Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே உணர்வோடு

பிரபாகரனுக்கு பிடிக்காத

தமிழை ஆங்கிலத்தில் (மட்டன் சிக்கன்) எழுதுவதையும் திருத்தினால் நன்று

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டத்தில் புதுச்சேரியில் மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு ,பீமாராவ் , சுவாமி நாதன் ஆகியோர் போராட்டத்தில் மத்திய அரசு அலுவலங்கள் பல சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிகிழமை (05.04.2013) கைது செய்யப்பட்டனர் . பிரபு ,சுவாமிநாதன் திங்களன்று பிணையில் வெளி வந்தனர் , இன்று (10.04.2013.) கௌதம பாஸ்கரன் , பீமாராவ் ஆகியோர் பிணையில் வெளிவந்தனர்

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை!!
எங்களுக்கு அரசியல் கற்ப்பித்திடும் பாடசாலை,!!

என்று புன்னகைத்த முகத்துடன் வெளி வந்திருக்கும் மாணவர்களுக்கு,
வாழ்த்துக்கள் கோடி.

 

(முகநூல்)

Posted

ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை அரசைக் கண்டித்து இன்று (10.04.2013) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை ராணுவத்தை கண்டிப்பது, தனி ஈழம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபக்ஷவை கடுமையாக கண்டிப்பது, தமிழ் இனத்தின் தொப்புள் கொடி உறவுகள் அழிவதை கண்டுகொள்ளாத இந்திய அரசைக் கண்டிப்பது, கச்ச தீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரங்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசு 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காததற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ உருவ பொம்மையை எரித்தனர்.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 100 பேரை பொலிஸார் கைது செய்தனர். போராட்டத்தால் சென்னை நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

537825_352392151548948_1421611398_n.jpg

 

 

(முகநூல்)

Posted

மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க மாணவர்களிடையே ஒட்டுக்குழுக்கள் ! இந்திய உளவுத்துறை திட்டம் !!

பணம், பதவி, விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு எழுந்துள்ள மாணவர் எழுச்சியை ஒட்டுக்குழுக்கள் ஏற்படுத்தி சீர்குலைக்க இந்திய உளவுத்துறை திட்டமிட்டுள்ளது என தோழர் ஆ.குபேரன் பேசினார்.

முற்றிலும் மாணவர்களால் மாணவர்களுக்காக மாணவர்களே ஏற்பாடு செய்யப்பட்டு விருத்தாசலத்தில் நடந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டக் பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து தோழர் ஆ.குபேரன் பேசியதின் சுருக்கமான வடிவம் :

” தமிழீழ விடுதலைக்காக லயோலாவில் பற்றிய சிறு நெருப்பு பற்றிப் பரவி தமிழகமெங்கும் தகிதகித்து நிற்கிறது. 2009-ல் இந்திய- சிங்கள கூட்டுப் படைகள் முள்ளிவாய்க்காலில் நடத்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வீதிக்கு வந்திருக்கும் மாணவர்களின் பேரெழுச்சி அரசை அதிரச் செய்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க மாணவர் எழுச்சியை காவல்துறை அடக்குமுறை, காலவறையற்ற விடுமுறை என முடக்க நினைத்து தோற்றுப் போன அரசும், கங்காணி தேர்தல் கட்சிகளும் தற்போது உளவுத்துறையின் பின்னணியுடன் சீர்குலைவு வேலைகளில் களமிறங்கியுள்ளன.

உளவுத்துறை பின்னனியுடன் சீர்குலைவு வேலைகள் செய்யும் அமைப்புசார் மாணவர்களை தமிழீழ விடுதலையின் பெயரில் முன்னிலைப்படுத்துவது, பின்னர் அவர்களைக் கொண்டு தமிழீழத்துக்கும் – தமிழ்த் தேசியத்துக்கும் எதிரான இந்திய தேசிய கருத்தியலை கொண்டுவந்து இந்திய தேசியத்தில் சரணடைய வைப்பது என்பது தான் அது.

ஈழப் விடுதலைக்கான மாணவர் போராட்ட சூழலில் முன்வக்கப்படும் முதன்மையான இப்படிப் பட்ட கருத்தியல்களை நாம் இனம் கான வேண்டும்.. அவ்வாறான கருத்தின் போலித் தன்மையை, இந்திய தேசிய இலக்கை தமிழக மாணவர்கள் நாம் உடைத்தெரிய வேண்டும்..

1) 2009 ஆம் ஆண்டு இந்திய அரசும் சிங்கள அரசும் நடத்திய ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு இனப்படுகொலை போரை ராஜபட்சே செய்த கொலை போல சித்தரித்து வெறும் ராஜபட்சேவை மட்டுமே குற்றவாளி போல தமிழர்களிடையே முன்னிறுத்துவது. ”இராஜபட்சேவை தூக்கில் போடு” என முழக்கமிட்டு இராஜபட்சேவை திரைப்படத்தில் வரும் வில்லனாக காட்டி “இந்திய தேசியத்தை“ பாதுகாக்கொள்வது..

2) ”ஒரு தாலிக்காக ஒருலட்சம் தாலி அறுத்த சோனியாவே” என ஈழப் போரை வெறும் சோனியாகாந்தியின் தனிநபர் பழிவாங்கல் பகை நடவடிக்கையாக மட்டுமே மாற்றிவிட்டு இந்திய ”அரசை”ப் பாதுகாத்துக் கொளவது..


3) இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் பிழையான வழிமுறையால் இலங்கையை இந்தியா பகை நாடாக கருதவில்லை. இந்தியா அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்க வைத்து ” இந்திய கருத்தியலுக்க்கு கீழ் ” மாணவர்களை கொண்டு போய் நிறுத்துவது..

4) ”இந்தியாவின் தேச நலன்., பூகோள பிராந்திய பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ” பாதுகாக்கும் பொருட்டு ஈழத்தில் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டபோது தடுக்கமுடியாதது துரதிஷ்ட்டமானது என கருத்துக்களை முன்னிறுத்துவது...

5) எல்லாவற்றிக்கும் மேலாக மக்கள் களத்தில் செயல்படும் மாணவர்களை ஈழ ஆதரவின் பெயரால் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு சீர்குலைப்பது என்பது ஆகும்.

மாணவர்கள் நாங்கள் எந்த தேர்தல் அரசியல் கட்சியும் சாரதவர்கள் ஆனால் , அரசியல் தெரியாதவர்கள் அல்ல.. அவர்கள் திட்டம் வெற்றி பெறாது.

உண்மையில்.. ஈழத்தில் ராஜபட்சேவின் தமிழின அழிப்பு போரை நடத்தியது இந்தியாதான்.. இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று இனப் படுகொலைப் போரை சிங்கள பாரளுமன்றத்தில் ராஜபட்சே அறிவித்தானே அதன் பொருளென்ன ? பணம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, ராடார்கொடுத்து, ராணுவம் கொடுத்து கொல்லச் சொன்னது இந்தியா அரசு ! கொன்று குவித்தது சிங்கள அரசு ! ஈழத்தில் நடைபெற்ற இனக்கொலைப் போரில் இந்திய அரசும் சிங்கள அரசும் கூட்டுக் குற்றவாளிகள்.. ராஜபட்சே மட்டுமல்ல, பொன்சேகா, கோத்தபய, மன்மோகன் , சோனியா, சிவசங்கரமேனன், பிரனாப் இவர்கள் அனைவரும் தற்சார்பான பன்னாட்டு நீதிமன்றத்தில் புலன் விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

“ராசீவ் காந்தி கொலைக்கு பதிலாக சோனியாவின் பழிவாங்கும் நடவடிக்கையென்று யார்சொன்னாலும் நம்பாதீர்கள், உண்மையில் ராசீவ் காந்தி காலத்தில் ராசீவ் காந்தியே அமைதி படை என்ற பெயரில் படையனுப்பி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது யார் தாலியை அறுத்ததின் பதில் நடவடிக்கை ?

இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் பிழையான வழிமுறையால் இலங்கையை இந்தியா பகை நாடாக கருதவில்லை என்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்க முடியாது..

ஒரு நாட்டின் உள்நாட்டு அரசியல் தத்துவம் தான் அந்நாட்டு அயலுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும். இந்திய அரசு என்பதே தமிழினத்துக்கு எதிரான பகை அரசு. அதன் நீட்சியாகத்தான் இந்தியா தனது அயலுறவுக் கொள்கைகளை வகுத்து ஈழத்தில் திட்டமிட்டு தமிழர்களை கொன்று குவித்தது.. இன்றைக்கும் தமிழக மீனவர்களை சிங்களர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கைப் பார்க்கிறது..

ஒன்றரை லட்சம் மனிதப் படுகொலைக்கு பின்னும் இந்தியாவின் சிங்கள ஆதரவு நடவடிக்கைக்கு பிராந்திய நல பாதுகாப்புதான் காரணமென்றால் “ஈழம் அமைந்தால் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக நாங்கள் இருப்போம்” என்று மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் நீட்டிய நேசக் கரத்தை வெட்டிவிட்டு இலங்கையுடன் இந்தியா கூட்டு சேர்ந்து இனப்படுகொலையை நடத்தியது எதனால்..?

தெற்காசிய கடல் பரப்பில் சீனா வந்தாலும் , அமெரிக்கா வந்தாலும் கவலையில்லை, ஆனால் தமிழினம் வாழக்கூடாது, அழிய வேண்டும் என்று ஆரியவெறியுடன் தமிழீழ அரசை நிர்மூலமாக்கி ஒன்றறை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது தமிழினப் பகையன்று வேறென்ன.. ?

மாணவர்களே ..

ஆரிய இனத்தின் நவீன வடிவம் இந்தியம் ! இன்னொரு கிளை சிங்களம் ! ஈழத்தமிழர்களுக்கு பகை சிங்கள அரசு ! உலகத்தமிழர்களுக்கே பகை இந்திய அரசு ! என்ற தெளிவான சிந்தனையுடன் தமிழீழ விடுதலைக்காக மாணவர் களத்தில் மாணவர்கள் நாம் போராடி வருவது இந்திய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பணம் பதவி விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு எழுந்துள்ள மாணவர் எழுச்சியை மடைமாற்ற ஒட்டுக் குழுக்கள் மூலம் இந்திய உளவுத்துறை திட்டமிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்னின்று நடத்திய காங்கிரசின் மீதான மக்கள் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி மாணவர்களின் தனி ஈழ கோரிக்கையை வெறும் காங்கிரசுக்கு எதிரான கோரிக்கையாக மட்டுமே மடைமாற்றும் திட்டத்தில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது.

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரால் மாணவர்களை உணர்ச்சி வயப்படுத்தி காங்கிரசுக்கு மாற்றாக இன்னொரு கங்காணி அரசியல் கட்சியின் வாக்கு வங்கியாக மாணவர்களை பயன்படுத்தும் திட்டத்துடன் தேர்தல் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்தியாவை எதிர்த்து திரண்டு நிற்கும் மாணவர்களை தேர்தல் மாயையில் மீண்டும் இந்திய தேசியத்தில் அடகு வைக்கும் உளவுத்துறையின் சதியும் இதனுடன் ஒருசேர அடங்கியுள்ளன.

காங்கிரசுக்கு எதிரான மாற்று அணி என்ற பெயரால் மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்ட அரசியலை தேர்தல் அரசியலாக மடைமாற்றி காயடிக்கும் வேலையை புறந்தள்ள வேண்டும்.

2009 –ல் ஈழப் போரில் இந்திய அரசின் தமிழினப் பகையும், தேர்தல் கங்காணி அரசியல் கட்சிகளின் சீர்குலைவு வேலைகளும் நமக்கான படிப்பினையாக கொள்ள வேண்டும்.

மாற்று அணி ஒருபோதும் ஈழவிடுதலையைப் பெற்றுத் தராது.. மக்கள்திரள் போராட்ட மாற்று அரசியலே ஈழவிடுதலைக்கான ஒரே வழி !

நமது போராட்டம் இந்திய அரசை நிலைகுலையச் செய்யும் போராட்டமாக இருக்க வேண்டும். இந்திய அரசு தமிழகத்தில் இனி செயல்பட முடியாதபடி நெருக்கடி தரும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாணவர்ப் போராட்ட எழுச்சியை தேர்தல் கங்காணி அரசியல் கட்சிகளின் காலடியில் வைத்துவிடாமல் தற்சார்போடு மாணவர்கள் நமது தோள்களில் சுமப்போம்.. ! என பேசினார் தோழர். ஆ.குபேரன் .

பொதுக் கூட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட கடலூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், தொழிற்பயிற்சி பள்ளி மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று பேசினர்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் , இன உணர்வாளர்கள் என திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக பொதுக்கூட்ட மேடையின் அருகே மாணவ்ர் போராட்டம் , ஈழ இனக்கொலை போர் காட்சிகள் அடங்கிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

தோழர்கள். மாறன், ,பிரவின் , சுப்பிரமணிய சிவா , இளநிலா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

தொடர்புக்கு :
தோழர். ஆ.குபேரன் +91 9042223563

 

Posted

"பிரபாகரன்"
இந்த பெயரின்றி இனி தமிழினமும் தமிழ்நாடும் வாழாது..

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

541490_468675603205397_1714744823_n.jpg

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டத்தில் புதுச்சேரியில் மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு ,பீமாராவ் , சுவாமி நாதன் ஆகியோர் போராட்டத்தில் மத்திய அரசு அலுவலங்கள் பல சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிகிழமை(5.4.13) கைது செய்யப்பட்டனர் . பிரபு ,சுவாமிநாதன் திங்களன்று பிணையில் வெளி வந்தனர் , இன்று (10.4.13.) கௌதம பாஸ்கரன் , பீமாராவ் ஆகியோர் பிணையில் வெளிவந்தனர் அடக்க நினைத்திடும் சிறைச்சாலை!! எங்களுக்கு அரசியல் கற்ப்பித்திடும் பாடசாலை,!! என்று புன்னகைத்த முகத்துடன் வெளி வந்திருக்கும் மாணவர்களுக்கு, வாழ்த்துக்கள் கோடி படம்: அம்பேத்கர் அரசு சட்டகல்லூரி புதுச்சேரி ..
 
Loyolahungerstrike -முகநூல்-

 

 

 


484744_439343456150226_403445962_n.jpg

-முகநூல்-

 



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

526481_373179786130960_1725675639_n.jpg

-முகநூல்-

 



******************************************************************************************************************************************

59744_373317809450491_642370930_n.jpg

வேண்டாம் அகதி அடையாளம்!

தமிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள்கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள்வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று போலீஸாரிடம் பிடிபட்டு இருக்கிறார்கள். சிக்கியவர்கள் எத்தனை பேர் என்பது ஒருபுறம், தப்பிச் சென்றவர்கள் எத்தனை பேர் என்பதையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் க்யூ பிரிவு போலீஸார். இலங்கையிலாவது போர் முடிந்தும் துன்பம் நீங்கா நிலையில் ஈழ மக்கள் தப்புகிறார்கள். ஆனால், தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் பல ஆண்டுகள் அகதிகளாக இருப்பவர்கள் ஏன் தப்பி ஓடவேண்டும்?


 

-முகநூல்-

 

Posted

561869_604888779523151_1693755321_n.jpg

 

 

 



கவனயீர்ப்புப் போராட்டம் ஸ்டுட்கார்ட் (Stuttgart) யேர்மனி

 

552606_604895816189114_449874291_n.jpg

 

561878_604895842855778_21195094_n.jpg

 

13493_604895836189112_576678079_n.jpg

 

20912_604895962855766_302612580_n.jpg

 

58570_604895942855768_625246408_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

563036_596103357067322_1912554797_n.jpg

 

இலங்கையை ரவுடி நாடு என்று அறிவிக்க வேண்டும் - அய்யா பெ.மணியரசன்..!

அப்படியெல்லாம் அறிவிக்க முடியாது அய்யா...! அதெல்லாம் முடியாது...... என்றால், இந்தியாவை எவ்வாறு அறிவிக்க வேண்டும்..?

ரவுடிக்கு நண்பன் அல்லவா...?

 
 
-முகநூல்-

 

 

 

Posted

தமிழ்நாட்டு மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமா

Updated 2 minutes ago
தமிழ்நாட்டு மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக Montreal மாணவர்களால் நடத்தப்படும் 24 மணித்தியால உண்ணாவிரதப் போராட்ட நிகழ்விலிருந்து

 

164255_604927439519285_1860823170_n.jpg

534420_604927449519284_662736103_n.jpg

 

15241_604927456185950_2098461706_n.jpg

 

559791_604927482852614_620123099_n.jpg

 

-முகநூல்-

 

தமிழ் ஈழத்தை உருவாக்கிடு ! இலங்கை மீது போர் தோடு ! கோவையில் உண்ணா நோன்பு [படங்கள்] பிரிவு: தமிழ் நாடு

kovai_unna-1.jpgஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் இனவெறி கொலைகளுக்கு எதிராகவும் கோவை மாவட்ட ஆன்மீக சமய சமுதாய கலை இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைத்து ஆதினங்கள் -சான்றோர்கள் முன்னிலையில் ஒரு நாள் அடையாள  உண்ணா நோன்பு அறப்போரட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

kovai_unna.jpg

 

 

நன்றி: http://dinaithal.com

 

 

 

Posted

7000 பேருக்கு மேல் படிக்கும் லயோலா கல்லூரியிலிருந்து ஒரு சில மாணவர்கள் தங்கள் கட்சியின் மாணவரணியில் சேர்ந்த செய்தியை, தமிழீழ விடுதலைக்காக தமிழக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களது கட்சி சார்ந்த தொலைக்காசியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஏதோ போராட்டத்தை துவக்கிவைத்த லயோலா கல்லூரி மாணவர்களே திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதைப் போல பொது மக்களிடையே ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் சிலர்.

ஐநா தீர்மானத்துக்கு பிறகு நீர்த்துப்போய்விடும் என பகல் கனவு கண்டுகொண்டிருந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தொடரும் மாணவ போராட்டத்தை கண்டு செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மார்ச் 8ஆம் தேதி துவங்கி தமிழகம் முழுதும் பரவியிருக்கும் தமிழீழ விடுதலைக்கான இந்த மாணவர் போராட்டம் தங்கள் இலக்கை அடையாமல் ஓயாது.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக
ஜோ பிரிட்டோ

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

மு.க.ஸ்டாலின் கொமடி!!!!!!

டெசோ அமைப்பு தான் இலங்கை தமிழர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது. தமிழக மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டமும் இலங்கை தமிழர் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட காரணமாக அமைந்தது.

(முகநூல்: loyolahungerstrike)

 

Posted

தோழர்களே!!! அவசரம்!!

லயோலா மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு உடனேயே நெல்லையில் முதலாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கிய நெல்லை புனித சவேரியர் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது கல்லூரி நிர்வாகமும்,கல்லூரி முதல்வரும்,துறை தலைவரும் கல்வி சார்ந்த விடயங்களில் அந்த மாணவர்களுக்கு உரிமைகளை மறுத்து வருகின்றனர்.

போராட்ட காலத்தில் எழுதாமல் விடப்பட்ட தேர்வுகளுக்கு மறுதேர்வு நடத்த கோரி மாணவர்கள் விடுத்த கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் முறையிட்ட போது, அவர் கூறியது::
”உங்கள் துறைத்தலைவர்(HOD) மறுதேர்வு நடத்த சம்மதித்தால் நான் மறுதேர்வு நடத்த அனுமதிக்கிறேன்”
என்று கூறியுள்ளார்..

தங்கள் துறைத்தலைவரிடம் மாணவர்கள் இது பற்றி கேட்ட போது அவர் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறார்.

இதை காணும் போது கல்லூரி நிர்வாகமும், முதல்வரும், துறைத்தலைவரும் இணைந்து நடத்தும் நாடகமா?? என்ற சந்தேகம் மாணவர்கள் மனதில் எழுந்துள்ளது.பொதுவாகவே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எதிராக நிர்வாகம் செயற்படுவதாக தெரிகிறது..

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அவர்களின் மறுதேர்வு எழுதி தங்கள் கல்வியை தொடரும் உரிமையை மீட்டுகொடுக்கும் கடமை நமக்கும் உள்ளது..

துறைத்தலைவரின் பெயர் :சேவியர் அந்தோனி
(Xavier Antony)
துறை: விஸ்காம் Viscom HOD
தொடர்பு எண்: 9443997607..

இந்த எண்ணை தொடர்பு கொண்டு அந்த துறைதலைவரிடம் கனிவோடு பேசி மாணவர்களின் மறுதேர்வு எழுதும் உரிமையை அவர்களுக்கு மீட்டு கொடுக்குமாறும் முகநூல் தோழர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட அலை ஓயாது! மீண்டும் எழுச்சி பெறும் என மாணவர்கள் பேட்டி!

v-loyolamaanavarpooradadammeet%20%282%29

photo.gifதமிழ் ஈழ மக்களுக்காக போராடி வரும் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் 12.04.2013 வெள்ளிக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்குழுவைச் சேர்ந்த மாணவி திவ்யா,

கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எங்கள் போராட்டங்களை மக்களிடையே கொண்டு சென்ற பெரும் பணியை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் செய்து வருகிறீர்கள். முதலில் உங்களுக்கு மிக்க நன்றி.

மாணவர்களின் போராட்டம் சிதைந்து விட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். மாணவர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் கொள்கை, போராட்டத்தின் நோக்கம் ஒன்றுதான். மாணவர்களின் போராட்ட அலைகள் என்றும் ஓயாது. தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற இருப்பதால், சற்று படிப்பில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். எனவே, தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றார்.

எங்கள் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழு கலந்து ஆலோசனை செய்து நடத்தப்போகும் போராட்டத்தை வரைமுறை செய்துள்ளோம். கோரிக்கைகளையும் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்துள்ளோம்.

இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன்வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றை கூறி மக்களிடையே பிரச்சார பரப்புரையை நடத்துவோம்.

ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை சிறப்பு முகாம்களை கலைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும், தமிழ் ஈழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை நடைபெறும்.

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை சிங்களவர்களால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பரப்புரை வழங்கப்படும்.

மே 6 முதல் மே 18 வரை இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையை கண்டித்தும், நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்களிடையே பரப்புரை நடத்தப்படும்.

மே 19 அன்று மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் மாணவர்களால் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.v-loyolamaanavarpooradadammeet%20%281%29

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20210:2013-04-12-16-09-40&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Posted

அணையாத் தீயாய் தொடரும் மாணவர் போராட்டம்
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பேரெழுச்சியை நோக்கி..


ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு விட்டது. மாணவர்களின் எழுச்சியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற விடுமுறை முடிவுக்கு வந்து கல்லூரிகள் தொடங்கி விட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு விளையப் போகும் நன்மை என்ன? மாணவர் போராட்டம் எப்படித் தொடரப் போகின்றது? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடாத போராட்டம்:

2008 – 2009 ஆம் ஆண்டுகளில் இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையைத் தமிழ்ச் சமூகம் சந்தித்தது. ஈழத் தமிழர் மீதான இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதோடு தமிழீழ விடுதலைக்கான 60 ஆண்டுகாலப் போராட்டத்தைச் சிதைத்தது இலங்கை அரசு. அப்போரை உலக நாடுகள் ஆதரித்து உதவியும் வேடிக்கைப் பார்த்தும் நின்றன. போரை நிறுத்தக் கோரி தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கை அரசுக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்திய அரசு செய்தது.

போர் முடித்த பிறகு இனக்கொலைச் செய்த சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை எல்லாம் சிங்களமயமாக்கி வருகின்றது. வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழர்கள் இன்று மூச்சுவிடக் கூட வழியின்றி சிங்கள இராணுவப் பிடியில் சிக்கியுள்ளனர். வடக்கு பகுதியில் மட்டும் 2 இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயக பகுதிகளான இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தமிழர் அடையாளங்களை அழித்து, தமிழர் நிலத்தை பறித்து, இன அழிப்பை முடிக்க வேகமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. ஈழத்தில் கட்டமைப்புரீதியான இனப்படுகொலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்னொருபுறம் தமிழ்நாட்டுத் தமிழர்களும் புலம் பெயர் வாழ் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பொறுப்புணர்வோடு களம் இறங்கி இருக்கின்றனர். இது சிங்கள அரசின் கொக்கரிப்புக்கு சவாலாகி இருக்கின்றது. புலம்பெயர் வாழ் தமிழர்கள் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அளப்பெரும் பணியாற்றி வருகின்றனர். போர்க்குற்ற ஆவணங்களையே போர்க் கருவியாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தமிழரின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது சர்வதேச நாடுகளைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள பெருமளவில் பணத்தையும் உழைப்பையும் செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளியுள்ளது.

இனப்படுகொலையைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியுடன் தமிழகம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை முன்னெப்போதும் இல்லாத அளவில் செய்து கொண்டிருக்கின்றது. இனப்படுகொலைக்கு துணை நின்றதோடு இன்று வரை இலங்கை அரசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கின்றது.
சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கானத் தருணத்தை எதிர்பார்த்து ஈழத் தமிழர்கள் காத்திருக்கின்றனர். இன அழிப்புப் போரின் அவலத்தில் இருந்தும் இழப்புகளிலிருந்தும் மெல்ல மீண்டு வந்து இன அழிப்புக்கு எதிராகப் போராடுவதற்கு புலம்பெயர்வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம் துணை செய்து கொண்டிருக்கின்றது.

2013 இல் மாணவர் எழுச்சி:

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 13 வயது மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் வரப்போவதாக செய்தி வந்தது. தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக தமிழக மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் போராட்டம் பெருந்தீயாகப் பற்றி எரிந்தது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை. இலங்கை அரசே கொண்டு வந்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை (LLRC) முன் வைத்தது. அந்த தீர்மானத்தை மேலும் சீர்குலைப்பதில் இந்திய அரசின் பேருதவியுடன் சிங்கள அரசு வெற்றிப் பெற்றது. இறுதியாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தாத மற்றும் இலங்கை அரசு நடத்தி வரும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தைக் கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மாணவர் போராட்டம் தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்து வந்தது. பன்னாட்டு இனப்படுகொலை விசாரணை, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் வெற்றியாக, ’தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்து காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க., காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனால், இந்திய அரசு தன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் மாறியதாக தெரியவில்லை.

ஈழ விடுதலைக்கு தடையாய் இந்தியாவென்னும் பெருஞ்சுவர்:

தமிழினப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ஆதரவை அளித்து வருகின்றது இந்திய அரசு. ஈழத்தில் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமும் அழிந்து போய் விடும் அபாயம் நிலவுகின்றது. தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் நாடாகவும், 7 கோடி தமிழர்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்கிக் கொண்டிருப்பதால் இந்தியாவின் இசைவின்றி ஈழத் தமிழர் தொடர்பான எந்த ஒரு சர்வதேச நகர்வும் நடப்பது இல்லை. சர்வ தேச நாடுகளின் ஆதரவை திரட்டும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியும் இந்தியா என்னும் முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தடையாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கை விளங்குகின்றது.
இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி தமிழீழ விடுதலைக்கானத் தடைகளை உடைப்பதே ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய புவிசார் அரசியலாக இருக்கின்றது. இந்த பணியைச் செய்து முடிக்கும் கடமை தமிழ்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான முதன்மை பொறுப்பை வரலாறு தமிழ்நாட்டு மாணவர்களிடம் கையளித்து இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு:

மார்ச் மாதத்தில் தமிழகத்தைச் சூழ்ந்த போராட்ட மேகம் இலயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த பட்டினிப் போராட்டத்தில் இருந்து மின்னலுடன் இடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 13 ஆம் தேதி இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் விதமாக சென்னையில் உள்ள மத்திய அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இம்முற்றுகையில் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். அதிலிருந்து போராட்டக் களத்தில் இறங்கிய பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களோடு இணைந்து போராட்டத்தைத் தொடர்ந்து முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு மார்ச் 14 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அன்றளவில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் மாணவர் போராட்டக் குழுவில் இருந்தனர்.

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரனையை வலியுறுத்தியும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தைக் கொண்டு வரக் கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவின் சார்பாக மார்ச் 18 ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டமும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும் மார்ச் 18 ஆம் தேதி அன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, மாணவர் பேரணி என்று நாள்தோறும் போராட்டம் வளர்ந்தது. இந்த வரிசையில் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இராணுவ தலைமையகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டங்களின் துணையோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து உள்ளோம்.

நீண்ட காலப் போராட்டத்திற்கு தயாராகும் தேவை:

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கானப் போராட்டத்தை தொடர வேண்டும். இப்போது வந்துள்ள மாணவர் பேரெழுச்சி மழை போல் மண்ணில் சரிந்து விழாமல் ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் எழ வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியமே தமிழீழ விடுதலைக்கு துணை செய்யும். அதற்கு தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட நீடித்த போராட்டமாக வளர்தெடுக்க மாணவர்கள் தம்மை அமைப்பாய் உருத்திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். 60 ஆண்டு காலமாக நீளும் ஈழப் போராட்டத்தின் ஆழ அகலத்தைப் கற்றுக் கொண்டு நீண்ட காலப் போராட்டத்திற்கு எம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடக்கம் முதல் இன்று வரை ஆதரித்தும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்தும் வருகின்ற தமிழகத்தின் அறம் சார்ந்த அரசியல் தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்தை வார்த்தெடுக்க உறுதி கொள்கிறோம்.

தமிழ்நாட்டு மீனவர் மீதான தாக்குதல்:

இந்திய அரசின் சிங்கள ஆதரவு வெளியுறவுக் கொள்கை இலங்கை தீவோடு நின்றுவிடவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. இது வரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்று வெட்கமின்றி சொல்வதோடு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் இது நேர்கின்றது என்று சிங்களக் கடற்படையின் இனவெறித் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசி கொண்டிருக்கின்றது.

ஈழத் தமிழ் அகதிகளின் நிலை:

இது மட்டுமல்ல, இந்திய அரசின் சிங்கள ஆதரவுக் கொள்கை இனப்படுகொலை அரசின் பிடியில் இருந்து தப்பித் தாய்த்தமிழகம் வந்த ஈழத் தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. மத்திய,மாநில அரசுகள் தமிழீழ அகதிகளை ’அகதிகள் முகாம்’ என்ற பெயரிலே திறந்தவெளி சிறைக்கூடத்தில் அடைத்து வைத்திருக்கின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்திய அரசு அகதிகளுக்கான சர்வதேச விதிமுறைகளிலே இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமல்ல சட்டவிரோத முறையில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலே செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவரைக்கூட காவல் துறையின் கண்கானிப்பின் கீழ் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினாலும், வாழ்வதற்கு வழி இல்லாமலும் தமிழகத்தை விட்டும் தமிழீழ மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறுகின்றனர்.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டு வரும் மீனவர்களோடும் தமிழகத்தில் அகதிகளாக வாடும் ஈழத் தமிழர்களோடும் கரம் கோர்த்து நமது போராட்டத்தை வலுப்படுத்த இருக்கின்றோம். உணர்வெழுச்சியால் பொங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களையும் நோக்கிச் செல்வோம்.

இனவெறி இலங்கை அரசை ஆதரித்து நிற்கும் இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்க உறுதி ஏற்போம்!
• சிங்களப் பேரினவாத இலங்கை அரசைப் அரசியல், பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிப்போம்!
• தமிழக அளவில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தைத் தொடர்வோம்!
• மீனவர்கள், ஈழத் தமிழ் அகதிகள், தொழிலாளர்களோடு இணைந்து நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்ப்போம்!

கோரிக்கைகள்:

இந்திய அரசே!
1. இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்று அங்கீகரி!
2. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடு!
3. இனப்படுகொலை செய்த சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதித்திடு!
4. தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடு!

தமிழக அரசே!
1. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழி நின்று தமிழகத்திற்குள் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதித்திடு! இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்றிடு!
2. இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடு!
3. பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் உள்ள சட்டவிரோத வதை முகாம்களை உடனடியாக களைத்திடு!


முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நினைவு நாள் –
மே 19 இல் தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக்கூட்டம்

வாரம் பிரச்சார இயக்கம்

ஏப்ரல் 15 – ஏப்ரல் 21 வரை ’இலங்கையைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ் இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன் வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றைக் கோரி பரப்புரை.

ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை சிறப்பு முகாம்களைக் களைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும் தமிழீழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை நோக்கியப் பரப்புரை

மே 6 முதல் மே 18 வரை இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையைக் கண்டித்தும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பரப்புரை

மே 19 மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக் கூட்டங்கள்

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு
தொடர்புக்கு:
திவ்யா:9551629055,
இளையராஜா:9500044452
பெருமாள்:8807322832

 -------------------------------------------------------   முகநூல்  --------------------------------------------

 

Posted

தமிழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள வானொலி சேவை இந்த இணைப்பில் உள்ளது..
 

http://eelamstudents.caster.fm/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி, துளசி.
உங்கள்,சேவையை... நாம் மறக்கமாட்டோம். :)

 

Posted

இலங்கை (ஈழத்) தமிழ் மக்களின் படுகொலையைக் கண்டித்தும், எஞ்சியுள்ள தமிழ் மக்களின் உரிமை, நீதியை நிலைநாட்டவும் குரல் கொடுக்கும் படி திருத்தந்தை பிரான்சிஸ்கு தமிழ் நாடு மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

மாணவர்கள் போப்பிற்கு அனுப்பிய கடிதம் வருமாறு :

வணக்கத்திற்குரிய திருத்தந்தை பிரான்சீஸ் அவர்களுக்கு!

உலகெங்கிலும் வாழும் 150 மில்லியன் (15 கோடி) தமிழ் மக்களின் சார்பாக வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஏழைகள், நோயாளிகள், பாதிக்கப்பட்டோரின் பங்காளியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும், மறுக்கப்படும் மனித நேய உரிமைகளுக்கு உயிர்கொடுப்பவராகவும், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும், உலகின் மனசாட்சியாக உலகத் தலைவர்களில் உயர்ந்து விளங்கும் 120 கோடி உலக கத்தோலிக்க மக்களின் தலைவர் திருத்தந்தை (ஞடியீந) என்பதை அறிவோம்.

மார்ச் 13, 2013 அன்று திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட நீங்கள், புனித பிரான்சீஸ் அசிசியாரின் பெயரைத் தேர்வு செய்ததையும், இதுவரை எளிமைக்கும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் பங்காளராக விளங்குவதிலும் பேர் போனவர் என்பதை கண்டு உலக மக்களுடன் தமிழக இளைஞர்களும் மகிழ்கின்றோம்.

 

ஈஸ்டர் பண்டிகையின்போது (இயேசுவின் உயிர்ப்பு நாள்) திருத்தந்தை தாங்கள் வழங்கிய செய்தியில்:
“கிறிஸ்துவே நம் அமைதி, அவர் வழியாகவே இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி வழங்க முடியும். மத்திய கிழக்குப் பகுதிக்காக, குறிப்பாக இணக்கத்தின் பாதையைக் கண்டுகொள்ள முயலும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதி நிலவ, பல காலமாக தொடர்ந்து வரும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு உதவும் பேச்சுவார்த்தைகள் ஆர்வமுடனும், மன உறுதியுடனும் மீண்டும் துவக்கப்பட; ஈராக்கின் அமைதிக்காக அங்கு அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட; எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பும், உதவியும் ஆறுதலும் எதிர்நோக்கி நிற்கும் எண்ணற்ற அகதிகளுக்காகவும்; ..... வன்முறை மோதல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவுக்கும் அமைதி தேவை. மாலி நாட்டில் இணக்கமும், நிலையான தன்மையும் கொணரப்படவும், வன்முறைக் கும்பல்களால் குழந்தைகள் கூட பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நைஜீரியாவில் அமைதி திரும்பவும், மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அமைதி திரும்பவும்” என்று குரல் கொடுத்துள்ளீர்கள்.

மேலும், “ஆசியாவில் குறிப்பாக கௌரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பட்டும்.... ஒப்புரவின் புதுப்பிக்கப்பட்ட உணர்வு வளரட்டும்” என்று கூறியுள்ளீர்கள். உலக நாடுகளில் நடைபெறும் மதக்கலவரங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த நீங்கள், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வந்ததையும், 1983 ஆம் ஆண்டிற்குப் பின் ஈழத் தமிழர்களை இலங்கை அரசு திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரில், அப்பாவி ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்பும் இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களை அழிக்கும் தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு செய்து வருகிறது. இது குறித்து ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் தாங்கள் எதுவுமே கூறாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

இலங்கையில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியமர்த்தும் பணியானது சரிவர நடக்கவும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவம் உடனடியாக விலக்கப்படவும், தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவும், 2009 இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை, வரலாறு காணாத மனித உரிமை மீறல், ஒரு போர் குற்றம் என்று கூறி இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் சிங்களர்களுக்கு இணையாக ஈழத் தமிழர்களுக்கு அரசியல் சாசன ரீதியில் சம உரிமை வழங்கப்படவும், உரிய நீதி கிடைத்து, நிரந்தர அரசியல் தீர்வு கண்டு அமைதியான ஈழம் காணவும் குரல் கொடுப்பீர்கள் என்று 150 மில்லியன் உலகத் தமிழர்கள் சார்பாக இந்தியாவின் தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்கள் அமைப்புகள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது. என்றும் உங்களது ஆசீரால், ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளால் இவ்வுலகம் புதுப்பிக்கப்பட வாழ்த்துகின்றோம்.

தங்களின் ஆசீர் வேண்டும்.
தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் அமைப்பு

 

(முகநூல்: loyolahungerstrike)

 

Posted

மு.க.ஸ்டாலின் கொமடி!!!!!!

டெசோ அமைப்பு தான் இலங்கை தமிழர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது. தமிழக மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டமும் இலங்கை தமிழர் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட காரணமாக அமைந்தது.

(முகநூல்: loyolahungerstrike)

டெசோ அமைப்புதான் இலங்கை தமிழர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது - ஸ்டாலின்

# அப்ப சேனல் 4ல் என்ன மானாட மயிலாட புரோகிராமா ஒளிபரப்பினாங்க மிஸ்டர் தபால்பதி?

 

(தீந்தமிழ் FB)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

7000 பேருக்கு மேல் படிக்கும் லயோலா கல்லூரியிலிருந்து ஒரு சில மாணவர்கள் தங்கள் கட்சியின் மாணவரணியில் சேர்ந்த செய்தியை, தமிழீழ விடுதலைக்காக தமிழக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களது கட்சி சார்ந்த தொலைக்காசியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஏதோ போராட்டத்தை துவக்கிவைத்த லயோலா கல்லூரி மாணவர்களே திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதைப் போல பொது மக்களிடையே ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் சிலர்.

ஐநா தீர்மானத்துக்கு பிறகு நீர்த்துப்போய்விடும் என பகல் கனவு கண்டுகொண்டிருந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தொடரும் மாணவ போராட்டத்தை கண்டு செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மார்ச் 8ஆம் தேதி துவங்கி தமிழகம் முழுதும் பரவியிருக்கும் தமிழீழ விடுதலைக்கான இந்த மாணவர் போராட்டம் தங்கள் இலக்கை அடையாமல் ஓயாது.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக

ஜோ பிரிட்டோ

 

(முகநூல்: loyolahungerstrike)

 

இந்த செய்தியானது தி.மு.க. இன்னும் திருந்தாமல் ஈழப் பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேட பார்கிறது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. இதை போன்று சந்தர்பவாத அரசியலை விட்டு விட்டு, அரசியல் லாபம் இல்லாது, நேர்மையான முறையில் ஈழத்திற்காக எதாவது செய்தால் மட்டுமே மக்கள் இவர்களை நம்புவார்கள் அதுவும் இனி கடினம் என்றே தோன்றுகிறது.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தோழர்களே!!! அவசரம்!!

லயோலா மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு உடனேயே நெல்லையில் முதலாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கிய நெல்லை புனித சவேரியர் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது கல்லூரி நிர்வாகமும்,கல்லூரி முதல்வரும்,துறை தலைவரும் கல்வி சார்ந்த விடயங்களில் அந்த மாணவர்களுக்கு உரிமைகளை மறுத்து வருகின்றனர்.

போராட்ட காலத்தில் எழுதாமல் விடப்பட்ட தேர்வுகளுக்கு மறுதேர்வு நடத்த கோரி மாணவர்கள் விடுத்த கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் முறையிட்ட போது, அவர் கூறியது::

”உங்கள் துறைத்தலைவர்(HOD) மறுதேர்வு நடத்த சம்மதித்தால் நான் மறுதேர்வு நடத்த அனுமதிக்கிறேன்”

என்று கூறியுள்ளார்..

தங்கள் துறைத்தலைவரிடம் மாணவர்கள் இது பற்றி கேட்ட போது அவர் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறார்.

இதை காணும் போது கல்லூரி நிர்வாகமும், முதல்வரும், துறைத்தலைவரும் இணைந்து நடத்தும் நாடகமா?? என்ற சந்தேகம் மாணவர்கள் மனதில் எழுந்துள்ளது.பொதுவாகவே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எதிராக நிர்வாகம் செயற்படுவதாக தெரிகிறது..

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அவர்களின் மறுதேர்வு எழுதி தங்கள் கல்வியை தொடரும் உரிமையை மீட்டுகொடுக்கும் கடமை நமக்கும் உள்ளது..

துறைத்தலைவரின் பெயர் :சேவியர் அந்தோனி

(Xavier Antony)

துறை: விஸ்காம் Viscom HOD

தொடர்பு எண்: 9443997607..

இந்த எண்ணை தொடர்பு கொண்டு அந்த துறைதலைவரிடம் கனிவோடு பேசி மாணவர்களின் மறுதேர்வு எழுதும் உரிமையை அவர்களுக்கு மீட்டு கொடுக்குமாறும் முகநூல் தோழர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

 

(முகநூல்: loyolahungerstrike)

 

சவேரியார் கல்லூரி தன்னாட்சி (Autonomous) அதிகாரம் பெற்ற கல்லூரி தான். அவர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்வு நடத்த முடியும். தோழர்களே உடனடியாக அந்த கல்லூரியை தொடர்பு கொண்டு அந்த மாணவர்கள் கல்வி தடை இன்றி தொடர உதவுங்கள். நன்றி.

 

 

Posted

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக வரும் 12/05/2013 முதல் 17/05/2013 வரை தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" 8 கோடி தமிழர்களை நோக்கி பயணிக்க இருக்கிறது. அப்பயணம் இறுதியாக மே 17 அன்று தஞ்சாவூரில் உள்ள "முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் " வந்து சேர்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்து வரும் "சுடர்களை" அய்யா பழ.நெடுமாறன் மற்றும் அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோர் தஞ்சையில் பெற்றுக்கொள்வர்.

இச்சுடர் பயணத்தின் இரு முதன்மையான நோக்கங்கள்,

1) 8 கோடி தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் தமிழக சட்டமன்ற தீர்மானமான "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற கோரிக்கையை , இந்தியா அரசின் அரசுக் கொள்கையாக அறிவிக்க வலியுறித்தியும், மேலும் இத்தீர்மானத்தை இந்தியாவே ஐ. நா. அவையில் முதன்மையான தீர்மானமாக கொண்டுவர வலியுறுத்தல்.

2) இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை , இந்தியா - இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தல்.


இந்த மாபெரும் மாணவர் மற்றும் மக்கள் திரள் சுடர் பயணத்தில் பங்கெடுப்பது தமிழனாய் பிறந்த , மாந்த நேய பற்றுள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். மேலும் இச்சுடர் பயணத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பேராதரவு தந்து மாணவர்களுக்கு உந்து சக்தியாக திகழவேண்டும் என இக்கூட்டமைப்பு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

 

இச்சுடர் பயணம் பற்றிய தகவலறிய தொடர்பு கொள்க:  சீ.தினேஷ் -ஒருங்கிணைப்பாளர் :செல்-9791162911

 

(முகநூல்)

Posted

எமக்கு வேண்டியது எல்லாமே ஈழம் மட்டும் தான்...
பறக்க நினைக்காமல், சொல்லுக்கு முன் செயலோடு சாதிப்போம் இந்த ஆண்டில்...!

அனைவருக்கும் எமது இதய பூர்வமான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

 

(முகநூல் : loyolahungerstrike)



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

(முகநூல் : loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழ விடுதலைக்காக போராடிய மாணவர்களை தாக்கிய காங்கிரஸாரை கண்டித்து உண்ணாவிரதம்

 

v-unnavieelamnews%20%284%29.jpg

தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது, திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்திய திருத்தங்களை செய்யாத இந்திய அரசுக்கு கண்டனம் ஆகியவற்றை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20253:2013-04-14-14-40-33&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

 
Posted

ஈழத் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.

 

(முகநூல்: loyolahungerstrike)

 

பி.கு: மண்டிகள் என்றால் என்ன? :unsure: யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :rolleyes:

 

Posted

554860_606484952696867_773676539_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.