Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரிகள் இயங்கும்

மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்கலை., கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 03.04.2013 புதன்கிழமை முதல் வகுப்புகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விடுமுறையை ஈடுகட்ட கூடுதல் நாட்களில் கல்லூரிகளை நடத்தி கொள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புக்களை நடத்தி, பாடங்களை நடத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

nakkheeran

 

(முகநூல்)


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

GTV யில் 8 மணிக்கு விவாதம், தலைப்பு “தனி ஈழமா ?! சுயாட்சியா?!

(முகநூல்)

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

சன்ரைசெர்ஸ் அணியில் , 2 சிங்கள ஆட்டக்காரர்கள், என்ன சொல்கிறார் கலாநிதி மாறன்? தீர்க்கமான ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஏன்? சங்ககாராவின் பேட்டி படித்தேன், ஒட்டு மொத்த தமிழர்களின் குரல் ஓசை கேட்கவில்லை போல் இருக்கிறது, புறப்படு தமிழா கலாநிதி மாறனை முற்றுகையிட, தமிழனை ஏமாற்றியது போதும், தமிழர்கள் இனியும் ஏமாறமாட்டர்கள்

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

சன்ரைசர்ஸ் அணியில் சிங்களவனை கேப்டனாக நியமித்து விட்டு ஈழ தமிழர்களுக்காகவே டெசோ என்று சொல்ல எப்படி ஐயா உங்களுக்கு மனம் வருகிறது?
சன் தொலைகாட்சிக்கு உங்கள் கண்டனத்தை தெரிவிக்க...
தொலைபேசி எண் - 04444676767...

(முகநூல்)
 

Posted

ஈழத்திற்கு
பொது வாக்கெடுப்பு என்ற நிலையை உலகம் எடுக்கும் வரை , அதற்கான அழுத்தங்களை
திட்டமிட்டு போராடும் பணியை, குணத்தை மானமுள்ள தமிழன் தன் வாழ்வில் ஒரு
பகுதியாக ஏற்றுக்கொண்டதை உலகிற்கு உறுதியாக தெரிவித்து வருகிறது தமிழக
மாணவர்களின் இன மீட்சிக்கான போராட்டம் . அதை தொடர்ந்த உலகம் முழுவதும்
நடக்கும் எழுச்சி போராட்டங்கள் , ஈழ நாட்டிற்கான முழு நம்பிக்கையை
கொடுக்கிறது.

தமிழனுக்கு என்று தனியே ஒரு நாடு இல்லை என்றால்
அவனது மொழியை , அவனது மிச்ச சொச்ச கலாசாரத்தை அவனது பண்பாட்டை , அவனது
அடையாளத்தை எக்காலத்திற்கும், பிற அரசாங்க நடைமுறைகளை கொண்ட
அரசியளிர்க்குள் காக்க முடியாது.

இங்கே தமிழன் என்று சொன்னது ஈழ
தமிழனை மட்டும் அல்ல . ஒட்டு மொத்த உலக தமிழனையும்தான் ; உலகில் அப்படி
ஒரு தனி நாடு உருவாக வாய்ப்பு உள்ள இடம் ஈழம் மட்டுமே .

எனவே ஈழம் என்பது ஈழ தமிழனுக்கு மட்டும் அன்று அது ஒட்டு மொத்த தமிழனுக்கும் மொழி அடையாளமாக, கலாசார அடையாளமாக இருக்கும் .


தமிழரின் தனி நாடு, தமிழ் மொழியை காப்பாற்றும் ; தமிழர் கலாசாரத்தை வாழ்வு
முறைகளை உயிர்பித்து எப்போதும் நிற்கும். அதையே பிரதானமாக கொண்டு
நிற்கும்.

தமிழ் இனம் , தமிழ் மொழி காக்க படவேண்டும் என்றால் வாய்ப்பு உள்ள தமிழ் ஈழம் நாடு தமிழருக்கு என்று நிச்சயம் வேண்டும்.


அதற்குண்டான பணிகளை நாம் நாளும் நம் சிந்தனையில் திட்டமிடுவோம்

 

  -முகநூல்-

Posted

இன்று தலைநகர் சென்னையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இறுதித் தேர்வு வரையில் இந்த போராட்டத்தை தக்கவைத்துக்கொள்ள நூதனமான முறையிலும் அனைத்து உலக மக்களும் பங்கேற்கும் வகையில் போராட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரில் வர இயலாத சில மாவட்ட பிரதிநிதிகளுக்கு இந்த முடிவு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

மாணவர்களாகிய நாங்கள் எங்களது வகுப்பறையில் தினமும் காலை 11 முதல் 11:02 வரை இரண்டு நிமிடங்களுக்கு மௌனம் கடைபிடிப்போம். நம் தமிழினம் படும் துன்பங்களை இந்த உலகம் உணரும் வரையில், ஐநா மன்றம் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தும் வரையில் தினமும் இரண்டு நிமிடங்கள் மௌனத்தை தொடருவோம். இந்த மௌனப் புரட்சியை அனைத்து உலக மாணவ சமுதாயத்துக்கும் பரப்புவோம்.

இன்று அனைத்து மாவட்ட மாணவர்களும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி இரண்டு நிமிடம் மௌனம் செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம்.

கீழுள்ள கடிதத்தை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஓ உலக மனிதர்களே! உலக நாடுகளே !!
உங்களைப் போல் ஒருவராய் சக பயணியாய் எல்லையில்லா இப்பரந்த பூமியில் வாழப் பிறந்த ஈழத் தமிழர்களாகிய எங்களை, யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்று பேதம் பார்க்காமல் எல்லோரையும் நேசித்து வாழ்ந்த எங்களை, மனித நாகரிகத்திற்கும் அறிவிற்கும் ஒவ்வாத வகையில் இனம், மதம், நிறம், மொழி பார்த்து, கருத்து பேதம் கொண்டு எம் உயிரை, உடலை, உணர்வை, உருக்குலைத்து கொன்று சிதைக்கின்றனரே!

எம் தாயை, தமக்கையை, சேயை ஒரு துளி இரக்கமின்றி வெறிபிடித்து அழித்து, செத்த பிணத்தையும் புணர்ந்து தீக்கிரையாக்கி எம்மக்களை காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் புதைக்கின்றனரே! இதை பார்த்துக்கொண்டிருப்பது மனித நீதியா? உங்களின் மனசாட்சிக்கு ஏற்புடையதுதானா? ஒரு கணம் சிந்தியுங்கள்.

வீடிழந்து நாடிழந்து எம்மக்களில் பல இலட்சம் பேர் உலகெங்கும் உயிர்பிழைக்க ஓடுகின்றனரே! பாராமுகம் காட்டும் அண்டை இந்தியநாட்டில் பல இலட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனரே! ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனரே! இன்றும் தினம் தினம் எம்மவர் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றனரே! எம் பெண்டிரின் நிலை சொல்லக்கூடியதா?

உறவிழந்து, உடமையிழந்து, உணர்ச்சி செத்து உரிமை பெற வழியின்றி வாடும் எம்மை மனிதராய் வாழ வழி காட்ட மாட்டீரா? இந்த அழிவை தடுத்து நிறுத்த மாட்டீரா? இவ்வுலகில் வாழும் மனிதர் எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களின் அடிப்படை வாழ்வுரிமையை பாதுகாப்பதாகச் சொல்லும் ஐநா மன்றமே “எம்மண்ணில் எங்களின் வாழ்வை நாங்களே தீர்மானிக்க இப்போதேனும் பொதுவாக்கெடுப்பு நடத்துக ! We Want Referendum.”

மனித நேயத்தோடு எங்களின் நிலையையும் எம்மைப் போன்று உலகமெங்கும் பல நாடுகளில் பெரும்பான்மையோரால் நசுக்கி அழிக்கப்படும் பரிதாபப்பட்ட சிறுபான்மை மக்களின் துயரத்தையும் மனதில் நினைத்து இழப்பிற்கு வருந்தியும் மீதமிருப்போரை வாழ வைக்கவும் ஒவ்வொரு நாளும் (காலை 11 முதல் 11.02 வரை) 2 நிமிடங்கள் எழுந்து நின்று மௌனம் கடைப்பிடியுங்கள். உங்களின் மனித நேயத்தை மௌனத்தால் உலகுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் மௌனம் உலகத்தாரின் மனசாட்சியை தட்டி எழுப்பட்டும். மாணவர் தொடக்கும் இம்மௌனப் புரட்சி உலகெங்கும் பரவட்டும். இம்மௌன மொழி அடக்கி ஆளும் நாடுகளின், ஐநா மன்றத்தின் காதுகளை கண்களை சிந்தையை தட்டி எழுப்பும் வரை தொடரட்டும். தன் நாட்டின் நலமொன்றே பெரிதென்றெண்ணி பிற மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் உலக நாடுகளின் போக்கு மாறட்டும்! மாபெரும் வலிமையுடன் மனிதரின் வாழ்வுரிமை நிலைநாட்டப்படட்டும்.
வையம் வாழ வாழும் பண்பை இவ்வுலகம் கற்கட்டும்.
ஈழம் மலரட்டும் ! மானுடம் வெல்லட்டும் ! !

 

http://www.facebook.com/photo.php?v=446970508717379&set=vb.100002133006250&type=2&theater

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

Vicky Pillai

 

தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோள்.

தோழர்களே மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து உங்கள் முகநூலின் சுயவிவர படமாக loyola hunger strike, சுயவிவர படத்தை
பாவிக்கவும், தமிழ் ஈழம் காணும் வரை உங்களின் சொந்த சுயவிவர படத்தை பாவிப்பதை தவிர்க்கவும். எல்லோரும் ஒரே குரல் கொடுப்பது போல், ஒரே சுயவிவர படத்தை பயன் படுத்துவோம், முடிந்த அளவுக்கு உங்களின் நண்பர்களையும், உறவினர்களையும் மாற்ற செய்யுங்கள், தமிழ் இன ஒற்றுமை ஓங்குக ஒற்றுமையை உலகத்துக்கு வெளிபடுத்துவோம். சுய விவர படத்தை மாற்ற உதவி தேவைபடுபவர்கள் அணுகலாம் நன்றி. please share.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வணக்கம் நண்பர்களே. நாளை காலை 9மணிக்கு சென்னை எழில் நகரில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் ஆர்பாட்டம், போரட்டம் எழில் நகர் வியாபரிகள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9 மணி அளவில்.


(முகநூல் : loyolahungerstrike)

Posted

மீண்டும் கல்லூரிகள் திறக்கபடுகின்றன .

மாணவர்கள் , அவரவர் உள்ளூர் நிலைமைகளுக்கு , ஏற்ப அமைதி அறவழி போராட்டங்களை சிந்தியுங்கள் .
கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர் அனைவரிடமும் ஆதரவு தர கோரி பேசுங்கள் , நிச்சயம் அனைவரும் ஆதரவு தருவார்கள்.

இரண்டு நிமிடம் அமைதி என்பது செய்ய கூடியவர்கள் செய்யட்டும் .

அதை விட , கல்லூரி வளாகத்திற்கு முன் , சாலையோரத்தில் யாருக்கும் எந்த வித இடைஞ்சல் இல்லாமல் , மாணவர் சங்கிலி கைகோர்ப்பு என்று ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னர் ஏன் செய்ய கூடாது ?

கல்லூரிக்குள் இரண்டு நிமிட அமைதி போராட்டம் அது கல்லூரி மாணவர்களிற்கு மட்டுமே தெரியும் , கல்லூரிக்கு வெளியே இப்படி அமைதியான சங்கிலி கோர்வையை மாணவர்கள் ஒழுங்கு அமைத்தால் மட்டுமே அது பொது மக்களின் மனதை உலுக்கும்.

ஒவ்வொரு போராட்டத்தையும் வெகு ஜன செய்தியாக்குங்கள் .:

(முகநூல் : loyolahungerstrike)

Posted

மாணவர்களை தொடர்ந்து தற்பொழுது பொதுமக்களும் தமிழீழ போராட்ட களத்தில்....

தமிழீழ இன படுகொலையை கண்டித்து பொதுமக்கள் சார்பாக நாளை (03.04.2013) மாலை SRP Tools முதல் OMR சாலையில் மனித சங்கிலி போராட்டம், OMR சாலையில் வேலை செய்யும் தகவல் தொழல் நுட்ப பணியாளர்கள் மற்றவர்களும், வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும், முடிந்தால் செய்தியை மற்றவர்களுக்கு பகிரவும்...... மனித சங்கிலியில் கலந்து கொண்டு தமிழீழதிற்கான நமது ஆதரவினை பதிவு செய்வோம் !


(முகநூல்)

Posted

students will wear black band on 3rd april & attend colg demanding indian govt to remove 13 srilankan players from IPL team,,,,,,,,,pls forward nd share it....!!!!!!

 

625707_571559669551516_1987748374_n.jpg

 


(முகநூல்)

Posted

581392_499898133403471_356018596_n.jpg

 

ஈழ விடுதலைக்கான போராட்டம்:
இடம்: பெங்களூர்
நாள் : ஏப்ரல் 6,சனிக்கிழமை

அன்பார்ந்த நண்பர்களுக்கு:

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் பெங்களூரில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று நண்பர்கள் பலரோடு கடந்த வாரங்களில் விவாதித்து வந்தோம்.எந்த வகையில் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று விவாதித்த போது, ஏற்கனவே ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூர் தமிழ் மக்கள் சார்பாக, ஈழ மக்களுக்கான ஒரு வலுவான போராட்டம் முன்னெடுக்கப் படுவதாக தகவல் அறிந்தோம்.

அன்றைய போராட்டத்தை முன்னெடுக்க அய்யா பழ. நெடுமாறனும், வைகோவும் பெங்களூருக்கு வரவிருக்கிறார்கள்.

நம் நோக்கம் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். அது ஈழ மண்ணில் கடந்த அறுபது ஆண்டுகளாக,சிங்களனின் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும், எம் உறவுகள் அனைவரும்,சிங்களனின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு, தங்களுக்கான, சுதந்திர தமிழீழ தாயகத்தை அமைத்து கொள்ள, சர்வதேச நாடுகள் உதவியுடன் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்த பட வேண்டும்.

ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் கோரிக்கையும் அதுவே என்பதால்,தனித் தனியாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, நண்பர்களின் ஆலோசனை படியே, நாமும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வலுப்பெற செய்வது தான் மிகச்சரியாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.

உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வலுப்பெற செய்வது, தமிழர்கள் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். போராட்டம் வார இறுதி நாளான சனிக்கிழமை என்பதால், சாக்கு போக்குகளை தவிர்த்து விட்டு களம் காணுவோம்.

 

போராட்ட இடமும்,நேரமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.முழுமையான தகவல் தெரிந்தவுடன் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

தயாராகுங்கள் நண்பர்களே!

பெங்களூரில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதே பலருக்கு தெரியாமல் இருக்கிறது. எனவே தயவு செய்து நண்பர்களே! இந்த செய்தியை பகிர்ந்தால், பலர் வந்து கலந்து கொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி!
பெங்களூர் தமிழ் நண்பர்கள்.
பொறியாளர். ஆன்டனி வளன்


(முகநூல்)

Posted

538957_366725153442189_1390293637_n.jpg

 

(முகநூல்)

Posted

புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா #


புலி இருக்கும்போதும் அச்சுறுத்தல்.. இல்லாத போதும் அச்சுறுத்தல்..இதிலயிருந்து என்ன விளங்குது..?

பிரச்சினை புலியில்லை..உங்கட கொள்கை வகுப்பாக்கம். அதை முதல்ல மாத்துற வழியை பாருங்கோ..


பிறகு தெரியும் புலி அச்சுறுத்தலா? சிங்க(ள)ம் அச்சுறுத்தலா என்று..!

 

இல்லை மாத்தமாட்டம் என்று அடம்பிடிச்சா சிங்களவனும் சீனாக்காரனும் கட்டுற பாடையில போய்ச்சேருங்கோ..

Best of luck..

Posted

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்

திருச்சியில் கல்லூரி மாணவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டதை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் வேளாண் புல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் மாணவர்கள் சுமார் 50 பேர் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலை 5 மணிக்கு பேராசிரியர் செல்லப்பன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள் ஆவேசம்

 

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த நடிகர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
 
விஷால்:- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
 
நாசர்:- இலங்கை தமிழர்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சங்கமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் எப்போதோ அமைந்து இருக்க வேண்டும். இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் கோரிக்கை நிறைவேறாதது வருத்தம் அளிக்கிறது. இந்த எழுச்சி உலகத்தின் காதுகளில் விழும். இனியாவது விடியல் ஏற்படட்டும்.
 
பிரகாஷ்ராஜ்:- மனிதர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இலங்கையில் நடந்துள்ளது மோசமான செயல்பாடுகள். தமிழ் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மாணர்கள் நடத்தும் போராட்டத்தை விட்டுவிட வேண்டும். இலங்கை மக்களுக்கு விடியல் ஏற்படட்டும். இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும்.
 
கோவை சரளா:- இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உரிமைக்காகவே இப்போராட்டம், ஈழ தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும்.
 
பரத்:- இலங்கை தமிழர்கள் நம் உடன்பிறப்புக்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய அரசு தலையிட்டு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNTc4MjYw.htm#.UVt-wjeG2Qs

Posted

நடிகர்களின் உண்ணாவிரதத்தில் மாணவன் ஜோ. பிரிட்டோவின் உரை..
 

Posted

நடிகர்களின் உண்ணாவிரதத்தில் பல குறைகள் இருப்பதாக பலர் முகநூலில் தெரிவித்துள்ளார்கள். :rolleyes:

எவ்வாறாயினும் நடிகர்கள் உண்ணாவிரதமிருப்பது நிச்சயம் மாணவர் போராட்டத்துக்கு ஒரு பிரச்சாரமாக அமையும். எனவே அவர்கள் உண்ணாவிரதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே...

Posted

தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா?
வாக்காளர் அடையாள அட்டைகளை தீயிலிட்டு கொளுத்திய மாணவர்கள்

"தனி தமிழ் ஈழம் வேண்டும்".
உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். புதன் கிழமை இன்று (03/04/2013) விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே..

மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு..
வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்று தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தீயிலிட்டனர்

இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெறும்.
தமிழ் ஈழம் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள்.

 

(முகநூல்)



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழீழமும் மாணவர் கடமையும்...
கருத்தரங்கம்...5-4-2013, வெள்ளி மாலை 3.00 மணிக்கு ,காயத்ரி மகால்,
காங்கயம் சாலை,வேலன் ஓட்டல் எதிரில்... திருப்பூர். தவறாது வருக.

 

521663_601677523177610_1326846778_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

72988_443451892396245_762194372_n.jpg

 

ஈழத்தமிழர் விவகாரம் காரணமாக கால வரையற்று மூடப்பட்டு இருந்த அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இன்று. திறக்கப்பட்டன. மாணவர்களின் போராட்டத்தால் மொத்தமாக 15 நாள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. பாடங்கள் எதுவும் எடுத்து நடத்தி முடிக்கப்படவில்லை. தேர்வுகளும் நெருங்கி விட்டன . ஆக இந்த 15 நாள் விடுமுறையை ஈடுகட்ட இன்று முதல் தினம் 9 மணி நேரம் கல்லூரிகள் இயங்கும் என்றும், சனி, ஞாயிறு விடுமுறை கூட கிடையாது என்றும் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது .

 

இது ஒருபக்கமானாலும், மறுபக்கம் இன்று கல்லூரி வந்த மாணவர்கள் அனைவரும் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(முகநூல்)

 

Posted

தமிழ் ஈழ விடுதலைக்காக சென்னை செம்பரம்பாக்கம் சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின் கருப்பு அடையாளப் போராட்டம்…

 

299243_4682654944031_29921055_n.jpg

 

(முகநூல்)



கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள்

 

black-badge.png

 

மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் மூடப்பட்டிருந்த தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. இருப்பினும் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர் மாணவர்கள்.

அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டங்களால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.

இதேபோல் பொறியியல் கல்லூரிகளுக்கும், மார்ச் 18-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமலும் இருக்க, தமிழகத்தில் மூடப்பட்ட அனைத்துக் கல்லூரிகளும், இன்று திறக்கப்பட்டன.

அப்போது வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள், தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்யும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

இறுதித் தேர்வுகள் முடியும் வரை தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்றும், அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்து மாணவர் அமைப்பினருடன் கலந்து பேசிய பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தினமும் ஒரு கல்லூரி வீதம் கருப்பு பேட்ஜ் போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/tn-colleges-reopened

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர்கள்

மக்கள்

திரைப்படத்துறையினர்

கட்சியினர்

அனைவருக்கும் கரம் கூப்பி நன்றிகள்

 

தொடர்ந்து இந்த திரியில் தமது நேரங்களைச்செலவிடும் துளசி  பையன்26 தமிழரசு அகூதா  மற்றும் தம்பி  சுண்டல் ஆகியோருக்கு தலை சாய்த்து நன்றிகள்

Posted

'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை ..

Date: 04.04.2013
Place: Murasoli Maran Towers
73, MRC Nagar Main Road,
MRC Nagar,
Chennai - 600 028

 

24303_325748357527503_1058342432_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

tomorrow's boycott of sun office should make the owner kalanidhi maran to get rid of srilankan players from his team ......

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

 

நாளை காலை 10 மணிக்கு சிங்கள வீரர்களை நீக்காத சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளாரன சன்குழுமத்தின் பட்டினப்பாக்கம் சன் தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை... தமிழர்களிடம் பிழைப்பு நடத்தி அவர்கள் பணத்தை கொண்டு அவர்கள் மண்ணிலே இருந்து கொண்டு சிங்கள வீரர்களை விளையாட வைத்தால் என்ன நடக்கும் என உணர்த்துவோம்,...!!

தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!!
 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சிங்கள நிறுவனங்கள் வெளியேற 24 மணி நேரம் கெடு: திருச்சியில் மாணவர் கூட்டமைப்பு எச்சரிக்கை.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13756%3Anikin-lanka&catid=36%3Atamilnadu&Itemid=102

 

-முகநூல்-Loyolahungerstrike

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ திருச்சியில் சிங்கள அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய மாணவர்கள் ; பதற்றம் நிலவுகிறது.[படங்கள் ] பிரிவு: தமிழ் நாடு

trchy-2day-1.JPG

ஈழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவன‌ங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது. போலீஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின.

இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நிகின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாணவர் கூட்டமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட குழுவை சேர்ந்த சத்தியகுமாரன், பெருமாள் ஆகியோர், ''திருச்சியில் உள்ள சிங்களர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் இழுத்துப் பூட்டி இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் காலி செய்வோம். இதுவரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த நாங்கள் இனி மாற்று வழியில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்" என்று எச்சரித்தார்கள்.

 
 நிகின் லங்கா அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டது தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரை கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறது கண்டோன்மென்ட் போலீஸ். இதனால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.trchy-2day.JPG

 

 

 

 

 



http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13756%3Anikin-lanka&catid=36%3Atamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்சிலிருந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக  ஒரு தளம்

 

http://www.tagtamil.com/

Posted

மாணவர்களுக்கு ஆதரவாய் எட்டு கி.மீ மனித சங்கிலி போராட்டம்.

ஈழ மக்களின் நலனுக்காக வேண்டி முக்கிய கோரிக்கைகளை வைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று மாலை பொது மக்களும் வியாபாரிகளும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை தரமணி டைடல் பார்க்கை அடுத்த எஸ்.ஆர்.பி நிறுத்தம் தொடங்கி பழைய மகாபலிபுரம் சாலையில் கோழிங்கநல்லூர் வரை தொடர்ந்து எட்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த போராட்டம் நடந்தது.

பொது மக்கள் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள்,பள்ளி மாணவர்கள் சிறுவர்கள், பெண்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் முனைப்போடு பங்கேற்றார்கள். இந்த மனித சங்கிலியில் ஐயா பழ. நெடுமாறன், வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன், இயக்குனர்கள் புகழேந்தி தங்கராஜ், கௌதமன், மதிமுக நிர்வாகி பாலவாக்கம் சோமு, நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவல் சீமான்,வேளச்சேரி மணிமாறன்,காஞ்சி ராஜன்,தசரதன், பிரபாகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.ஈழத்திற்கு ஆதவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி போராட்டம் நீண்டு நடந்து முடிந்தது.

 

529495_438688216217765_1148912762_n.jpg

 

48093_438688212884432_1761841756_n.jpg

 

48162_438688209551099_640190999_n.jpg

 

2524_438688222884431_1094229561_n.jpg

 

531781_438688239551096_604233059_n.jpg

 

483577_438688289551091_1695372848_n.jpg

 

48150_438688336217753_2081839797_n.jpg

 

(முகநூல்)

Posted

மனித சங்கிலி போராட்டம் தொடர்பான மேலும் சில படங்கள்.

 

46973_600027196691378_176734273_n.jpg

 

562614_600026840024747_167972344_n.jpg

 

388707_600026316691466_1945719700_n.jpg

 

555119_600026700024761_1327585094_n.jpg

 

63577_600026663358098_1587393877_n.jpg

 

579738_600027323358032_1554794579_n.jpg

 

533863_600027610024670_178121707_n.jpg

 

150768_600027753357989_1294810126_n.jpg

 

3021_600027890024642_1924708812_n.jpg

 

6741_600028170024614_1907686751_n.jpg

 

532157_600028440024587_1549356128_n.jpg

 

544697_600028786691219_1301585066_n.jpg

 

531969_600028826691215_1498280406_n.jpg

 

156822_600029053357859_446135079_n.jpg

 

73141_600029136691184_1606002077_n.jpg

 

156824_600029653357799_701677265_n.jpg

 

149445_600029646691133_2053909971_n.jpg

 

563579_600030016691096_56669415_n.jpg

 

485368_600029953357769_59920647_n.jpg

 

544529_600026073358157_403314989_n.jpg

 

(முகநூல்)

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 15 DEC, 2024 | 11:12 AM   யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.   காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201311
    • 15 DEC, 2024 | 09:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.  தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான   திட்டமாகவே இது உள்ளது. மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது  துறைமுக நகர் குறித்தும் ஆலோசிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக துறைமுக நகர் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக துரிதப்படுத்த சீனா  தீர்மானித்துள்ளது. மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் பல சீன கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர  நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவது ஒரு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது. அந்த  கால எல்லை எதிர்வரும் ஜனவரி  மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன்படி ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும். ஆனால் சீன கப்பல்களுக்கு எத்தகைய அனுமதியை அரசாங்கம் கொடுக்கும் குறித்து உறுதியான நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. மறுபுறம் இலங்கையை மையப்படுத்திய இந்திய - சீன இராஜதந்திர அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்தின் விசேட குழு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201301
    • மஹிந்தவின் பாதுகாப்புக்காக மாத்திரம் 326 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தகவல்! 14 DEC, 2024 | 05:37 PM (எம்.வை.எம்.சியாம்) முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபாவும் அதில் 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மாத்திரம் செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 116 பேர் பொலிஸ் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.  இந்த குழுவினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட்டது.  இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடமொன்றுக்கு 1100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் அதில் வருடமொன்றுக்கு 326 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  ஆயுதம் ஏந்திய படை தொடர்ந்தும் கடமையில் இருக்கும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் எனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் பொலிஸ் சேவையில் 24 ஆயிரம் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவுகளில் கடமையாற்றிய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிமித்தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீள பெறப்படவில்லை எனவும் அதனையும் பரிசீலனை செய்து குறைப்பதன் ஊடாக குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட இதர பொலிஸ் கடமைகளுக்காக அவர்களை  ஈடுபடுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201275
    • பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்", என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார். "அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்", என்றும் அவர் கூறினார். அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். என்ன நடந்தது? "வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.'' பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை. மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், "இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். பட மூலாதாரம்,ATULSUBASH/X படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் - சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்14 டிசம்பர் 2024 'நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)' என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார். அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார். கடிதத்தில் என்ன இருக்கிறது? அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது. தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ளம்: எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?13 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன? அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள். இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன. ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?14 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 அதுலின் கோரிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும். அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், "என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார். ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது. காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், "காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது" என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது. அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது. குகேஷ் தொம்மராஜு: மகனின் சதுரங்க கனவுக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட தந்தை13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார். "தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?" என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார். "ஒன்றல்ல இரண்டல்ல... அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது," என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார். இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 50 பேர் மீது புகார் - கணவரின் உத்தரவின் பேரில் செய்ததாக வாக்குமூலம்13 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். "சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,'' என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். " விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்," என விளக்கமளித்தார். "அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்" என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார். புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?5 டிசம்பர் 2024 நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார். "நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசியவர், "எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும். இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. " என்று பிபிசியிடம் தேவி கூறினார். "தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்," என்று தேவி கூறினார். முக்கியத் தகவல் மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn4xwe28lp2o
    • 15 DEC, 2024 | 10:50 AM   பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை  அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை தொடர்ந்து அரசபடையினர் மிக மோசமான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டனர். அசாத்  அரசாங்கத்தின் வீழ்ச்சியை டெராவில்  எவராவது கொண்டாடவேண்டுமென்றால் அது கட்டிபின் குடும்பத்தவர்களே. ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்கு சென்றவேளை யாரும் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை எவரும் கொண்டாடுவதை காணமுடியவில்லை. அதற்கான காரணங்கள் அச்சமூட்டுபவை . சில நிமிடங்களிற்கு முன்னர் அசாத்தின் கொடுரமான சைட்னயா  சிறைச்சாலையிலிருந்து  எடுக்கப்பட்ட ஆவணங்களை அந்த குடும்பத்தினருக்கு சிலர் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆவணத்தில் ஹம்சாவின் மூத்த சகோதரர் ஒமாரும் சிரிய பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயம் காணப்படுகின்றது. ஒமார் 2019 ம் ஆண்டு பொலிஸாரின் தடுப்பில் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஒமார் சிறையிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாக அவர்களின் தாயார் சமீரா தெரிவித்தார். அவர் பெரும் துயரத்தில் சிக்குண்டிருந்தார். இன்றோ நாளையோ எனது மூத்தமகன் வருவான் என காத்திருந்தேன், இன்று எனக்கு இந்த செய்தி கிடைத்தது என அவர் குறிப்பிட்டார். மூன்று மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த தனது கணவரிற்காக கருப்புஉடையணிந்து துக்கத்தை அனுஸ்டித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் அனுபவித்ததை அசாத்தும்அனுபவிக்கவேண்டும் என தெரிவித்தார். 'அசாத் அதற்கான விலையை செலுத்துவார் ஆண்டவன் அவரையும் அவரது பிள்ளைகளையும்  தண்டிப்பார் என எதிர்பார்க்கின்றேன்" என்றார் சமீரா. சைட்னயா சிறைச்சாலையில் தங்கள் உறவினர்களை தேடுபவர்கள் சமீராவின் மூத்த மகனின் கைது குறித்த  ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் சமீராவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒமார் குறித்த கோப்பினை கண்டுபிடித்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். அசாத்தின் வீழ்ச்சி அவரது மூடிமறைக்கப்பட்ட அவரது ஆட்சியின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவரும் சூழலை உருவாக்கியுள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் டமஸ்கஸினை கைப்பற்றியதை தொடர்ந்து பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியதை அறிந்த டெரா மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினார்கள் . பெரும்மகிழ்ச்சியுடன் அந்த நகரத்தின் பிரதான சதுக்கத்தில் ஆண்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூச்சலிட்டனர் தங்கள் கரங்களில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அசாத்தின் ஆட்சியின் போது அதனை எதிர்த்தவர்களின் கோட்டையாக இந்த பகுதியே விளங்கியது. பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமமும் தொடர்ச்சியாக டாங்கி தாக்குதல்களையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்கொண்டது. சிரியாவின் தென்பகுதியில் உள்ள அரச எதிர்பாளர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். ஹம்சாவின் மரணத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த நிலையிலேயே சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பு 2011 இல் இந்த நகரத்தில் போரிட ஆரம்பித்தது. சிரிய இராணுவத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த அமைப்புடன் இணைந்துகொண்டனர். அவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டவர்களில் ஒருவர் அஹ்மட் அல் அவ்டா பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயின்ற பின்னர் இராணுவத்தில்இணைந்துகொண்ட கவிஞர். தற்போது டெராவின் ஆயுதகுழுவின் தலைவர். 'நாங்கள் தற்போது எவ்வளவு தூரம் மகிச்சியுடன் இருக்கின்றோம் என்பது உங்களிற்கு தெரியாது" என பஸ்ரா நகரில் வைத்து அவர் எங்களிற்கு தெரிவித்தார். 'நாங்கள் பல நாட்களாக அழுதோம் கண்ணீர் சிந்தினோம், நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை உங்களால் உணரமுடியாது, இங்குள்ள அனைவரும் குடும்பங்களை இழந்தவர்கள் என அவர் தெரிவித்தார் பிபிசி Lucy Williamson தமிழில் ரஜீவன்  https://www.virakesari.lk/article/201310
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.