Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

ஒரு மனுசர் கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்கும் போது அதை வந்து குழப்பப்கூடாது .

இது எங்கு எப்படி முடியும் என்று எனக்கு தெரியும் அதனால் பெரிதாக எடுக்கவில்லை .

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

tamilnaduuuuuuuuuuuuu.jpg

சென்னையில் உள்ள மத்திய வருமானவரி அலுவலகம் மாணவர்களால் முற்றுகை

14 03 2013

மாணவர் போராட்டம் தமிழகமெங்கும் வீறு எழும் இவ்வேளையில் மாணவர்கள் வரி கட்ட மாட்டோம் என்று இந்திய அரசின் வருமான வருமான வரி துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு இந்த முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டது . சாஸ்தா பொறியியல் கல்லூரி, எஸ் ஆர் எம் பல்கலை, வேல்ஸ் டெக், நந்தனம் கலைக் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற பல கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பெற்றனர் . சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக முழக்கமிட்டவாறு நகர்ந்தனர். அப்போது காவல் துறை வழக்கம் போலவே மாணவர்களை தடுத்து நிறுத்தியது .மாணவர்களுக்கும் காவல்துறைக்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை தொடர்ந்து இந்திய அரசை கண்டித்தவாறு முழக்கமிட்டனர் . பின்பு மாணவர்கள் ௨௦௦ போரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தது . இது குறித்து மாணவர் அருண் நமக்கு கூறுகையில் , இந்திய அரசு தான் தமிழினப் படுகொலையை இலங்கையோடு சேர்ந்து நடத்தியது . இன்று இலங்கையை காப்பாற்றவும் செய்கிறது .

தமிழர்களுக்கு வேறு அரசு இல்லை . இந்தியா தான் தமிழர்களையும் சேர்த்து ஆள்கிறது . இந்த அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதால் எங்களுக்கு இந்திய அரசு வேண்டாம் , இந்திய அரசின் சேவையும் வேண்டாம் . அதனால் இந்திய அரசுக்கு இனி நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் , வரியை கட்ட மாட்டோம் , இந்திய அரசு தனது வருமான வரி அலுவலகத்தை மூடிவிட்டு எங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும் .

தமிழருக்கு எதிரான ஒரு அரசு நிர்வாகம் எங்கள் மண்ணில் இருக்க வேண்டாம் . அதனால் தான் மாணவர்கள் நாங்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினார் . மாணவர்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள் . இனியும் இந்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகிறது .

நன்றி தமிழ் இணையங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
thilpanannaaaaaaaaaaaaa.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு : 

புதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் )

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி  3 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருக்கிற்னர். இவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

  மேலும்,  மாணவர்கள் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்புகளை காட்டினார்கள்.

 

mannargudirajapakse2.jpg

mannargudirajapakse1.jpg

தமிழக உறவுகளுக்கு தலைசாய்த்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நடிகர் சிலம்பரசன்.

simbu.jpg

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

577276_593368507341845_376308394_n.jpg

திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவர்களின் போராட்ட களத்திலிருந்து 

இழுத்து பூட்டப்பட்ட பாரத ஸ்டேட் தலைமை வங்கி-

மாணவர்கள் எழுப்பிய வீர முழக்கங்கள் 

"ஆயுதம் ஏந்த புலிகள் நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்
பிரபாகரன் தம்பிகள் நாங்கள் ஈழம் மலரும் வரை ஓயமாட்டோம்
இந்திய அரசே இந்திய அரசே எச்சரிக்கை இது எச்சரிக்கை "

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ .நா மன்றம் உடன் நடத்த மதிய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்றார்கள்.

 

FB

திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

487668_593700913975271_263394655_n.jpg

 

- முகநூல் -



"திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமானநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் 14.3.2013 "

 

1888_441043269298038_1807893183_n.jpg

 

- முகநூல் -



இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை…போராட்டக் களத்தில் மாணவர்கள்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.

9 பேருக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை: ஐநா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்.இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கையில் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளே கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களில் 12 பேர் கடற்கரைச் சாலையில் அம்பேத்கர் மணிமண்டபம் அருகிலும், 9 பேர் புதிய பேருந்து நிலையம் முன்பும் கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்த 9 பேரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் புதுச்சேரி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி: புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 12ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பொன்னமராவதியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர் 200 பேர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் உருவப் படம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்: சென்னையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசைக்கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியில் 30 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். இதில் பழனிக்குமார் என்ற மாணவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி மாணவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

மாநிலம் முழுவதும் பரவும் மாணவர்கள் உண்ணாவிரதம்: காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்படோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் 11 பேர், போராட்டத்தை தற்காலிமாக முடித்துக் கொண்டனர். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மாற்றுவழியில் போராடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் 13ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் என்ற மாணவர், சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

- முகநூல் -

 

4வது நாள் போராட்டம் 3 மாணவர்கள் மயக்கம், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

 

576238_10151290276551626_619530858_n.jpg

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

உண்ணாவிரதம் இருந்து வரும் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்களின் பெற்றோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான நேற்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது. தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு...

 

392959_593702747308421_1871915143_n.jpg

 

- முகநூல் -

 

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
 
 

மாணவர் போராட்டம் இன்று அனைத்து இடங்களிலும் பரவி இருக்கின்றது. மாணவர் போராட்டத்தை பற்றி சமூக இணையத்தளங்களில் கருத்துகளை இடுவதன் மூலம் நமது கடமையை முடித்துக் கொள்ளாமல் நாம் அனைவரும் மாணவர்களுடன் சேர்ந்து அந்தபோராட்டத்தின் வீச்சினை இன்னமும் அதிகமாக்குவோம். 

பத்து பதினைந்து மாணவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க மற்ற அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்று கூறுவதனால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.

மாணவர்களின் போராட்டத்தை நீங்கள் உண்மையிலேயே ஆதரிக்கின்றீர்கள் என்றால், நீங்களும் மாணவர்களுடன் சென்று உண்ணாவிரத மேடைக்கு சென்று அவர்களுடன் ஒன்றாக இருந்து ஆதரவு தெரிவியுங்கள். அதற்காக நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. போராட்டம் இப்பொழுது அனைத்து பகுதிகளுக்கும் பரவி விட்டது. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இது போன்ற போராடங்கள் நடக்கின்றன. உங்களால முடிந்த அளவு நேரில் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் 

ஒருவர் போராடினால் அராஜக அரசாங்கம் மித்திக்கும். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராடினால் அரசாங்கம் மிரளும். 

தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம் 
தமிழீழமே ஒன்றே இலக்கென முரசறைவோம்...!

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
  • கருத்துக்கள உறவுகள்
thilipanannaaaaaaaaaaa.jpg
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இருந்த 3 மாணவர்கள் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வாந்தி மற்றும் ரத்தவாந்தியால் அவதிப்படும் அவர்கள் தற்பொழுது "புதிய தலைமுறை" ஊடகத்தின் முன்பு தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள உள்ளனர். உடல்நிலை சீரானதும் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்குவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கின்றனர்

 

manavreee.jpg

 
 

மாணவர் விக்ரம் உண்ணாவிரத திடலில் மயங்கி விழுந்தார்..... @ பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

 

150396_593702447308451_1000917118_n.jpg



- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் உடல் நிலை மிகவும் கவலைக் கிடம்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் காலவரையற்ற பட்டினிப்போரில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

poraddapadam.png

 

கோவை சட்டக் கல்லுரி மற்றும் அரசு கலைக்கல்லுரி மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அறப்போரை மதிமுக கட்சி அலுவலகத்தில் நடத்தி வருகிறார்கள்.... நேற்று மாலை கல்லுரி முதல்வர் பேசிப் பார்த்தும் அவர்கள் உண்ணா நிலை அறப்போரை வாபஸ் பெற மறுத்து விட்டார்கள்..,...

 

625428_593705410641488_215953203_n.jpg

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்.

 

428_351928564926113_1722729025_n.jpg

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ் ஈழ போராட்டத்தில் மதுரை மாணவர்கள் !

 

522705_593267487351947_1668280779_n.jpg

 

- முகநூல் -

 

483870_593682437310452_192946409_n.jpg

 

ஒட்டுமொத்தமாக தமிழகம் எங்கும் அகிம்சை போர் நடத்தும் மாணவர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தி ,திசைதிருப்ப முயலும் ஊடகங்களுக்கு ,

 

எமது கோரிக்கைகளில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமட்டோம் .

ஊடகங்களுக்கு எமது வேண்டுகோள் !

எமது கோரிக்கை இதுவே . இந்த கோரிக்கையை முன் நிறுத்தியே
அனைத்து மாணவர்களும் போராடுகிறார்கள். அமெரிக்காவின் தீர்மானத்தை எந்த ஒரு மாணவர்களும் ஆதரித்து போராடவில்லை .

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்கள இனவெறி அரசின் துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

 

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!

சென்னை தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த செயலால் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

manavaree.jpg
  • கருத்துக்கள உறவுகள்
47490502.png
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v-trichynews4%20%282%29.jpg

photo.gifஈழத்தமிழர்களுக்கு நீதிகோரியும் பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாகவும் சாகும்வரையான தமது உண்ணா மறுப்பு போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.

தமிழகமெங்கும் தொடர் உண்ணாவிரத போராட்டங்களும் சாலைமறியல் போராட்டங்களும் அரச நிறுவனங்களுக்கு  பூட்டு போடும் போராட்டங்களும் மாணவர்களால் நடத்தப்பட்டுவருகிறது.v-trichynews4%20%283%29.jpgv-trichynews4.jpgv-trichynews4%20%284%29.jpg

நந்தனம் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், அமெரிக்க தீர்மானத்தைக் கண்டித்தும் சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

- முகநூல் -

 

தர்ணா போராட்டம் என்றால் என்ன? :unsure:  யாரும் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

 

 



வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2013) ஹைதராபாத் நகரில் கண்டனப் போராட்டம்

 

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும்
கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:
வடிவேல் - 9052624014


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடக்கவுள்ளது

 

சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து சட்ட, மருத்துவ, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், 50,000 மாணவர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

அனைத்து மாணவர்கள் போராட்ட ஒருங்கினைபாளருடனும் தொடர்பு கொண்டு வருகிறோம். "கடல் தாண்டிய நம் சொந்தங்களுக்காக, கடற்கரையில் இணைத்திடுவோம்"

தொடர்புக்கு:8056158515


- முகநூல் -

மாணவர் போராட்டத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு அவசர வேண்டுகோள்.


தமிழ­்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பத­ு ஆண்டுகள் கழித்து மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின­் போராட்டங்களுக்க­ு உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில­் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவ­ர்களுடன் நீங்களும் கைகோருங்கள்.

1 . வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்க­ு உங்கள் வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம்,பிஸ­்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு விநயோகிக்கலாம்.

2.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் அவர்களுக்கு மோர்,அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு போய் கொடுக்கலாம்.

3. நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.

4.அதுவும் முடியவில்லை என்பவர்கள் அவர்களுக்கு குறைந்தது பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து தரலாம்,அவர்களுட­ன் ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் விநயோகிக்கலாம்,

5.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் நடக்கும்,போராட்­டங்களுக்கு உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மாணவர்களை வாழ்த்தி உற்சாக படுத்தலாம்,உங்க­ள் நண்பர்களுக்கும்­ இதை தெரிய படுத்தலாம்.

இந்த எளிய போராட்டங்களுக்க­ு நம்முடைய எளிய பங்களிப்பை தரலாமே?

இதை இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர வேண்டும்,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள்.


- முகநூல் -

மாணவர் போராட்டத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு அவசர வேண்டுகோள்.

தமிழ­்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பத­ு ஆண்டுகள் கழித்து மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின­் போராட்டங்களுக்க­ு உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில­் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவ­ர்களுடன் நீங்களும் கைகோருங்கள்.

1 . வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்க­ு உங்கள் வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம்,பிஸ­்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு விநயோகிக்கலாம்.

2.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் அவர்களுக்கு மோர்,அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு போய் கொடுக்கலாம்.

3. நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.

4.அதுவும் முடியவில்லை என்பவர்கள் அவர்களுக்கு குறைந்தது பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து தரலாம்,அவர்களுட­ன் ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் விநயோகிக்கலாம்,

5.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் நடக்கும்,போராட்­டங்களுக்கு உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மாணவர்களை வாழ்த்தி உற்சாக படுத்தலாம்,உங்க­ள் நண்பர்களுக்கும்­ இதை தெரிய படுத்தலாம்.

இந்த எளிய போராட்டங்களுக்க­ு நம்முடைய எளிய பங்களிப்பை தரலாமே?

இதை இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர வேண்டும்,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள்.

- முகநூல் -

 

 

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பத்தக்க விபரங்களையும் யாழில் பிரசுரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.