Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து கோவை காய், கனிக்கடைகள் அனைத்தும் பூட்டு! 

kovai-market-1542013-150.gif

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து கோவையில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி காய்கனி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம், மேட்டுப்பாளையம் மொத்த அனைத்து காய்கனி வியாபரிகள் சங்கம், அண்ணா மார்க்கெட் மொத்த காய்கனி வியாபாரிகள்,நாச்சிபாளையம் மொத்த வியாபாரிகள் சங்கம், கிணத்துக்கடவு, பூழுவபட்டி, தொண்டாமுத்தூர், காளம்பாளையம் மற்றும் காந்திபுரம்( 8-ம் நம்பர்) அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம் ஆகியவை கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. 1000-க்கும் மேற்பட்ட காய்கனி கடைகள் மூடப்பட்டிருந்தன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80521&category=IndianNews&language=tamil

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

17412_606829902662372_432026993_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

வணக்கம் .,

மற்றவர்களைப் போல மாணவர்களும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைவது இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் சர்வதேச அரங்கை சலசலப்பாக்கிய மாணவர் போராட்டத்தை துவங்கி வைத்த லயோலா கல்லூரி மாணவர்களே தி.மு.க வில் இணைந்ததை போல போலியான, இழிவான செயலை தி.மு.க. செய்ததால் தான் தி.மு.கவை மாணவர்களாகிய நாங்கள் எதிர்த்தோம். இந்த செயலை யார் செய்தாலும் அவர்களையும் எதிர்ப்போம்.

 

யார் வேண்டுமானாலும் தமிழ் உணர்வாளர், மனித உரிமை ஆர்வலர் எனும் முறையில் மாணவர்களாகிய எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கலாம்; ஆனால் யாரும் ஆளுமை செலுத்த முடியாது. நாங்களும் எந்த ஒரு அரசியல் கட்சியையோ, இயக்கத்தையோ ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். தூற்றுவோர் தூற்றட்டும். எதையும் தாங்கும் இதயம் கொண்ட மாணவர்களாகிய எங்களுடைய போராட்டம் தொடரும்.... வெல்லும்.

தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக ,
ஜோ பிரிட்டோ .

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

தூய சேவியர் கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ தோழர்களை பழி வாங்கும் நோக்கில் அவர்களை செய்முறை தேர்வில் fail ஆக்குவதற்காக பாடம் எடுக்கும் ஆசிரியர்களை தேர்வாளர் பொறுப்பில் இருந்து வன்மத்துடன் மாற்றியுள்ளது. இதனை நாம் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலமே மாற்ற முடியும்.

 

தோழர்களே. தூய சேவியர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள். அனைவருமே வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். பெரும்பாலான மாணவர்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்கள். வாளாக நேர்காணலில் செலக்ட் ஆகி வேலையில் சேரப் போகிறவர்கள். இவர்களின் படிப்பை நம்பி காத்திருக்கும் ஏழை குடும்பங்கள். தோழர்களே உரத்து குரல் எழுப்புங்கள்.

Rev. Fr. Principal 9443466276; Rev. Fr. Secretary 9443118342
Rev. Fr. Rector 9486558265 ; Rev. Fr. Hod 9443997607(Fr. Xavier Antony)

 

(முகநூல்: loyolahungerstrike)
 

Posted

வரும் மே மாதம் 19 ஆம் தேதி , பாலச்சந்திரன் கொல்லப்பட்ட அதே தினத்தில் நான்காம் ஆண்டு தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு.... எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த இனப்படுகொலையை தமிழினம் மறக்காது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் தமிழர் கடலில் கரையோரம் பெரும் திரளாய் குடும்பத்துடன் பங்கேற்போம்.

 

77178_10200997870692504_584437553_n.jpg

 

(முகநூல்)

Posted

524686_322669541194824_955937319_n.jpg

 

 

(முகநூல்)

 

Posted

இடம் பற்றிய விபரங்கள் கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன்.

 

 

37036_325101884285434_2097060691_n.jpg

 

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரை வெளியேற்றக் கோரி ம.தி.மு.க மகளிர் அணியினர் உண்ணாவிரதம்!  

 

hungerstrike-mdmk-190413-seithy-150.jpg

தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் கரியவாசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களிடம் தனித் தமிழ் ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் காரியவசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்

  

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ம.தி.மு.க மகளிர் அணியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர். காலை தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க மாநில மகளிர் அணி துணை செயலாளர் கிரிஜா சுப்ரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

 

hungerstrike-mdmk-190413-seithy-001.jpg

 

 

hungerstrike-mdmk-190413-seithy-002.jpg

 

 

hungerstrike-mdmk-190413-seithy-003.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80802&category=TamilNews&language=tamil

 

 

Posted

561869_604888779523151_1693755321_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழக்கோரிக்கையை முன்னிறுத்தி மே 19 இல் தமிழக மாணவர்கள் பிரம்மாண்டமான பேரணி!

 

eelam-students-200413-seithy-150.jpg

தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

  

அவர்கள் கூறுகையில்,

1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும். அதற்காக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட அளவில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி சேலம் போஸ் மைதானம் வரை பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைப்பெறும். இதில் சேலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவர்களும் கலந்துக் கொள்ளுவார்கள். தொழிலாளர் பெருமக்களும், மீனவ அமைப்புகளும் பெருமளவு கலந்துக் கொள்ளுவார்கள். நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பில்லை.

 

அதை முன்னிட்டு தமிழகம் முழுக்க நான்கு கட்ட பிரசார பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைப்பெறக் கூடாது என்கிற பிரசாரத்தையும், ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடவும், இலங்கை அகதிகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கவும் போராட்டம் நடைப்பெறும். ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மீனவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மே 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இறுதியாக மே 19ஆம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெறும். இத்தோடு எங்கள் போராட்டம் நின்று விடாது. தொடர் போராட்டமாகவே இருக்கும் என்றார்கள்.

 

eelam-students-200413-seithy-001.jpg

 


http://www.seithy.com/breifNews.php?newsID=80888&category=TamilNews&language=tamil

 

 

Posted

தமிழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள இணையதள தொலைகாட்சி.
 

http://stationcreator.com/eelam-24x7-tv/eelavidiyal-online-t-v

 

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோவையில் இலங்கையின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி

 

ntv%20eelam%20news.jpg

கோவையின் டவுன்ஹால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாணவர் கூட்டமைப்பின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் தமிழீழம் குறித்து, மாணவர் கூட்டமைப்பினர் அமைத்துள்ள கண்காட்சி காண்போர் உள்ளங்களை கலங்கச் செய்துள்ளது.

இலங்கையில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்ட வரலாறுகளையும், போர் என்னும் பெயரில் நடந்த இனப்படுகொலைகளையும் வெளிப்படுத்தும் இந்த கண்காட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுவரை வெளிவராத ஆயிரக்கணக்கான ஓவியங்களும், கண்காட்சி அரங்கை அலங்கரித்துள்ளன. இலங்கை தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை எடுத்து இயம்பும் பல்வேறு ஆவணப்படங்களும் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இறுதிக்கட்ட போரில், இலங்கை ராணுவத்தினரின் கொடூரங்களை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20405:2013-04-21-16-32-43&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Posted

Cycle Rally- campaign against Airtel

 

554220_609017682443594_1267234212_n.jpg

 

601849_609017749110254_749210459_n.jpg

 

11941_609017729110256_614092853_n.jpg

 

601840_609017809110248_1114797940_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி  உறவுகளே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக மக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!.....

"தமிழின விரோத சிங்கள கைக்கூலி " தயாநிதி மாறனின் 'sun rise ' ஹைதராபாத் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா'என்ற சிங்கள கிரிக்கெட் வீரன் இன்று (24/04/2013) காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டையில் உள்ள "எக்ஸ்பிரஸ் அவென்யு " வணிக வளாகத்தில் ஒரு சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறான்.மானமுள்ள தமிழர்கள் அவனை புறக்கணிக்க இன்று காலை 10 மணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யுவில் கூடுவோம்....வந்தேறி வணிகர்களே "தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்திற்கு "எதிராக நீங்கள் செயல்பட்டால் தமிழகத்தில் நீங்கள் வணிகம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்.

 

Loyolahungerstrike -முகநூல்-

 

 

Posted

சன் ரைசர்ஸ் விளம்பரதாரர்கள் 11.30 க்கு எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடத்தவேண்டிய நிகழ்ச்சி இன்னும் நடைபெறவில்லை.
மாணவர்கள் அதிகமாக அங்கு குவிந்ததால் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெறவில்லை.

அதனையடுத்து தாஜ் கோரமண்டலில் நடைபெறுவதாக இருந்தது, அங்கும் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி இன்னும் நடைபெறவில்லை.

மாலை 5 மணிக்குள் விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அடுத்து நிகழ்ச்சி எப்போ, எங்கே நடைபெறும் என தெரியாத நிலையே உள்ளது.

பலத்த காவல்துறை பாதுகாப்பு இரு இடங்களிலும் போடப்பட்டுள்ளது..
 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்]

 

 

பிரிவு: தமிழ் நாடு

20130424_131031.jpg

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா என்ற சிங்கள கிரிக்கெட் வீரர் உட்பட சன் ரைசர்ஸ் வீரர்கள்   கலந்து கொள்ள இருந்த      விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி 11.30 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதனை அறிந்த மாணவர்கள் அங்கு முற்றுகையிட திரண்டனர் இதனை அறிந்த நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடக்க இருந்த   நிகழ்ச்சி ரத்து செய்வதாக அறிவித்து பின்னர் அங்கு நிகழ்ச்சி நடை பெறவில்லை.

அதனையடுத்து அந்த நிகழ்ச்சியை  தாஜ் கோரமண்டலிற்கு  மாற்றினார்  அங்கும் மாணவர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி  நடைபெறவில்லை. 

இன்று  விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அடுத்து நிகழ்ச்சி எப்போ, எங்கே நடத்துவது என்று தெரியாத நிலையில் உள்ளனர் நிகழ்ச்சி  ஏற்பட்டளர்கள் .

 பலத்த காவல்துறை பாதுகாப்பு இரு இடங்களிலும் போடப்பட்டுள்ளது.  மாணவர்கள் அந்த நிகழ்வை  தடுக்கக  தயார் நிலையில் உள்ளனர்.

dinaithal-tamilnews.JPG

 
 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14236%3Athe-player-kollavitatu-sangakkara-effected-students-participated-in-the-event&catid=36%3Atamilnadu&Itemid=102

Posted

சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த மாணவர்கள் கைது.

 

3_copy.jpg

 

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிறது.

இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த  ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை  காவல்துறையினரால்  சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் .

எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறுக்கும் -க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தபட்டும் அதனை மீறி மாணவர்கள் மைதானத்துக்குள் சென்று அவர்களது டிஷர்ட் களில் We Want Tamil Eelam , boycott sri lanka என்று அச்சிடப்பட்ட பனியன் துணியை உடலுக்கு போட்டு கொண்டு இருக்கையின் மேல் நின்று கீழ்க்கண்டவாறு முழக்கங்ககளையிட்டு போராட்டம் நடந்த இருந்தனர் . இதனை தொலைபேசி ஊடக ஓட்டுகேட்ட காவல்துறையினர்  மாணவர்களை   சுற்றிவளைத்து கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

Who is side are you on?
Where is the Huminty?
Lanka Play by the Rules
we want tamil eelam..
genocidal srilankans get out.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14258%3Astetiyatirkul-a-struggle-to-arrest-the-students&catid=36%3Atamilnadu&Itemid=102

 

Posted

பிரபா மற்றும் அவருடன் முப்பத்தி ஏழு மாணவர்களையும் ஏதோ வீரப்பனை பிடித்து கொண்டு போவது போல கட்டடத்தை சுற்றி வளைத்து போலிஸ் மூன்று வேன்களில் அவர்களை ஏற்றி சென்றுள்ளது.

பெரிய அதிகாரிகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிந்து கைது செய்துள்ளனர்.

அவர்கள் 'boycott srilankan players from ipl' மற்றும் 'free tamil eelam ' என்கிற வாசகங்கள் அடங்கிய பனியன்களை சட்டைக்குள் அணிதிருந்தனர். அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சன் ரைசெர்ஸ் அணி விளையாட்டு அரங்கத்தில் 1500 குண்டர்களை வீரர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காவல் துறை மாணவர்களை அரங்கத்தில் நுழையவே விடாமல் கைது செய்து சிறையில் அடைத்தது.

கைதான மாணவர்கள் பலருக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கத்தை அதன் குகையிலே போய் சந்திக்க முற்பட்ட மாணவர்களின் துணிச்சலை பாராட்டுவோம் ! அவர்களின் அடுத்த முயற்சி வெற்றி பெறட்டும்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்!

 

(முகநூல்)

Posted

சன் ரைசஸ் அணியில் இருக்கும் சங்ககராவை எதிர்த்து ஹைதராபாத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது

ஈழத் தமிழர்களின் பிரச்சினையை நாம் அரசியலாக்கக் கூடாது - கருணாநிதி இன்று

# குடும்ப வருமானத்திற்கு பிரச்சினை வந்ததும் டெசோ தாத்தா அதை அரசியலாக்க வேண்டாம் என்கிறார்.
இது உலகமஹா நடிப்புடா சாமி!

 

(முகநூல்)

Posted

மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும்..

Posted

கைது செய்யப்பட்ட மாணவர்கள் காவல்நிலையத்தில் ஈழக்கொடியுடன்

 

537809_610594472285915_1254057671_n.jpg

 

417797_327426754053397_1661549002_n.jpg

 

(முகநூல்)

 

Posted

"தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு" என்ற பெயரில் பலர் போலி முகநூலை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று அப்பெயரில் உள்ள ஒரு முகநூல் பக்கத்தில் சங்ககாராவை ஈழ தமிழர்களும் ஈழ தமிழர்களின் நலன் காக்க பாடுபடும் தமிழர்களும் மதிக்க வேண்டும் என்ற ரீதியில் ஒரு பதிவு போடப்பட்டிருந்தது.

தி.மு.கவில் இணைந்த மாணவர்களா அதை நடத்துகிறார்கள் என்ற சந்தேகத்தை பலர் அந்த பதிவின் கீழ் போட்டிருந்தார்கள். அந்த பதிவை  நீக்கும்படி கேட்டும் உடனே நீக்கவில்லை.

ஆனால் loyolahungerstrike இல் அந்த பக்கத்தின் printshot போடப்பட்டு அதை போராடும் மாணவர்கள் நடத்தவில்லை என்று மாணவர்கள் தெளிவுபடுத்தினார்கள். :) 

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சங்ககாராவிற்கு ஆதரவாக எழுதியிருக்கும் முக புத்தக பக்கத்திற்கும் மாணவர்களிற்கும் எந்த தொடர்பும் இல்லை .இது மாணவர்களால் நடத்தபடவில்லை என்றும் தெரிவித்து கொள்கின்றோம்..

 

486707_610568335621862_496663611_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

பி.கு: அதன் பின்னர் அந்த முகநூல் பக்கத்தில் சங்கக்காராவின் அந்த பதிவை அகற்றி விட்டிருந்தார்கள். இப்பொழுது அந்த முகநூல் பக்கத்தையே காணவில்லை. deactivate பண்ணி விட்டார்களோ தெரியவில்லை. :D

 

மாணவர் போராட்ட தகவல் எடுப்பதற்கு எந்த பக்கத்தை like பண்ணி வைத்திருந்தாலும் loyolahungerstrike முகநூல் பக்கத்தில் போடப்படாத எதையும் மாணவர்கள் கூறுவதாக நினைத்து விடாதீர்கள். :)

 

 

Posted

மன்னிக்கவும் உறவுகளே , குமார் சங்ககாரா பற்றிய பதிவினை இந்த பக்கத்தை நடத்தும் நாங்கள் பதிவிடவில்லை, எங்கேயோ தவறு நடந்துள்ளது அதை ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம் , மேலும் நாங்கள் தேசிய தலைவரின் பாதையில் உங்களுடன் பயணிப்பவர்கள் "கரும்புலி ஆவோமே தவிர கருணா ஆக மாட்டோம்"

 

#

மீளவும் மன்னிப்பு கேட்டபடி அந்த account ஐ activate பண்ணியுள்ளார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்டதால் loyolahungerstrike இலும் அதற்கான பதில் பதிவை நீக்கி விட்டார்கள். :rolleyes:

 

அனைவரும் அவதானமாக இருங்கள். loyolahungerstrike ஐயும் அல்லது அவர்கள் தாம் ஆரம்பித்திருப்பதாக கூறி தரும் இணைப்புகளையும் மட்டும் நம்புங்கள். :rolleyes:

 

Posted

கைதான மாணவர்கள் பலருக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருக்கிறது ///
உடனே அவர்களை விடுதலை செய்ய அனைவரும் உதவுங்கள்.

 

(முகநூல்: loyolahungerstrike)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

27152_610416308970398_441509984_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.