட்ட வேண்டியது தான். சொன்னதும் பொய்.. வழங்கின சான்றுகளும் லோயர் மார் சோடிச்சவை தானே..!

 

ஏன் பலர் பிள்ளைகளின் வயதைக் குறைச்சு பாஸ்போட் எடுத்து... வயது குறைந்த பிள்ளைகள் என்று காட்டியும் இங்க குடும்பத்தோட பமிலி ஸ்பான்சரில.. வந்து சிற்றிசன் சிப் எல்லாம் எடுத்து காயா இருக்கினம். அப்ப அவையும் நடையக் கட்ட வேண்டியது தானா..??!

 

ஒழுங்கா நேர்மையா வாரவங்க கிட்ட காசு பிடுங்கி..  ஆயிரம் தேடல் செய்யுறவை.. களவா வாறவைக்கு கள்ளப் பொய் சொல்லுறவைக்கு.. அசைலமும்.. சிற்றிசன் சிப்பும் தூக்கிக் கொடுத்தவை தானே. அனுபவிக்கட்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நன்றி  நெடுக்ஸ்,
 
பார்க்கும் போது, விமானத்தில் இப்போதும் இலங்கை திருப்பி அனுப்பப் படுபவர்கள், இந்த விசா, குடிவரவு சுத்துமாத்தினால் பாதிக்கப் பட்டவர்களோ தெரியவில்லை.
 
தானே விசாவில் இருக்கும் நிலைமையில், விசா மோசடியில் ஈடுபட்டு, லண்டன் கிங்ஸ்பரி பகுதியில் £320,000 காசாக, வீட்டில் வைத்திருந்த இந்தியரும், அவர் மனைவியும் கைதாகி, சிறை சென்று பின் நாடுகடத்தப் பட்டனர். (காசு பறிமுதல் தான்). இதில் அவர் £3,000 படி 100 பேர் அளவில், கள்ள documents தயாரிக்கும் 'இமிகிரேசன் சேவை' செய்து அவர்களது விண்ணப்ப விபரங்களுடன் அவர்கள் தந்த பணத்தினையும் சுத்தி வீட்டின் ப்ளோர் போர்டின் கீழே போட்டு இருந்தார். அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப் பட்டனர்.
 
அதே போல் சவுத் ஹால் பகுதியில் ஒருவர், இரு மனைவியருடன், £1.2 மில்லியன் மோசடியில் கைதானார்கள்.
 
ஆசை யாரை விட்டது?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.