Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

From South Korea

Support for Tamil Eelam and student protest in Tamilnadu...

 

540119_600440883301274_811263245_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகர மாணவர் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கண்டன பேரணி, ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

530213_600446153300747_1251457667_n.jpg

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

விருதுநகரில் , நேற்று அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது , குண்டர்களை கொண்டு தாக்கிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம் அதற்கான முன்னெடுப்பு பணிகளை அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அனைத்து கல்லூரி மாணவர்களிடம் பேசுங்கள்.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களையும் கொண்டு ஒரு மாபெரும் மனித சங்கிலி நடத்தலாம்.
it should happen in crowed area like bustand, theatres, railway station,etc..
With thamil eezham posters n banners...

SAME TIME... ALL COLLEGE STUDENTS...

Pls Arrange for that..

 

(முகநூல் : loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை! 

31-03-2013-0001.jpg

 

 

 

இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக பாவித்து ஒட்டு மொத்த தமிழர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியது, சர்வதேச போர் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தியது, போர் விதிகளுக்கு மாறாக பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்கள், அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்களை கொன்றதுடன், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சுதந்திரமான பன்னாட்டு விசாரணை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை போராட்டங்கள் நடந்து வருகிறது. 

 

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வலுசேர்க்கும் வகையிலும் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மக்கள் நீதிமன்றம் அமைத்து ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதியரசர் ஆh.ஜி.ரத்னகுமார் முன் விசாரணை நடை பெற்றது. 

இந்த மக்கள் நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், ஈழப் பகுதிகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது கொடிய விஷமுள்ள ரசாயன குண்டுகளை வீசி கதற கதற கொன்றுள்ளார். எஞ்சிய பெண்களை அவரது ராணுவம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 

 

இவர்களது கொடூரம் தாங்காமல் இறந்த பெண்களையும் விட்டு வைக்காமல் பிணத்தின் மீதும் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டு அவற்றை படங்களாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். என் தமிழின பெண்களை பெண் போராளிகளை உடைகளை கலைந்து தெருவில் ஓட விட்டு சிங்கள காடையர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துள்ளனர். 

 

அப்பாவி சிறுவர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இப்போது உலகம் எங்கும் புகைப்படங்களாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இந்த இன அழிப்பு செய்த கொடூரனை இந்த மக்கள் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். இந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை உலக மக்களே எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று வாதிட்டார்.

 

ராஜபக்சேவுக்காக ஆஜரான வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் மற்றும் இந்திய அரசுக்காக ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்மோகனும்,

 

தமிழர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதங்கள் அத்தனையும் தவறானது. நீதியரசர் அவர்கள் இறுதி தீர்ப்பு சொல்லும் முன்பு நடந்த உண்மைகளை இந்திய அரசிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு தீர்ப்பினை சொல்ல வேண்டும். இந்திய அரசு இலங்கையில் குற்றமே நடக்கவில்லை என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சொல்கிறது என்று வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மக்கள் நீதிமன்ற நீதியரசர் ரத்னகுமார், ராஜபக்சே நடத்திய இருப்பது இன அழிப்பிற்கான கொடூர கொலைகள் தான் என்பது ஆதரங்களும், சாட்களின் அடிப்படையில் நிரூபனம் ஆகிறது. 

 

பெண்களை வன்புணர்ச்சி செய்து படம் எடுத்ததும் குற்றம், சின்னக் குழந்தைகளை கொன்றது குற்றம், பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பொதுமக்களை ஒரே இடத்தில் குவியச் சொல்லி அந்த இடத்தில் ரசாயன குண்டுகளை கொட்டி ஒட்டு மொத்தமாக பொதுமக்களை அழித்தது பெருங்குற்றம். 

 

தடயங்களை அழிக்க முயன்று தோற்றும் உள்ள இனப் படுகொலை செய்த ராஜகப்சே வுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்த கொடூர கொலைகளுக்கு துணை போன உலக நாடுகளுக்கு என்ற தண்டனை கொடுப்பது என்பது பற்றி மற்றொரு நாளில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி முடிவெடுக்கும் என்று வரலாற்று தீர்ப்பினைச் சொல்லி முடித்தார். 

 

நீதியரசரின் இந்த தீர்ப்பின் படி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனையை காளிதாஸ் மற்றும் பலர் மன நிம்மதியுடன் நிறைவேற்றினார்கள்.

 

தொகுப்பு - இரா.பகத்சிங். 

 

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95777

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

rajapakshe-3132013-150.jpg

இலங்கைப் போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அந்நாட்டு அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து கூறியதாவது: இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்ச மீது உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.போராட்டத்தில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர், இந்திய உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள், தில்லி பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பங்கேற்றனர். இலங்கை அதிபருக்கு உதவிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கண்டித்து போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று வே. ஆனைமுத்து தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79435&category=IndianNews&language=tamil

Posted

MAANAVAN NINAITHAAL(மாணவன் நினைத்தால்)

 

Posted

இன்று [31.3.2013] கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகள் சார்பாக 86 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாணவர் போராட்டம் அடுத்தகட்டமாக மக்கள் போராட்டமாக மாற்ற இந்த கலந்தாய்வு நடந்தது..

மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் விதமாக . சாதாரண மக்களுக்கும் ஈழத்தில் நடந்தது என்ன என்பதை பற்றி புரியவைக்க
'போற்குற்றமல்ல இனப்படுகொலையே, இலங்கை அல்ல தனி தமிழ்' ஈழமே !!' என்ற தலைப்பின் கீழ் வரும் ஏப்ரல் மாதம் 20,21 தேதிகளில் புகைப்பட, ஓவிய கண்காட்சி.. காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தரங்கு மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு ஏற்பாடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது . .

கையெழுத்து இயக்கம் , மாதிரி பொது வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் கண்காட்சியின் ஒரு அங்கமாக நடத்தப்பட இருக்கிறது..

இவன்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

Voice of eelatamil Youngsters for the Students in Tamil Nadu :)

 

http://www.youtube.com/watch?v=1mldzAoRpGQ&feature=youtu.be

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நடத்திய உண்ணாவிரதம். :(

 

ஈழத்திற்காக போராடுவோம்.

இதில் ஈழம் முதல்படுத்தி காட்ட பட்டிருக்கிறதா அசிங்கதிலும் அசிங்கம் ஈழத்துக்கு போராட சொன்னால் போராடுகிறார்கள் கூத்தாடிக்காக தமிழினம் அழியும் காரணம் இதுவே..... மக்களே புரிஞ்சிகோங்க தமிழகம் ஏன் முன்னேறவில்லை என்று இனி எவரேனும் இப்படி செய்தால் அவர்களுக்கு பாடம்புகட்ட தமிழன் முன்வர வேண்டும் ...

 

604137_3922524080627_1804406440_n.jpg

 

(முகநூல்)
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நடத்திய உண்ணாவிரதம். :(

 

ஈழத்திற்காக போராடுவோம்.

இதில் ஈழம் முதல்படுத்தி காட்ட பட்டிருக்கிறதா அசிங்கதிலும் அசிங்கம் ஈழத்துக்கு போராட சொன்னால் போராடுகிறார்கள் கூத்தாடிக்காக தமிழினம் அழியும் காரணம் இதுவே..... மக்களே புரிஞ்சிகோங்க தமிழகம் ஏன் முன்னேறவில்லை என்று இனி எவரேனும் இப்படி செய்தால் அவர்களுக்கு பாடம்புகட்ட தமிழன் முன்வர வேண்டும் ...

 

604137_3922524080627_1804406440_n.jpg

 

(முகநூல்)

 

:(

Posted

மாணவர்கள்
போராட்டம் என்பது, அனைத்து மாணவர்களும் இணைந்து செய்வது , இதில் ஒரு
தலைமையோ , அல்லது ஒரு தலைவரோ என்று யாரும் அறிமுகபடுத்தபடவில்லை ,
அவ்வப்பொழுது பத்திரிக்கையாளர்களை மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பது
என்றால் அது அனைத்து மாணவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர் ஏற்படும்
ஒருமித்த கருத்தை தெரிவிக்கும் மாணவர் ஒருங்கிணைப்பு செய்தியாளர் கூட்டமே ,
இதில் பிரதானம்., தமிழகம் முழுதும் ஈழ விடுதலை செய்திகளை மாணவர் போராட்டம் மூலம் கொண்டு செல்லும் செயலே .,அல்லாமல் ஒரு சில மாணவர்களை போராட்ட பிரதானமாக காட்டும் நோக்கம் அல்ல.

இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் பலவுள்ளது.
செய்ய வேண்டிய பணிகள் பல வுள்ளது.


அனைத்தையும் திட்டமிடுவோம் இது கூட்டு உழைப்பே . போராடும் ஒவ்வொரு
மாணவனும் , உள்ளூர் சூழல் கருதி போராட்ட திட்டமிடும் அனைவரும் தலைமை பண்பு
கொண்டவர்களே .

ஏற்கனவே நாம் சொன்னது போல நமக்கு தேவை அடையாளம் அல்ல விடை .

முதல் கட்ட போராட்டம் நமது அனைத்து கல்லூரிகள் திறக்கும் வரை என்று காலவரிசைபடுத்தி சொல்லலாம் .


முதல் கட்ட போராட்டம் , ஈழ விடுதலை செய்திகளையும் , ஈழமே தமிழர்களிற்கு
அவர்களின் வாழ்விற்கு நிரந்தர தீர்வு என்ற செய்தியை தமிழகம் எங்கும் பரப்பி
உள்ளது.

வரும் பல கட்ட போராட்டங்கள் , ஈழ விடுதலைக்கான நகர்வுகள் ஒவ்வொன்றையும் செய்யும் , அதற்க்கு தேவை கூட்டு உழைப்பு .


இன்னும் இரண்டு அல்லது ஐந்து நாளில் நெல்லையில் பதினான்கு கல்லூரி , பல்
தொழில் கல்லூரி மாணவர்கள் அமைதியான சாலையோர கைகோர்ப்பு போராட்ட நிகழ்வை
ஒருங்கிணைப்பதாக கூறி உள்ளார்கள்.

இது போலவே கோவையிலும் ஈரோட்டிலும் தர்மபுரியிலும் ..,

நம் ஒற்றுமை பணி தொடரும் ..மேலும் செய்தியோடு வருகிறோம் ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

528293_600619863283376_2059851859_n.jpg



-முகநூல்-  Loyolahungerstrike

Posted

லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ளிவாய்க்கால்" கவனயீர்ப்பு

 
லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ள்ளிவாய்க்கால்" கவனய [updated 47

minutes ago] லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ளிவாய்க்கால்"

கவனயீர்ப்பு போராட்டம். தமிழ்மக்களின் கல்வாரி எனப்படும் முள்ளிவாய்காலில்

படுகொலை செய்யப்பட்டு மரித்த மக்களின் குரலாக நீதிகேட்டும்,தமிழ்நாடு

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மகாராணி மாளிகையிலிருந்து

பாராளுமன்ற வளாகம்வரை தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் வெளிநாட்டவரின்

கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடரும் தமிழ் இனத்தின் துன்பச் சுமைகளின்

வெளிப்பாடாக சிலுவைகளைச்சுமந்து கிறிஸ்துவின் உயிர்த்தஞாயிறு நாளான இன்று

எமது மக்களின் உயிரிழப்புக்களுக்கும்,பாடு

களுக்கும்

இதுவரை மீட்புக் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் முகமாக வெள்ளை

ஆடைகள் அணிந்தும்,சிங்கள இனவெறியின் கோரமுகத்தை வெளிக்கொணரும் பதாகைகள்

தாங்கியும்,துண்டுப்பிரசுரங

்கள் விநியோகித்தும் இக்கவனயீர்ப்பு நடைபெற்றது.
 
------------------------------   முகநூல்  --------------------------------------------------------------------------------------
 

 

Posted

483152_600619883283374_179281786_n.jpg

 

562344_600619873283375_96778599_n.jpg

 

540759_600619913283371_758901428_n.jpg

 

528441_600619983283364_264622709_n.jpg

 

530024_600619999950029_2011700675_n.jpg

 

(முகநூல்)

Posted

லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ளிவாய்க்கால்" கவனயீர்ப்பு (படங்கள்)

 

24457_600620553283307_1817706399_n.jpg

 

522100_600620579949971_1542311387_n.jpg

 

528303_600620569949972_534174720_n.jpg

 

483190_600620599949969_1880920658_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)
 

Posted

தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு சார்பாக இன்று திருவாரூரில் தபால் நிலையம் பூட்டு போடும் போராட்டத்தில் 100 மாணவர்கள் கைது, தபால் நிலையம் இன்று 1 மணி நேரம் பணி முடக்கம்.

 

(முகநூல்)
 

Posted

அவசர செய்தி.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் நகரில் கலவரம்- மாணவர்கள் மீது காங்கிரஸார் சரமாரி தாக்குதல்.

மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த அனைத்து கல்லூரி மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் வன்முறை, தடியடி, பேனர்கள் கிழிப்பு. காங்கிரஸ் எதிர்த்தாலும் மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கைக்கூலி ராஜேஷ் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம். குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கோட்டை உடைகிறது. மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

564513_280154322119316_341903999_n.jpg

 

(முகநூல்)



வரும் வியாழன் 04.04.2013 அன்று மாலை 06.00 மணிக்கு மறைமலை நகரில் நடைபெறும் தெருமுனை பொதுக்கூட்டம் .....அனைவரும் வருக ......கருத்துக்களை பெறுக.

 

601406_10200695580263102_516575821_n.jpg

 

(முகநூல்)

Posted

தமிழக உளவுத்துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் அந்த 50 முகநூல் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! facebook ன்னா வெட்டி அரட்டை இல்லே ன்னு நீங்க தான் நிரூபிச்சிருக்கிங்க !  :D

 

(முகநூல்)

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழீழப் படுகொலையை அடுத்து தமிழீழ இசுலாமியர் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதம் வெறியை அவிழ்த்து விட்டிருக்கிறது. தொடர்ச்சியாக இசுலாமியர் மீதான தாக்குதல் நிகழ்த்துவதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இன்று மாலை 4மணிக்கு இலங்கை தூதரகத்தினை முற்றுகை இடுகிறார்கள்.

 

தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் இணைந்து கொள்வோம். புது தில்லியில் உள்ள ஐ. நா தலைமை அலுவலத்தினை தனது தேசிய அரசியல் கட்சித் தலைவர்களால் முற்றுகையிட்டு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தினை நடத்திய இந்தத் தோழர்களின் குரல் நம்குரல்.
தொடர்பிற்கு 9940045320.. பகிர்க.

- திருமுருகன் காந்தி -

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

actors-hunger-strike-seithy-150.jpg

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், நாளை செவ்வாய்க்கிழமை நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம் நடாத்தவுள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களை இராணுவம் கொன்று குவித்ததைக் கண்டித்தும், எஞ்சியுள்ள தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையுலகம் சார்பில் திரைப்பட இயக்குநர்கள், சின்னத்திரை தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, நடிகர்-நடிகைகள் சென்னையில், நாளை செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்கள்.

  

அதில் கூறி இருப்பதாவது:-

 

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலையுலகின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளார் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட தொப்புள்கொடி உறவுகளான தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான - சுதந்திரமான நல்வாழ்விற்காக நாளை செவ்வாய்க்கிழமை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

இதில், 

 

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், 
கில்டு, திரைப்பட இயக்குநர்கள் சங்கம், 
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், 
அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், 
விநியோகஸ்தர்கள் சங்கம், 
திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், 
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, 
அதில் இணைக்கப்பட்ட சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம், 
சின்னத்திரை நடிகர்கள் சங்கம், 
சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், 
பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் 

 

ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79460&category=TamilNews&language=tamil

Posted

தமிழக மாணவர் போராட்டத்துக்கும் தமிழீழத்துக்கும் தமிழர்கள் அல்லாத வெளிநாட்டவர்களும் ஆதரவளிக்கும் காணொளி. :)

 

http://www.youtube.com/watch?v=f-_lDi3jL48&feature=youtu.be

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருச்சியில் ஒரு கோடி மாணவர்களின் மாபெரும் பொதுக்கூட்டம்

 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.04.2013) தமிழ் மாணவர்களைத் தாக்கிய தமிழின விரோத காங்கிரசைக் கண்டித்தும், சிறீலங்கா மீது சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழ விடுதலையை கோரியும் இம் மாபெரும் ஒரு கோடி மாணவர் பொதுக்கூட்டம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

 

இப்போராட்டத்தின் முடிவில் பழ நெடுமாறன் மற்றும் நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள்.

 

தமிழகம் தழுவிய நிலையில் இப்போராட்டம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

மிகவும் எழுச்சியாக இப்போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காங்கிரசின் வீழ்ச்சியே!
தமிழினத்தின் எழுச்சி!!

578145_10152701253910198_2130161182_n.jp

 

http://www.sankathi24.com/news/28580/64//d,fullart.aspx

Posted

சென்னையைக் குலுக்கிய மாணவர் பேரணி, ஆர்ப்பாட்டம்

 

68565_430487713707657_1848132218_n.jpg

 

485223_430487993707629_386484081_n.jpg

 

540747_430487930374302_503781588_n.jpg

Posted

என் ஈழ நண்பர்களே உங்களுக்கு...
எங்களை மன்னிக்க கோரி ஒரு கடிதம் !!!

கவலை வேண்டாம்
இனி விடியலை நோக்கி நம் பயணம் !!!

நங்கள் போர்களத்தை கண்டதில்லையே;
உங்கள் நிலையை ஊடகங்களும் எங்களுக்கு கூறவில்லையே;
எங்களுக்கும் உங்களுக்கும் அந்த சமயம் தொடர்பும் இல்லையே;
எங்கள் மானம் விற்ற அரசியல்வாதிகளும் எங்களுக்கு சொல்லவிலையே;
உங்கள் அன்றைய நிலையை :(

"முடியலயே முடியலயே ! எங்களால் உங்களை காக்க முடியலயே!
முடியலயே முடியலயே ! எங்களால் நம் மானம் காக்க முடியலயே!"

அப்போது எங்களை கொன்றபோது அமைதி காத்தவர்களே !!
இன்று என்னடா அக்கறை என்று நீங்கள் கேட்பது சரி தான்!

இப்போது போராடும் மாணவர்கள் அப்போது குழந்தைகள் என்பதை மறக்க வேண்டாம்;
இப்போது போராட்டத்திற்கு கை கொடுப்பவர் அப்போது கொடுக்கவில்லை மறக்க வேண்டாம்;
இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் அப்போது இல்லை மறக்க வேண்டாம்;
இப்போது உள்ள அளவிற்கு விழிப்புணர்வு அப்போது இல்லை மறக்க வேண்டாம்;
இனி நீங்கள் எதற்கும் இனி கொதிக்க வேண்டாம்:

இனி எதுவாயினும் !!! நாங்கள் போராட்டத்தை நிறுத்த போவதில்லை !
இனி எம்மக்களுக்கும் தமிழுக்கும் உயிர் தரவும் தயார் !
அதாவது உயிர் என்பது இங்கு விழிப்புணர்வு !
செத்த பிணமாய் நடமாடும் சுயநலவாதிகளுக்கு... விழிப்புணர்வு என்னும் உயிர் கொடுத்து போராடுவோம்...
வென்றெடுப்போம் தமிழ் ஈழம் !!!

இப்படிக்கு,
என்றும் தோழமையுடன்,

தன்மானம் சக்ரவர்த்தி

(முகநூல்)

Posted

Official Circular From Anna University ,Chennai...

 

 

488377_439351509480236_1433108606_n.jpg

 

(முகநூல்)
 

Posted

The Hindu இல் வந்துள்ள IIT-Kharagpur மாணவர் போராட்ட செய்தி.

 

IIT-K students rally

 

01EPBS-Campus-B_01_1413284e.jpg

 


The students of IIT-Kharagpur organised a signature campaign to create an awareness among the student community about the human right violations in Sri Lanka against the ethnic Tamil community.

They highlighted the following points during their awareness campaign.

To conduct an international independent investigation on the human rights violations and genocide killings.

To give equal rights and political power to the linguistic minorities living in Sri Lanka.

Requesting India to register a strong protest and concerted action against the Sri Lankan government over this issue.

The students also successfully organised a peaceful rally last week. More than 300 students belonging to different states participated, registering their solidarity with the issue.

 

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/iitk-students-rally/article4567943.ece?fb_action_ids=10151586079109402&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map={%2210151586079109402%22%3A236843026457224}&action_type_map={%2210151586079109402%22%3A%22og.likes%22}&action_ref_map=[]

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.