Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

63064_596071703738192_903246756_n.jpg

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜபக்சேவுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி,

மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன்

தீ வைத்த மாணவர்கள்

rajapaksay-001.jpg

 

rajapaksay-002.jpg

 

 சென்னை கடற்கரையில் 20.03.2013 புதன்கிழமை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, ராஜபக்சேவின் உருவபொம்மையை மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தீவைத்தனர்.

செய்தியின் மூலம்: நக்கீரன்.

படங்கள்: ஸ்டாலின்

Posted

#Loyolahungerstrike

கல்லூரி சாலையில் மாணவர் பேரணி தொடங்கியது . மாணவர்கள் அதிரடி கோரிக்கை : 

ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டில் சிங்களவர்களை தமிழ்நாட்டில் விளையாட நாங்கள் அனுமதியோம் . மீறி விளையாடினால் , விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் முற்றுகையிடுவோம் .

 

Rajkumar Palaniswamy

பேரணியாக சென்ற மாணவர்கள் காவல் துறையின் அடுக்குமுறையை மீறி சாலையில் ஓடத் தொடங்கினர் . காவல் துறை அவர்கள் பின்னல் ஓடுகின்றனர். மாணவர்கள் சாஸ்திரி பவன் அருகில் சாலை மறியல் . காவல் துறை தற்போது மாணவர்களை தாக்க முற்படுகின்றனர் . அடுக்குமுறையில் மாணவர்களை முடக்கி விடலாம் என காவல் துறை நினைக்கிறது . மாணவர் சாலை மறியலால் போக்குவரத்து இருபது நிமிடங்கள் முடக்கம் .

 

ஹரி ஹரன்

கல்லூரி சாலையில் பேரணியாக சென்ற மாணவர்கள் ப.சிதம்பரம் வீட்டையும் சாஸ்திரி பவனையும் முற்றுகையிட்டு, அமெரிக்க கொடி மற்றும் இலங்கை கொடியை எரித்துள்ளனர்...

 

ஹரி ஹரன்

 

 


ப.சிதம்பரம் வீட்டையும் சாஸ்திரி பவனையும் முற்றுகையிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு ராஜ ரத்தினம் மைதானம் எழும்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மாணவர்க்ளுக்கு செவ்வணக்கம்...

Posted

மெய்ப்பொருள் காண்பது அறிவு: இன்றைய காலை பத்திரிகைகள் பற்றிய பார்வை

 

http://www.youtube.com/watch?v=KMJcuib82qs

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Indian Students Supporting TN Students protest for Tamil EELAM

 

Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian students started supporting Tamil Nadu students Protest seeking justice for Srilankan Genocide. Dedicating this video to all the freedom fighters and people of Tamil EELAM ..

 

 

 

- முகநூல் -

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
யோகேந்திரன் உங்களின் இந்த முயற்சி  பாராட்டுக்குரியது ...
 
நன்றிகள் ... 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தணிக்கையாளர்கள் போராட்டம் (படங்கள்)
 
cs-students.jpg

இலங்கையின் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இன்று தணிக்கையாளர்கள் மற்றும் உடனிகழ் தணிக்கையாளர் மாணவர்கள் இணைந்து கண்டன போராட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அமெரிக்கா முதன்முதலாக கொண்டு வந்த திருத்தம் செய்ப்படாத தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக கூறினார். இதில் தமிழர்கள் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர்.

 
Posted

நங்கள் பள்ளிகரனையை சார்ந்த மாணவர்கள் நங்கள் போராட்டம் நடத்த கூடதென்று காவல் துறை எங்களை முன்கூடியே எங்களை கைது செய்து ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர், எங்களுக்கு ஒரு சட்ட ஆலோசகர் தேவைபடுகிறது தயவு செய்து உதவவும்.

 

 

எங்களுக்கு சட்ட ஆலோசகர் தேவை நண்பா
இப்படிக்கு தாமோதரன்
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

9940246206

 

நம்முடைய வாக்காளர் அடையாள அட்டையை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைப்போம், நமக்கு தேவை இல்லை இந்த அரசியல் விளையாட்டு.

 

வாருங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகை இடுவோம்.

 

இப்படிக்கு
தாமோதரன்
9940246206

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காக்கிகளின் நக்கல் : 

போராடும் மாணவர்கள் கொந்தளிப்பு 

 

police%20kakki.jpg

 

 

 

 சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரேயே உள்ளது சேலம் மத்திய தபால் நிலையம் .இங்கே குவிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர்கள் ரோட்டிலேயே  அமர்ந்தனர்.

 

அரசு கலை கல்லூரி மாணவர் பகத்சிங் தலைமையில் திரண்ட மாணவர்கள் 'எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் ஈழ ரத்தம் எங்கள் சொந்தம்' 'ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவி' என முழங்கினர்...அருகேயே இருந்த சேலம் டவுன் காவல்நிலைய  உடனடியாக அங்கே குவிந்தனர்.

 

'வயசு பசங்க காலேஜ கட் அடிச்சமா,சினிமா,பார்டின்னு போனமான்னு இல்லாம இங்க வந்து போராடிகிட்டு என்ன பசங்க நீங்க' என சில காக்கிகள் அசால்ட்டாக பேச கொந்தளித்துவிட்டனர் மாணவர்கள். 

 

ஆய்வாளர் சூரியமூர்த்தி போராடிய மாணவர்களை பார்த்து 'அனுமதி வாங்காம செய்றீங்க இது அபன்ஸ்' என்க 'நாங்க முறைப்படி அனுமதி கேட்டோம் நீங்க தரல  அதான் நாங்களா போராட உட்கார்ந்துட்டோம்.  எங்கள் ரத்த உறவுகள் அங்கே துடித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த முறையும் அவர்களை கைவிட்டால் எங்கள் மனசாட்சியே எங்களை அணுஅணுவாய் கொன்றுவிடும் எனவே நாங்கள் ஓயமாட்டோம்' என எழுச்சியாக பேச,

 

 அந்த சாலையை கடந்தவர்கள்  நின்று மாணவர்களுக்கு ஆதரவாக 'ஏம்பா இந்த வேகாத வெயில்ல அவங்க போராடுறத பார்த்து நாமெல்லாம் சந்தோசபடனும் அதவிட்டுட்டு இப்படி இழுத்துட்டு போக கூடாது' என காவல்துரையிடமே துணிச்சலாக பேசினர்.

 

ஒரு பெரியவர் 'ஏப்பா உடனே பத்ரிக்கைகாரங்கள கூப்பிடுங்க இந்த பசங்கள ஏதாவது பண்ணிட போறாங்க நம்மளால முடில அந்த பசங்களாவது செய்யட்டும் ஆனா பத்ரமா இருந்தா தான் எதையும் செய்ய முடியும்' என்றார் அன்போடு....

மாணவர்கள் போராட்டம் அனைத்துதரப்பட்ட மக்களின் ஆதரவோடு வீரியமாக பரவி செல்கிறது .

படங்கள்:  இளங்கோவன் 

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94848

Posted

Indian Students Supporting TN Students protest for Tamil EELAM

 

Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian students started supporting Tamil Nadu students Protest seeking justice for Srilankan Genocide. Dedicating this video to all the freedom fighters and people of Tamil EELAM ..

 

 

 

- முகநூல் -

 
 
 

 

நன்றி தமிழரசு..!

 

இந்தக் காணொளியை எல்லோரும் உங்கள் இந்திய நண்பர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்..! அவசியம் செய்ய வேண்டியது..!!

Posted

நாங்கள் எதற்கும் தயார், நாங்கள். வீர தமிழச்சிகள் @ Coimbatore

 

19196016.jpg85434967.jpg56553402.jpg

 

-முகநூல் -



சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை
தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில்
மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ
.தினேஷ் 9791162911.
--------------------------------
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....


சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில்
1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள்
முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­
மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள்
மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர்
இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள
சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில்
போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி
வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில்
ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.

93153520.jpg

Posted

சூனியக்காரி சோனியா ,,ரத்தகாட்டேறி மன்மோஹன்சிங் , இனபடுகொலை கொடுங்கோலன் ராஜபக்சே மூவருக்கும் மதுரையில் தூக்கிலிட்ட மாணவர்கள்

 

10843541.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்ககோரி
புதுக்கோட்டை இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 

 
aarpat.jpg
   இலங்கை அரசு மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும். தனித் தமிழ் ஈழமே ஈழத் தமிழர்களின் நிரந்தர தீர்வை தரும். அதனால் தனித் தமிழ் ஈழம் அமைய ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 

இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று புதுக்கோட்டையில் இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

             - இரா.பகத்சிங்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94864

  • கருத்துக்கள உறவுகள்
Posted

579214_596448180367211_1903090336_n.jpg

Loyolahungerstrike



திருப்பூரில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் 500 மேல் மாணவர்கள் கலந்து கொண்டு இருக்கும் பேரணி

மாணவர் முழ க்கம் " இலங்கை என்றால் இனிக்குதா தமிழ்நாடு நா கசக்குதா "
 
 

580886_596466580365371_881825829_n.jpg



Loyolahungerstrike

  • கருத்துக்கள உறவுகள்
Posted
மற்றவர்களுக்கு முன் மாதிரியான மாணவர்கள்!
*********************************************


இலங்கை பிரச்னை தொடர்பாக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்று (மார்ச் 20) காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது. 

அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.

அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.
 
 

24434_596468463698516_581237477_n.jpg



Loyolahungerstrike



உண்ணாவிரத மேடையில் பேசியதெல்லாம் கேட்டு, எதிரில் இருந்த தன்னுடைய தேநீர்கடையை மூடிவிட்டு, மாலைவரை உண்ணாவிரதத்தில் இருந்து, பின் பேசும்போது "அங்க இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா மக்கள்? இந்த சின்னபுள்ளையையா கொன்னாங்க? என் மகன் மாதிரியே இருக்கான்" என்று அழுத மல்லிகா அக்கா...
 
 
 

602711_596468270365202_1735703497_n.jpg

 

Loyolahungerstrike




IIT BOMBAY STUDENTS STAGING PROTEST : HUNGER STRIKE YESTERDAY 20.03.2013

 

269295_624451774238216_1455586192_n.jpg

 

Loyolahungerstrike



488033_596477810364248_901637560_n.jpg

 

Loyolahungerstrike



23,582



Total Likes

Total Likes
Posted

போராட்டம் , மாணவர் போராட்டம்தான் அது அந்த வடிவம் பெற்றது இந்த வடிவம் பெற்றது என்று எதுவும் இல்லை . எதுவும் மாறவில்லை .


ஒரு குழுவாக கூடும் மாணவர்கள் அவர்களிற்கு என்ன தோன்றுகிறதோ அதை
செய்வார்கள் . அதை செய்து கொண்டு உள்ளார்கள் . மானவர்களிற்கு தெரியும்
அவர்கள் பகுதியில் உள்ள உள்ளூர் நிலைகளிற்கு ஏற்ப எப்படி போராடுவது என்று.


மத்தியமாக கூடி ஒரு மிகபெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம்
வெகு விரைவில் வரும் இன்னும் சில நாட்களில் மாணவர்கள் அனைவர்களிடமும் இது
பற்றி பேசுவோம் . எந்த மாணவர் குழுவும் தொய்வடைந்து விடவில்லை .
இப்போதுதான் Warm-up ஆகி உள்ளார்கள் . அந்த முதல் நிலை போராட்டத்தை
மட்டுமே தமிழகம் இப்போது பார்த்து உள்ளது .

மாணவர்களின் முழு சக்தி இன்னமும் பிரயோகபடுத்தபடவில்லை . அதற்கான கால சூழல் மிக அருகில் வருகிறது.

-------------------------------------------------------------------------------

நாளை காலை 11.00 மணிக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்
அடுத்தக்கட்ட போராட்ட வடிவம்,ஐ நா மனித உரிமையில் அமெரிக்க்க தீர்மான
வாக்கெடுப்புக்கு பிறகு மாணவர்களின்போராட்ட முடிவு பற்றிய பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெற உள்ளது.இடம் -பத்திரிக்கையாளர்கள் மன்றம்,
சேப்பாக்கம்,சென்னை.

 

-----------------------------------------------------------

 

இருபது ஆண்டுகளிற்கு பின்னர் அரசு அனுமதி பெற்று கூடும் ஈழ தமிழர்கள் , வள்ளுவர் கோட்டத்தில் (சென்னை ) உண்ணா விரதம் :


வள்ளுவர் கோட்டத்தில் , காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை
தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் ஐந்தாயிரம் பேர் மாபெரும் உண்ணாவிரத
நிகழ்வினை ஒருங்கிணைத்து உள்ளார்கள் .

சென்னையில் உள்ள நண்பர்கள் வள்ளுவர் கோட்டம் வாருங்கள் வந்து உண்ணா விரத நிலைக்கு ஆதரவு கொடுங்கள் .

Date : 22-03-13 morning 9 am to 5 pm , total expecting tamils around 5000 members+

 

-முகநூல்-

 

Posted

தமிழ் இளைய சமுதாயமே , 1947இல் சுதந்திரம் கண்ட இந்தியா மீண்டும் கடந்த ஒன்பது
வருடங்களாக ஒரு வெள்ளைக்காரியிடம் அடிமைபட்டு கிடக்கிறது ; அவனும் இவனும்
மாறி மாறி ஆண்டு நம்மை மைவாங்கி விரல்களாக பயன்படுத்தியது போதும் ; இனி
தமிழரை வாக்கு வங்கியாக ஏலம் போடும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை ;
இனி தமிழர் எதிர்காலம் நம் மாணவர் கையில் ; எனவே வரும் நாடாளுமன்ற
தேர்தலில் தமிழ்நாட்டின் நாற்பது தொகுதிகளிலும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக
வேட்பாளரை நிறுத்துங்கள் ; கண்டிப்பாக அரசியல் வியாபாரிகளை தவிர எல்லோரும்
உங்களை ஆதரிப்பார்; நாற்பது தொகுதிகளிலும் உங்களுக்கு ஜெயம் நிச்சயம் ;
முதலில் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணையுங்கள்; உங்களுக்குளே சட்ட
திட்டங்களை வகுங்கள்; அதற்க்கு அரசியல் சார்பற்ற தமிழ் சமூக ஆர்வலர்களை
உங்களோடு சேர்த்துகொள்ளுங்கள் ; ஒரு சுயகட்டுபாடான அமைப்பை உருவாக்குங்கள்
; இந்த ஒற்றுமையை பேணி காத்து வெற்றி கனியை பறியுங்கள்; உலக தமிழர்கள்
எல்லோரும் உங்கள் பின்னே ; தமிழன் மத்திய அரசிடம் இதுவரை குனிந்தது போதும் -
இனி தமிழனை நிமிர வைப்பது உங்கள் கையில் - நாற்பதை வென்றெடுத்து விட்டால்
இனி நடப்பதை தமிழன் முடிவு செய்வான் ..!
தயவு செய்து இதை எல்லோர்க்கும்
பகிர்ந்து கொள்ளவும் ; குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு ..!

 

-முகநூல்-

 

Posted

மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி?

புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.

களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

போராட்டத்தை ஃபேஸ் புக் புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்கு தேவையான பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும் ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி.

கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால் மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது.

கல்லூரி நிர்வாகமோ, மத்திய, மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல், உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி. தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டும்.

பெற்றோரின் கடின உழைப்பையும், காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும். இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும்.

“படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள் பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம், எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப் பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு வாழ்வது அவசியம்.

இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம் உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள். ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால் உருவாகட்டும்!

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 21, 2013

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதிப்பிற்குரியீர்,

வணக்கம். தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாளை (22.03.2013) காலை 11.30 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (சென்னை பிரஸ்கிளப்பில்) பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படவுள்ளது.

(சீ.தினேஷ்)
97911 62911
ஒருங்கிணைப்பாளர்

 

Loyolahungerstrike



போராட்டம் , மாணவர் போராட்டம்தான் அது அந்த வடிவம் பெற்றது இந்த வடிவம் பெற்றது என்று எதுவும் இல்லை . எதுவும் மாறவில்லை .

ஒரு குழுவாக கூடும் மாணவர்கள் அவர்களிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வார்கள் . அதை செய்து கொண்டு உள்ளார்கள் . மானவர்களிற்கு தெரியும் அவர்கள் பகுதியில் உள்ள உள்ளூர் நிலைகளிற்கு ஏற்ப எப்படி போராடுவது என்று.

மத்தியமாக கூடி ஒரு மிகபெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் வெகு விரைவில் வரும் இன்னும் சில நாட்களில் மாணவர்கள் அனைவர்களிடமும் இது பற்றி பேசுவோம் . எந்த மாணவர் குழுவும் தொய்வடைந்து விடவில்லை . இப்போதுதான் Warm-up ஆகி உள்ளார்கள் . அந்த முதல் நிலை போராட்டத்தை மட்டுமே தமிழகம் இப்போது பார்த்து உள்ளது .

மாணவர்களின் முழு சக்தி இன்னமும் பிரயோகபடுத்தபடவில்லை . அதற்கான கால சூழல் மிக அருகில் வருகிறது.
 

 

Loyolahungerstrike



Total Likes
24,076
Posted

தமிழக போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள அனைவரும் loyolahungerstrike இன் இந்த இணைப்பில் இணைந்திருங்கள். இப்பொழுது 24,078 likes

http://www.facebook.com/tamilnaduhungerstrike

Posted

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

 

(முகநூல்: loyolahungerstrike)



இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை. எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது.
-சுப்பிரமணிய சாமி-

வீட்டுக்குள் இருந்து அறிக்கை விடும் சூ . சாமி அவர்களே தமிழ்நாடு பக்கம் வரலாமே.

 

(முகநூல்: loyolahungerstrike)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனை  ஐயங்குளம், துணுக்காய்  2006  
    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2001-ம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்டன.
    • இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தமையால் பட்டறையில் பலவகையான இயந்திர தெளிவூட்டல்கள் , பயிற்சிகள் அளித்தார் போராளிகளுக்கும்… ஆயினும் முதல் நாள் இரவு இயந்திர பட்டறைக்கு ( உள்ளிணைப்பு இயந்திரம் – அதாவது இந்த இயந்திரம் ) வேலைக்காக வந்தது. அதைப் பற்றி சில போராளிகளுக்கு விரிவாக்கம் இல்லை, அந்தப் போராளிக்கு அதைப் பற்றி முதல் தடவை கடாபி அண்ணா அதன் விரிவாக்கம் கூறியிருந்தார். அன்று காலை காலைக் கடமைகள் முடித்து, இயந்திர நிலையத்துக்குள் சுத்தம் செய்வதற்கு பிரவசித்த வேளை, அந்த வாசலில் அந்த இயந்திரத்துடன் வந்த மூன்று போராளிகள் நின்றனர். அப்போது அந்த போராளியைப் பார்த்து கேட்கிறார்கள். அண்ணா…. இது எவ் வகையான இயந்திரம் என்ற… ( அப்போராளிகள் ஏற்கனவே படையணிக்குள் இயந்திரம் இணைக்க செல்லுகையில் நன்றாக அறிமுகமானவர்கள் ) ஆகையினால் … நகைச்சுவையாகவே கூறுகிறான் அந்த போராளி…. இதுதான்….! கடற்புலிகளில் புதிதாக இறக்கப்பட்ட கடாபி 4 ஸ்ரோக் ( அதாவது சண்டைப் படகுகளில் 2 ஸ்ரோக் இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டது ) எனக் கூறி வாசலை நெருங்குகையில் … அந்தப் போராளிகள் சிரிக்கின்றனர். …. ஆயினும் இடையில் கண்டர் வாகனம் ஊடறுத்து நின்றதால் அவர்கள் பார்வையில் நேரே கடாபி அண்ணா அவர்களுடன் கதைத்து ஏதோ செய்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் போராளி கடாபி அண்ணையைக் கண்டு தலையை சொரிந்து குறும்பு சினுங்கள் சிணுங்க கடாபி அண்ணா சிரிப்பை அடக்கிய வண்ணம் பார்த்தார். இங்கே வா என அழைகிறார். என்ன சொன்னாய் …? இல்லை…. எனக்கு பெயர் வடிவாக தெரியவில்லை ” மேற்…..குறி ” வடிவாக உச்சரிப்பு வரவில்லை… ஆனதால் ஆசானின் பெயரே உச்சரிபாய் வாயில் வந்தது. அதனால்…… கூறினேன் ” கடாபி 4 ஸ்ரோக் என…. முதுகில் படார்….என தட்டினார். அப்படியே அவர் வாகனத்தில் கவனம் எடுக்க மெதுவாக அந்த போராளி உள்ளே சென்று கடமையை முடித்தவுடன். அணிவகுப்கு மைதானத்தில் போராளிகள் யாவரும் கூடி நிற்க எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் விளங்கபடுத்தி விட்டு. கூறுகிறார் கடாபி அண்ணா … அந்த போராளியைப் பார்த்து …. ” …… நீர் இன்றையிலிருந்து என்னை மாஸ்ரர் என்றும் அண்ணா என்றும் கூப்பிட வேண்டாம் கடாபி என்றே அழையும் என ….” அப் போராளி…. இல்லை மாஸ்ரர்…. அதுதான் சொன்னேன் அல்லவா… இல்லை அண்ணா ….. கோபத்தை ஏற்படுத்தாதீர் … சென்று கடமையை செய்யும் என கூறிவிட்டேன் அவ்வளவுதான் என எழுந்து விரைந்து சென்றார். மற்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது … ஆயினும் பின்பு .. என்னடா நடந்தது வழமை போல் மாஸ்ர கோபபடுத்தினியா..? நடந்தத அந்த போராளிகள் கூறினார்கள். உனக்கு தேவைதான் என்றார்கள். மறுநாள் இன்னொரு தவறுக்கு சுத்தியல் நீண்ட தூரம் பறந்தது… ஆசானுக்கு தெரியும் என்றும் மாணவன் குறும்பாக இருந்தாலும் அவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார். நம்பிக்கையாக முல்லைதீவிலிருந்து மன்னார் மாவட்டம் முதல் திருகோணமலை வரை மற்றும் படையணிகளுக்குள் இயந்திரம் பூட்ட சில தேவைக்கு தனிமையிலும் போராளிகளுடனும் அனுப்பினார். ஆயினும் தேசகாதலுடனும் , குருபக்தியுடனும் கடமையும் விரிந்தது. ஒரு முறை சிறப்புத் தளபதி வேறு கடமைக்கு போராளியைத் தெரிவு செய்த வேளை கடாபி அண்ணையால் அப் போராளியின் பெயரும் கொடுக்கப்பட்டு சர்வதேசக் கடலிலும் விரிந்தது. காலம் செல்ல அலைகடலில் காற்றில் தவழ்ந்தது கடாபி அண்ணனின் பிரிவு செய்தி… லெப் கேணல் கடாபியாக கடமை முடித்து சென்ற எம் ஆசான்….! நீர் நினைத்த விடுதலை காணும் தமிழீழம் நீர் தொடர்ந்த தலைவனின் காலம் அதை வெல்லும்… இதை வருகையிலே கண்கள் ஓரம் கசிகிறது உம் ஈகத்தினால் … .
    • டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு     பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!   "தொடக்கக்கால கட்டடம்"         'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'       16.10.2005:   1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.     தகவல்: தமிழ்நெற்   'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'   ''நுழைவுவாயில்''   'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'   'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'   'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'   'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூ அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'   'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'   'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'   'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'   'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'   'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'   'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'   'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'   'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'   'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'   'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'   'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'   'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'   'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'   'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'   'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'   'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'   'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'   'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.